Pages

Thursday, November 21, 2013

தேனிசைத் தென்றல் தேவா கொடுத்ததில் "பிடித்த" நூறு

நான் முன்னர் பகிர்ந்திருந்த பகிர்வில் சொன்னது போல "கிராமங்களில் இன்னமும் இசையமைப்பாளர் தேவா இசை வாழ்கிறது" என்பதற்கமைய, இந்தப் பகிர்வின் வழியாக அவரின் இசையில் மலர்ந்த படங்களில் இருந்து எனக்குப் பிடித்த நூறு பாடல்களைத் தெரிவு செய்திருக்கிறேன். இந்தப் பாடல்களை நான் தெரிவு செய்யும் போது ஒவ்வொரு படத்திலிருந்தும் ஆகச்சிறந்த ஒன்று என்ற கணக்கில் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த நூறு தான் மொத்தமே நல்ல பாடல்கள் என்ற கணக்கில் இல்லை. பட்டியலைத் தயாரித்துவிட்டு ஒருமுறை இணையத்தில் கிடைக்கும் தேவாவின் படங்களின் பட்டியலை மேய்ந்து பார்த்தால் சிற்பியிலிருந்து பரத்வாஜ் வரை இசையமைத்த படங்களை அண்ணனுக்கே தாரை வார்த்திருந்தார்கள். ஆகவே இங்கே நான் பகிரும் பட்டியல் ஓரளவு தெளிவைத் தருமென நினைக்கிறேன். தேவா இசையில் மலர்ந்த பாடல் தொகுப்புகள் இன்னும் ரக வாரியாக அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

பாடல்களின் பட்டியலுக்குப் போவதற்கு முன்னர்
1. தேவாவின் பாடல்களைப் பிடிக்காதவர்கள் இந்த வரியோடு ப்ரெளசரை மூடி விடவும்

2. இது என் இரண்டு நாள் உழைப்பு என்பதால் மீளப்பகிர்பவர்கள் இப்பகிர்வின் சுட்டியோடு கொடுக்கவும். ஏனெனில் ஒருமுறை நண்பர் ஒருவர் என்னிடமே என் பதிவை வாசிக்க அனுப்பியிருந்தார் அவ்வ்

3. Last but not least இந்தப் பாடல்களை எங்கே டவுண்லோடு பண்ணலாம், சுட்டி தருவீர்களா என்ற மேலதிக விசாரணைகள் தவிர்க்கப்படுகின்றன :-) 

