Pages

Tuesday, June 26, 2007

ஓளிஓவியன் ஜீவா நினைவாக

2002 ஆம் ஆண்டு பெங்களூர் விமான நிலையத்தில் அடுத்த விமானம் ஏறுவதற்கான தரிப்பில் காத்திருக்கின்றேன். ஏதோ யோசனையில் இருந்த என் கவனத்தைத் திருப்பியது கடந்து போன மூன்று உருவங்கள். அவர்கள் யாரென்பதை ஜீரணிக்கு முன்பே விறுவிறுவென்று போய்க்கொண்டிருந்தார்கள். அதே இடத்தில் நின்று கொண்டு பார்க்கின்றேன். அவர்கள் யாரென இப்போது தெரிகின்றது, மலையாள இயக்குனர் பிரியதர்ஷன், நடிகர் மோகன்லால், அடுத்தது ஒளிப்பதிவாளர் ஜீவா.

புகைப்படம் பிடிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்து பின், தனது அக்காவின் கணவர் வசந்த் வீட்டில் அடைக்கலமாகி சினிமாத் தொழிற்சாலைக்குள் நுளைந்த கதையை முன்பொருமுறை ஜீவா ஆனந்த விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார். இவரது ஒளிப்பதிவில் ஷங்கரின் இயக்கத்தில் "ஜெண்டில் மேன்" படம் வந்த அந்தக்காலத்தில் ஷங்கரின் இயக்கத்தோடு ஜீவாவின் ஒளிப்பதிவையும் பாராட்டிப் பத்திரிகைகள் எழுதியிருந்தன.

ஜீவாவின் ஒளிப்பதிவில் ஒரு Richness இருக்கும், கூடவே அதிகாலைப் பனிப்புகார் கொடுக்கும் ரம்யமும் கலந்திருக்கும்."ரன்" போன்ற படங்களில் இவரின் ஒளிப்பதிவு கொடுத்த மேலதிக தங்கமூலாம் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும்.

12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, ரன் (ஹிந்தி வடிவம்), என்று இன்றைய இளைஞரின் நாடித்துடிப்பைத் தன் படங்களில் கொண்டுவந்தவர்.

தவறவிடப்பட்ட பஸ் போன்று வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களை இரு கோணங்களில் 12B படத்தில் காட்டியிருப்பார்.

ஒரு பணக்காரத்தனமான கல்லூரி வாழ்க்கையையும், நண்பர் குழாமைச் சுற்றிய நிகழ்வுகளையும் "உள்ளம் கேட்குமே" படத்தில் காட்டியிருந்தாலும், அந்த இளைஞர்களின் ஏக்கங்கள், குணாதிசியங்கள் எல்லாத்தரப்பு இளைஞருக்கும் பொருந்தக்கூடியவை.

காதல் என்பது ஒரு முறை தான் பூக்க வேண்டுமா? காதலித்த குற்றத்திற்காக சதா ஊடலே வாழ்க்கையா? ஊடல் என்பது ஊறுகாய் போல இருக்கவேண்டும், அதுவே சாப்பாடாகிவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக வந்தது இவரின் சமீபத்தியதும் இறுதியானதுமான "உன்னாலே உன்னாலே" திரைப்படம்.

கவிஞரும், இசையமைப்பாளரும் கஷ்டப்பட்டுக் கோர்க்கும் பாடலைக் கண் முன் கவியழகாகத் தரும் ஒளிஓவியர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் இனிய பாடல்களோடு, அப்பாடல் காட்சிகளாகப் போட்டி போடும் ஜீவாவின் ஒளிப்பதிவு நல்ல உதாரணம்.

தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞனை இன்று இழந்திருக்கின்றது.

மறைந்த ஜீவா நினைவாக அவரின் திரைத்துளிகள்


"12B" திரையில் பாடற் காட்சி




"உள்ளம் கேட்குமே"திரையில் கல்லூரிக் காட்சி



"உன்னாலே உன்னாலே" திரையில் சுவாரஸ்யமான காட்சி



ஜீவா ஒளிப்பதிவில் "ரன்" திரைப்பாடல்

8 comments:

வரவனையான் said...

:(((((((((

Ayyanar Viswanath said...

வருத்தமான செய்தி..திறமையான கலைஞன்.

சிநேகிதன்.. said...

ஜீவாஎனக்கு மிகப்பிடித்த ஓளிப்பதிவாளர்களில் ஒருவர்.. ஷங்கரின் ஜெண்டில் மேன்,காதலன், இந்தியன் ஆகிய படங்கள், வஸந்தின் ஆசை, s.j.சூர்யாவின் வாலி,குஷி ,லிங்குசாமியின் ரன், ஆகிய படங்கள் ஜீவாவின் தனித்துவமான,தரமான ஒளிப்பதிவிற்காக பேசப்பட்டவை..
\\தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞனை இன்று இழந்திருக்கின்றது \\
உண்மை தோழரே..:-(

Anonymous said...

:(
nambave mudiyala....such a talented guy :(

மணியன் said...

நல்ல தொழிற்நுட்பக் கலைஞரை இழந்து விட்டோம். இள வயதில் நிகழ்ந்த அவர் மறைவு மிக வேதனையானது. அன்னாரின் குடும்பத்தினருக்கு நமது அனுதாபங்கள் :((

இரமேஷ் இராமலிங்கம் said...

When I heard this news, I was shocked and felt so sad. I like his cinematography very much. This is a Big loss for Indian cinema.

பாரதிய நவீன இளவரசன் said...

வருத்தமான செய்தி..:(
my heartfelt condolences.

கானா பிரபா said...

இரங்கலைப் பகிர்ந்தமைக்கு நன்றி, இன்னும் என்னால் நம்பமுடியவில்லை :-(