இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம், கல்கி இதழின் முகப்பு அட்டையில் நாயகன் படத்தில் கமல்ஹாசன், சரண்யா இருவரும் ஒரு பழைய காரில் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு ஸ்டில்லோடு வெளிவந்திருந்தது. பள்ளிக்கூடத்திற்கு அருகே இருந்த கடையில் இருந்த அந்த ஒரேயொரு கல்கி இதழை வாங்கி வைத்துக் கொண்டேன். வித்தியாசமான அந்த ஸ்டில்லைப் பார்த்துக்கொண்டே இருப்போம் என்று. ஆனால் எப்படியோ சில நாட்களில் என் கை நழுவிப்போய்விட்டது அந்தப்புத்தகம். ஆசையாக வைத்திருந்த பொருள் தொலைந்த ஏக்கம் அப்போது பல நாட்கள் நீடித்தது. இப்போதும் மனதுக்குள் அதை நினைத்துச் சிரித்துக் கொள்வேன்.
0000000000000000000000000000000000000000000000000000
நாயகன் படம் அக்டோபர் 21, 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அந்தப்படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்ப முக்கிய காரணம் கமலின் வித்தியாசமான கெட்அப் ஐத் தாக்கிவந்த பேசும்படம், பொம்மை உள்ளிட்ட சஞ்சிகைகளில் வந்த விளம்பரம் கூட. சின்னத்திரையின் ஆக்கிரமிப்பே இல்லாத சூழலில் சினிமா சஞ்சிகைகள் தான் ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்கும் முக்கிய சக்திகளாக இருந்த நேரம். முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு என்று என்று வந்த விளம்பரங்கள் பின்னர் சுஜாதா பிலிம்ஸ் லிமிட்டெட் வெளியீடு என்று வந்தபோது ஒரு குழப்பம். ஏனென்றால் ஏற்கனவே பாலாஜியின் சுஜாதா சினி ஆட்ஸ் நிறுவனமும் படத்தயாரிப்பில் அப்போது மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரம். பின்னர் சுஜாதா பிலிம்ஸ் லிமிட்டெட் தன்னுடைய அக்னி நட்சத்திரம் படத்தயாரிப்போடு ஜி.வி பிலிம்ஸ் ஆனது இன்னொரு வரலாறு. மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரனும் இந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் முன்னணித் தயாரிப்பாளர் ஆனார். நாயகன் படத்தின் உருவாக்கம், அது பின்னர் ஜி.வெங்கடேஸ்வரனுக்குக் கைமாறியதைப் பற்றி அண்மையில் கமல்ஹாசன் ஹிந்து பத்திரிகையில் கொடுத்த பகிர்வில் அறிந்திருப்பீர்கள்.
ஒரு படைப்பை நேர்மையாகக் கொடுக்கும் போது கிட்டும் அதீத கெளரவம் இந்தப் படத்துக்கும் கிட்டியிருக்கிறது. வெகுஜன அபிமானம் மட்டுமல்ல, Time சஞ்சிகையின் எல்லாக்காலத்திலும் கெளரவித்துக் கொண்டாடக்கூடிய 100 படங்களில் ஒன்று என்ற தனிச்சிறப்பையும் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் இந்தப் படத்துக்கு முன்பே எத்தனையோ சோதனை முயற்சிகளின் மூலம் தன் பாத்திரப்படைப்பில் வித்தியாசத்தைக் காட்டமுனைந்திருந்தாலும், ஒரு பூரணத்துவம் என்பது இந்தப் படத்திலேயே கிட்டியிருக்கிறது. அதற்கு மணிரத்னம் என்ற சிறந்த நெறியாளரின் முக்கிய பங்கு கண்டிப்பாகப் பங்கு போட்டிருக்கிறது. கூடவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம். இவர்களோடு நம்ம இளையராஜா. பாத்திரங்க்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை முழுமையாக நிரப்பித் தன் பங்கை நிறைவாகச் செய்து, அந்த வெற்றிப் புளகாங்கிதத்தோடே நின்றுவிடாமல் அடுத்த படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இசைஞானியின் பங்கு இந்தப் படத்தின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதிச் சொட்டு வரை இசையால் இழைத்து இழைத்துப் பண்ணப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் நுட்பமாகக் கேட்டிருந்திருக்க முடியாது. ஆனால் ராஜாவின் இசை காலம் கடந்தது என்பதற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒவ்வொரு இசைத்துணுக்குகளாகக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கமல்-மணிரத்னம்-இளையராஜா இந்தப் படத்தில் இணைந்தது போன்ற இன்னொரு வாய்ப்பு வந்தாலும் இந்தப் படம் கொடுத்த சிறப்பிற்கு நிகராக இருக்குமா என்பது ஐயமே.
00000000000000000000000000000000000000000000000000000000
நாயகன் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பிற்காகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தைப் போட்டுவிட்டு ஒவ்வொரு காட்சியாக உறுமீன் வருமளவுக்கும் வாடி நிற்கும் கொக்குப்போல இருப்போம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நினைத்ததற்கு மேலாக கைகொள்ளாத அளவு இசைக்குளிகைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட மூன்று நாள் பகுதி நேர உழைப்பு. ஆனால் ராஜா இதையெல்லாம் ஒரே மூச்சில் கொடுத்திருப்பார்.
