"இன்று வந்த இன்பம் என்னவோ அதைக் கண்டு கண்டு அன்பு பொங்கவோ, குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" சுந்தரக்குரல் சொர்ணலதா பாடிய இந்தப் பாடலை எத்தனை தடவை அலுக்காமல் கேட்டிருப்போம். அதுவும் "என் ராசாவின் மனசிலே" படம் வந்த காலத்தில் இந்திய வானொலி வர்த்தக ஒலிபரப்பு விவித்பாரதியில் மிஞ்சிப்போனால் அரை நிமிடமோ அதற்குச் சில நொடிகளோ மட்டுமே கஞ்சத்தனமாக அறிமுகமான நாள் முதல் இந்தப் பாடலின் மீதான காதல் குறையவில்லை, படம் வெளிவந்து 21 ஆண்டுகள் கழிந்தும்.
இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலக் கவிஞர் பஞ்சு அருணாசலத்தில் இருந்து பின்னாளில் கங்கை அமரன், வாலி, வைரமுத்து போன்ற பரவலாக அறியப்பட்ட பாடலாசிரியர்கள் வரை ஒரு குழாம் இருக்க, இன்னொரு வரிசையில் புலமைப்பித்தன், பிறைசூடன், மு.மேத்தா, முத்துலிங்கம் என்ற வகையில் கவிஞர் பொன்னடியானும் இருந்திருக்கின்றார். ஆனால் திரையிசைப்பாடல்களின் நீண்டகாலத்துரதிஷ்டமாக, பாடலாசிரியர்கள் குறித்த அறிமுகமில்லாமல் பாடல்களைக் கேட்டு ரசிக்கப் பழகிவிட்டோம். வானொலிகளும் நைச்சியமாக அவற்றைத் தவிர்த்துவிட்டன. இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை முப்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்களைப் பட்டியலிடலாம். ஆனால் நமக்கு அதிகம் அறிமுகமான பாடல்களில் வைரமுத்து, வாலி போன்றவர்களே ஓரளவு இனங்காணப்பட்ட பாடலாசிரியர்களாக அந்தந்தப் பாடல்களுக்கு உரித்துடையவர்களாகின்றார்கள்.
எண்பதுகளிலே இவ்வாறு இளையராஜாவின் கடைக்கண் பார்வையில் அருமையான பாடல்கள் பலவற்றைக் கொடுத்த கவிஞர் பொன்னடியானைச் சிறப்பிக்கும் வகையில் இந்தப் பதிவைக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். கவிஞர் பொன்னடியான், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.கே.வெங்கடேஷ், சந்திரபோஸ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கும் பாடல்களை எழுதியிருந்தாலும், இசைஞானி இளையராஜா உச்சத்தில் இருந்த போது ஜோடி கட்டிய பாடல்கள் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களின் இசையில் வந்த இவரது பாடல்கள் அதிகம் அறியப்படவில்லை.
கவிஞர் பொன்னடியான் இசைஞானி இளையராஜா கூட்டணியில் வந்த ஒரு சில நன்முத்துக்களை இங்கே பகிர்கின்றேன்.
சொல்லத்துடிக்குது மனசு, எடிட்டர் லெனின் இயக்கத்தில் வந்த படம். இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் படங்கள் எடுத்துக் கெடுத்த பாவம் லெனினையும் சேரும். சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வந்த பாடல்கள் அத்தனையும் முத்துக்கள். இந்தப் படத்தில் வந்த "குயிலுக்கொரு நிறம் இருக்கு" என்ற மலேசியா வாசுதேவன் பாடலைப் பாடுகின்றார்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கவிஞர் பொன்னடியானுக்கு ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதவைத்துக் கெளரவம் கொடுத்த பாடம் "ஒருவர் வாழும் ஆலயம்". இந்தப் படத்தின் கதைக்களனும் இசை சார்ந்தது. "உயிரே உயிரே", "மலையோரம் மயிலே", "சிங்காரப் பெண் ஒருத்தி" போன்ற இந்தப் படத்தின் பாடல்கள் வரிசையிலே கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சிலே" பாடலும் சிறப்பானது. 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 இசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனம் "பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரிப்பில் வந்த படம் "ராஜாதி ராஜா". இருந்தாலும் கங்கை அமரன் தவிர, பிறைசூடனும், பொன்னடியானும் பாடல்களிலே தம் பங்களிப்பை வெளிப்படுத்தினர், குறிப்பாக "எங்கிட்ட மோதாதே" பாடல் அன்றைய எதிராளி சந்திரபோஸ் இற்கு குட்டு வைக்கவும் பயன்பட்டிருக்கலாம் என்று நண்பர்களிடையே அப்போது பேசிக்கொண்டோம். சந்திரபோஸ் தன் பங்கிற்கு "வில்லாதி வில்லனையும் தோற்கடிப்பேன் நான் ராஜாதிராஜனையும் ஜெயிச்சிடுவேன்" என்று பதிலுக்கு பாட்டைப் போட்டார். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தொண்ணூறுகளிலே முக்கியமான தயாரிப்பாளராக விளங்கி ஏ.ஜி.