ஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் கடந்து இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் கொண்டு நிலைத்திருக்கின்றது.
வெளியே கலகலப்பான திவ்யாவாகத் திரியும் அவளின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் கடந்து போன காதலின் இழப்பைச் சொல்லமுடியாத வேளை, சூழ்நிலைக்கைதியாகத் திருமண பந்தத்தில் இணைகின்றாள். காதலை மனதில் பூட்டி வைத்து மெளனராகம் பாடும் அவளும், கரம் பிடித்தவனும் "தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் தம் திருமண பந்தத்தைத் தொடர்ந்தார்களா என்பதே இந்தக் காவியத்தின் மையம்.
ஒரு எளிமையான கதையை எடுத்துக் கொண்டு, பொருத்தமான பாத்திரங்களையும், துறை தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களையும் இணைத்துப் படைக்கும் எந்த ஒரு படைப்பும் காலத்தைத் தாண்டிப் பேச வைக்கும் என்பதை இன்று திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்ற படைப்பாளிகளுக்கும் பாடமெடுக்கும் படங்களில் கண்டிப்பாக மெளன ராகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெளியே ஆர்ப்பாட்டம் காட்டி உள்ளே மெளன ராகம் பாடும் திவ்யா என்ற பாத்திரத்தில் ரேவதி, மனைவியின் மனம் கோணாது அவள் வழியே விட்டுத் துணையாகப் பயணிக்கும் கணவனாக என்ற சந்த்ரு மோகன், திவ்யாவின் கல்லூரிக்காலக் காதலனாக மனோ என்ற குணச்சித்திர பாத்திரத்தில் கார்த்திக் என்று இவர்களின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத வகையில் இவர்களுக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட பாத்திரப்படைப்புக்கள். அதிலும் குறைவாகவே வந்தாலும் நிறைவாகவே நிற்கும் கார்த்திக் இன் குணச்சித்திர வேடம் இன்றளவும் பேசப்படும் அளவுக்கு இன்னொரு தமிழ் சினிமா இப்படியானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருக்கின்றதா என்பதை யோசித்துத் தான் கண்டுபிடிக்க வேண்டும். மோகனின் பாத்திரத்தோடு இணைந்து கச்சிதமாகப் பொருந்திப்போகும் சுரேந்தரின் பின்னணிக்குரலையும் சொல்லி வைக்க வேண்டும்.
கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பன்முகப் பொறுப்புக்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு மணிரத்னம் இயக்கிய சொற்பமான படங்களில் இதுவுமொன்று. அந்த நாளில் சுஹாசினியைக் கைப்பிடிக்காத வேளை என்பதும் எமக்கு ஒரு பாக்கியம். பகல் நிலவு திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், நாயகன் கொடுத்த பெரும் அங்கீகாரத்துக்கு முன் "மெளன ராகம்" என்ற இந்தப் படைப்புக்குத் தயாரிப்புப் பொறுப்பை அவரின் சகோதரர் ஜி.வி என்ற வெங்கடேஷ்வரன் ஏற்க, ஒளிப்பதிவை பி.சி.ஶ்ரீராம் ஏற்றிருக்கின்றார். பாடல்கள் அனைத்தையும் வாலி எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி என்ற இரட்டைக் குரல்கள் மாத்திரமே முழுப்பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கின்றார்கள்.
இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் "மெளன ராகம்" இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று. எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது.
இந்தப் படத்தின் பின்னணி இசைப் பிரிப்பு வேலைகளைச் செய்யும் போது கவனமாக ஒவ்வொரு துளியாகச் சேமிக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டேன். எனவே இந்தப் பணியைக் கொஞ்சம் கவனமாகவும் நிதானமாகவும் செய்யத் தொடங்கினேன். கூடவே இப்படியான படைப்புக்களுக்கு ரசனை உள்ள சகபதிவரைத் துணைக்கழைத்து அவரின் பார்வையில் காட்சிப்படுத்தல்களில் இழையோடும் இசை குறித்த வர்ணனையை எதிர்பார்த்த போது கை கொடுத்துச் சிறப்பித்தவர் "மாதவிப்பந்தல்" புகழ் என் அருமைச் சகோதரன் கே.ஆர்.எஸ் என்ற கண்ணபிரான் ரவிசங்கர். இன்று ஆகஸ்ட் 9 பிறந்த நாள் காணும் கே.ஆர்.எஸ் இற்கு என்னாலான பிறந்த நாட் பரிசாக இந்த இசைத் தொகுப்பை அவரின் பங்களிப்பையும் இணைத்துக் கொடுக்கும் அதே வேளை றேடியோஸ்பதியின் பின்னணி இசைத் தொகுப்புப் பணியில் இது புதுமையான முதல் முயற்சி என்ற மகிழ்வான தருணத்தையும் பதிவாக்குகின்றேன். எங்களோடு இணைந்து, இந்தப் பணியில் கே.ஆர்.எஸ் இற்கு அவ்வப்போது காட்சித் துண்டங்களை வழங்கிப் பதிவை எழுத உதவிய நண்பர் கூமுட்டையின் பணியும் இணைந்து எம் மூன்று பேரின் உழைப்பு இந்தப் பதிவில் இணைந்து சிறப்பிக்கின்றது.