மொத்தம் 29 இசைக்குளிகைகள் கிட்டியிருக்கிறது இந்த இசைக்குளிகைகளில் தென்பாண்டிச் சீமையிலே மட்டுமே பாடல், மற்றயவை எல்லாமே இசை ஆலாபனைகள். இதைவிட இன்னும் காட்சியோட்டத்தோடு இழத்து இழைத்துக் கொடுத்த நுணுக்கமான இசையைப் பிரிக்கமுடியாத அளவுக்கு நேர்த்தியான, சவாலான படைப்பாக அதை எதிர்கொண்டேன்.
இதோ தொடர்ந்து "நாயகன்"பின்னணி இசை பேசட்டும்
000000000000000000000000000000000000000000
இந்தப்படத்தின் ஹைலைட்டான இசைத்துணுக்குகள்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
பாலியல் விடுதியில் வேலு கல்லூரி மாணவியான அவள் மீது நேசம் கொள்ளும்போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் மனைவி துப்பாக்கிச் சூடுபட்டு இறக்கும் காட்சி, மேலே கொடுத்த அதே இசைத்துண்டம் சோகவடிவாக மாறும்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் மகன் இறந்த செய்தியைக் கேட்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலுநாயக்கர் புது அசிஸ்டெண்ட் கமிஷனர் வீடு தேடிப்போகும் காட்சி, ஆக்ரோஷத்தோடு போகும் அவர் தன் மகள் வீடு என்று அறியும் போது அடங்கியொடுங்கும் கணத்தை இசையால் காட்டும்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாயகன் படத்தின் முழு இசைப்பகிர்வு
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
சிறுவன் வேலு போலீசிடம் இருந்து தப்புவதற்காக காட்டில் மறைவாக இருக்கும் தன்னுடைய தந்தையைக் காணச் சொல்லும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
சிறுவன் வேலுவின் தந்தையைக் கொன்ற போலீஸ்காரை இடுகாட்டில் வைத்துக் கொன்றுவிட்டு வேலு ரயிலேறித் தப்புகிறான்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
சிறுவன் வேலு பம்பாய்க்குச் சென்று அடைக்கலம் தேடுதல்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாலு பேருக்கு உதவணும்னா எதுவும் தப்பில்லை - வேலுவிடம் வளர்ப்புத் தந்தை
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலுவை போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்யது, அடிபட்ட காயங்களுடன் அவனைத் தெருவில் இறக்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தன் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்களோடு தன் காயத்தை மறைத்துச் சந்தோஷம் கொண்டாடும் வேலு
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாலுபேருக்கு உதவணும்னா எதுவுமே பாவம் இல்லை தன் வளர்ப்புத்தந்தை சொன்னதையே மீளவும் வேலு சொல்லும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு முதன்முதலில் கள்ளக்கடத்தலில் இறங்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
பாலியல் விடுதியில் தன் வருங்காலத் துணையை வேலு முதன்முதலில் சந்திக்கும் காட்சி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலுவின் வளர்ப்புத்தந்தையைக் கொன்றபோலீஸ்காரரைத் தேடிப் பழிதீர்க்கும் போது, இதிலிருந்து வேலு நாயக்கர் தராவி குடியிருப்பு வாசிகளின் ஆபத்பாந்தவராக மாறுகிறார்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரின் மனைவியைக் கொன்றவர்களைத் தேடித் தேடிப் பழிதீர்த்தல்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரின் மகள் தன் தாய் இறந்த காரணத்தைக் கேட்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மனவளர்ச்சி குன்றிய மகனை அவர் சந்திக்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரின் மகள் இவரின் தவறுகளுக்கு எதிராக வாதம் செய்யும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கருக்கு எதிராக அப்ரூவர்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரின் மகன், அப்ரூவரை நீதிமன்றத்தில் வைத்துக் கொலை செய்யச் செல்லும் காட்சி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
போலீசிடமிருந்து தப்பி ஓடும் வேலு நாயக்கர் மகன்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கருக்கு எதிராக புதிய அசிஸ்டெண்ட் கமிஷனர்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நீண்ட நாட்களுக்குப் பிறகு மகளைச் சந்திக்கும் வேலு நாயக்கர்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கருக்கு அரெஸ்ட் வாரண்ட் அதைத் தொடர்ந்து அவரைத் தேடும் போலீஸ் குழு
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இன்ஸ்பெக்டரைக் கொன்றது வேலு நாயக்கர் என்று அவரின் மகன் அசிஸ்டெண்ட் கமிஷனர் மூலம் அறியும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் சரணடையும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் தன் பேரனுடன் உரையாடும் காட்சி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மகன் பழிதீர்க்கத்தயாராதல்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் கொல்லப்படும் அந்த நிமிடங்கள்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
16 comments:
25 வருட நிறைவில், படத்துக்கு பக்கபலமாய் அமைந்த இசையினை பின்னணி தொகுப்பாக்கி ஒரு இசை ரசிகனால் பல ரசிகர்களுக்கு வழங்கப்படும் இசை விருந்து #செம!செம!!
