றேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப்பு படத்தில் சேர்த்துட்டேன் ;-)
முதலில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கிப் பெருமை சேர்த்த ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு ( அதான் ராஜாவே சொல்லிட்டாரே , வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி)போட்டிக்குச் செல்வோம்.
கீழே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் மிளிர்ந்த ஐந்து படங்களில் இருந்து பின்னணி இசைத் துண்டங்களைப் புதிராகக் கொடுக்கின்றேன். ஐந்துக்கும் சரியான விடை அளிப்பவர் யாரென்று பார்ப்போம்.
இசைத்துண்டம் ஒன்று
க்ளூ : 3D படமெடுத்தவர் படமெடுக்க வந்தால் திருடிய கதையோடு படம் எடுக்கிறார்கள் என்று கோர்ட் கேஸ் வேறு. இந்த நாயகனும் இசைப்புயலும் சேர்ந்த இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பில்லாதது ஆச்சரியம். ஹோரஸ் குரல் கொடுக்க வந்தவருக்கு இரண்டு பாட்டுக்கள் பாடக்கிடைச்சுதே தெரியுமா?
puthir36a.mp3 -
இசைத்துண்டம் இரண்டு
க்ளூ : ஆள் பாதி ஆடை பாதி, 50 KG
puthir36b.mp3 -
இசைத்துண்டம் மூன்று
க்ளூ : வி.சி.குகநாதன் திரைக்கதை, வசனத்துக்கு உதவியிருக்கிறாராம், அந்த ஆட்டம் மறக்க முடியுமா ? மலேசியா வாசுதேவனை ஹோரஸ் குரலுக்கு மட்டுமே ரஹ்மான் பயன்படுத்தியிருக்கிறாரே
puthir36c.mp3 -
இசைத்துண்டம் நான்கு
க்ளூ: பேரைச் சொன்னா ராம சேனை நினைவில் வந்து தொலைக்குது
puthir36d.mp3 -
இசைத்துண்டம் ஐந்து
க்ளூ: ஒரு சொல்லை இரண்டு தரம் சொல்லிய இன்னொரு ரஹ்மான் படம், பிரசாந்த் இன்னொரு முறை இந்த நடிகையோடு நடிக்க ஆசைப்பட்டுக் கிட்டாத படம். பிரசாந்தை தூக்கிட்டாங்க, அவருக்கு பதில் இன்னொருத்தர்.
puthir36e.mp3 -
ஒகே போட்டி இத்தோடு ஓவர்
பதில்கள் இதோ
இசைத்துண்டம் ஒன்று
சரியான பதில்: அழகிய தமிழ் மகன்
3டி படம் எடுத்த அப்பச்சன் தமிழில் படமெடுக்க வந்தால் திருட்டுக் கதையோடு பரதன் இயக்க வந்து கோர்ட், கேஸ் என்று அலைச்சல். நடிகர் விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்த உதயா, மற்றும் அழகிய தமிழ்மகன் பெரிய வெற்றி இல்லை என்பது ஆச்சரியம்
ஹோரஸ் பாட வந்த பென்னி தயாளுக்கு கிடைச்ச பாட்டுக்கள் மதுரைக்கு போகாதடி, சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா
இசைத்துண்டம் இரண்டு
சரியான பதில்: ஜீன்ஸ்
ஆள் பாதி ஆடை பாதியை வச்சே ஜீன்ஸ் தான்னு காற்சட்டை போட்ட பிள்ளையே சொல்லுமே, கூடவே 50 KG தாஜ்மகால் எனக்கே எனக்கா
இசைத்துண்டம் மூன்று
சரியான பதில்: மின்சாரக் கனவு
ஏ.வி.எம் தயாரிப்பில் வி.சி.குகனாதனின் கதை, வசன ஒத்துழைப்பில் உருவான படம். மலேசியா வாசுதேவனை ஹில்தோரே ஹில்தோரே அப்படி "பூப்பூக்கும் ஓசை" பாட்டில் பாட விட்டாரே ரஹ்மான்.
இசைத்துண்டம் நான்கு:
சரியான பதில்: காதலர் தினம்
ஏம்பா இராம சேனை சொல்லியும் காதலர் தினம் பேர் நினைவுக்கு வரலையா? இங்கே கொடுத்த இசையிலும் கூட "ரோஜா ரோஜா" பாட்டு ஹம்மிங் வந்துச்சே
இசைத்துண்டம் ஐந்து:
சரியான பதில்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
தபு ஜோடியாக பிரசாந்தை நடிக்க சொன்னால், ஐஸ்வர்யா ராய் ஜோடியாத் தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சதால் அவருக்கு கல்தா. நான் கொடுத்த க்ளூ உபயோகப்படாவிட்டாலும் அந்த இசையில் பக்காவா சொல்லுதே படம் பேரை.
