Pages

Tuesday, December 10, 2013

திரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது

ட்விட்டர் வழியாக நண்பர் பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள் தானே எனவே ஒரு இருபது பாடல்களைத் தேற்றுவோம் என்று உட்கார்ந்தேன். மடையாக நினைவில் வந்து குவிந்தன பாடல்கள் ஐம்பது, இதையும் தாண்டிப் போனது ஆனால் ஒரு சில அளவுகோல்களை வைத்துக் கொண்டேன், அவை 
1.எண்பதுகள், தொண்ணூறுகளின் முற்பகுதிகளில் அமைந்த பாடல்கள்
2. சோகம் கலக்காத பாடல்கள்(ஒரு சில பாடல்களில் ஒரு சில வரிகள் வந்தாலும் முழுப்பாடலின் இனிமை கருதி விட்டுவைத்திருக்கிறேன்)
3.  பாடல்களில் பலவற்றை நீங்கள் மறந்திருக்கக் கூடும் என்பதால் காணொளி, கேட்கும் சுட்டிகளையும் தந்திருக்கிறேன், ஒரு பாடல் தவிர.
4. அதிக பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இசை என்பதற்குக் கம்பேனி பொறுப்பாகாது ;-)

இன்றைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் எண்பதுகளில் வாழ்பவர்கள் எனவே குழந்தைகளின் பிறந்த நாள் வீடியோவில் இந்தப் பாடல்களை இட்டுப் பின்னர் காட்சியோடு பொருத்திப் பார்க்கும் போது அது கொடுக்கும் இனிமையே தனி இல்லையா?
உங்களில் யாராவது இந்தப் பட்டியலை உங்கள் வீட்டுப் பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தும் உத்தேசம் உண்டானால் என்னிடம் அதையும் சொல்லுங்கள், கேட்க ஆவலோடு இருக்கிறேன்.

இதோ பாடல் பட்டியல்
1. ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு - பூவிழி வாசலிலே 
 http://www.youtube.com/watch?v=FBMF84iEQRA

2. ஹே சித்திரச் சிட்டுக்கள் - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
http://www.youtube.com/watch?v=diEA0kbVrnM

3. நல்லோர்கள் உன்னை பாராட்டவேண்டும் - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு


http://www.youtube.com/watch?v=T0pyqx0JM-8

4. குயிலே குயிலே குயிலக்கா - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

http://www.youtube.com/watch?v=WS93HTWOUrw

5. பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
http://www.youtube.com/watch?v=ERgis9fP7GI

6. கஸ்தூரிமான்குட்டியாம் - ராஜ நடை
http://www.youtube.com/watch?v=_-WYic5_jb4

7. சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும்  (ஜேசுதாஸ்) - பூவே பொன் பூவே
 http://www.raaga.com/player4/?id=265830&mode=100&rand=0.531273292806448

8. சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும்  (ஜானகி) - பூவே பொன் பூவே
http://www.raaga.com/player4/?id=265829&mode=100&rand=0.4832555182520297

9. பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா - மை டியர் குட்டிச்சாத்தான்
http://www.youtube.com/watch?v=g0GspXSvDkg

10. செல்லக் குழந்தைகளே சிந்தும் வசந்தங்களே - மை டியர் குட்டிச்சாத்தான்
http://www.raaga.com/player4/?id=265437&mode=100&rand=0.8775306588046189

11. சின்னக் குயில் பாடும் பாட்டுத்தான் - பூவே பூச்சூடவா
http://www.youtube.com/watch?v=PQu6j0tX01I

12. குயிலே குயிலே கொஞ்சும் தமிழே - புலன் விசாரணை
http://www.raaga.com/player4/?id=265881&mode=100&rand=0.07334680247999559

13.பாப்பா பாடும் பாட்டு - துர்கா
http://www.youtube.com/watch?v=rzjB-1TMFFY

14. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (சந்தோஷம்) - நீதிக்குத் தண்டனை
http://www.4shared.com/mp3/8GnxORlP/1982__-_neethikku_thandanai_-_.html

15. முத்துமணிச் சுடரே வா - அன்புள்ள ரஜினிகாந்த்
http://www.youtube.com/watch?v=F1uxxI6wUnQ

16. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன் வண்டுகள் - குரு
http://www.youtube.com/watch?v=7OADxk_0nI8