25 வருட நிறைவில், படத்துக்கு பக்கபலமாய் அமைந்த இசையினை பின்னணி தொகுப்பாக்கி ஒரு இசை ரசிகனால் பல ரசிகர்களுக்கு வழங்கப்படும் இசை விருந்து #செம!செம!!
நன்றி
நன்றி
நன்றி
பிரபா அண்ணா, மிகவும் நல்லாயிருக்கு. படத்தை இன்னும் ஒருக்கா பார்க்கவேண்டும். கனக்க மிஸ் பண்ணியிருக்கிறேன் போல....!
தல வேற என்ன சொல்ல முடியும்...என்ன சொல்ல தெரியும் ஒன்னே ஒன்னு தான்
*நன்றி* ;))
25 ஆண்டு + பிறந்த நாளுன்னு நேரம் பார்த்து கலக்குவதில் தல தலதான் ;))
கடின உழைப்பு!
உங்க உழைப்பையும் சேர்த்துத்தான்!
இனிய பாராட்டுகள்.
மிக்க நன்றி ஆயில்ஸ்
சுரேஷ்
உங்களைப் போன்ற ரசிகர்களுக்காகவே இதுபோன்று நிறையத் தேடிக் கொடுக்கவேண்டும் என்ற ஆவல் பிறக்கின்றது
மிக்க நன்றி பிரபா (உங்களுடைய மௌன ராகம் பதிவை நானும் நண்பர்களும் பலமுறை படித்து/கேட்டு ரசித்திருக்கிறோம்)
'நாயகன்' படத்தில் வரும் 'நீயொரு காதல் சங்கீதம்' பாடலுக்கு பாடல் எழுத புலமைப்பித்தனை கூப்பிட்ட போது இளையராஜா - "ரகுபதி ராகவ ராஜாராம் மாதிரியான புனிதமான ட்யூன் இது. காதல் பாட்டுத்தான்.. ஆனால் உடல் அங்கங்களை வர்ணித்து ஒரு வரி கூட வராமல் எழுதித் தர முடியுமா? " என்று கேட்டாராம். அப்படி எழுதிய பாட்டுதான் இது. (சமீபத்தில், பாடலாசிரியர் புலமைப் பித்தன் மனதோடு மனோ நிகழ்ச்சியில் சொன்னது) இந்தப் பாடல் 'ஷ்யாம்' என்றொரு ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்தது.
'வதனமே சந்திர பிம்பமோ' என்று MKT காலம் முதல் இன்று வரை வந்த காதல் டூயட் பாடல்களில் பெண்களின் கண், கூந்தல், பல் என்று அங்கங்களை வர்ணிக்கும் வரிகள் இல்லாத காதல் பாடல் எதாவது இருக்குமா தெரியவில்லை.
'நாயகன்' படத்தில் இந்த பாடல் வரும் காட்சியை நினைத்துப் பாருங்கள். ஹீரோ ஹீரோயினை விபச்சார விடுதியில் பார்த்து, இரக்கம்/காதல் கொண்டு அவளை மீட்டு, காதலித்து, கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை பெரும் வரை காட்சிகள் அமைந்திருக்கும் (Including few highly romantic scenes). இந்த உறவு உடல் கவர்ச்சியினால் அல்ல என்பதை, ராஜா ட்யூன், வரிகள் என்று எல்லாவற்றிலும் சொல்லி 'audience' ஐ வேறு நிலைக்கு கொண்டு போகிறார்.
உங்கள் உழைப்பிற்கு ஒரு சல்யூட்...
நன்றி...
நன்றி, கானா அண்ணா. ஆனால் என்னால் இசைத்துணுக்குகளை கேட்க இயலவில்லை.
இப்படி இருக்கிறது,
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் மனைவி துப்பாக்கிச் சூடுபட்டு இறக்கும் காட்சி, மேலே கொடுத்த அதே இசைத்துண்டம் சோகவடிவாக மாறும்.
மூர்த்தி, மிக்க நன்றி
தல கோபி, நன்றீஸ் :-)
துளசிம்மா,
நன்றியோ நன்றி :-)
பாலா,
பின்னூட்டத்திலேயே நிறைய அருமையான தகவல்கள், இசைஞானியின் இப்படி எண்ணற்ற பின்னணி இசை கவனிப்பாரற்று இருக்கிறது :-(
திண்டுக்கல் தனபாலன்,
மிக்க நன்றி :-)
சுப்பராமன்,
முழு இசைத்தொகுதியையும் கேட்க முடியவில்லையா அல்லது குறிப்பாக இது மட்டுமா?
அது ப்ரவுசர் பிரச்சினை.சரியாகி விட்டது. நன்றி!
உங்களை போல் எங்களால் அவரது இசையையும் காட்சியையும் பிரித்து பார்க்க முடிய இல்லை. ஒன்று இரண்டு காட்சிகள் பார்க்க முடிந்தாலும் மற்றவைகள் காட்சிகளோடு ஒன்றிவிட்டது. நல்ல முயற்சி தொடரட்டும்.
Post a Comment