Pages

Saturday, February 6, 2016

இளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை


பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர் பிறைசூடன் பங்கேற்ற பாடல்களின் தொகுப்பைக் கொடுக்க எண் பட்டியலை ஆரம்பித்திருந்தேன். ஆனால் பின்னர் அப்படியே அதுவும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது என் மின்னஞ்சலைத் தோண்டி எடுத்து 
பகிர்கின்றேன்.

இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றிய பாடலாசிரியர்களில் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அடுத்த தசாப்தம் வரை கவிஞர் வாலி தொட்டு புலவர் புலமைப்பித்தன், கங்கை அமரன், நா.காமராசன், பொன்னடியான், மேத்தா வரிசையில் கவிஞர் பிறை சூடன் ஆகியோரின் பங்களிப்பு வெகு அதிகமாக அமைந்திருந்தது. 
துரதிஷ்டவசமாக, முறையான ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தால் கவிஞர் வாலி அல்லது வைரமுத்து என்று எழுந்தமானமாக இணையத்தளங்கள் மட்டுமன்றி வானொலிகள் கூட அறிவித்து இந்தப் பாடலாசிரியர்களின் செழுமையான பங்களிப்பைத் தாழ்த்தி விட்டன.

பாடலாசிரியரை இனம் கண்டு பாடலை ரசித்து மகிழும் போதுதான் குறித்த ஆளுமையின் கைவண்ணத்தைச் சீர் தூக்கிப் பார்க்கலாம். அவர் எவ்வாறு மற்றைய பாடலாசிரியரிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கின்றார் என்றும் உணரலாம்.

பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் திரையிசைப் பங்களிப்பின் ஆரம்பம் மெல்லிசை மன்னர் இசையமைத்த "சிறை" படம் தொட்டு பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்தாலும் இங்கே நான் பகிரும் இசைஞானி இளையராஜாவின் இசையில் பிறைசூடன் எழுதிய பாடல்கள் முத்திரைப் பாடல்களாக 
என் சம கால கட்டத்து ரசிகர் மனதைக் கொள்ளை கொண்டவை.
இவற்றை உறுதிப்படுத்தப் பெரிதும் துணை நின்றவை, ஒரு காலத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் பாடலாசிரியர் பிறைசூடன் பங்களித்த "வானம்பாடி" இன்னிசைப் போட்டி நிகழ்ச்சி மற்றும் எண்பதுகள், தொண்ணூறுகளில் வெளிவந்த திரையிசைப் பெருந்தகடுகள்.
இந்தப் பட்டியலின் நீளம் பெரிது, ஆனால் காலம் போதாது.  அடுத்த பகுதி இன்னொரு பகிர்வாக வரும்.