17. அடி ஆடு பூங்கொடியே - காளி
http://www.youtube.com/watch?v=PAsRLK9uCd0

18. கண்ணா நீ எங்கே - ருசி கண்ட பூனை

http://www.youtube.com/watch?v=UJzSLNC1vd8

19. ஆயிரம் பூவும் உண்டு - பாசமழை
http://www.youtube.com/watch?v=h9UE_GRp5qY

20. மண்ணில் வந்த நிலவே - நிலவே மலரே
http://www.youtube.com/watch?v=UmCcv-4uv7k

21. பூப் போலே உன் புன்னகையைக் கண்டேனம்மா - கவரிமான்
http://www.youtube.com/watch?v=LEw6U2BhHDI

22. ராஜாமகள் ரோஜா மகள் - பிள்ளை நிலா
http://www.youtube.com/watch?v=W06C1en5NTw

23. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே (மனோ) - சின்ன தம்பி
http://www.youtube.com/watch?v=qeLN4lIotDA

24. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே (சித்ரா) - சின்ன தம்பி
http://www.youtube.com/watch?v=-Y2hDMBeuDU

25. தூளி மணித் தூளியிலே - ராசா மகன்
http://www.raaga.com/player4/?id=265961&mode=100&rand=0.15018897274939613

26. வாழ்கவே வளர்கவே - முத்துக்கள் மூன்று
http://www.youtube.com/watch?v=5fi1SOuagqw

27. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா (ஜானகி மட்டும் ) - நீங்கள் கேட்டவை
http://www.youtube.com/watch?v=T-12B2Txwmw

28. பேசும் மணி முத்து ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள் - நீல மலர்கள்
http://www.youtube.com/watch?v=WVyqsoiUAfc

29. இந்த வெண்ணிலா என்று வந்தது - டிசெம்பர் பூக்கள்
http://www.youtube.com/watch?v=WVyqsoiUAfc

30. அஞ்சலி அஞ்சலி - அஞ்சலி
http://www.youtube.com/watch?v=sXyjCgR0rAc

31. வானம் நமக்கு வீதி - அஞ்சலி
http://www.youtube.com/watch?v=BkyphEZPfic

32.மழலை என்றும் மாறாத கிளிகள்
http://www.youtube.com/watch?v=XwTv0xATnCU

33. ராஜாமகள் இந்தச் சின்ன ராணி தான் - வாசலில் ஒரு வெண்ணிலா
(இணையத்தில் தொடுப்பு இல்லை)

34. சின்னச் சின்னப் பூங்கொடி - சின்னக் கண்ணம்மா
 http://www.youtube.com/watch?v=mWof0vvM4X0

35. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல - சின்னக்கண்ணம்மா
http://www.youtube.com/watch?v=kHbuo95l-JU

36. தாலாட்டு பிள்ளை ஒன்று - அச்சாணி
http://www.youtube.com/watch?v=qG6nE7BAtCM

37. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு - பூந்தோட்டக் காவல்காரன்
http://www.youtube.com/watch?v=e_fCjI0YTX0

38. தூரி தூரி துமக்க தூரி - தென்றல் சுடும்
http://www.youtube.com/watch?v=JM9BckIO2zE

39. ஏலே இளங்குயிலே என் ஆசைப் பைங்கிளியே - நினைவுச் சின்னம்
http://www.youtube.com/watch?v=c5Uvk6ShT6k

40. வரம் தந்த சாமிக்கு பதமான லாலி - சிப்பிக்குள் முத்து
http://www.youtube.com/watch?v=w0Z-R1GDkNQ

41. தங்க நிலவுக்குள் - ரிக்க்ஷா மாமா
http://www.youtube.com/watch?v=w0Z-R1GDkNQ

42. அன்னக்கிளி நீ சிரிக்க - ரிக்க்ஷா மாமா
http://www.youtube.com/watch?v=WhQpiJe1wjE

43. அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப்பூக்கள்
http://www.youtube.com/watch?v=19Olcrlrds0

44. கற்பூர பொம்மை ஒன்று - கேளடி கண்மணி
 http://www.youtube.com/watch?v=J8kayxD7o4w

45. மன்னவா மன்னவா - வால்டர் வெற்றிவேல்
 http://www.youtube.com/watch?v=J8kayxD7o4w

46. பிள்ளை மனம் வெள்ளை மனம் - ஒரு மலரின் பயணம்

http://www.no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Oru%20Malarin%20Payanam/Pilai%20Manam%20Vellai%20Manam.mp3?l=8&m=1

47. பல்லாக்கு வந்திருக்கு ராணி மக ராணிக்கு - கருவேலம் பூக்கள்
http://www.raaga.com/player4/?id=265171&mode=100&rand=0.4545608371469103

