பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்து தமிழில் வந்த ஒரு படத்தின் அதே படத்தலைப்புடன் சில வருஷங்களுக்குப் தெலுங்கில் வந்த இந்தப் படம் இத்தனை புகழை அள்ளிக் குவிக்கும் என்று ராஜாவே அந்த நேரம் எண்ணியிருப்பாரோ தெரியவில்லை. ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளோடு தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் புகழப்பட்ட இந்தப் படத்தை வாரியணைத்துப் போற்றிப் புகழத் தமிழ் ரசிகர்களும் தவறவில்லை. இன்று எத்தனை பேருக்கு இந்தப் படம் ஒரு மொழி மாற்றுப் படம் என்று தெரியுமே என்னமோ அவ்வளவுக்கு திகட்டாத அவலாக இருக்கும் பாடல்கள் எல்லோருக்குமே ப்ரியமானவை.
இந்தப் படத்தின் இயக்குனருக்கும் சரி , இசைஞானி இளையராஜாவுக்கும் சரி குறித்த இந்தப் படம் இவர்கள் வாழ்வில் ஒரு மைல்கல். திருட்டில் அப்படி என்ன ஆசையோ தெரியவில்லை இயக்குனருக்கு இன்னொரு படத்துக்கும் திருட்டைத் தலைப்பாக்கினார். ஆனால் உழைப்போ நேர்மையாக இருந்தது இந்தப் படத்தில். பின்னணி இசையைக் கேட்டால் இதயத்தை உருக்கும்.
ராஜாவைச் சந்தித்தால் கேட்கவேண்டும் என்று ஒரு கேள்வி, தெலுங்கில் அவ்வளவு அழகாகப் பாடிய எஸ்.பி.பி ஐ ஒதுக்கி தமிழில் மனோவை ஒத்தியதன் காரணம் என்னவோ?
சரி சரி இதுக்கு மேலே சொன்னால் விடையை என்னிடமே கேட்பீர்கள் பின்னணி இசையைக் கேட்டவாறே படம் என்ன என்ற பதிலோடு பட்டையைக் கிளப்புங்கள், ராவணாவுக்கு முதல் பின்னணி இசை தருவேன் பாடல்களோடு கலந்துமக்கு ;)
சரியான பதில்
தெலுங்கில்: கீதாஞ்சலி
தமிழில்: இதயத்தைத் திருடாதே
இயக்கம்: மணிரத்னம்
போட்டியில் பங்குபற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
தெலுங்கு-கீதாஞ்சலி தமிழ்-இதயத்தைத்
திருடாதே.
வாழ்த்துக்கள் ரவிஷங்கர், நீங்க தான் முதல் ஆளும் கூட ;)
Geethaanjali:)
Geeethavum anjaliyum
நிஜம்ஸ்
:) அதே தான்
அனானி நண்பரே
ஒரு படம் தானே கேட்டேன் ;)
இதயத்தைத் திருடாதே
Sir,
Idayathai Thirudathe..
Maestro's world-class music + BGM,
uncomparable PC Sriram's mindblowing photography.
Sudharsan
இதயத்தைத் திருடாதே..!
இதயத்தைத் திருடாதே
வந்தியத்தேவரே
அதே தான் ;)
சுட்டி
நீங்கள் சொன்னது அனைத்துமே உண்மை, விடை உட்பட
thulli ezhunthathu paattu
chinna kuyilisa kettu
:)
Thalaivaa neenga ennoda idhayatha thiruditeenga.. australlia police-la complaint kudukanum .. enna procedure?
Geethanu orutharu Anjali selutha vanthanga paavam
கீதாஞ்சலி!
சின்னப்பயல், ரிஷான்
சரியான பதில் தான்
தமிழில் வந்த முந்திய படத்தின் பாடல்களைத் தந்த நண்பரே படம் என்னவென்று சொல்லணுமே
ஆளவந்தான்
மிகவும் இலகுவான கேள்வி ஆச்சே
லோகேஷ்
சரியான பதில் தான்
கீதாஞ்சலி - தமிழில் இதயத்தை திருடாதே. தமிழ் பதிப்பின் போது SPB வெளிநாட்டு பயணம் சென்றுவிட்டதால் தலைவர் மனோவை எல்லாப் பாடல்களையும் பாட வைத்தார் என்று படம் ரிலிஸ் ஆன போது பத்திரிகையில் படித்த ஞாபகம்.
தமிழில் எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக ........பிடித்த படம் இதயத்தை திருடாதே
பாவலர் கிரியேஷன்ஸ் படம் (தமிழ்) - கீதாஞ்சலி
தெலுங்குப் படம் - அதுவும் ‘கீதாஞ்சலி’
அதன் தமிழ் வெர்ஷன் - இதயத்தைத் திருடாதே
இயக்குனர் - மணிரத்னம்
அவருடைய இன்னொரு ‘திருட்டு’ டைட்டில் - திருடா, திருடா
;)
- என். சொக்கன்,
பெங்களூரு.