பாடல் வரிகள் தான் முக்கியம்!
பின்னணி இசை = 'பின்'-அணி தான்!
ஆனால் அதையும் மீறி, பாடல் சாராத அழகிய BGM-களை MSV குடுத்திருக்காரு! காசே தான் கடவுளடா படத்தில், தேங்காய் சீனிவாசன் பணம் திருடப் போகும் அந்த திக்திக் காட்சிகளை மனத்தில் ஓட்டிப் பாருங்கள்! துள்ளலான அழகிய BGM!
* 'பின்னால்' இருந்த BGM-ஐ, 'முன்னால்' கொண்டு வந்து...
* தாளம் மட்டும் அல்லாமல், ராகத்தையும் கொண்டாந்து வைத்து...
* பியானோ முதல் புல்லாங்குழல் வரை...பல இசைக்கருவிகளையும் BGM-இல் நடை பயில விட்டு...
* 'பின்'-அணியை 'முன்'-அணி ஆக்கி...பல வர்ண ஜாலங்கள் காட்டத் துவங்கியது... = இ-ளை-ய-ரா-ஜா!
பாடல் காட்சிகளிலே வரிகளும் முன் வந்து நிற்பதால், இசை சற்று முன்னும் பின்னும் வாங்கும்!
ஆனால் படத்தின் சீன்களில்? = அது இசை-அமைப்பாளனின் ஆடுகளம்! BGM-இன் முழு வீச்சு இங்கே தான்!
அன்னக்கிளி படத்தில் தொடாத BGM-களை எல்லாம்...முள்ளும் மலரும் படத்தில் தரத் தொடங்கினார்...
அது அப்படியே சிகப்பு ரோஜாக்கள், உதிரிப் பூக்கள், ஜானி, ராஜ பார்வை, மூன்றாம் பிறை என விரிந்து...மெளன ராகம் என்னும் படத்தில் தலை விரித்து ஆடியது!
தொடர்ந்து இசைஞானி அள்ளி வழங்கிய "மெளன ராகம்" என்ற காவிய ரசத்தைப் பருகுவோம்.
மெளனராகம் முகப்பு இசை
படித்தில் வரப் போகும் சிலிர்ப்புகளை, டைட்டிலிலேயே சொல்லி விடும் இசை!
தமிழ்ப் பட டைட்டில் இசையில்...
இதை மட்டும் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கி விட்டார் ராஜா!
ஆரம்பத்தில் பியானோவில் மட்டுமே வலம் வரும் இசை...
உடனே சந்தோஷத் துள்ளலுக்கு மாறி...
சிறிது நேரத்தில் மீண்டும் மாறிச் சோகம் இசைக்க...
அத்தனை வயலின்களும் சேர்ந்து கொள்ள....டைட்டில் முடிந்து...வீட்டில் விடியற்காலை அலாரம் ஒலிக்கிறது! :)
படம் முழுதும் தூவித் தூவி வரும் இந்த மாய இசையைக் கேளாத காதுகளே இல்லை! ஒலிக்காத செல்பேசிகளே இல்லை!
ரேவதி தன் தங்கையோடு, அண்ணன் அண்ணியின் கொஞ்சலைச் சீண்டிப்பார்க்கும் குறும்புக் காட்சி
தன்னைப் பெண் பார்க்க வரும் மாலைவேளை அதைத் தவிர்க்க ரேவதி தன் நண்பிகளோடு மழையில் லூட்டி அடிக்கும் "ஓஹோ மேகம் வந்ததோ பாடலோடு"
காலம் கடந்து வீடு திரும்பும் ரேவதி மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்து போய் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் குஷியாக உள் நுழைய அங்கே அவர்களைக் காணும் அதிர்ச்சித் துளி இசையாக
ஓகோ மேகம் வந்ததோ...பாட்டு முடிஞ்சி...ஹைய்யா அம்மா-அப்பாவை ஏமாத்தியாச்சே-ன்னு வீட்டுக்கு வந்தா....மாப்பிள்ளை காத்துக் கிடக்காரு!
