எம்.ஜி.ஆர்-சிவாஜி கணேசனுடன் நடித்த பழம்பெரும் நடிகை ரத்னமாலா மாரடைப்பால் நேற்று 03 யூன் 2007 இல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.
ரத்னமாலா கடந்த 2 வருடங்களாக இருதய கோளாறினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் அடக்கம் சென்னை ராயபுரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
மரணமடைந்த நடிகை ரத்னமாலா எம்.ஜி.ஆர். உடன் `இன்பக்கனவு' என்ற நாடகத்தில் நடித்தார். சிவாஜி கணேசனுடன் `கட்டபொம்மன்' உட்பட சில நாடகங்களில் நடித்தார். டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி போன்ற பழம்பெரும் நடிகர்களுடனும் நாடகங்களில் நடித்திருக்கிறார்.
`வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் `போகாதே போகாதே என் கணவா...' என்ற பாடலை பாடியவர் இவர்தான். `வாழ்க்கை', `ராணி சம்யுக்தா' உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடியிருக்கிறார்.
மேற்கண்ட தகவலை இன்றைய தினத்தந்தி நாளேட்டில் வாசித்திருந்தேன். பாடகி, நடிகை ரத்னமாலாவிற்கு அஞ்சலிகளோடு அவர் பாடிய பாடல்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
"வீரபாண்டிய கட்டப்பொம்மன்" திரைப்படத்திலிருந்து , பாடல் இசை: ஜி.ராமனாதன்
|
"குமார ராஜா" திரைப்படத்திலிருந்து,பாடல் இசை டி.ஆர் பாப்பா, இணைந்து பாடுகின்றார் ஜே.பி.சந்திரபாபு
|
"அன்னை" திரைப்படத்திலிருந்து, பாடல் இசை ஆர்.சுதர்சனம். இணைந்து பாடுகின்றார். ஜே.பி.சந்திரபாபு
|
11 comments:
ரத்னமாலா எங்க வீட்டுப்பிள்ளையில் நடித்தவரா.
இருக்காது நீங்கள் சொல்லும் பாடல்களை முன்பு கேட்டதுதான்.சமீபத்தில் கேட்கவில்லை.
அன்னாருக்கு அஞ்சலி.
அஞ்சலி
அண்ணை எனக்கு ஒரு பாட்டு போடுறீந்களா?... இன்று தனது 29வது பிறந்த நாளை வலு விமரிசையாக கொண்டாடி கொண்டிருக்கும் எமது அண்ணன்!!?!! மொக்கை பதிவு மன்னன், சயந்தனுக்காக ஒரு நல்ல பிறந்தநாள் பாட்டு போடுங்கோ............... Please....
வணக்கம் வல்லி சிம்ஹன்
எங்க வீட்டுப் பிள்ளையில் நடித்தாரா என்ற விபரம் எனக்கு தெரியவில்லை
சயந்தன் ரசிகை
ஏற்கனவே ஷ்பெஷல் பாட்டு போட்டு வாங்கிக் கட்டினது போதும். என்ன பாட்டு என்று சொல்லுங்கோ வாற வியாழன் அவருக்கு வாழ்த்துச் சொல்லிப் போட்டுவிடுறன்.
பிரபா, உங்கள் பதிவு இப்போதுதான் கண்டேன். பழம்பெரும் நடிகை ரத்னமாலா அவார்களுக்கு எனது அஞ்சலிகள்.
இவர் எந்த தேதியில் இறந்தார் என்ற விபரத்தை உங்கள் பதிவில் காணவில்லை. எந்தத் தேதியில் இந்தப் பதிவு இட்டீர்கள் எனத் தேடிப்பார்த்தேன். நேரம் தான் உள்ளது. தேதியைக் காணவில்லை. பதிவு இடப்பட்ட தேதி மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு மூத்த பதிவர் என்ற வகையில் எனது சிறு அறிவுரை:)).
வணக்கம் சிறீ அண்ணா
தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றிகள். மூத்த பதிவர் என்ற வகையில் உங்கள் கருத்தை நான் ஏற்கின்றேன் ;-)
ரத்னமாலா சிவாஜியின் இரண்டாம் மனைவிஎன்று ஒரு செய்தி பத்திரிக்கையில் வாசித்தேன்.
//அவர் 'எங்க வீட்டுப் பிள்ளை'யில்
நடித்தவரா?//
இல்லை. 'எங்கவீட்டுப் பிள்ளை'யில் நடித்தவர், ரத்னா(...நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..அவன்
மாம்பழம் வேண்டும் என்றான்.......)
அநானி நண்பர் மற்றும் சிவஞானம்ஜியின் விளக்கத்திற்கும் என் நன்றிகள்
பிரபா, பார்த்தீர்களா மீண்டும் பிழையான தகவல் தருகிறீர்கள். உங்கள் பதிவின் முதல் பின்னூட்டமே ஜூன் 4 இல் விழுந்திருக்கிறது. இப்பதிவு ஜூன் 4 இலேயே போடப்பட்டதாயின் (உங்கள் URL அப்படித்தான் சொல்கிறது). ஜூன் 3 இல் ரத்னமாலா இறந்திருக்க வேண்டும். சரி தானே? வேறு ஒன்றுக்கும் இல்லை. விக்கியில் ஒரு கட்டுரை எழுதவே இத்தகவல் தேவைப்படுகிறது.
வணக்கம் சிறீ அண்ணா
யூன் 3 தான் சரி, அடுத்த நாள் திங்கட்கிழமை 4 ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டது, தவறுக்கு மீண்டும் வருத்தம் ;-(
Post a Comment