Pages

Thursday, July 19, 2012

இசைஞானியின் மலர்ந்தும் மலராத "கண்ணுக்கொரு வண்ணக்கிளி"


இசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று "மணிப்பூர் மாமியார்" காலத்தில் இருந்து அண்மைய "நந்தலாலா" வரை சில நூறு தேறும். படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகிப் பிரபலமாகுவது ஒருபக்கம் இருக்க, படம் வந்ததா வராததா என்று கூடத் தேடிப்பார்க்காமல் ராஜாவின் பாடல்களைத் தேடி ரசிக்கும் ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன். அதுவும் கிடைத்தற்கரிய பாடல்களை இயன்றவரை தரமான இசைத்தட்டாக வாங்கிச் சேமிக்கும் வழக்கமுண்டு.
அப்படியானதொரு படம் தான் "கண்ணுக்கொரு வண்ணக்கிளி". இன்று நண்பர் கிருஷ் இந்த "கண்ணுக்கொரு வண்ணக்கிளி" படத்தின் பாடல்களைப் பற்றி விசாரித்தபோது உள்ளூரச் சந்தோஷம். ஏனென்றால் இப்படியான அரிய பாடல்களைக் கேட்டு ரசிக்கும் சக நண்பர்களையும் அவ்வப்போது இனங்காண முடிவதில். இசைஞானி இளையராஜா இப்படி மணி மணியாகக் கோர்த்த இசையை ஏண்டா எடுப்பாகப் படம் பிடிக்கும், மொக்கைக் கதையில் இடையில் செருகும், அல்லது பாடலையே சேர்க்காத இயக்குனர் பட்டியல் மேல் எனக்குத் தார்மீகக் கோபம் வருவதுண்டு. ஆனால் நண்பர் கோ.அரவிந்தன் (@tpkd)சொன்னது போல, "நல்ல தண்ணிக் கிணற்றில் என்ன போட்டாலும் நல்ல தண்ணி தானே வரும்" என்று மனசை ஆற்றிக் கொள்வது தான் சரி.

இன்றுவரை இந்தப் படத்தை இயக்கியவர் யார், நடித்தவர்கள் யார் யாரென்று எந்தத் தகவலும் கிட்டவில்லை. ஆனால் மணி மணியாக மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் இரண்டு பாடல்கள் ஒரே மெட்டில் ஆனால் இருவேறு பாடகர்கள் பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பாடகர்கள் பட்டியலைப் பற்றிப் பார்த்தபோது லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளின் இரண்டு பாடல்கள் உண்டு. என் சிற்றறிவுக்கு எட்டியது வரை தமிழில் லதா மற்றும் ஆஷா போன்ஸ்லே சகோதரிகள் ஒரே படத்தில் பாடியது என்றால் இந்தப் படமாகத் தான் இருக்கும்.
கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், P.சுசிலா, மனோ ஆகியோரோடு இசைஞானி இளையராஜாவும் பாடியிருக்கிறார். கூடவே எஸ்.ஜானகி, சித்ராவையும் சேர்த்திருந்தால் எண்பதுகளின் உச்ச நட்சத்திரப்பாடகர்கள் சேர்ந்த படமாக இது இருந்திருக்கும். ஒரேயொரு பாடலை அனுராதா என்ற பாடகி பாடியிருக்கலாம், அனுராதா பட்வால் ஆக இருக்கலாம். வேறு யாரும் அப்போது அந்தப் பெயரில் பாடியதாக நினைவில் இல்லை.
சரி இனிப் பாடல் தொகுப்பிற்குப் போவோம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போன்ஸ்லே பாடிய 'உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்"



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்" முன்னர் கொடுத்த ஜோடிப்பாடலின் மெட்டு ஆனால் இசை வேறு, இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "யார் அழுது யார் துயரம் மாறும்"



இளையராஜா பாடும் "யார் அழுது யார் துயரம் மாறும்" முன்னர் கொடுத்த அதே பாடலின் மெட்டும், இசையும் ஆனால் பாடகர் வேறு. இதுவும் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.




லதா மங்கேஷ்கர் பாடிய "இங்கே பொன்வீணை"




அனுராதா பாடிய "வாலிபம்" இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை, மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது



இளையரஜா பாடிய "கானம் தென்காற்றோடு"



P.சுசீலா,மனோ பாடும் "துளித் துளி மழையாய்"



மனோ குழு பாடிய "பதினாறு பதினேழு வயதோடு"

23 comments:

Anonymous said...

Prabha,

Thanks for sharing Raja's song
Maki

நாடோடி இலக்கியன் said...

எல்லா பாடல்களையும் முதன்முறையாய் கேட்கிறேன்.

துளித் துளி மழையாய் கேட்டதும் பிடித்துவிட்டது.

இங்கே பொன் வீணை ஹிந்தி ட்யூன் மாதிரி இருக்கு.

பதினாறு பதினேழு பாடல் பல்லவி கேட்டதும் பிடிக்கிற மாதிரி இருக்கு.

நன்றி கானா பிரபா , நல்ல பாடல்களை அறியத்தந்தமைக்கு.