சுப்ரமணியம் தயாரிப்பில் வந்த படம் "தங்கக்கிளி". வழக்கம்போல அவரது தோல்விப்படங்களில் இதுவும் ஒன்று. காரணம் என்ற இயக்குனராக ஆசைப்பட்ட ராஜவர்மனின் மாமூல் கதை. நடிகர் முரளி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சேர்ந்த கூட்டணி என்றளவில் மட்டுமே இன்றுவரை நினைப்பிருக்கும். இந்தப் படத்திலே வரும் "நினைக்காத நேரமில்லை" பாடல் இலங்கை வானொலிகளில் இன்றளவும் நேசிக்கப்படும் பாட்டு. பொன்னடியான் வரிகளுக்கு மனோ, எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்கள். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ராமராஜனின் இறங்குமுகம் ஆரம்பிக்கும் வேளை வந்த படங்களில் ஒன்று "பாட்டுக்கு நான் அடிமை" இந்தப் படத்தில் வரும் "தாலாட்டு கேட்காத பேர் இங்கு யாரு" ரயில் சத்தம் சந்தம் போட பொன்னடியான் வரிகள் இசைஞானியின் இசையில் மயிலிறகாய். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
எஸ்.பி.பாலசுப்ரமணியம், விஜய்காந்த் அண்ணன் தம்பியாக நடித்த பரதன் படத்தில் வரும் "அழகே அமுதே" பாடல் பொன்னடியானுக்குக் கிடைத்த இன்னொரு முத்து. 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
"என் ராசாவின் மனசிலே" தொண்ணூறுகளில் கொடுத்த பிரமாண்டமான வெற்றி இன்றளவும் மறக்கமுடியாது. வெற்றியில் சம அளவு பங்குபோட்டன இசைஞானி இளையராஜாவின் இனிய பாடல்கள். முரட்டு சுபாவம் உள்ள தன் கணவனை வெறுத்து ஒதுக்கும் அவள், தன் கணவனின் நேசம் உணர்ந்து பாடும் பாட்டு. தம் திருமண பந்தத்தின் அறுவடையாய் தம் வயிற்றில் சுமக்கும் குழந்தையோடு பாடும் இந்தப் பாடலை பொன்னடியான் களம் உணர்ந்து பொருள் கொடுத்து எழுதியிருக்கிறார். பாடலின் வரிகளோடு சீராகப் பயணிக்கும் இசை, சொர்ணலதாவின் குரல் என்று எல்லாமே சரிசமமாக அமைந்த பெருஞ்சுவை. இதே பாடல் இந்தப் படத்தில் மூன்று பாடல்களாக (சோகம் உட்பட) பொன்னடியான் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்து. அடுத்த தடவை "குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே" பாடலைக் கேட்கும் போது கண்டிப்பாகக் கவிஞர் பொன்னடியானும் உங்கள் நினைப்பில் வருவார். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
அருமை.
மு.மேத்தா,பிறைசூடன்,புலமைபித்தன்,காமகோடியான் இவர்களை குறித்தும் எதிர்பார்க்கிறேன்.
சமீபத்துல கூட இந்த பாட்டை டீவியில பாத்தேன் பாஸ். நல்ல பாட்டு.பாடலாசிரியர் பத்தின தகவல்களுக்கு மிக்க நன்றி. எங்கிட்ட மோதாதே சூப்பர் பாட்டு. நதியாவும் ரஜினியும் கலக்கியிருப்பாங்க.
சிறப்பான பகிர்வு...
ரசித்துப் படித்தேன்...
நன்றி... வாழ்த்துக்கள்...
ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் அனைத்துப் பாடல்களுமே பொன்னடியானா! புதிய செய்தி எனக்கு. எல்லாப் பாடல்களுமே தேன். மலைத் தேன். இத்தன நாளா பாட்டெல்லாம் வாலியோ வைரமுத்துவோ எழுதீருப்பாங்கன்னு நெனச்சிட்டிருந்தேன்.
நீங்க குடுத்திருக்கும் ஒவ்வொரு பாட்டுமே நல்ல பாட்டுதான்.
சிகரமா இருக்குறது குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே. இந்தப் பாட்டு கேட்டாலே நெஞ்சுக்குள்ள ஒரு சந்தோஷப் பூ பூக்கும். என்னவோ ஒரு இன்பம் இனம் புரியாம நம்மளப் பத்திக்கும்.
தல கலக்கிட்டிங்க...சில பாடலகள் வழக்கம் போல திரு. வாலியோ இல்ல திரு.வைரமுத்து அவர்களோன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.
மிக்க நன்றி தல ;))
ponnappola aaatha/pethamanasu.. enra paadalum(enaani vittu pohathe or ennapetha raasa)en thaayenum kovilai kaakka vantha (aranmanaikili) ..... ivar eluthiyathu ena ninaikkiren
நாடோடி இலக்கியம் கண்டிப்பாக மற்றையவர்களுடையதையும் கொடுக்கிறேன்
புதுகை பாஸ் வருகைக்கு நன்றி
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
வாங்க ஜீரா
ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் "சிங்காரப்பெண்ணொருத்தி"எப்போது கேட்டாலும் எனை ஆட்கொள்ளும் ;)
தல கோபி மிக்க நன்றி ;)
ஷாபி
தாய் எனும் கோயிலை எழுதியது பொன்னடியான் தான்.
பெத்தமனசு எழுதியது ராஜா.
"தங்கக்கிளி" படப் பாடல் முதன் முறையாக கேட்கிறேன். ராஜாகிட்ட இல்லாத பாட்டு கூட உங்ககிட்டே இருக்கும் போல இருக்கே ? :):)
பொன்னடியான் அவர்கள் பற்றிய தொகுப்பு மிகவும் அருமை...
அருமை அருமை அருமை
தகவலுக்கு நன்றி...
பாராட்டப்பட வேண்டிய பாடலசிரியர்..
Post a Comment