Pages

Thursday, February 20, 2025

மனதோடு மலேசியா வாசுதேவன் ❤️



“காத்து பட்டாலே 

 கரையாதோ கற்பூரம்

கரையுது எம்மனசு உன்னால,


பட்டுவண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்…


https://youtu.be/3BIXEACx3eY?si=GbjwucB26G4Rs9u4


“கன்னிப் பருவத்திலே” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இலங்கை வானொலி வழியாக கடைக்கோடி வரை வழிந்தோடிய கதையெல்லாம் வரலாறு.


ஒரு பக்கம் எஸ்பிபி 

“உச்சி வகுந்தெடுத்து” 

இன்னொரு பக்கம் மலேசியா அண்ணன்

“பட்டுவண்ண ரோசாவாம்”

என்று உணர்வின் பரிமாணத்தைச் சரி சமனாகக் கொடுத்த காலமது.


“பொன்மான தேடி

நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம்

அந்த மான் அங்கு இல்லை”


AA ராஜ் இசையில் தணியாத தாகம் படத்தில் இடம்பிடித்த எஸ்.ஜானகியோடு மலேசியா அண்ணன் பாடும் அந்தப் பாடலும் இலங்கை வானொலிப் பிரபலங்களில் ஒன்று

அதுதான்


பூவே நீ யார் சொல்லி

யாருக்காக மலர்கின்றாய்..


https://youtu.be/dbnFVkXHc9s?si=XSRC491zzon2OCEm


மலேசியா வாசுதேவனின் ஆத்மார்த்த தோழர் கங்கை அமரன் இசையமைப்பாளராக அண்ணனுக்கு அள்ளிக் கொடுத்தவை பல. அப்படியொன்று தான் அதுவும்.

“பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேளாயோ” பாடலின் நகலாகப் பிறந்தது “பொன்மானைத் தேடி” என்று கங்கை அமரனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“எங்க ஊரு ராசாத்தி” படத்தில் அமைந்த அந்தப் பாடல் மலேசியா வின் குரலால் மேன்மை பெற்றது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை”


“காதல் வைபோகமே 

  காணும் நன் நாளிதே…”


இயக்குநராக கே.பாக்யராஜ் “சுவரில்லாத சித்திரங்கள்” வழி அறிமுகமான போதும் மலேசியா வாசுதேவன் அந்த வெற்றியில் பங்கெடுத்துக் கொண்டார்.


ஒரு பார்த்திபனுக்கு ஒரு அருண்மொழி குரல் போல, அந்தக் காலத்தில் ஒரு  பாக்யராஜுக்கு ஒரு மலேசியா வாசுதேவன் என்ற நியதியை உருவாக்கியது இசைஞானியின் “வான் மேகங்களே….”

அதன் நீட்சியாக தம்பி கங்கை அமரனாரும் தான் இசையமைக்கும் கே.பாக்யராஜ் படங்களில் மலேசியா வாசுதேவன் என்ற தொடர்ச்சியை நிறுவினார். கானா பிரபா 

அந்த வகையில் 

“மெளன கீதங்கள்” படத்திலும் மலேசியா வாசுதேவனை முதன்மைப்படுத்தினார்.


“அப்பாக்கள் சில பேரு

செய்கின்ற தப்பைத்தான்

அடியேனும் முன்னாளில்

செய்தேனப்பா…”


படக் கதையை ஈரடியில் நிறுவியது “டாடி டாடி ஓ மை டாடி” கூடவே “மாசமோ மார்கழி மாசம்” என்ற விரகதாபப் பாடலையும் அள்ளிக் கொடுத்தார் தன் நண்பனுக்காக கங்கை அமரன்.


மெல்லிசை மன்னரும் தன் பங்குக்கு கே.பாக்யராஜுக்காக மலேசியா வாசுதேவன் என்ற கணக்கில் “எண்ணி இருந்தது ஈடேற” (அந்த ஏழு நாட்கள்), “கதவைத் தொறடி பாமா” (பாமா ருக்மணி) என்று பகிர்ந்தளித்தார்.


“பூங்காத்தே….

