
மலையாள சினிமாவின் குணச்சித்திரங்களின் பட்டியலில் முரளி, கொச்சின் ஹனீபா, ராஜன்.பி.தேவ் ஐத் தொடர்ந்து திலகனின் இழப்பு இன்று. இப்படியான மலையாள நடிகர்களை பெரும்பாலும் வில்லத்தனமாகக் காட்டும் எல்லையோடு நிற்கும் தமிழ் சினிமாவிலும் திலகனின் பரவலான அறிமுகம் சத்ரியன் படத்தின் அருமை நாயகம் என்ற வில்லனாக மலையே கவிழ்ந்தாலும் காட்டுக்கூச்சல் கத்தாத மென் நடிப்பில் பன்னீர்ச்செல்வம் என்ற விஜயகாந்த் இற்கு பெரும் தலைவலியாகப் படம் முழுதும் வருவார். பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கோ கடுப்பேத்தும் நோகாமல் கொல்லும் இவரின் வில்லத்தனம். கரகரத்த சிரிப்பும், தீர்க்கமான பார்வையும், அலட்சியமான முகபாவமும் திலகனின் சொத்து.
சாணக்யன் போன்ற மலையாளப்படங்களில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் வைத்திருந்தாலும் தமிழில் கமல் போன்ற முன்னணி நடிகர்களே திலகனை ஆராதிக்கவில்லை. சத்ரியனுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த பாலா படத்தில் சிறப்பாகச் செய்திருந்தாலும் அதற்கு முன் வந்த மேட்டுக்குடி படம் தான் அவருக்கான இன்னொரு சொல்லிக்கொள்ளும் படமாகத் தமிழில் கிட்டியது. மலையாளத்தின் எண்ணற்ற படங்களில் நடித்துக் கரைகண்டிருந்த திலகனின் சமீப ஆண்டுகள் தொழில் ரீதியில் அல்லல் மிகுந்தவை ஆனாலும் சளைக்காத போர்க்குணத்தோடு தன் கருத்தில் வழுவாது இருந்தவர். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
திலகன் oil paint வரைஞர்: Rajasekharan Parameswaran
3 comments:
நல்ல திறமையான நடிகர், மனிதர் "சத்திரியன்" படத்தில் மிரட்டிவிட்டார் தமிழ் திரையுலகத்தை! மலையாள திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு!
திலகன் அவர்களின் இழப்பு கலைத்தாயின் இழப்பு தான். அருமையான நடிகர்.
அவருக்கு அஞ்சலிகள்.
அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தார்களுக்கு ஆறுதலை அந்த இறைவன் அருள வேண்டும் என பிராத்திக்கிறேன்.
வித்தியாசமான குரலில் மிரட்டுபவர்...
ஈடு செய்யமுடியாத இழப்பு...
Post a Comment