Pages

Thursday, September 13, 2012

றேடியோஸ்புதிர் 67 : ஆதியும் அந்தமும் ஆன இசை

ஏற்கனவே சினிமாவில் தன் பங்களிப்பை வழங்கியிருந்தாலும், இயக்குனர் என்ற வகையில் அவருக்கு முதல் படம் அப்போது பரபரப்பான பிரபலமாக மாறிய ஒரு நாயகனை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைத்திருந்தார். அந்த முதல் படம் ஒரு நாவலை மையமாக எடுக்க்கப்பட்டிருந்தது. பல சோதனைகளோடு அந்தப் படம் வெளிவந்து கவனிக்கப்படத்தக்க இயக்குனர் என்ற முத்திரையையும் பெற்றுக் கொண்டார்.

இரண்டாவதாக எடுத்த படமும் இன்னொரு நாவலாசிரியரின் கதையை மையப்படுத்தி எடுத்திருந்தார். ஆனால் ஒரு வித்தியாசம், தன்னை இயக்குனராக வெளிப்படுத்திய சமயம் பிரபல நாயகனைக் கொண்டு முதல் படம் எடுத்து அதில் பெரு வெற்றியும் பெற்றிருந்தாலும் அந்த வெற்றியை வைத்து பிரபலங்களின் பின்னால் ஓடாமல் இம்முறை அறிமுகங்களையும், அப்போது வளர்ந்து வந்த நடிகர்களையும் போட்டு எடுத்திருந்தார். படத்தின் பூஜை நாளன்றே "போயும் போயும் இந்தப் பெண்ணா நாயகி" என்று அவர் காதுபடவே பேசுமளவுக்கு நிலமை. ஆனாலும் பிடிவாதத்தோடு இயக்கினார். வெற்றி கண்டார். 32 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றும் தமிழ் சினிமாவின் தரம் பேசும் படங்களில் இந்தப் படத்தை விலத்திப் போகமுடியாது. அவ்வளவுக்குக் காலம் கடந்து நிற்கின்றது.

இந்தப் படத்தின் பின்னணி இசை என்பது மிகவும் கவனமாக, காட்சியையும், வசனங்களின் போக்கையும் சிதைத்து விடாது கண்ணாடி இழையாகப் பின்னப்பட்டிருக்கின்றது. படத்தின் குறிப்பாக இங்கு நான் தந்திருக்கும் இசைத்துண்டம் 1.32 நிமிடங்கள் இயங்கும் இசையில் பரபரப்பும், ஆர்ப்பரிப்பும் மேலெழுந்து மெல்ல மெல்ல அடங்கிப் போய்ப் புல்லாங்குழல் வழியே ஏதோவொரு இனம்புரியாத சோகத்தைக் கடத்தி விட்டு ஓயும். படத்தின் முகப்பில் ஆரம்பித் இசை, முடிவில் ஒரு சுற்றுப் பயணித்து மூலத்தில் வந்து நிற்கும் இந்த இசையைக் கேளுங்கள், இந்தப் படம் என்ன பதிலோடு வாருங்கள்.

ஒகே மக்கள்ஸ்

போட்டி முடிவடைந்து விட்டது,

சரியான பதில்கள்

மகேந்திரனின் முதற்படம் முள்ளும் மலரும்
இரண்டாவது படம் உதிரிப்பூக்கள்

போட்டியில் கலந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றி

20 comments:

Naga Chokkanathan said...

உதிரிப் பூக்கள்

கோபிநாத் said...

உதிரிப்பூக்கள் ;-)

இயக்குனர் - மகேந்திரன்

இசை - இசை தெய்வம் இசைஞானி ;)

Sridhar said...

mullum malarum

Sridhar said...

first film:mullum malarum second film:uthiripookkal

கானா பிரபா said...

சொக்கன்

சரியான பதில்

தல கோபி

அதே தான்

ஶ்ரீதர்

முதல் படமும் இரண்டாவது படமும் சரி

நாடோடி இலக்கியன் said...

இயக்குனர் - மகேந்திரன்
முதல் படம் - முள்ளும் மலரும்
இரண்டாவது படம் - உதிரிப்பூக்கள்

Kumky said...

மகேந்திரன்..உதிரிப்பூக்கள்...

Anonymous said...

Uthiri Pookkal:)) Have watched the film countless times!

G.Ragavan said...

முதல்படம் முள்ளும் மலரும்.
இரண்டாம் படம் உதிரிப்பூக்கள்.
இயக்குனர் மகேந்திரன்
நடிகை அசுவினி

இந்த இசைத்துண்டம் படத்தின் ஜீவநாடி. ச்சே.. ஏண்டா இந்தப் படத்தைப் பாத்தோம். இனிமே இதப்பத்தி நினைச்சிக்கிட்டேயிருப்பமேன்னு சொல்ல வைக்கும் காட்சி. அதற்கு ஏற்ற இசை. அப்பப்பா! இல்ல.. இந்தப் படத்தைப் பத்தி நினைக்க விரும்பல. வேற ஏதாவது பாத்து மனசை லேசாக்கிக்கிறேன்.

பிரசன்னா கண்ணன் said...

முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் & நடிகை அஸ்வினி..

கானா பிரபா said...

நாடோடி இலக்கியன்

சரியான பதில்

கும்க்கி கும்க்கி

அதே தான்

AC

சரியான பதில் தான், எத்தனை தடவை பார்த்தாலும் பாரம்

ஜி.ரா

விடை அதுதான், அருமையான படைப்பு

பிரசன்னா கண்ணன்

சரியான பதில்கள்

வல்லிசிம்ஹன் said...

உதிரிப்பூக்கள். மறக்க முடியுமா இந்த இசையை.

வல்லிசிம்ஹன் said...

முதல் படம் முள்ளும் மலரும்.:)

suresh said...

first film mullam malarum
second film uthiripookal

t v suresh

Baranee said...

Uthiri Pookal

karthick said...

உங்கள் விரிஉரையிலிருந்து, இசை துண்டத்தைக் கேட்காமலேயே சொல்லலாம்.......உதிரி பூக்கள்...

பால கணேஷ் said...

இயக்குனரின் முதல் படம் முள்ளும் மலரும். நீங்கள் இங்கே கொடுத்திருக்கும இசை நெஞ்சத்திக் கிள்ளாதே. சரிதானா என் விடைகள்?

Baranee said...

Uthiripookal.

கானா பிரபா said...

வல்லி அம்மா

இரண்டு பதில்களும் சரி

சுரேஷ்

சரியான பதில்கள்

பரணி

இரண்டு தடவை ஒரே பதிலை சரியாச் சொல்லியிருக்கீங்க ல;)

கார்த்திக்

சரியான பதில்


பாலகணேஷ்

முதல் படம் சரி, இரண்டாவது தவறு

கானா பிரபா said...

ஒகே மக்கள்ஸ்

போட்டி முடிவடைந்து விட்டது,

சரியான பதில்கள்

மகேந்திரனின் முதற்படம் முள்ளும் மலரும்
இரண்டாவது படம் உதிரிப்பூக்கள்

போட்டியில் கலந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றி