1. துளி துளி மழையாய் – கண்ணுக்கொரு வண்ணக்கிளி
2. இங்கே பொன் வீணை – கண்ணுக்கொரு வண்ணக்கிளி
3. நாரினில் பூ தொடுத்து – இரண்டில் ஒன்று
4. உயிரே உயிரின் ஒளியே – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
5. புல்லைக் கூடப் பாட வைத்த – என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
6. சிறுவாணி தண்ணி குடிச்சு – எங்க ஊரு காவக்காரன்
7. சொந்தம் ஒன்றைத் தேடும் (சந்தோஷம்) என்னைப் பெத்த ராசா
8. சொந்தம் ஒன்றைத் தேடும் (சோகம்) என்னைப் பெத்த ராசா
9. மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா
10. ஒரு கூட்டின் கிளிகள் தான் – அன்புக் கட்டளை
11. குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் – அரங்கேற்ற வேளை
12. நல் அன்பே தான் தாயானது – கை வீசம்மா கை வீசு
13. ஊருக்குள்ளே வந்த – எங்க ஊரு மாப்பிள்ளை
14. வேறு வேலை உனக்கு இல்லையே – மாப்பிள்ளை
15. ஊரெல்லாம் தூங்குது – நினைவுச்சின்னம்
16. பூங்காற்றே இது போதும் – படிச்ச புள்ள
17. பூங்காற்றே இனிப் போதும் – படிச்ச புள்ள
18. சைலன்ஸ் காதல் செய்யும் நேரம் இது – பணக்காரன்
19. இந்த ராசாவை நம்பி வந்த – பொங்கி வரும் காவேரி
20. மன்னன் பாடும் தமிழ் – பொங்கி வரும் காவேரி
21. சிக்குன்னு இழுக்குது – வாத்தியார் வீட்டுப் பிள்ளை
22. மதுர ஒயிலாட்டம் தான் – அம்மன் கோவில் திருவிழா
23. தா தந்தந்தனம் – அதிசயப் பிறவி
24. கலகலக்கும் மணி ஓசை – ஈரமான ரோஜாவே
25. கேளடி என் பாவையே – கோபுர வாசலிலே
26. நாதம் எழுந்ததடி – கோபுர வாசலிலே
27. காதல் கவிதைகள் படித்திடும் – கோபுர வாசலிலே
28. தென்றல் தான் – கேளடி கண்மணி
29. அடி மத்தாளம் தான் – மல்லு வேட்டி மைனர்
30. ஆதாமும் ஏவாளும் போல – மருதுபாண்டி
31. எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேசன் (Stuartpuram Police Station
தெலுங்குப் படத்தின் பாடல்களில் சில. எந்தப் பாடல்கள் என்ற குறிப்பில்லை)
32. ஓ அழகு நிலவு – மை டியர் மார்த்தாண்டன்
33. சாயங்கால சந்திய ராகமே – நீ சிரித்தால் தீபாவளி
34. சும்மா நீ சுத்தாதே – பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்
35. அம்மா நான் – பொண்டாட்டி தேவை
36. காதலுக்கு ராஜா – ராஜா கைய வச்சா
37. எத்தனை பேர் உன்னை – சிறையில் பூத்த சின்ன மலர்
38. நல்லா இசைத்தது – வெள்ளையத் தேவன்
39. ஆட்டமா தேரோட்டமா – கேப்டன் பிரபாகரன்
40. நடந்தால் இரண்டடி – செம்பருத்தி
41. அட வஞ்சிரம் வவ்வாலு – செம்பருத்திராஜா க
42. கடலிலே தனிமையிலே – செம்பருத்தி
43. சோலைப் பசுங்கிளியே – என் ராசாவின் மனசுலே
44. இதயமே இதயமே – இதயம்
45. எத்தனை பேரை – காவல் கீதம்
46. தோம் தோம் தோம் – ஊரெல்லாம் உன் பாட்டு
47. என்னைப் பார்த்து – பாண்டித்துரை
48. மாலையிட்ட பொண்ணு – பாண்டித்துரை
49. மணிக்குயில் இசைக்குதடி – தங்க மனசுக்காரன்
50. மானே மயங்குவதேனோ – தங்க மனசுக்காரன்
51. மணிக்குயில் இசைக்குதடி (2 வது) – தங்க மனசுக்காரன்
52. ஒரு ராகம் தராத வீணை – உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
53. நட்டு வச்ச – அரண்மனைக் கிளி
54. வெண்ணிலவு கொதிப்பதென்ன – சின்ன மாப்ளே
55. மஞ்சள் வெயில் – என்றும் அன்புடன்
56. பாத்தியாபடி பாத்தியா – மாப்பிள்ளை வந்தாச்சு
57. வாங்க வாங்க மாப்பிள்ளையே – நாடோடிப் பாட்டுக்காரன்
58. காதலென்ன உங்க வீட்டு – ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
59. மானுக்கும் மீனுக்கும் – பார்வதி என்னைப் பாரடி
60. சிங்கார மானே – தாய்மொழி
61. ஜிஞ்ஞில்லாரோ – தாய்மொழி
62. என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட – உன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
63. கண்ணா உன் கண்ணில் – உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
64. அட எதிர்த்த வீட்டு – சின்ன தேவன்
65. சின்னச் சின்னப் பூங்கொடி – சின்னக் கண்ணம்மா
66. புன்னைவனப் பூங்குயிலே – செவ்வந்தி
67. ஆத்துல மேட்டுல – தம்பித்துரை
68. காலேஜ் கலாட்டா அனைத்துப் பாடல்களும் (கே.விஸ்வநாத் இயக்கிய Chinnabbayi தெலுங்கின் தமிழ் மொழி மாற்று)
69. ஶ்ரீராமராஜ்ஜியம் தெலுங்குப் படத்தின் தமிழ் மொழி மாற்று 14 பாடல்கள், ஸ்லோகம் நீங்கலாக

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கு.




4 comments:

Toto said...

Sir.. Nice post.

33. Oorellaam saaiyaaga is from Dheiva Vaaku.

கானா பிரபா said...

நன்றி நண்பரே நான் குறிப்பிட்ட வந்தது ஊரெல்லாம் தூங்குது என்ற நினைவுச் சின்னம் படப் பாட்டு இப்போது திருத்தியிருக்கிறேன்

கரிகாலன் said...

உண்மைதான் கானா பிரபா .

நடந்தால் இரண்டடி இருந்தால் நாலடி படுத்தால் ஆறடி பாடல் இன்றை வரைக்கும் நான் முணுமுணுக்கும் ஒரு பாடல் .இசையமைத்து இளையராஜா என்பது தெரியும் .ஆனால் பாடலாசிரியர் பற்றி இன்றுதான் தெரிந்துகொண்டேன் .

Karthi said...

தென்றல் தான் (கேளடி கண்மணி) பாடலை பழைய பாடலான - தென்றல் உறங்கிடும் போதும் திங்கள் உறங்கிடும் போதும் - பாட்டிலிருந்து உருவியதாக அவரே சொல்லி இருக்கார். மீனம்மா பாடல் எழுதும் போது அப்போது தான் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வந்ததால்அந்த பல்லவி.
ஏ.ஆர். ரஹ்மானிடம் நிறைய விளம்பர படங்களில் வொர்க் பண்ணியிருக்கார். ரஹ்மான் சினிமாவுக்கு வந்த பிறகு இவரை கண்டுக்கலைனு கோபமாக வேறு இருந்தார். ஒரு அவார்டு ஃபங்ஷன்ல ரஹ்மான் இவரை பார்த்து ஏன் இவ்வளவு நாள் என்னை வந்து பார்க்கலைனு சொல்லி பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார். நீண்ட நாளைக்கு பிறகு தெனாலி (போர்க்களம் அங்கே), ஸ்டார் ( ரசிகா) போன்ற பாடல்களை அவர் இசையில் எழுதினார்