G.Ragavan said...

பொதுவாகவே 80களில் வெளிவராத படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 50களில் 60களில் 70களில் இந்த வெளிவராத படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

மெல்லிசை மன்னரையே எடுத்துக் கொண்டால் “ஞாயிறும் திங்களும்” என்ற ஒரு படம் மட்டுமே இந்த வரிசையில் வரும். பாடல்கள் அனைத்தும் பதியப்பட்டு படமே எடுக்கப்படாமல் விடப்பட்டது.

ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி, தேவிகா, கே.பி.சுந்தராம்பாள் நடிப்பதாக திட்டமிட்ட படம்.

இந்தப் படத்தின் பாடல்களையும் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. இலங்கையில் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

இளையராஜாவுக்குவும் கங்கையமரனுக்கும் வெளிவராத படங்கள் நிறைய உண்டு. தோண்டித் துருவினால் இது போன்ற நிறைய பொன்முட்டைகள் கிடைக்கும்.

லதாவும் ஆஷாவும் இணைந்து பாடியது தமிழில் இந்த ஒரு படத்தில் மட்டுமே என்று நினைக்கிறேன்.

அனுராதா என்ற பாடகியின் குரல் அனுராதா பொடுவாலின் குரல் போல இல்லை. இவர் தேவாவின் இசையில் ஒரு பாட்டு பாடியிருக்கிறாரே.

இந்தப் பாடல்களையும் படத்தைப் பற்றிய தகவல்களையும் கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி. இது போன்ற ஆராய்ச்சிகள் தொடரட்டும் :)

இளையராஜா இசையில் எம்.ஜி.ஆர் நடிக்க ஒரு படம் முடிவு செய்யப்பட்டது என்று அறிகின்றேன். ஆனால் படம் எடுக்கப்படவில்லை. முதல்வராக ஆகிவிட்டதால் எம்.ஜி.ஆர் நடிப்பதை நிறுத்திவிட்டார். பாடல்கள் பதிவு செய்யப்பட்டனவா என்று தெரியவில்லை. அந்தத் தகவலையும் தோண்டித் துருவுங்களேன். :)

கோபிநாத் said...

அருமையான தொகுப்பு தல..நீங்க சொல்லி தான் இப்படி ஒரு படமே இருக்குன்னு தெரியும்.

மிக்க நன்றி தல ;)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு.... இவையெல்லாம் டவுன்லோட் செய்ய முடியாதா...?
பகிர்வுக்கு நன்றி...வாழ்த்துக்கள்...
தொடருங்கள்... (த.ம. 1)

IKrishs said...

சொல்வனம் பதிவை பார்த்து தேடியதில் இரண்டே பாடல் கள் தான் இணையத்தில் பார்த்தேன்..அதில் கானம் தென் பாண்டி interlude காகவே இந்த 2 நாட்களில் பல முறை திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருக்கேன்.!
ட்விட்டரில் ,நடிகர் /இயக்குனர் விவரத்துக்காக கேட்டதில் ,இங்க 9 பாடல்கள் பொக்கிஷமே இருப்பதை கண்டு மகிழ்ச்சி! நன்றிகள் ராஜாவுக்கும் - உங்களுக்கும்!

கானா பிரபா said...

மகி

மிக்க நன்றி வருகைக்கு

நாடோடி இலக்கியன்

உன்னை நான் பார்க்கையிலும் அருமையான பாட்டு

வாங்க ராகவன்

அருமையான தகவல்கள், அனுராதா என்ற பேரில் வேறு யாரும் பாடியதாகத் தெரியவில்லை அறிமுகப்பாடகியாகவும் இருக்கலாம்.

எம்ஜிஆர் படப்பாடல் ராஜாவிடம் மட்டுமே இருக்கும் போல ;)

கானா பிரபா said...

தல கோபி

மிக்க நன்றி வருகைக்கு

திண்டுக்கல் தனபாலன்

பாடல்களை டவுண்லோடு பண்ணும் வசதியை இந்தத் தளத்தில் தவிர்ப்பேன் ;)


ஐகிருஷ்

உங்களால் ஒரு பதிவும் ஒப்பேறியது.

kaialavuman said...

நல்ல தொகுப்புகள் பிரபா.
நன்றிகள்.

ஜி.ரா. ஆன்மீகம் தமிழ் ஆகியவற்றைப் போலவே திரைத் துறையிலும் பலத் தகவல்களை வழங்கியிருக்கிறார். அவருக்கும் நன்றிகள்

பால கணேஷ் said...

நல்லதொரு பகிர்வு பிரபு. ஆனால் வீட்டில் அன்றி அலுவலகத்தில் மட்டுமே இணையத்தில் வாழும் என் போன்றவர்களுக்கு டவுன் லோடு செய்து ரசிக்க முடிந்தால் நன்றாக ரசிக்க முடியும். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையேல் bganesh55@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் மிகமிக நன்றி.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி வெங்கட ஶ்ரீநிவாசன்

பாலகணேஷ்

அவகாசம் கிடைக்கும் போது அனுப்புகிறேன், இணையத்தில் 6 பாடல்கள் இருக்கின்றன

Shankar said...

