Pages

Tuesday, November 11, 2014

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை - பாடல் பிறந்த கதை



கடந்த சன் சிங்கர் நிகழ்ச்சியை ஓடவிட்டு கங்கை அமரன் அவர்களிடமிருந்து ஏதாவது சுவையான பாடல் பிறந்த கதை கிட்டும் என்ற நப்பாசையில் இருந்த எனக்கு ஒரு சுவாரஸ்மான தகவல் கிட்டியது.
அந்த வீடியோவின் தனிப்பாகத்தை மட்டும் பிரித்து இங்கே பகிர்கின்றேன்.

புத்தம் புதுக்காலை பாடல் எந்தச் சூழ் நிலையில் எழுதப்பட்டது, அந்த அழகான வரிகள் எப்படிக் கிடைத்தன என்பதை விளக்கிய கங்கை அமரன் அவர்கள் "மருதாணி' படத்துக்காக உருவாக்கிய பாடல் பின்னர் அந்தப் படமே முடங்கிப் போனதால் வெறும் ஒலிப்பதிவோடு நின்று விட்டதாம்.

பாடலைக் கேட்ட பாரதிராஜா "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்துக்காகப் பயன்படுத்த ஆசை கொண்டு கேட்டு வாங்கி நாயகி ராதாவை வைத்துப் பாடல் காட்சியையும் எடுத்தாராம். ஆனால் படத்தின் நீளம் கருதிப் பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.
இசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனமான "பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக எடுக்கப்பட்ட "புத்தம் புதுக்காலை" பாடலின் படச்சுருள் இன்னமும் ஜெமினி ஸ்டூடியோவில் உறங்கிக் கொண்டிருக்கிறதாம். பாலவர் கிரியேஷன்ஸ் மனசு வைத்தால் அந்த அரிய பொக்கிஷப் பாடல் படமானதைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டும்.

4 comments:

தனிமரம் said...

பாடல்க்காட்சியை மீண்டும்தூசுதட்டி எடுத்தால் சந்தோஸம் காத்திருப்போம் கங்கை அமரன் செய்வாரா என்று!

Yarlpavanan said...

"புத்தம் புதுக்காலை" பாடல்
எவராவது முயன்று வெளிக்கொணர்ந்தால்
நாமும் சுவைக்கலாமே!

மகேஸ் said...

Its here

https://www.youtube.com/watch?v=rzbTW2FMvhg&feature=player_embedded

கானா பிரபா said...

மகேஷ்

இது படத்தில் வந்த அதே பாடல் அல்ல,வேறு பாடலின் காட்சியோடு பொருத்தியது