1. சின்னப்பொண்ணு தான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு
2. செம்பட்டுப் பூவே - புருஷ லட்சணம்
3. ஓ சுவர்ணமுகி வருவேன் சொன்னபடி - கருப்பு வெள்ளை
4. சந்திரனும் சூரியனும் - வாட்ச்மேன் வடிவேலு
5. தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு - சோலையம்மா
6. கொஞ்ச நாள் பொறு தலைவா - ஆசை
7. அவள் வருவாளா - நேருக்கு நேர்
8. முதல் முதலில் பார்த்தேன் - ஆஹா
9. ஓ சோனா ஓ சோனா - வாலி
10. மொட்டு ஒன்று மலர்ந்திட - குஷி
11. ஏ ஹே கீச்சுக்கிளியே - முகவரி
12. உன் உதட்டோரச் சிவப்பே - பாஞ்சாலங்குறிச்சி
13. தாஜ்மகாலே - பெரியதம்பி
14. தங்கமகன் இன்று - பாட்ஷா
15. நகுமோ - அருணாசலம்
16. ஒரு பெண்புறா - அண்ணாமலை
17. நலம் நலமறிய ஆவல் - காதல் கோட்டை
18. தாஜ்மகால் ஒன்று - கண்ணோடு காண்பதெல்லாம்
19. சின்னச் சின்னக் கிளியே - கண்ணெதிரே தோன்றினாள்
20. ஒரு கடிதம் எழுதினேன் - தேவா
21. செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல - வசந்தகாலப் பறவை
22. என் மனதைக் கொள்ளை அடித்தவளே - கல்லூரி வாசல்
23. ஒத்தையடிப்பாதையிலே - ஆத்தா உன் கோயிலிலே
24. முத்து நகையே முழு நிலவே - சாமுண்டி
25. பதினெட்டு வயது - சூரியன்
26. ராசி தான் கை ராசி தான் - என் ஆசை மச்சான்
27. ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா - உனக்காகப் பிறந்தேன்
28. பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது - பேண்டு மாஸ்டர்
29. மகராணி மகராணி மாளிகை மகராணி - ராஜபாண்டி
30. கருடா கருடா - நட்புக்காக
31. மஞ்சள் நிலாவின் ஒளியில் - திருமூர்த்தி
32. நீ இருந்தால் நான் இருப்பேன் - ஆசையில் ஓர் கடிதம்
33. ஒரு மணி அடித்தால் அன்பே உன் ஞாபகம் - காலமெல்லாம் காதல் வாழ்க
34. வானம் தரையில் வந்து நின்றதே - உன்னுடன் 
35. நந்தினி நந்தினி ஓ நந்தினி - அம்மா வந்தாச்சு
36. எனக்கெனப் பிறந்தவ - கிழக்குக் கரை
37. செம்மீனா விண்மீனா - ஆனந்தப் பூங்காற்றே
38. இளந்தென்றலோ கொடி மின்னலோ - வசந்த மலர்கள்
39. தஞ்சாவூரு மண்ணை எடுத்து - பொற்காலம்
40. காதலி காதலி - அவ்வை சண்முகி
41. முதன்முதலாக - எங்கள் அண்ணா
42. கோகுலத்து கண்ணா கண்ணா - கோகுலத்தில் சீதை
43. இதயம் இதயம் இணைகிறதே - விடுகதை
44. கங்கை நதியே கங்கை நதியே - காதலே நிம்மதி
45. மலரோடு பிறந்தவளா - இனியவளே
46. இந்த நிமிஷம் - ஹலோ
47. நில்லடி என்றது - காலமெல்லாம் காத்திருப்பேன்
48. மேகத்தில் ஒன்றாய் நின்றோமே - காதல் சடுகுடு
49. செம்பருத்திப் பூவே - காதல் சொல்ல வந்தேன்
50. சொல்லவா சொல்லவா - மகா பிரபு
51. ஆறெங்கும் தானுறங்க - மனசுக்கேத்த மகராசா
52. உன் பேர் சொல்ல ஆசை தான் - மின்சாரக் கண்ணா
53. மனசே மனசே - நெஞ்சினிலே
54. வண்ண நிலவே வண்ண நிலவே - நினைத்தேன் வந்தாய்
55. ஓ வெண்ணிலா - நினைவிருக்கும் வரை
56. பாரதிக்கு கண்ணம்மா - ப்ரியமுடன்
57. காஞ்சிப்பட்டு சேலை கட்டி - ரெட்டை ஜடை வயசு
58. பெண் கிளியே பெண் கிளியே - சந்தித்த வேளை
59. வணக்கம் வணக்கம் - சீனு
60. செந்தூர பாண்டிக்கொரு - செந்தூர பாண்டி
61. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
62. பார்த்தேன் சிரித்தேன் - சாமி சொன்னா சரிதான்
63. மன்னவனே மன்னவனே - கோட்டை வாசல்
64. போதும் எடுத்த ஜென்மமே - புள்ளகுட்டிக்காரன்
65. எலுமிச்சம் பூவே எலுமிச்சம் பூவே - தூது போ செல்லக்கிளியே
66. யேன் அ ஸாரே - கங்கைக்கரைப் பாட்டு
67. உன் புன்னகை போதுமடி - பாஸ் மார்க்
68. மஞ்சனத்துப் பூவே - நம ஊரு பூவாத்தா
69. சிந்தாமணிக் குயிலே - மண்ணுக்கேத்த மைந்தன்
70. காலையிலும் மாலையிலும் கல்லூரி வாசலில் வந்த நிலா - சந்தைக்கி வந்த கிளி
71. தூதுவளை இலை அரைச்சு - தாய் மனசு
72. நீ ஒரு பட்டம் - ரோஜாவை கிள்ளாதே
73. வந்தாளப்பா வந்தாளப்பா - சீதனம்
74. பிரிவெல்லாம் பிரிவில்லை - சூரி
75. ஓர் தங்கக் கொலுசு நான் தந்த பரிசு - தங்கக் கொலுசு
76. உலகத்திலுள்ள அதிசயங்கள் - தை பொறந்தாச்சு
77. மும்பை காற்றே மும்பை காற்றே - காதலி
78. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான்
79. நாளை காலை நேரில் வருவாளா - உன்னைத் தேடி
80. வெளிநாட்டுக் காற்று தமிழ் - வானவில்
81. கருப்பு தான் எனக்குப் பிடிச்ச - வெற்றிக் கொடி கட்டு
82. ஒரு நாளும் உனை மறவாத - வான்மதி
83. இடம் தருவாயா - அப்பு
84. பொருள் தேடும் பூமியில் - கல்கி
85. ஜனவரி நிலவே நலந்தானா - என் உயிர் நீதானே
86. எந்தன் உயிரே எந்தன் உயிரே - உன்னருகில் நான் இருந்தால்
87. வந்தேன் வந்தேன் - பஞ்ச தந்திரம்
88. அழகே பிரம்மனிடம் - தேவதையை கண்டேன்
89. சகல கலா வல்லவனே - பம்மல் கே சம்பந்தம்
90. ஜூலை மலர்களே - பகவதி
91. கம்மா கரையிலே - வேடன்
92. அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே - பொண்டாட்டி ராஜ்ஜியம்
93. நேபாளக் கரையோரம் - தாய்க்குலமே தாய்க்குலமே
94. குயில் குக்கு கூ - வாய்மையே வெல்லும்
95. வேடந்தாங்கலில் ஒரு வெண்புறா - சூரியன் சந்திரன்
96. ஏலேலங்குயிலே - புது மனிதன்
97. மாலையிலே தெற்கு மூலையிலே - வாசலில் ஒரு வெண்ணிலா
98. ஏ ஞானம் யெப்பா ஞானம் - இந்து
99. தேன் தூவும் வசந்தம் - வைதேகி கல்யாணம்
100. தூக்கணாங்குருவி ரெண்டு - ஜல்லிக்கட்டுக்காளை