 அந்தப் பொண்ணுகிட்ட

ஒண்ணு சொல்லி வா” 


https://youtu.be/5mlQTSy0r74?si=VjIpHWQosV5tSujC


ராமராஜன் இயக்குநராக அவதாரமெடுத்த “மண்ணுக்கேத்த பொண்ணு” இசை கங்கை அமரன், இங்கேயும் அற்புதமானதொரு சோகராகத்தை சுசீலாம்மாவுடன் பாட் வைத்தார்.


எஸ்பிபி & மலேசியா ஜோடிப் பாடல்கள் என்றால் சட்டென்று ஞாபகம் வருபவற்றில் 

கங்கை அமரன் “சட்டம்” படத்துக்காக 

இசை கொடுத்த 

“நண்பனே எனது உயிர் நண்பனே”


இன்னொன்று சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் தந்த

“நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்”

என்ற நெல்லிக் கனி பாடல்.


அப்படியே அதிகம் கேட்காத கங்கை அமரன் கொடுத்த  “மாமன் பொண்ணுக்கு” சின்னதம்பி பெரிய தம்பி பாடலையும் சேர்க்கலாம். கானா பிரபா


இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் இளையராஜா தவிர்ந்து இன்னும் பல இசையாளுமைகளோடு இயங்கிய சமயம், மெல்லிசை மன்னரோடு கை கோர்த்த “சரணாலயம்” படத்தில்

“எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை”


https://youtu.be/WuyFYbuK3mI?si=bbsj8McFxQVa4qFr


இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்


https://youtu.be/fm7cC8CW3k4?si=XwLRtYYwU7C_


ஆகிய அற்புதங்களை மறந்து விடாதீர்கள்.


“ஆடி வெள்ளம் நின்னாலும்

  ஆசை வெள்ளம் நிக்காது”


கே.வி.மகாதேவன் இசையில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “தூங்காத கண்ணின்று ஒன்று” படத்திலும் மலேசியா வாசுதேவனுக்கு இடம் கிடைத்தது”


காக்கிச் சட்டை போட்ட மச்சான் 

களவு செய்ய கன்னம் வச்சான்


https://youtu.be/eQ8ORVVV3G4?si=PG4நுன்ர்0ச0ஊ2ல்


சந்திரபோஸ் இசையில் சங்கர் குருவுக்காகப் பட்டையைக் கிளப்பிய பாட்டு. இப்போது கேட்டாலும் அற்புதமான ஒலித்தரத்தில் ஸ்பீக்கர் பீறிடும்.


அப்படியே ஒரு எட்டுப் போய்

“தென்பாண்டிச் சீமையிலே”

தொகையறாவோடு 

ராசா மனசுலதான் லேசா


https://youtu.be/V81ZhIChgws?si=BeJEaiSvuHhPngSS


கேட்டுப் பாருங்கள். அறிமுக இசையமைப்பாளர் ராஜேஷ் கண்ணா “நான் வளர்த்த பூவே” படத்தில் மலேசியா அண்ணனுக்குக் கொடுத்தது அன்றைய ரெக்கார்டிங் சென்டர் ஹிட்.


கிளியே இளக் கிளியே

இந்த சபையில் வந்தாலென்ன


https://youtu.be/dVezmRDtH2s?si=xX5NSZiEXQkgcOLv


மனோஜ் கியான் கூட்டணி மலேசியா வாசுதேவன் அண்ணனையும் தம் கூட்டணியில் நிறுவிய பாட்டு. கானாபிரபா

அப்படியே உழவன் மகனில் கேப்டனுக்காக

“பொன் நெல் ஏரிக் கரையோரம்”


https://youtu.be/IEba-CrpeNU?si=qP3D4VNcrAM7UpSm


என்று மகுடப் பாடலிலும் ஏற்றிக் கெளரவித்தார்கள்.


இசைஞானியார் தவிர்ந்து இன்னும் பல இசை ஆளுமைகளோடும் மலேசியா வாசுதேவன் மிளிர்ந்தார் என்பதற்காக எழுந்த ஒரு சிறு துளி இந்தப் பதிவு.


வெண்மேகமாக 

விடிவெள்ளியாக

வானத்தில் பொறந்திருப்பேன்


என்னை அடையாளம் கண்டு

நீ தேடி வந்தா 

அப்போது 

நான் சிரிப்பேன்


https://youtu.be/h3mAnv1aA5w?si=sImqAsroUddf68mP


மலேசியா வாசுதேவன் அண்ணன் நினைவில்


கானா பிரபா

20.02.2025

0 comments: