Pages

Saturday, December 31, 2011

பதிவர்கள் பார்வையில் 2011 - ஒலிப்பகிர்வு

2011 ஆம் ஆண்டு விடைபெறப்போகின்றது. 2012 ஆம் ஆண்டை வரவேற்கும் வானொலிப் பணியில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வழியாக http://tunein.com/radio/ATBC---Australias-Tamil-Radio-s111349/ தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றேன். இந்தவேளை கடந்த ஆண்டு ட்விட்டர் வழியாகவும், வலையுலகம் வழியாகவும் அறிமுகமான நண்பர்களை வைத்து 2010 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்கிய பாங்கில் இந்த ஆண்டும் 2011 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்க எண்ணியபோது நண்பர்கள் கைகொடுத்தார்கள். அந்த வகையில் நண்பர் அப்பு 2011 இல் தொழில் நுட்பம், நண்பர் கிரி ராமசுப்ரமணியன் 2011 இல் திரையிசையுலகம், நண்பர் சதீஷ் குமார் 2011 இல் இந்தியா மற்றும் தமிழகம் ஆகிய பகிர்வுகளை அளித்திருந்தார்கள். உண்மையில் ஒரு தேர்ந்த வானொலியாளர்களின் பாங்கில் இவர்கள் கொடுத்த இந்தப் பகிர்வுகளுக்கு வானொலி நேயர்கள் மத்தியில் பாராட்டும் கிட்டியதை இவ்வேளை மகிழ்வோடு சொல்லிக் கொள்கின்றேன்.

என்னோடு கூடப் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் இந்த வேளை இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்தை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து ஒலிப்பகிர்வுகளைக் கேளுங்கள்.

2011 இல் தொழில் நுட்ப உலகு - வழங்குவது அப்பு



2011 இல் திரையிசை - வழங்குவது கிரி ராமசுப்ரமணியன்



2011 இல் இந்தியா - வழங்குவது சதீஷ்குமார்




2011 இல் தமிழகம் - வழங்குவது சதீஷ்குமார்





புகைப்படம் நன்றி: http://caricaturque.blogspot.com/

2 comments:

Unknown said...

Nice one
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

Rajah said...

‎2011 இல் தொழில் நுட்ப உலகு ,திரையிசை , இந்தியா, தமிழகம் ஆகிய ஒலிபகிர்வை குறுகிய நேரத்தில் சுருக்கமாகவும் அழகாகவும் வழங்கிய அப்பு, கிரி , சதீஷ்குமார் போன்ற எமது தமிழகத்து உறவுகளுக்கும், இதை நேயர்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றியையும் , புது வருட வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.