Pages

Monday, September 17, 2007

பாடிப் பறந்த குயில்கள் - பாகம் 2


ஒரு காலகட்டத்தில் மிகவும் உச்சத்தில், அல்லது புகழேணியில் இருந்து பின் ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாட வந்த பாடகர்களின் பாடல்களின் அணிவகுப்பாக மலரும் "பாடிப் பறந்த குயில்கள்" பாகம் இரண்டு இப்பதிவில் இடம்பெறுகின்றது.

முதலில் திரைப்பாடலில் மட்டுமல்ல, நம் நிஜவாழ்விலும் ஜோடி போட்ட பாடகர் சக இசையமைப்பாளர், ஜிக்கி ஆகியோர் பாடிய "புகுந்த வீடு" பாடலான "செந்தாமரையே" என்ற பாடல் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் மலர்கின்றது. ஏ.எம்.ராஜாவைப் பொறுத்தவரை ஒரு உச்சத்தில் இருந்து பின் வாய்ப்புக்கள் வற்றி எழுபதுகளில் மீண்டும் வந்த வாய்ப்பு இது.

அடுத்ததாகத் தன் கணவர் ஏ.எம்.ராஜா மறைவுக்குப் பின் ஒதுங்கிக் கொண்ட பாட்டுக்குயில் ஜிக்கி நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய பாடல்களில் ஒன்றான " வண்ண வண்ணச் சொல்லெடுத்து" என்ற பாடல், விஸ்வநாதன் இளையராஜா கூட்டுச் சேர்ந்த "செந்தமிழ்ப் பாட்டு" திரையில் இருந்து ஒலிக்கின்றது.

ஒரு காலகட்டத்தில் ஓய்வெழிச்சல் இல்லாது இசையமைத்துக் கொண்டே தானும் சிறப்பான பாடல்களை அளித்த எம்.எஸ்.விஸ்வநாதன் "காதல் மன்னன்" திரையில் தானும் நடித்துக் கொண்டே நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய பாடலான "மெட்டுத் தேடித் தவிக்குது" என்ற பாடலை பரத்வாஜ் இசையில் மலர்கின்றது.

நிறைவாகப் பழம்பெரும் பாடகிகள் இருவர் நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய, அதுவும் ஜோடி போட்டுக் கொண்ட பாடல் "நாயகன்" திரையில் இருந்து வருகின்றது. அந்தப் பாடகிகள் ஜமுனா ராணி மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி, "நான் சிரித்தால் தீபாவளி" என்று இளையராஜா இசையில் பாடுகின்றார்கள்.

ஒலித் தொகுப்பைக் கேட்க

9 comments:

வடுவூர் குமார் said...

நிலா முற்றத்தில் வித்தியாசமான பாடல்களை அரங்கேற்றியுள்ளீர்கள்.
காதல் மன்னன் பாடல் அவ்வளவு பிரசத்தி பெறவில்லை என்று நினைக்கிறேன்.கேட்ட மாதிரியே இல்லை.
நம்ம ராஜா & ஜிக்கி பாடல் தான் சூப்பர்.

G.Ragavan said...

எல்லாமே அருமையான பாடல்கள்.

காதல் மன்னன் படத்தில் வரும் "மெட்டுக் கட்டித் தவிக்குது ஒரு பாட்டு" பாட்டிற்கு இசையும் மெல்லிசை மன்னர்தான். ஆனால் படத்தில் பரத்வாஜ் என்று பெயரைப் போட்டு அசிங்கப்படுத்திவிட்டார்கள். இதை அந்தப் பாடலை எழுதிய வைரமுத்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அவர் பாடிய விடை கொடு எங்கள் நாடே பாடலைப் போட்டிருக்கலாம். ஆனால் இசையமைத்துப் பாடியதால் இது மிகப் பொருத்தும்.

ஜிக்கி "செந்தாமரையே" பாட்டிற்குப் பிறகும் ஒரு பாடலைப் பாடினார். அதுவும் சங்கர் கணேஷ் இசையில். உடன் வாணி ஜெயராமும் பாலுவும் பாடியிருக்கிறார்கள். அதுவும் பிரபலமான பாடல்தான். கண்ணில் தெரியும் கதைகளில் வரும் "நான் ஒன்ன நெனச்சேன்" பாட்டுதான்.

ஜமுனாராணி அவர்களைப் பெங்களூர் இந்திராநகரில் வீட்டிற்கு அருவில் இருக்கும் வங்கியொன்றில் சந்தித்தேன். அவரை அடையாளம் கண்டு பேசியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

கோபிநாத் said...

அனைத்து பாடல்களும் அருமை :)..

\\காதல் மன்னன் படத்தில் வரும் "மெட்டுக் கட்டித் தவிக்குது ஒரு பாட்டு" பாட்டிற்கு இசையும் மெல்லிசை மன்னர்தான். ஆனால் படத்தில் பரத்வாஜ் என்று பெயரைப் போட்டு அசிங்கப்படுத்திவிட்டார்கள். இதை அந்தப் பாடலை எழுதிய வைரமுத்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். \\

அட அப்படியா !!!

கானா பிரபா said...

வணக்கம் வடுவூர்குமார்

ஒலிப்பதிவைக் கேட்டுக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி

தாசன் said...

பிரபா அண்ணா. அருமையான தொகுப்பு, அருமையான பாடல்கள். இனி நிலா முற்றத்தில் இசை மழை பெய்யட்டும். நல்ல பதிவு

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

விரிவான தங்கள் கருத்துக்கு நன்றி. எம்.எஸ்.வி காதல் மன்னனுக்காக இந்தப் பாடலை இசையமைத்தது எனக்கும் புதுத் தகவல். விடைகொடு எங்கள் நாடே பாடலுக்கு முன் " மழைத்துளி மழைத்துளி" என்ற பாட்டையும் பாடியிருக்கின்றார்.

ஜிக்கி பாடிய தனிப்பாடலையே தேர்ந்தெடுத்திருந்தேன், அதனால் தான் நான் உன்னை நெனச்சேன் பாட்டு வரவில்லை. " நினைத்தது யாரோ" பாட்டு கூட செந்தமிழ் பாட்டு படத்துக்கு முன் வந்த பாட்டு.

ஜமுனாராணி சிட்னி வந்த போது 4 வருஷம் முன் அவரை வானொலிப் பேட்டி எடுத்திருக்கின்றேன். மிகவும் பண்பானவர்.

கானா பிரபா said...

தல கோபி, நிகழ்ச்சியை முடிந்தால் கேளுங்க

வணக்கம் தாசன்

ஒலிப்பதிவைக் கேட்டு நீங்கள் வழங்கிய கருத்தால் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

Sud Gopal said...

காதல் மன்னனில் ஒரு தனித்துவம் என்னவென்றால் ஒவ்வொரு பாடலையும் ஒரு இசையமைப்பாளர் பாடியிருப்பார்.மெல்லிசை மன்னர்,எஸ்.பி.பாலா,தேவா,ஹரிஹரன்,பரத்வாஜ்....

சங்கமத்தில் மெல்லிசை மன்னர் பாடிய பாடல் "ஆலால கண்டா"...

நல்லதொரு தெரிவுகள்...

கானா பிரபா said...

மிக்க நன்றி அண்ணாத்தே