பிரபா அண்ணாச்சி, அருமை. உன்னை நான் பாடலை இலங்கை வர்த்தக ஒலிபரப்பு மூலமாக நான் சிறுவயதில் கேட்டிருக்கிறேன் (90களில் இலங்கை வர்த்தக ஒலிபரப்பு எங்கள் ஊர்ப்பகுதிகளில் மிகவும் பிரபலம்).என் அப்பா அடிக்கடி சொல்வார்...இலங்கை வானொலி கிட்டத்தட்ட அனைத்து எல்.பி ரெக்கார்டுகளும் வைத்திருக்கும் என்று. உங்கள் வலைதளம் மிகவும் அருமை. இது போன்ற பாடல்களை எங்கு பதிவிறக்கம் செய்யலாம் ?

ஷங்கர்

Asghar said...

Praba,
My name is Asghar. Iam new to your blogger.Thanks for sharing raja sir's song. Amazing songs. I always hear raja sir's song while driving. If you don't mind could you please send all these songs to my email id: pmasghar@yahoo.com
Thanks in adavance for your precious information. Keep up the good work.

Asghar

பிரசன்னா கண்ணன் said...

Good work Prabha.. I have SPB's version of "Unnai Naan Paarthathu", but surprised to see KJY's verion.. Both are wonderful tracks..

By the way,I belive this is the only tamil song which has different track versions of SPB & KJY.. Correct me if i am wrong..

தனிமரம் said...

முதலில் நன்றி பிரபா நீண்டநாள் வலையில் இருந்த வலிப்பு போய் விட்டது!ஹீஇ


பாடல்கள் அருமை அதுவும் உன்னை நான் பார்க்கையில் ஒரு காலத்தில் வர்த்தகசேவையில் அதிகம் ஒலித்த காலங்கள் மலரும் நினைவுகள்§

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல இருக்கு


நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

இத்தன வருஷமா எனக்கு எப்படி இது தெரியாம போச்சுனு ஆச்சரியம் இல்லை, பதினைந்து நாளா எப்படி இத பார்க்காம (கேட்காம) போனேன்னு ஆச்சரியம்.. இன்னொரு "மணிப்பூர் மாமியார்" ,இன்னொரு "இளையராஜாவின் ரசிகை" இன்னொரு "உன்னை விட மாட்டேன்" வரிசையில் இந்த கண்ணுகொரு வண்ணகிளி..

பாடல்கள் இசை தரம் 90-91ல் வரவேண்டிய படம் என்று தோனுகிறது.. ஒருவேளை இந்த படம் வந்திருந்தால், இன்னொரு "என் அருகில் நீ இருந்தால்", "இதயம்" போல இருந்திருக்கும்.

பதினாறு பதினேழு - "ஏன்மா அந்தி மயக்கமா" ஸ்டைளில் உள்ளது..

"நன்றி" எல்லாம் சொல்ல முடியாது கானா சார்.. இது உங்க கடமை :))

எப்படி டவுன் லோடு செய்வது என்று கேட்ட அன்பரே - real Player இன்ஸ்டால் செய்யவும் , மற்றதை அது பார்த்துக்கொள்ளும் :))

இதுபோல இன்னும் எத்தனை "புதையல்களை" இன்னும் எத்தனை "பூதங்கள்" காத்து வருகிறதோ????

~ரவிசங்கரானந்து

Anonymous said...

//இளையராஜா இசையில் எம்.ஜி.ஆர் நடிக்க ஒரு படம் முடிவு செய்யப்பட்டது என்று அறிகின்றேன். ஆனால் படம் எடுக்கப்படவில்லை. முதல்வராக ஆகிவிட்டதால் எம்.ஜி.ஆர் நடிப்பதை நிறுத்திவிட்டார். பாடல்கள் பதிவு செய்யப்பட்டனவா என்று தெரியவில்லை. அந்தத் தகவலையும் தோண்டித் துருவுங்களேன். :)//

அந்த படத்தின் பெயர் "உன்னை விட மாட்டேன்" அனால் அதே பெயரில் சமீபத்தில் மறந்த அரசியல் பிரமுகருமான "நேதாஜி", ஒய் ஜி மகேந்திரன் நடித்து வெளி வந்தது அனால் இசை ராக தேவன் அல்ல.

~ரவிசங்கரானந்த்

ark said...

நடிகர் ரவீந்தரன் தயாரிப்பில் உருவான படம் "கண்ணுக்கொரு வண்ணக்கிளி." ஆனால் படம் வெளிவரவில்லை.

srinivasan vijayan said...

இளையராஜா பாடும் "யார் அழுது யார் துயரம் மாறும்"

intha song en kitta irukae :-)

srinivasan vijayan said...

got gotttt already 2 songs in my mobile :-)

Prem said...

இது திரு.சத்யராஜ் நடிபதாக விளம்பரப்படுத்தப்பட்ட படம் என்று நினைக்கிறேன். பள்ளி இறுதியில் இந்த வாங்கினேன்.

Unknown said...

அருமையான பதிவு பிரபா - தமிழ்கவி