48. வண்ணமொழி மானே - சேதுபதி ஐ.பி.எஸ்
 http://www.youtube.com/watch?v=bgdxpuphERA

49. பூ பூப்போல் மனசிருக்கு - ராஜா சின்ன ரோஜா
http://www.youtube.com/watch?v=ds_AQqsIDvc

50.  ராஜா வாடா சிங்கக்குட்டி - திசை மாறிய பறவைகள்
 http://www.youtube.com/watch?v=dSIWyOfJArU

போனஸ் பாடல்
51. மழலையின் மொழிகளில் அழகிய தமிழ் படித்தேன்
 http://www.hummaa.com/music/song/mazhalayin-mozhienil/97731#

52. வாழ்த்து சொல்லுங்கள் - குற்றவாளிகள்
 http://music.cooltoad.com/music/song.php?id=500490&PHPSESSID=1821e4dca3e43db8e6895fe38b2caacf

18 comments:

ஆயில்யன் said...

பாஸ் செம கலெக்‌ஷன்ஸ் :)

அப்டியே ரேடியோவுல ஒரு நாளைக்கு ஓடவிடுங்களேன் கேட்போம் :) #ரெக்குவெசுட்டு

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

சூப்பர்...! என்னிடமும் இந்த பாடல்கள் உள்ளது(சிலப் பாடல்கள் தவிற.,) ' எந்தன் பொன்வண்ணமே, அன்பு பூவண்ணமே..' பாடலையும் சேர்த்துக்கொள்ளவும்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

சூப்பர்...! ' எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே... ' நான் வாழவைப்பேன் - பாடலையும் சேர்துக்கொள்ளவும்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அருமையான தொகுப்பு. பட்டியலில் இன்னும் சேர்க்க விரும்பினால் எனது தெரிவுகள்

1. கறுப்பு நிலா நீதான் கலங்குவதேன் - என் ஆசை மச்சான்

2. நிலா காய்கிறது நேரம் தேய்கிறது - இந்திரா

3. வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வரப் போகுது - எல்லாமே என் ராசா தான்

கானா பிரபா said...

ஆம்பூர் டேவிட்

மிக்க நன்றி
எந்தன் பொன் வண்ணமே கொஞ்சம் சோகம் கலந்ததால் சேர்க்கவில்லை

கானா பிரபா said...

மிக்க நன்றி ரிஷான்
கறுப்பு நிலாவின் முதலடியில் சோக வரி வந்தாலும் நல்ல பாட்டு மற்ற இரண்டும் கூட கலக்கல்

Unknown said...

முதலில் எனது வேண்டுகோளை ஏற்று அருமையான பதிவை தந்த @kanapraba அண்ணாவுக்கு நன்றிகள்,

அடுத்து அவரது 4வது பாயிண்ட், "அதிக பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இசை என்பதற்குக் கம்பேனி பொறுப்பாகாது ;-)"

திரையிசையில் இசைஞானி's domination is most significant in any generic in any time, அதிலும் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்களில் விட்டுவிடுவாரா நம்ம ஆளு...அத்தனையும் முத்துகள் ;-)))

கானா பிரபா said...

ராஜ்

உங்கள் புண்ணியத்தில் ஒரு பதிவு தேத்தியாச்சு ;-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

இன்னும் ஒரு பாடல் இப்பொழுது நினைவுக்கு வந்தது. உங்கள் பரிசீலனைக்கு...

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா - ஆனந்தக் கும்மி

எம்.ரிஷான் ஷெரீப் said...

இன்னுமொரு பாடல்

ஆரிராரோ ஆரிரரிரோ தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் - உயிரே உனக்காக !

தனிமரம் said...

நல்ல தொகுப்பு!

Unknown said...

wonderful collection. thanks

நண்பா said...

Happy New Year!!!

கானா பிரபா said...

மிக்க நன்றி நண்பா உங்களுக்கும் உரித்தாகுக

ADHI VENKAT said...

அன்புடையீர்,

தங்களின் தளத்தினை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்..

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html

நேரம் கிடைக்கும் போது வந்து கருத்துக்களை பகிரவும்..

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Kasthuri Rengan said...

ஆகா நல்ல பட்டியல்

எம்பட் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

கீதமஞ்சரி said...

வணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_26.html

Anonymous said...

அண்ணா இந்த கலெக்‌ஷன் zip folder இருந்தால் அனுப்புவீர்களா….
நீங்க பேஸ்புக்ல போட்ட YouTube link open ஆகுதில்ல…