Pages

Thursday, October 15, 2009

சிறப்பு நேயர் "கிருத்திகன் குமாரசாமி"

இந்த வார சிறப்பு நேயரைப் பார்ப்பதற்கு முன்னர், றேடியோஸ்பதி சிறப்பு நேயர் பகுதியில் உங்கள் ஆக்கமும் இடம்பெற விரும்பினால் முத்தான ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து அவை ஏன் உங்களை வசீகரித்தன, அல்லது அந்தப் பாடல்கள் நினைவுபடுத்தும் சுவையான சம்பவங்களைக் கோர்வையாக்கி என்ற மின்னஞ்சலுக்குத் தட்டிவிடுங்கள்.

சரி, இந்த வாரம் வந்து கலக்கும் சிறப்பு நேயரைப் பார்ப்போம்.
வலையுலகின் புதுவரவாக ஈழத்து உறவான கிருத்திகன் குமாரசாமி இந்த வார சிறப்பு நேயராக வந்திருக்கின்றார். ஈழத்தின் பண்பாட்டுக் கோலங்களில் இருந்து தான் வாழும் நாடு, தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பதிவாக்கும் கிருத்திகனின் பதிவுகள் தனித்துவமானவை. தொடர்ந்தும் இவர் வலையுலகில் நீடித்து நின்று தன் எண்ணப் பகிர்வுகளை வழங்க வெண்டும். முத்தான ஐந்து பாடல்களாக இவர் எடுத்தவை அனைத்துமே 80களில், இவருடைய காலத்துக்கு முற்பட்டவை. ஆனால் அவற்றை எவ்வளவு தூரம் ரசித்து அனுபவித்திருக்கின்றார். என்று பாருங்களேன். தொடர்ந்து கிருத்திகன் பேசுவார்.


எல்லோருக்கும் பிடித்த பாடல்கள்தான், ஆனால் சில வித்தியாசமான காரணங்களுக்காக சில பாடல்களைத் தெரிந்து வரிசைப்படுத்தி இருக்கிறேன்.

1. நீல வான ஓடையில்.... (வாழ்வே மாயம்)
இந்தப் பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியமே பல இடங்களில் ஒப்புக் கொண்டிருக்கிறார் இன்றைக்கும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் குலாம் நபி ஷேக் என்பவரின் கசல் (இதுவும் பாலா சொல்லித்தான் தெரியும்) அடிப்படையில் உருவான humming வரும்போதே கைதட்டல் கிடைக்கும் பாடல் இது. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? 2004ல் ஜெயா ரி.வி.யில் 'கலக்கப்போவது கமல்' என்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. சொல்லித்தான் தெரியும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தது கங்கை அமரன் என்று. அதுவரை இளையராஜா என்றே நம்பி வந்தேன். தொலைக்காட்சியில் பாடல்கள் போடும்போது கூட இளையராஜா என்றே போடுவார்கள். இப்போதுகூட கங்கை அமரனையும் இந்தப் பாடலையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.



2. விழிகள் மேடையாம்...(கிளிஞ்சல்கள்)
இந்தப் பாடல் ஏன் பிடிக்கும் என்று காரணம் சொல்ல முடியவில்லை. எங்களூர் கல்யாண வீட்டு வீடியோக்கள் போல் படமாக்கப்பட்டிருப்பதாலா? இசையாலா? அல்லது கிளிஞ்சல்கள் என்ற படத்தின் பாதிப்பாலா? இல்லையென்றால் பாடல் வரிகளாலா? எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து கட்டி ரசிக்க வைக்கின்ற பாடல். முக்கியமாக ஜானகி மற்றும் Dr.கல்யாண் பாடிய இந்தப் பாடலை எழுதி இசையமைத்தது இன்றைக்கு தன்னாலும் , மகனாலும் ‘காமெடி பீஸ்' ஆகிவிட்ட விஜய. T. ராஜேந்தர் என்பது எனக்கு ஒரு போது பேரதிர்ச்சி.




