பி.சுசீலாவின் குரல் தாலாட்டுப் பாடியும், காதல் மொழி பேசியும், தெய்வீகத்தில் திளைத்தும், தத்துவத்தை உரைத்தும் பலவாறு திரையிசையை ஆட்கொண்டது.
நான்கு தசாப்தங்களாக தென்னிந்தியத் திசையில் இசையரசியாக விளங்கிய அவரின் பாடல்களில் மெல்லிசை மன்னர் காலத்தைத் தொட்டால் அது கடல், கே.வி.மகாதேவன் தொட்டு இன்னும் தொடர்ந்த இசையமைப்பாளர்களையும் சேர்த்தால் அது பேராறு. இங்கே நான் தொட்டிருப்பது இசைஞானியின் பாடல்களில் பி.சுசீலாவின் குரல் சங்கமமாயிருக்கும் நதியளவு கொள்ளலாய் நூறு பாட்டு. இதை விட இன்னும் இருக்கிறது ஆனால் ஒரு எல்லை வேண்டும் என்று நூறோடு நிறுத்தினேன்.
“கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று” என்று எழுதும் போதே காதுக்குக்குள் பி.சுசீலாவின் அரவணைக்கும் குரல் வந்து அழுகை மூட்டும் எப்போது கேட்டாலும். இவ்வளவு அடக்க ஒடுக்கமான குரலில் இருந்தா “டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ” பிறந்தது என்ற ஆச்சரியம் எழும் எனக்கு. “ஆடும் நேரம் இதுதான் இதுதான்” என்று பாடும் குரலைக் கேட்டால் போதை ஊசி செருகியது போல ஒரு கிறக்கம் எழும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் சிலாகித்துக் கொண்டே இருக்கலாம் இசையரசியின் பாடல்களை வைத்து.
“சொந்தமில்லை பந்தமில்லை” என்றொரு அவல ஓசையாய் அன்னக்கிளியில் இருந்து “நட்டு வச்ச ரோசாச்செடி” என்று உயிர்ப்பூவாய் அரண்மனைக் கிளி வரை 16 ஆண்டுகள் தொடர்ந்த பயணத்தின் திரட்டுத்தான் இந்த நூறும்.
இசையரசி P.சுசீலா புகழோடும் சிறப்போடும் நோய் நொடியற்ற வாழ்வோடும் நூறாண்டைக் கடக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
1. சொந்தமில்லை பந்தமில்லை - அன்னக்கிளி
2. கேட்டேளா அங்கே - பத்ரகாளி
3. கண்ணன் ஒரு கைக்குழந்தை - பத்ரகாளி
4. தேனில் ஆடும் ரோஜா - அவர் எனக்கே சொந்தம்
5. நான் அழைக்கிறேன் - அச்சாணி
6. தாலாட்டு - அச்சாணி
7. என் கண்மணி - சிட்டுக்குருவி
8. ஒரே இடம் - சட்டம் என் கையில்
9. மேகமே தூதாக வா - அவள் ஒரு பச்சைக்குழந்தை
10. டார்லிம்க் டார்லிங் - ப்ரியா
11. அப்பனே அப்பனே - அன்னை ஓர் ஆலயம்
12. நதியோரம் - அன்னை ஓர் ஆலயம்
13. எந்தன் பொன் வண்ணமே - நான் வாழ வைப்பேன்
14. சிந்து நதிக்கரையோரம் - நல்லதொரு குடும்பம்
15. ராஜா சின்ன ராஜா - பூந்தளிர்
16. நான் ஒரு பொன்னோவியம் - கண்ணில் தெரியும் கதைகள்
17. தேர் கொண்டு சென்றவன் - எனக்குள் ஒருவன்
18. வராத காலங்கள் - நதியைத் தேடி வந்த கடல்
19. எங்கேயோ ஏதோ - நதியைத் தேடி வந்த கடல்
20. நேரமிது - ரிஷி மூலம்
21. ஆடு நனையுதுன்னு - அன்புக்கு நான் அடிமை
22. காத்தோடு பூவுரச - அன்புக்கு நான் அடிமை
23. ஒன்றோடு ஒன்றானோம் - அன்புக்கு நான் அடிமை
24. வயலோடு மயிலாட்டம் - அன்புக்கு நான் அடிமை
25. சந்தனமிட்டு - ருசி கண்ட பூனை
26. அழகழகா பூத்திருக்கு - காளி
27. ஓ தென்றலே - நெஞ்சத்தைக் கிள்ளாதே
28. பல நாள் ஆசை - இன்று போய் நாளை வா
29. கலை மானே - கடல் மீன்கள்
30. மதினி மதினி - கடல் மீன்கள்
31. ஏரு புடிச்சவரே - கரையெல்லாம் செண்பகப் பூ
32. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு - நெற்றிக்கண்
33. விழியில் உன் விழியில் - ராம் லட்சுமண்
34. அமுதே தமிழே - கோயில் புறா
35. இசையரசி - தாய் மூகாம்பிகை
36. கோலப்புரசே - தாய் மூகாம்பிகை
37. அழகே உன்னை - வாலிபமே வா வா
38. வாலைப் பருவத்திலே - கண்ணே ராதா
39. நினைத்து நினைத்து வரைந்த ஓவியம் - கேள்வியும் நானே பதிலும் நானே
40. பூந்தென்றல் காற்றே வா - மஞ்சள் நிலா