இதயத்தை திருடாதே
தல...இதயத்தை திருடாதே...;)))
ரொம்ப ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈசியாக இருக்கு உங்க கேள்வி ;))
Enakku Geetha Anjalinu 2 girl friends irukkanga thale..
அத்திரி
:) பின்னீட்டிங்
மீனாட்சி சுந்தரம்
சரியான பதிலோடு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள்
56 எனக்கு ராசியில்லாத எண் :)
இதயத்தை திருடாதே,.. கீதாஞ்சலி?
//திருட்டைத் தலைப்பாக்கினார். ஆனால் உழைப்போ நேர்மையாக இருந்தது இந்தப் படத்தில். பின்னணி இசையைக் கேட்டால் இதயத்தை உருக்கும். //
.......தெலுங்கு கீதாஞ்சலி
சொக்கரே
அதே தான்
ஆயில்ஸ்
சரியான விடை
தல கோபி
உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே
இளா
முதலில் தெரியாதது பின்னர் தெரிந்தோ ;)
கலைக்கோவரே
நீங்கள் பதில் எடுக்கும் பாணியே தனி தான்
geethanjali in Telugu movie.
Ithayaththaith thirudathey is in Tamil.
IR has used different singers for the same song in different languages. But in this scenario, I guess IR wanted to promote Mano.
idayathai thirudathey...
Geethanjali
SPB versionthaan super-a irukum.
கானா சார், இதயத்தைத் திருடாதே தானே?
வாங்க ராகவன்
சரியான பதிலோடு நீங்கள் சொன்ன விஷயம் சரியாகத் தான் படுகிறது.
தங்ஸ்
கலக்கல்ஸ்
சுப்பராமன்
அதே தான் ;)
தெலுங்கில் கலக்கிய படம் = கீதாஞ்சலி
தமிழில் அதனிலும் கலக்கிய படம் = இதயத்தைத் திருடாதே
இசை என்பதற்கான ரசனை இருக்கும் வரை, இந்தப் படப் பாடல்கள் தொடர்ந்து ரசிக்கப்படும்! பாடல்களை விட பின்னணி இசை இன்னும் அருமை!
இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்பு றேடியோஸ்பதியில் கொடுத்து இருக்கீங்களா என்ன காபி அண்ணாச்சி?
ஜகட ஜகட ஜகடம் = விடிய விடிய நடனம் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் :)
//ராஜாவைச் சந்தித்தால் கேட்கவேண்டும் என்று ஒரு கேள்வி, தெலுங்கில் அவ்வளவு அழகாகப் பாடிய எஸ்.பி.பி ஐ ஒதுக்கி தமிழில் மனோவை ஒத்தியதன் காரணம் என்னவோ?//
அதானே! ஒரு வேளை ஓம் நமஹ பாட்டை மட்டும் ஜானகி பாடினாங்க, மத்ததெல்லாம் சித்ரா...அதுனாலயோ? இருக்காதே! தமிழிலும் அப்படியே தானே இருவரும் பாடினாங்க!
இப்படிப் பாடிப் பாடித் தான், மனோ = கார்பன் காப்பி ஆஃப் எஸ்.பி.பி-ன்னு பேரு வாங்கிட்டாரு!
நல்ல வேளை, முக்காலா முக்காபலா பாட்டு வந்து அதையெல்லாம் மாத்திக் காட்டுச்சி! ரஹ்மான் மனோவுக்கு செஞ்ச மாபெரும் உதவி!
தல
இப்போ தான் ஒரு புதிர் போட்டிக்கு முன்னாடியே வரேன்.
இதயத்தை திருடாதே தானே?:)
தெலுங்குவில் கீதாஞ்சலி
வணக்கம் ஆளவந்தான்
மன்னிக்கவும் தவறுதலாக உங்கள் பின்னூட்டங்கள் அழிபட்டு விட்டன, பதிலை இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கல போல
கே.ஆர்.எஸ் சுவாமிகளே ;)
அதே தான், மனோ என்றால் உங்களுக்கு அடுக்காது போல ;)
கீதப்பிரியன்
சரியான பதில்கள் இரண்டுமே
சரியான பதில்
தெலுங்கில்: கீதாஞ்சலி
தமிழில்: இதயத்தைத் திருடாதே
இயக்கம்: மணிரத்னம்
போட்டியில் பங்குபற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
//ராஜாவைச் சந்தித்தால் கேட்கவேண்டும் என்று ஒரு கேள்வி, தெலுங்கில் அவ்வளவு அழகாகப் பாடிய எஸ்.பி.பி ஐ ஒதுக்கி தமிழில் மனோவை ஒத்தியதன் காரணம் என்னவோ?//
In the movie "Indran-Chandran", SPB dubbed for the old Kamal in a really bass and cracked voice(as the character required him to)... because of that SPB's throat got affected and he was not in a condition to sing for 3 months... Mani Ratnam/IR had to record the songs for Idhayathai Thirudadhe(Tamil) during that time and hence they had to use Mano instead of SPB.
தகவலுக்கு நன்றி நண்பரே நீங்கள் சொன்ன விஷயம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது ஞாபகத்துக்கு வருகின்றது
Post a Comment