3. பன்னீரில் நனைந்த பூக்கள்...(உயிரே உனக்காக)
அடிக்கடி கேட்ட பாடல்தான். வரிகள் யாருடையவை என்று தெரியாது.. ஆனால் ஏனோ இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும். ஆரம்பகாலங்களில் இதுவும் ராஜாவின் கொடை என்பதாக நினைத்ததுண்டு. ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் எங்களுக்கு அன்னியப்பட்ட இசையாக இருக்க இணையத்தில் தேடிப் பார்த்தபோது தெரியவந்தது, இந்தப் பாட்டை உருவாக்கியவர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இரட்டையர்கள் என்று. முக்கியமாக பாடல் தொடங்கக்கு முன்னர் வருகிற அந்த இசை ஏதோ நினைவுகளை மீட்டுத்தரும்



4. தாழம்பூ தலைமுடித்து... (தேவராகம்)
இந்தப் பாட்டு அடிக்கடி எங்களூர் கல்யாண வீடியோக்களில் கேட்ட பாட்டு... என்ன படம், யார் இசை என்று தேடித்தேடி அலுத்து சமீபத்தில் தற்செயலாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டு வந்த இந்தப் படத்தைப் பார்க்கக் கிடைத்தது. அர்விந்த்சாமி, ஸ்ரீதேவி நடித்த படம். ஸ்ரீதேவி தேவதை மாதிரி இருப்பார்கள். இளையராஜா என்ற இசை ராட்சசனுக்கு அடிக்கடி சமர்ப்பிக்கப்படும் பாடல், இருந்தாலும் இதற்கும் ராஜாவுக்கும் சம்பந்தமில்லை. பாடல் எழுதியது வைரமுத்து, வருடம் 1996... இசையமைத்தது மரகத மணி என்றறியப்பட்ட மரகதமணி கீரவாணி அவர்கள்.



5. அந்தி நேரத் தென்றல் காற்று... (இணைந்த கைகள்)
ஆபாவாணன் என்று ஒருவர் கொஞ்சக் காலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதிப் படம் எடுத்தார் ஞாபகம் இருக்கிறதா. அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மனோஜ் கியான் போட்ட பாடல் இது. ரயில் ஒன்றில் வருவதாக வரும் இந்தப் பாடல் சில ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போகும். எஸ்.பி. பாலாவும் ஜெயச்சந்திரனும் பாடிய பாடல் இது. இதே மனோஜ் கியான் உருவாக்கியவைதான் தோல்வி நிலையென நினைத்தால், செந்தூரப் பூவே நீயும் தேன் சிந்த வா, மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா போன்ற பாடல்கள்.



பாடல்களாலேயே படங்கள் ஓடிய அந்தக் காலத்தில் வந்த பாடல்களை இளையராஜா பாடல்கள், மோகன் பாடல்கள், கார்த்திக் பாடல்கள், கமல் பாடல்கள் வழமையாகப் பிரிப்பது போல் பிரிக்காமல் கொஞ்சம் வித்தியாசமான தேர்வுகளை உள்ளடக்க முயன்றிருக்கிறேன். இளையராஜா என்னும் இசைச் சூறாவளியால் அடித்து ஒதுக்கப்பட்ட சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் இவை.

கிருத்திகன்.

13 comments:

ஆயில்யன் said...

//விழிகள் மேடையாம்../

ஹைய்ய்ய்ய் சூப்பர் பாட்டு பாஸ் ரொம்பநாள் இடைவெளிக்குப்பிறகு கேக்குறேன் மியூசிக் எங்க ஊருக்காரரேய்ய்ய்ய்!

ப்பபப் ப்ப்பப் ஜுலி ஐ லவ்யூ :)))

நாடோடி இலக்கியன் said...

நல்ல தெரிவுகள். தேவராகப் பாடலை இப்போதுதான் கேட்கிறேன்.அப்படத்தின் வேறு இரண்டு பாடல்களைக் கேட்டிருக்கிறேன்.

Unknown said...

நன்றி கானா பிரபா அண்ணா..

ஆயில்யன்... யாரந்த ஜூலி???

நாடோடி இலக்கியன் நன்றி

அத்திரி said...

ALL SONGS SUPERB

Anonymous said...

