
இன்றைய ஒலித்தொகுப்பு பகுதியிலே நான் தரவிருப்பது, T.ராஜேந்தர் குறித்த (சீரியசான) பார்வை, மற்றும் அவரின் இசையில் மலர்ந்த ஒரு தலை ராக திரைப்படப் பாடலான "இது குழந்தை பாடும் தாலாட்டு"
கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமணங்களைக் கொண்ட இவர் "கிளிஞ்சல்கள்" திரைப்படத்துக்காக தங்க இசைத்தட்டுப் பெற்ற முதற் தமிழ் இசையமைப்பாளரும் கூட.
இது குழந்தை பாடும் தாலாட்டு, ராஜேந்தர் கவி புனைந்து இசையமைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இப்பாடலின் தன் நாயகி மீது ஒருதலைக் காதல் கொண்ட நாயகனின் மனவுணர்வுகள் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றன. "வெறும் காற்றில் உளி கொண்டு சிலையை நான் வடிக்கின்றேன்", வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கின்றேன்" என்று இவ்வரிகள் நடைமுறைச் சாத்தியமில்லா உதாரணங்களாக இவன் காதலுக்கு ஒப்புவமை ஆக்கப்படுகின்றன.
இனி என் பேச்சை கேளுங்கள்.








