கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்பதியில் வந்து போகும் இசைப்பிரியர்களுக்காக ஒரு வாக்கெடுப்புப் பதிவைக் கொடுத்திருந்தேன். உங்கள் தெரிவில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர் என்ற அந்த வாக்கெடுப்பில் கலைந்து சிறப்பித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். இதோ இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை இந்த வருடம் முடிகின்ற தறுவாயில் அறிவித்து விடுகின்றேன்.
நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பித்து கடந்த ஏழு வார வாக்கெடுப்பின் பிரகாரம் 93 வாக்குகளைப் பெற்று இளையராஜா முன்னணியின் நிற்கின்றார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 72 வாக்குகளைப் பெற்று ஏ.ஆர்.ரஹ்மானும், 68 வாக்குகளோடு மூன்றாவது இடத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இருக்கின்றார்கள்.
இந்தப் போட்டி என்பதே இந்த ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படங்களில் சிறந்த இசையமைப்பை வழங்கிய இசையமைப்பாளர் என்பதே. ஆனால் இசைஞானியின் கொலை வெறி ரசிகர்களின் ஓட்டுக்களோ இளையராஜாவையே அதிக ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திருக்கின்றார்கள்.
ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த யுவன் பருத்தி வீரனுக்காகவும் , ரஹ்மான் சிவாஜிக்காகவும் அதிக ஓட்டுக்களைப் பெற்றிருந்தார்கள்.
இளையராஜாவுக்கு மாயக்கண்ணாடி உட்பட பேர் சொல்லும் திரைப்படங்கள் இந்த ஆண்டு தமிழில் அமையவில்லை. ஆனால் சீனி கம் என்ற ஹிந்தித் திரையில் பழைய பல்லவியோடு புது மொந்தையில் கலக்கியிருந்தார்.
ரஹ்மானுக்கு சிவாஜி படம் உச்ச பட்ச வரவேற்பைக் கொடுத்து ஏறக்குறைய எல்லாப் பாடலையும் ரசிக்க வைத்தது. பாதி புண்ணியம் ரஜினிக்குத் தான். ராஜா என்றைக்குமே இசை ராஜா தான், ஆனால் அவர் மனசு வைக்கணுமே.
வித்யாசாகருக்கு மொழி படம் ஒன்றே அவரின் திறமையின் அடையாளம். வழக்கமான தன் பாணியில் இருந்து புது மாதிரிக் கொடுத்திருந்தார்.
யுவன் காட்டில் இந்த ஆண்டு அடை மழை. பருத்தி வீரன், சென்னை 28, பில்லா போன்ற படங்கள் வெற்றி பெற்றதும் இவரின் இசைக்கு மேலதிக அங்கீகாரமாக அமைந்து விட்டது. கற்றது தமிழ் இவருக்கு பின்னணி இசையில் ஒரு மேலதிக வாக்கைக் கொடுத்து விட்டது.
இந்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் திரையிசையின் சாபக்கேடாக ரீமிக்ஸ் காப்பிகள் வைரஸ் போலப் பரவி புதிய சிந்தைகளைத் தடுத்து விட்டன. ரீமிக்ஸ் குறித்த தன் விசனத்தை முன்பு விகடனிலும், கடந்த வாரக் குமுதத்திலும் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
"நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ‘‘தொட்டால் பூ மலரும்..’’ பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் ‘காச் மூச்’னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா ‘பழமை மாறாமல்’ செய்யணும். இப்ப கூட ‘பில்லா’ படத்துல ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா? இது தப்பு. சரியில்ல...
‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். ‘கத்தாழங் காட்டுக்குள்ள... விறகொடிக்கப் போனபுள்ள’ இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், ‘எங்கேயும் எப்போதும்’னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது"
அடுத்த ஆண்டாவது இந்த நிலை நீங்கி இன்னும் பல புது இள ரத்தங்களின் இசைப் பாய்ச்சலோடு இனியதொரு இசைவருடமாக மலரட்டும்.
இசையமைப்பாளர்கள் கவனத்துக்கு: இப்படியெல்லாம் போட்டி வைக்காதீங்க, எங்களை விட்ருங்க என்று இங்கே வந்து மொக்கை போடாதீங்கப்பா)
முழு வாக்கு வங்கி இதோ:
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஆமாம் நான் எதற்க்கு வாக்கு போட்டன் மறந்தே போச்சு
தமிழ்பித்தா
நீங்கள் சுச்சியின் டோலு டோலு புகழ்
மணிசர்மாவுக்கு எல்லோ வோட்டைப் போட்டனீங்கள்.
இந்த ரீமிஸைப்பற்றி நம்ம எஸ் பி பாலாவும் மலேசிய வானொலியில் சொல்லியிருந்தார்.
இப்படி செய்வது அவருக்கு பிடிக்கவில்லை என்று.
வாஙக வடுவூர்க்காரரே
எஸ்.பி.பியின் எங்கேயும் எப்போதும், மை நேம் இஸ் பில்லா பாட்டைக் கொலக்கொடுமை பண்ணியிருக்காங்களே, அவரின் வருத்தம் கூட நியாயமே
ராஜா என்னிக்கும் ராஜா தான்....;))
எம்.எஸ்.விஸ்வநாதன் வருத்தம் நியமானது தான்...இவர்கள் புதுமை என்கிற பெயரில் அவர்களின் பாடல்களை கொலை செய்து கொண்டுயிருக்கிறார்கள். யுவன் தான் இதில் முதில் இடம்..;(
தல
நீங்க தான் லாரி லாரியா ஆளுங்களைப் புடிச்சு ராஜாவுக்கு ஓட்டுப் போட்டதா பேசிக்கிறாங்களே, நெசமாவா?
வாழ்த்துக்கள். ராஜா.....ராஜாதான்னு நிரூபிச்சிட்டார்.
வாங்க இசைப்பித்தன்
ராஜா எப்பவுமே ராஜா தான் ஆனா இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும் படி தனி முத்திரை பதிக்கவில்லையே என்பதில் ரசிகனான எனக்கு மனவருத்தமே.
adam brown
நீங்க நல்லவரா கெட்டவரா?
Post a Comment