41. பெண் மயிலே - மஞ்சள் நிலா
42. என்ன சொல்லி நான் எழுத - ராணித்தேனி
43. கன்னிப் பொண்ணு - நினைவெல்லாம் நித்யா
44. ஆப்பக் கடை - பாயும் புலி
45. பொத்துக்கிட்டு - பாயும் புலி
46. கங்கை ஆற்றில் - ஆயிரம் நிலவே வா
47. பேசக்கூடாது - அடுத்த வாரிசு
48. காளிதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி
49. பாட வந்ததோ - இளமைக் காலங்கள்
50. ராகவனே - இளமைக் காலங்கள்
51. சோலைப் புஷ்பங்களே - இங்கேயும் ஒரு கங்கை
52. கண்ணுக்குள்ளே யாரோ - கை கொடுக்கும் கை
53. தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் - முடிவல்ல ஆரம்பம்
54. மெல்ல மெல்ல - வாழ்க்கை
55. பூவிலே மேடை - பகல் நிலவு
56. காலைத் தென்றல் - உயர்ந்த உள்ளம்
57. இளமைக் காலம் எங்கே - தாய்க்கு ஒரு தாலாட்டு
58. அலையில பிறந்தவ - தாய்க்கு ஒரு தாலாட்டு
59. சுமங்கலி பூஜை - தர்ம பத்தினி
60. ஏஞ்சல் - நானும் ஒரு தொழிலாளி
61. உன்னைக் காணா - நட்பு
62. ஆசை வச்சேன் - நட்பு
63. வரம் தந்த சாமிக்கு - சிப்பிக்குள் முத்து
64. ஆடும் நேரம் - சூரசம்ஹாரம்
65. ராசாத்தி மனசுல (சந்தோஷம்) - ராசாவே உன்ன நம்பி
66. ராசாத்தி மனசுல (சோகம்) - ராசாவே உன்ன நம்பி
67. சிந்திய வெண்மணி - பூந்தோட்டக் காவல்காரன்
68. ஆசையில பாத்தி கட்டி - எங்க ஊரு காவக்காரன்
69. அரும்பாகி - எங்க ஊரு காவக்காரன்
70. ஜிவ்வுன்னு - எங்க ஊரு காவக்காரன்
71. மாலைக் கருக்கலிலே - எங்க ஊரு காவக்காரன்
72. ஆசையிலே (தனித்து) - எங்க ஊரு காவக்காரன்
73. தோப்போரம் - எங்க ஊரு காவக்காரன்
74. தென்மதுரை வைகை நதி (சோகம்) - தர்மத்தின் தலைவன்
75. தென்மதுரை வைகை நதி - தர்மத்தின் தலைவன்
76. உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா
77. மல்லிகைப் பூ - என்னப் பெத்த ராசா
78. பூப்பூக்கும் மாசம் - வருஷம் 16
79. ஏலே இளங்கிளியே - நினைவுச் சின்னம்
80. மன்னவர் பாடும் - பொங்கி வரும் காவேரி
81. தூரி தூரி - தென்றல் சுடும்
82. மனதில் ஒரேயொரு - என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
83. தத்தெடுத்த முத்துப்பிள்ளை - ரெட்டை வால் குருவி
84. காத்திருந்த மல்லி மொட்டு - மல்லு வேட்டி மைனர்
85. கற்பூர பொம்மை ஒன்று - கேளடி கண்மணி
86. ஆராரோ பாட வந்தேனே - பொறுத்தது போதும்
87. ரெட்டக் குருவி - இரும்புப் பூக்கள்
88. இங்கே இறைவன் - சார் ஐ லவ் யூ
89. சாரங்க தாரா - பொண்ணுக்கேத்த புருஷன்
90. துளித் துளி மழையாய் - கண்ணுக்கொரு வண்ணக் கிளி
91. பூங்காவியம் - கற்பூர முல்லை
92. அண்ணே அண்ணே - கிருஷ்ணன் வந்தான்
93. ஒரு உறவு அழைக்குது - கிருஷ்ணன் வந்தான்
94. அன்னை தாலாட்டுப் பாட - அம்பிகை நேரில் வந்தாள்
95. உன்னை நம்பி நெத்தியிலே - சிட்டுக்குருவி
96. பார்த்தா பச்சை பாப்பா - அர்ச்சனைப் பூக்கள்
97. சொன்ன பேச்சை - தாலாட்டு கேட்குதம்மா
98. கானலுக்குள் மீன் பிடித்தேன் - காதல் பரிசு
99. மனதிலே ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு
100. நட்டு வச்ச ரோசாச்செடி - அரண்மனைக் கிளி
போனஸ்
நண்பர் நாடோடி இலக்கியன் பரிந்துரையில்
முத்துமணி மாலை (சின்னக் கவுண்டர்),
பட்டுக்கன்னம் (காக்கிச்சட்டை)
தெற்குத் தெரு மச்சானே (இங்கேயும் ஒரு கங்கை)
நண்பர் ஹரியார் பரிந்துரையில்
தென்னமரத்துல தென்றல் அடிக்குது (லட்சுமி)
நண்பர் ப்ரீத்தம் கிருஷ்ணா பரிந்துரையில்
மயங்கினேன் சொல்ல - நானே ராஜா நானே மந்திரி
அந்தி மழை மேகம் - நாயகன்
நண்பர் ஹரி பரிந்துரையில்
ராசாவே ஒன்ன - வைதேகி காத்திருந்தாள்
கானா பிரபா
13.11.2018
0 comments:
Post a Comment