Pages

Monday, April 1, 2013

"கற்பூரமுல்லை" பின்னணி இசைத்தொகுப்பு

கற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில் கதை, இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் வசனங்களை வழக்கம் போல பாசிலின் தமிழ்ப்படங்களைக் கவனித்துக் கொள்ளும் கோகுல் கிருஷ்ணா வழங்கியிருந்தார். அமலா, ஶ்ரீவித்யா, ராஜா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், எண்டே சூர்ய புத்ரிக்கு என்ற பெயரில் மலையாளத்த்திலும் வெளிவந்திருந்தது. மலையாளத்தில் நாயகன் ராஜாவுக்குப் பதில் சுரேஷ் கோபி. வழக்கமாக பாசிலின் மலையாளப்படங்கள் அவரால் தமிழுக்கு மீள இயக்கப்படும் போது மூலப்படத்தின் இசை வேறு ஒரு இசையமைப்பாளராக இருக்கும். விதிவிலக்கான ஒரு சில படங்கள் வரிசையில் கற்பூர முல்லையும் சேர்த்தி. இரண்டு படங்களின் இசையும் இசைஞானி இளையராஜாவே. கற்பூரமுல்லை படத்தின் பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்று நான் எண்ணியிருந்தாலும் அதை உடனடியாக அமல்படுத்தவேண்டிய அவாவை உண்டு பண்ணியது, சமீபத்தில் கைரளி மலையாளத் தொலைக்க்காட்சியில் வரும் கந்தர்வ சங்கீதம் என்ற இசை நிகழ்ச்சியில் இந்தப் படம் குறித்து, பாடகி பின்னி கிருஷ்ணகுமார் வழங்கிய பகிர்வு. இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது "மாயா விநோதினி" என்ற ராகம். இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிரிக்க வைத்தது இதைக் கேட்டபோது. ஒவ்வொரு படத்திலும் இயக்குனருக்குச் சரிசமமாக, அல்லது அதற்கும்மேலாக காட்சிகளுக்கு உயிர்கொடுத்ததில் ராஜாவின் பங்கு அளப்பரியது. இயக்குனர் பால்கி சொன்னது போல, அந்தப் பின்னணி இசையே ஏராளம் பாடல்களைப் பிரசவிக்கும் வல்லமை கொண்டன. அதுதான் ராஜா. பாடகி பின்னி கிருஷ்ணகுமார் சொன்ன "எண்டே சூர்ய புத்ரிக்கு" (கற்பூரமுல்லை) பின்னணி இசை குறித்த பகிர்வு வீடியோ இது.
கற்பூர முல்லை" திரைப்படத்தின் பின்னணி இசையைத் தொகுத்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சியோடு இழைந்த பின்னணி இசையில் அப்படியே கிறங்கிப் போய்விட்டேன். ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் எவ்வளவு தூரம் ஜீவ நாடியாக அமைகின்றார் என்பதற்கு, இங்கே நான் தரும் ஒரு சிறு பின்னணி இசைக்குளிகை ஒரு சான்று. முறை தவறிப் பிறந்த தன் மகளை ஏற்றுக் கொள்ள முடியாது மூடி மறைக்கும் சமூகத்தில் பிரபலமான தாயும், அதுவரை அவள் தான் தாய் என அறியாத மகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன்னை ஏற்கமறுக்கும் தாயைக் கண்டு மருகும் மகளின் மனக்குமுறலாக இங்கே இசை பிரவாகிக்கிறது, அதுவே மகள் பேச ஆரம்பிக்கும் போது தாயின் பக்கம் தாவி மிரட்சியோடு அலைபாய்கின்றது. https://soundcloud.com/kanapraba/katpoora-mullai-bgm இசைஞானி இளையராஜாவின் இத்தகு செல்வங்கள் எவ்வளவோ எண்ணற்ற படங்களில் பின்னணி இசையாக இறைந்து கிடக்கின்றன. தொடர்ந்து கற்பூர முல்லை திரைப்படத்தின் முழுமையான பின்னணி இசையைக் கேட்டு மகிழுங்கள். 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கற்பூர முல்லை திரைப்படத்தின் முகப்பு இசை 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா) தன் பெற்றோர் யாரென்று தெரியாத விரக்தியில், கல்லூரில் மேல் மாடியிலிருந்து தற்கொலை முயற்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா)வைக் காப்பாற்ற வைத்தியசாலையில் டாக்டர் ராஜா முயற்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா)வை முதன்முதலில் சந்திக்கும் தாய் ஶ்ரீவித்யா 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா) தொலைபேசியில் தாய் ஶ்ரீவித்யாவை அழைத்துத் தன்னை அறிமுகப்படுத்தும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன் தாய் தன்னை ஏற்க மறுத்த கவலையில் மாயா விநோதினி (அமலா) 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ஶ்ரீவித்யா, மாயா விநோதினியிடம் தன்னைத் தாயாக ஏற்க வேண்டாம் என்று மறுக்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ஶ்ரீவித்யா சதிகாரர்களால் கொல்லப்படுதல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன் தாய் ஶ்ரீவித்யாவைக் கொன்றவர்களை மாயா விநோதினி (அமலா) பழிவாங்கும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா) இறுதிக்காட்சியில் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கற்பூரமுல்லை திரைப்படத்தின் பாடல்கள் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கற்பூர முல்லை ஒன்று < 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பூங்காவியம் பேசும் ஓவியம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பூங்காவியம் பேசும் ஓவியம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ஶ்ரீ சிவ சுத 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வாம்மா வா 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

6 comments:

maithriim said...

என்ன நுணுக்கமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். இரண்டு நாள் முன்னாடி நீங்கள் பதிவேற்றம் செய்த கற்பூர முல்லை பிஜிஎம்ஐ நான் கேட்டு மேய் சிலிர்த்துப் போனேன். அங்கும் நீங்கள் விளக்கம் கொடுத்திருந்தீர்கள். இந்தப் பதிவில் ஒவ்வொரு பிட்டும் பொறுமையாகக் கேட்டு அனுபவிக்க வேண்டும். நன்றி பிரபா.

amas32

காத்தவராயன் said...

நன்றி கானா, அருமையான தொகுப்பு.

இரண்டு பெண்களை சுற்றி நடக்கும் கதைக்கு / பாடலுக்கு [பூங்காவியம்] ஏசுதாஸை ராஜா சார் தவிர்த்திருக்கலாம். சுசீலா, சித்ராவின் குரல்களே போதுமானது.

இதே போல் பாசிலின் "பூவே பூச்சூடவா"விலும் தவறு உள்ளது அதற்கு பாசில்,ராஜா, வைரமுத்து அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இந்த தவறுகளை எல்லாம் மூளைக்குள் செல்லவிடாமல் மறக்கடிப்பது ராஜாவின் தெய்வீக இசையே!

கோபிநாத் said...

கலக்கல் தொகுப்பு தல...இது இசை தெய்வத்தின் தயாரிப்பு என்பது இப்போ தான் தெரியும் ;))

கானா பிரபா said...

amas மேடம் மிக்க நன்றி ;)

கானா பிரபா said...

காத்தவராயன்,

கண்டிப்பா உங்களின் ஆதங்கம் நியாயமானது. ஃபாசில் படங்களுக்கு ஜேசுதாஸ் வருவது ஒரு செண்டிமெண்டாக இருக்குமோ என்னமோ

கானா பிரபா said...

தல கோபி

வாங்க வாங்க ;)