அழகான நம் பாண்டி நாட்டினிலே
கள்ளழகர் வந்து இறங்கும்
வைகை ஆற்றினிலே
அழகான நம் பாண்டி நாட்டினிலே
கள்ளழகர் வந்து இறங்கும்
வைகை ஆற்றினிலே
புத்தாண்டு சித்திரையில் ஊர் கூடும்
நல்ல பெளர்ணமியில் மீனாட்சி சீர் பாடும்
அழகான நம் பாண்டி நாட்டினிலே
ஏ ஹே ஹே ஏ ஹே ஹே
சோமனுக்கு மாலையிட்ட மீனாளே
ஓய் ஹோய் ஹோய்
இங்கு சகலருக்கும் தாயாக ஆனாளே
சோமனுக்கு மாலையிட்ட மீனாளே
இங்கு சகலருக்கும் தாயாக ஆனாளே
நம் விரும்பும் வாழ்வளிக்க தாய் இருக்கா அந்தத் தாய் போல நமைக் காக்க
யார் இருக்கா......
அழகான நம் பாண்டி நாட்டினிலே
ஏ ஹே ஹே ஏ ஹே ஹே
நீர் வளமும் நில வளமும்
பெருகி வரும்
ஒய் ஹொய் ஹொய்
தமிழ் நல்லிசையும் மெல்லிசையும்
பொங்கி வரும்
நீர் வளமும் நில வளமும்
பெருகி வரும்
ஒய் ஹொய் ஒய் ஹொய்
தமிழ் நல்லிசையும் மெல்லிசையும்
பொங்கி வரும்
சீர் மதுரை மதுரை அம்மனவள் நிழலிருக்கும் இதிலே
யார் தயவும் யார் உறவும்
இங்கே எதுக்கு.....
அழகான நம் பாண்டி நாட்டினிலே
கள்ளழகர் வந்து இறங்கும்
வைகை ஆற்றினிலே
புத்தாண்டு சித்திரையில் ஊர் கூடும்
நல்ல பெளர்ணமியில் மீனாட்சி சீர் பாடும்
அழகான நம் பாண்டி நாட்டினிலே
ஏஹே ஹே ஹே
ஏஹே ஹே ஹே
http://soundcloud.com/yogashankiyan-senthamizhan/azhagana-nam-paandi-pudhupatti
மதுரை மண்
இளையராஜா இசையால் குடமுழுக்கு செய்யப்பட்டு அவர் தம் பாடல் காட்சியால் கோபுரம் எழுப்பப்பட்ட பூமி
🌻🌴🍄🌹🎵🎼☀️🎺
இப்படியாக ஒரு ட்விட் ஐ முன்னர் பகிர்ந்திருந்தேன். இப்படியான பாடலைக் கேட்கும் போது அது என் ட்விட்டை நியாயப்படுத்தும் போல முன்னிற்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கள்ளழகர் திருவிழாவைக் கண்டு மெய்யுற வேண்டும் என்பது என்னுள் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆசை.
இப்போது அங்கே கள்ளழகர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறார்.
இன்று காலை எழுந்ததுமே முதலில் கண்ணில் பட்டது நம்ம @umakrishh
பகிர்ந்த ட்விட்
"கோபுரத்தை நிமிர்த்தியாச்சு.. @kanapraba மதுர மரிக்கொழுந்து வாசம் வருதா .. குளத்துப் படிகளைப் பார்த்ததும் :) "
அவர் பகிர்ந்திருந்த படங்களைத் தான் இங்கே பார்க்கிறீர்கள்.
புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் இடம்பெற்ற "அழகான நம் பாண்டி நாட்டினிலே" இன்னும் அதிகம் வெளிச்சம் பட்டிருக்க வேண்டிய பாட்டு.
இந்தப் படத்தில் வாலி மற்றும் புலமைப் பித்தன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் வரிகளை நோக்கும் போது வாலியின் முத்திரை இருக்குமாற் போலப் படுகின்று.
இசைஞானி இளையராஜா, அருண்மொழி குழுவினரோடு பாட, சூழ ஒலிக்கும் இசையில் பகட்டு இல்லை, வரிகள் பதியும் போது மெய்யுணர்வாகின்றது.
திருவிழா ஆர்.ஜெயசங்கர் நாதஸ்வரம் வலையப்பட்டி தவில் சக்கரவர்த்தி சுப்பிரமணியன் அவர்கள் தவில் வழங்கிச் சிறப்பித்த திரைப்படம் இது.
இப்போதுள்ள தொலைக்காட்சிகள் சித்திரைத் திருவிழாவைக் காட்சிப்படுத்தி ஒளிபரப்பும் போது இந்தப் பாடலைப் பின்னணியில் கொடுத்தால் இன்னும் மகத்துவமாக இருக்கும்.
"தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்" திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் தான் என் இசைத்தளத்தின் மகுட வாக்கியம். அந்தத் தேவார வரிகள் கொடுக்கும் அழுத்தத்தை கடந்த நூற்றாண்டில் வந்த "அழகான நம் பாண்டி நாட்டினிலே" பாடலும் பதிவு செய்து நெஞ்சில் இடம் பிடிக்கின்றது.
0 comments:
Post a Comment