Pages

Wednesday, June 27, 2007

ஹெலன் கெல்லர் - தன்னம்பிக்கையின் பிறந்த நாள்


" இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடு தான் படைத்திருக்கின்றார். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது நான் அது குறித்து மகிழ்வேன்"

என்றார் ஹெலன் கெல்லர்.

யாரிந்த ஹெலன் கெல்லர்?

கண் பார்வையற்ற, பேச்சுத் திறன் இழந்த, காது கேளாத ஒரு பெண்மணி, ஊனமுற்ற பலரின் வாழ்வில் ஒளிவிளக்காய் மாறினார்.
ஜூன் 27, 1880 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மானிலத்தில் பிறந்து ஜீன் 1, 1968 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரைக்கும் ஊனமுற்ற மனிதர்களின் வாழ்வுக்காகப் போராடினார், இறந்த பின்னும் அவர் பெயரில் பணி தொடர்கின்றது. அவர் தான் ஹெலன் கெல்லர்.

இன்று ஜூன் 27, தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாய் விளங்கும் ஹெலன் கெல்லரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து " கை அருகே வானம்" என்ற ஒலிச்சித்திரத்தைத் தயாரித்து வழங்குகின்றேன். கேளுங்கள்.
இந்த நிகழ்ச்சி இன்றிரவு 10 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் " நிலா முற்றம்" நிகழ்ச்சியின் முதற்பாகமாகவும் அரங்கேறுகின்றது.

6 comments:

Anonymous said...

தன்னம்பிக்கையின் மொத்த உருவம் ஹெலன் கெல்லர். நான் நினைத்து நினைத்து அதிசயிக்கும் மாமனிதர்களில் ஒருவர். அவரது பிறந்தநாளன்று அவரை மீண்டுமொருமுறை நினைவுபடுத்தியதற்கும், ஒலிச்சித்திரத்திற்கும் நன்றி.

கானா பிரபா said...

Thanks for your comment

கானா பிரபா said...

தேசி பண்டிட் இல் பரிந்துரைத்த நண்பருக்கு நன்றி

Anonymous said...

அற்புதமான பெண்மணி அண்ணா...அவரின் முன்னேற்றதிற்கும் தன்னம்பிக்கைக்கும் அவரது ஆசிரியரின் பங்கும் இருந்தது என்பது மறுக்க முடியாது.அவரின் ஆசிரியரும் ஒரு அற்புதமான பெண்மணி.சரிதானே அண்ணா.
இது வரையில் இவரை பற்றி படித்து இருக்கின்றேன்.கேட்டது இல்லை.உங்கள் தயவால் இன்று அதுவும் நடந்து விட்டது.நன்றி அண்ணா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இளமையில் ஆங்கில ஆசிரியர் இவர்
பற்றிக் கூறி அறிந்தேன். இவர் தன்னம்பிக்கையும், ஆசிரியர் கொடுத்த
ஒத்துழைப்புமே காரணம். நினைவு கூரப்படவேண்டியவர்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றிகள் துர்கா மற்றும் யோகன் அண்ணா

ஹெலன் கெல்லரின் அசாத்திய மனவுறுதியும் சமூகத் தொண்டுமே இன்னும் எம் போன்றோருக்கு அவரை நினைக்கவைக்கின்றது.

துர்கா

நல்லாசான் வாய்த்தது உண்மையில் அவர் செய்த பாக்கியமே.