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
தலைவா! மன்னிச்சுடு.ரசிக்க முடியல.பின்னணி இசைல“ஜீவன்”” இல்ல.It sounds highly metalic.
MSVயை ஆதார ஸ்ருதி என்று சொன்ன ராஜா தானும் ரகுமானும் பஞ்சமங்கள் என்று சொல்லி தாங்கள் சமமே என்று சொல்லிவிட்டார்.
நீங்கள் ஏன் ராஜா ரகுமானை ஆச்சரியமாகப் பார்ப்பது போன்ற படத்தை போட்டிக்கிறீங்கள்?
இருக்கறதுலயே சுளுவான 3 மட்டும் நமக்கு ஆப்டுடுச்சுங்கோ..
2. ஜீன்ஸ்
4. காதலர் தினம்
5. கண்டுகொண்டேன்
கூடவே.. ஜீன்ஸ் இசைத்துண்டுக்கு சிறப்பு நன்றிகள்.. இதனை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். இன்றுதான் கிடைத்திருக்கிறது.. :)
//கே.ரவிஷங்கர் said...
தலைவா! மன்னிச்சுடு.ரசிக்க முடியல.பின்னணி இசைல“ஜீவன்”” இல்ல.It sounds highly metalic.//
வாங்க தல
ரஹ்மானின் பாணி நம்ம தல பாணியை விட வித்தியாசமானது, ராஜாங்கம் கேட்டுக் கேட்டு இது வித்தியாசமா இருந்தாலும் நிச்சயம் ரஹ்மானுக்கும் உள்ள தனித்துவத்தையும் ஏற்போம் பாஸ்.
இசைவிரும்பி said...
MSVயை ஆதார ஸ்ருதி என்று சொன்ன ராஜா தானும் ரகுமானும் பஞ்சமங்கள் என்று சொல்லி தாங்கள் சமமே என்று சொல்லிவிட்டார்.
நீங்கள் ஏன் ராஜா ரகுமானை ஆச்சரியமாகப் பார்ப்பது போன்ற படத்தை போட்டிக்கிறீங்கள்?//
வாங்க நண்பா
ராஜா ரஹ்மான் சேர்ந்த படத்தில் எனக்கு கிட்டியது இதுதான்.
வாங்க beemorgan
மூன்றும் சரி, மற்றைய 2 படங்கள் ரொம்ப சுலபமாச்சே.
ஒன்று - திருடா திருடா
இரண்டு - ஜீன்ஸ்
மூன்று - மின்சாரக் கனவு
நான்கு - காதலர் தினம்
ஐந்து - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
1.அழகிய தமிழ்மகன்
2.ஜீன்ஸ்
4.காதலர் தினம்
5.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
3.திருடா திருடா
பிழைகளுக்கு ஏற்றவாறு பரிசினை குறைத்துக்கொள்ளுங்கள் :))
வெயிலான்
முதலாவது படம் தப்பு, மற்றைய எல்லாம் சரி
பரத்
மூன்றாவது தப்பு, மற்றைய எல்லாம் சரி, ஆகா பரிசா ;)
என்னிடம் ராஜா ரஹ்மான் இனைந்துல்ல படம் உள்ளது உங்களுக்கு எப்படி அனுப்ப?
1.அழகிய தமிழ்மகன்
2.ஜீன்ஸ்
3.மின்சாரகனவு
4.காதலர் தினம்
5.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
1.வெற்றிக்கரங்கள் !
2.ஜீன்ஸ்
3.அலைபாயுதே
4.காதலர்தினம்
5.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பிரபு,
1. அழகிய தமிழ் மகன்?
1. அல்லி அர்ஜூனா / தாஜ்மஹால் / ஸ்டார்
2. தாஜ்மஹால் / ஜீன்ஸ் / குரு
3. லவ் பேர்ட்ஸ் / மிஸ்டர் ரோமியோ / மின்சாரக் கனவு / சங்கமம்
4. பம்பாய்
5. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
(தல,நாம எல்லாம் ராஜாவோட ஆட்கள்னு தெரியும்ல? இப்படியா ஆப்பு வைக்கிறது? அவ்வ்வ்வ் )
1.தெரியல...(ரொம்ப கஷ்டம்)
2. ஜூன்ஸ்
3. தெரியல...(ரொம்ப கஷ்டம்)
4. காதலர்தினம்
5. கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்
\\இசைவிரும்பி said...
MSVயை ஆதார ஸ்ருதி என்று சொன்ன ராஜா தானும் ரகுமானும் பஞ்சமங்கள் என்று சொல்லி தாங்கள் சமமே என்று சொல்லிவிட்டார்.
நீங்கள் ஏன் ராஜா ரகுமானை ஆச்சரியமாகப் பார்ப்பது போன்ற படத்தை போட்டிக்கிறீங்கள்?