நல்ல பாடல்கள். உயிரே உனக்காக பாடல்கள் அத்தனையும் ஒரு காலத்தில் செம ஹிட். லஷ்மிகாந்த் பியாரிலால் அந்தப்பாடல்களை மீண்டும் எந்தப்படத்திலும் பயன்படுத்தவேயில்லை.

கிடுகுவேலி said...

நல்ல தெரிவுகள்....கேட்டு ரசித்தோம்...அந்திநேரத் தென்றல் காற்று..அருமை...நன்று கிருத்திகன் மற்றும் கானாபிரபா...தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!!

வந்தியத்தேவன் said...

அருமையான தெரிவுகள். இவை அனைத்தும் எனக்கும் பிடித்தமானவை. அதிலும் ஜூலி ஐ லவ் யூவும் நீலவான ஓடையும் பல காலமாக ராஜா இசை என்றே நினைத்திருந்தேன். கீத்தின் வித்தியாசமான தெரிவுகள்.

Anonymous said...

நல்ல தெரிவு, பாத்து பாத்து non-இளையராஜா ஹிட்ஸ் பாடல்களாக சொல்லிருகீங்க :-)

// கங்கை அமரனையும் இந்தப் பாடலையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.//

அப்படி எல்லாம் இல்லீங்க.. அவரும் திறமைசாலி தான், பூத்த மல்லிக காத்து நிக்கிது, ஒரு காதல் என்பது என் கண்ணில் வந்தது, மலையோர மயிலே வெளையாடும் குயிலே, போன்ற பாடல்கள் மேலும் பல பாடல்கள் ராஜா சார் போட்டதுன்னு பல பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க ;-)

~ரவிசங்கர் ஆனந்த்

ஆயில்யன் said...

// Kiruthikan Kumarasamy said...

ஆயில்யன்... யாரந்த ஜூலி???//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

நல்லா கேக்குறாங்கய்யா டீடொய்யிலு :)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் கிருத்திகன் ;)

அருமையான தொகுப்பு...;)

\\இளையராஜா என்னும் இசைச் சூறாவளியால் அடித்து ஒதுக்கப்பட்ட சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் இவை.
\\

உண்மை..பன்னீரில் நனைந்த பூக்கள் பாட்டு எல்லாம் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு.

அனைத்த பாடல்களும் கேட்ட பாடல்கள் தான் ஆனால் வெகு நாட்களுக்கு முன்பு கேட்ட பாடல்கள். அதை மீண்டும் உங்கள் அருமையான தொகுப்பின் மூலம் கேட்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ;)

நன்றி ;)

கோபிநாத் said...

அனைத்து ரேடியோஸ்பதி நேயர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ;)

கலைக்கோவன் said...

// Anonymous said...
நல்ல தெரிவு, பாத்து பாத்து non-இளையராஜா ஹிட்ஸ் பாடல்களாக சொல்லிருகீங்க :-)

// கங்கை அமரனையும் இந்தப் பாடலையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.//

அப்படி எல்லாம் இல்லீங்க.. அவரும் திறமைசாலி தான், பூத்த மல்லிக காத்து நிக்கிது, ஒரு காதல் என்பது என் கண்ணில் வந்தது, மலையோர மயிலே வெளையாடும் குயிலே, போன்ற பாடல்கள் மேலும் பல பாடல்கள் ராஜா சார் போட்டதுன்னு பல பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க ;-)

~ரவிசங்கர் ஆனந்த்

October 16, 2009 5:01 PM//
ரிப்பிட்டேய்....

//இளையராஜா என்னும் இசைச் சூறாவளியால் அடித்து ஒதுக்கப்பட்ட சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் இவை.//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

வாழ்த்துக்கள் கிருத்திகன்.

//
கோபிநாத் said...
அனைத்து ரேடியோஸ்பதி நேயர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ;)

October 16, 2009 11:31 PM//
அனைத்து ரேடியோஸ்பதி நேயர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
****ச்சப்பா...,
இதுக்கும் ரிப்பீட்டா !!! ****

தமிழன்-கறுப்பி... said...

"விழிகள் மேடையாம்" அட கிருத்திகன் இந்த பாட்டெல்லாம் கேக்குற ஆளா...