11 comments:

Madhav said...

படத்துக்கு ஒன்று என்ற கணக்கினால் சில வெகு சாதாரணமான பாடல்களும் உண்மையிலேயே முத்துக்களாகக் கருதக்கூடிய பாடல்களுடன் கலந்து விட்டன.

Why u chose this strategy?

கானா பிரபா said...

மாதவ்

தேவா இசையமைத்த எல்லாப் படங்களுமே இங்கே வரவில்லை. இவை எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள் தான்

மயில் றெக்க said...

ரொம்ப நாளாகவே இதில் உள்ள பல பாடல்களை இளையராஜா இசையமைத்து என்றே எண்ணி வந்துள்ளேன் - தொகுத்தமைக்கு நன்றி

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி கார்த்திக்

செ. நாகராஜ் - C. Nagaraj said...

கட்டபொம்மன் படத்தில் வரும் ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா பாட்டை விட்டுவிடீர்களே. இந்தியில் கூட பாடலை காப்பி அடித்து போட்டார்கள்

கானா பிரபா said...

நாகராஜ்

உண்மையில் அந்தப் பாட்டு இந்தப் பட்டியலில் போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

mani said...

http://www.youtube.com/watch?v=bljsl63X-Jw

Anonymous said...

கானாஸ்...
தேவாவின் கானாப் பாடல்களின் தொகுப்பையும் இது போல வெளியிட்டு சனி இரவு குடி வெறியர்களின் பேராதரவையும் பெற வாழ்த்துகிறேன்!

பொட்"டீ"ஸ்

அபிராமி said...

ஆஹா...
பலபாடல்கள் என்மனதையும் கொள்ளைகொண்டவை!!
செந்தூரபாண்டியில் சின்னச்சின்ன சேதிசொல்லி வந்ததொரு ஜாதிமல்லி பாடல் எனக்கு மிகப்பிடித்தது. அதையும் எதிர்பார்த்திருந்தேன் உங்கள் பட்டியலில்..

Jeeva said...

Mikka mahillchi kaana praba anna..... Enaku pudicha songs deva sir songs than....... Avaru gaana lam ketka ketka.... Avlooo oru santhosam na....athulayum mukkala mukkabla.. Loyola clg laila! Alagiya laila, kaathadikuthu kaathadikuthu,kothal savadi lady, vaanguda 420 beeda, kuluki vacha coco cola pola,munima munima, adengapa solite pogalam na avlo songs..... Ipolam atha miss panurom.....

Raja said...

சகோ...கொச்சின் மாடப்புறா மிஸ்ஸாயிடுச்சே....