\\
இசைவிரும்பி....உங்க கற்பனை ஒவர் கற்பனைங்க..;))
தல..
மார்ச் 1தேதி ரகுமானுக்கு விழா நீங்க போட்டுயிருக்குற படத்தை போல மூணு பேரும் ஒரே மேடையில் இருந்தாங்க ஆனா பாருங்கள் ஒரு படம் கூட சிக்கல ;(
என்ன கொடுமை தல இதெல்லாம் ;(
...bec of Rahman, i try :-)
(1) ----
(2) Jeans
(3) Kathalan
(4) Bombay
(5) Kandukonden Kandukonden
1. அழுகிய... மன்னிக்க அழகிய தமிழ் மகன்
2. ஜீன்ஸ்
3. மின்சாரக் கனவு
4. காதலர் தினம்
5. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
//segar said...
என்னிடம் ராஜா ரஹ்மான் இனைந்துல்ல படம் உள்ளது உங்களுக்கு எப்படி அனுப்ப?//
வணக்கம் சேகர்
இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்களேன், ரொம்ப நன்றி
kanapraba@gmail.com
தல கோபி
சேகர் அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்கிறார், காத்திருப்போம்.
வாழ்த்துக்கள் அஜித் சிவராஜா, அனைத்தும் சரி
கார்த்திக்
முதல் படம் தப்பு வெற்றிக் கரங்கள் ரஹ்மான் படம் அல்லவே, மூன்றாவதும் தப்பு மற்றவை சரி
வெயிலான்
இப்ப சொன்னது தான் சரி ;)
ரிஷான்
முதலாவது பிழை, இரண்டாவதில் ஏதாவது ஒன்று, மூன்றாவதில் ஏதாவது ஒன்று, நாலாவது பிழை, ஐந்தாவது மட்டும் தேறியிருக்கு ;)
தல கோபி
சொன்னது மூன்றும் சரி
டிஜே
இரண்டும், ஐந்தும் மட்டும் சரி
ஜிரா
பின்னீட்டிங்க, அனைத்தும் சரி
திருடா திருடா
ஜீன்ஸ்
மின்சார கனவு
காதலர் தினம்...,
அப்புறம்..,
ஐந்தாவது புதிர்ல
”Kandukonden Title Theme"- ன்னு
நீங்க போட்டிருக்கிறதை..,
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வாங்க கலைக்கோவரே
எல்லாம் சொல்லிட்டு முதலாவது மட்டும் பெயில் ஆகிட்டீங்களே ;)
முதலாவது புதியமுகம்
இரண்டாவது ஜீன்ஸ்
மூன்று கிழக்குச் சீமையிலே
நான்கு பம்பாய்
ஐந்தாவது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இளையராஜாவின் பின்னணி இசையைச் சுலபமாக கண்டுபிடிக்கலாம், ரகுமான் கொஞ்சம் கஸ்டமாக இருக்கின்றது
வந்தியத் தேவன்
இரண்டாவதும், ஐந்தாவதும் மட்டுமே சரி ;)
விஜய் தான் அந்த ஹீரோவா...
அப்பச்சன் படமா?
அப்படின்னா...
அட
நம்ம அழகிய தமிழ் மகன் ...
இசை மூவர்....
படம் நல்லா இருக்கு..,
1. அழகிய தமிழ்மகன்?
இந்த படம் நல்லா இருக்கு :)
1. thiruda thiruda
2. Jeans
3.Minsara kanavu
4.kadalar dinam
5.kandukondein kandukondein
beemorgan, கலைக்கோவன்
இந்த முறை சரியான பதில்
நாரதமுனி
முதலாவதை தவிர்த்து மற்ற எல்லாம் சரி.
1. அழகிய தமிழ் மகன்
2. ஜீன்ஸ்
3.
4. காதலர் தினம்
5. கண்டுகொண்டேன்
டாக்டர் புரூனோ
சொன்னவை அனைத்தும் சரி :)
//ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப்பு படத்தில் சேர்த்துட்டேன் ;-)//
சமத்து :))))
பாஸ் ஆன்சர் எல்லாம் தெரியும் பட் சொல்லமாட்டேனேஏஏஏஏ .....!
ஏன்ன்னா நான் லீவுல இருக்கேனாக்கும் :))
முதல் பதில்
36a. அழகிய தமிழ் மகன். சரியா?
2. 36b- ஜீன்ஸ்
5. 36e. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
3. 36c. மின்சாரக் கனவு
கைப்பு
இசைத்துண்டம் நான்கை தவிர சொன்னதெல்லாம் சரி
ஒகே போட்டி இத்தோடு ஓவர்
ஆஹா ஆஹா!!
அற்புதம் அற்புதம்!!
மிக்க நன்றி தல!! :-)
Post a Comment