கையில் செருப்போடு, அவளும் நோக்கினாள்! அண்ணலும் நோக்கினான்! :)
அதிர்ச்சியில் சித்ரவீணை பேசுகிறது, மூன்றே நொடிகளுக்கு!
பெண் பார்க்க வரும் மோகன் - ரேவதி தனிமையில் சந்திக்கும் வேளை,2 நிமிடம் 10 செக்கன் ஓடும் காட்சியில் இடையில் வரும் உரையாடலையும் இணைத்திருக்கின்றேன் காட்சி, உரையாடலோடு வரும் இசை எவ்வளவு தூரம் இழைந்திருக்கின்றது என்று உணரக்கூடிய வகையில்
"அவரு உன் கிட்ட ஏதோ தனியாப் பேசணுமாம்" என்று சொன்னவுடன், பிடிக்கலீன்னாலும்...இன்ப அதிர்ச்சியா ஒரு வயசுப் பொண்ணுக்கு?
= ஒரே ஒரு ஒத்தை மிருதங்க ஒலி.....டங்ங்ங் ! BGM-ஐக் கேளுங்க! 'மெளனம்' என்பதைக் கூட இசையாக்க வல்ல 'தெறமை' ராஜாவுக்கே உரித்தானது!
அங்கே துவங்கிய மிருதங்க ஒலி, "உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"-ன்னு மோகன் சொல்லும் வரை, 1 beat, 2 beat, 3 beat-ன்னு வித்தை காட்டும்!
ரேவதியை மாப்பிளைக்கு பிடித்திருக்கு என்று குடும்பமே குதூகலத்தில் இருக்க, "எனக்குப் பிடிக்கல" என்றவாறே தன் எதிர்ப்பைக் காட்டும் காட்சியில்
தன் தந்தைக்கு Heart attack என்றறியும் போது வரும் காட்சியில் இழைந்தோடும் அதிர்ச்சியும், சோகமும் இசையில் தெறிக்க
ரேவதி, மோகனைக் கரம்பிடிக்கும் மணமேடை
முதல் இரவில் காதலோடு கணவன், தள்ளி நிற்கும் அவள்
கல்யாணம் முடிஞ்சி First Night Scene எனக்கு ரொம்பப் பிடிக்கும்! :)
முதலிரவுக்குப் பயப்படும் ரேவதி, கதவை மூடும் போது சோக வயலின்...
அதுவே மெல்லீசா இன்ப இசையா மாறி...
மோகன் லுக்கு விடும் போது, சக் சக் சக் சக்-ன்னு ஒரு கிக் இசையாகி.....தீண்டும் இன்பம்!!
டெல்லிக்கு வரும் தம்பதிகள், மோகன் ஆசையாகத் தன் வீட்டைச் சுற்றிக் காட்ட, ரேவதி காட்டும் அசட்டை
மோகன், ரேவதி மனம் விட்டுப் பேசும் காட்சி
தன் மனைவிக்கு ஆசையாக முதல் பரிசு வாங்கித் தரக் கணவன் கடைவீதியில், "இந்தக் கடையில் விவாகரத்து வாங்கிக்கொடுக்க முடியுமா" என்று கேட்கும் அவள், "நிலாவே வா செல்லாதே வா" பாடலோடு
"என் இதயத்தில உங்களைக் கணவரா ஏத்துக்க முடியல" படத்தின் மூல இசை அப்படியே அடித்துப் போட்டவன் மெல்ல எழுந்து நகர்ந்து வருவது போல மெதுவாகப் பயணிக்க
"நீங்க தொட்டா கம்பளிப்பூச்சியைத் தொட்டமாதிரி"தபேலாவின் அதிர்வோடு
இதற்கு என்ன எழுத முடியும்? நீங்களே கேளுங்கள்!
தபேலா மட்டும் துடிதுடிக்க...இறுதியில் சுரத்தே இல்லாத மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும்...மென் உணர்வுகள்!!!
கார்த்திக் அறிமுகமாகும் காட்சி ஆர்ப்பரிக்கும் இசைக்கூட்டணியோடு
ஒரு மனிதனின் குணத்துக்கு BGM போட முடியுமா? - Karthik Entry!
* கார்த்திக் = துள்ளல்
* ரேவதி = தில்லு
* மோகன் = மென்மை
படத்தில் இது வரை வராத Trumpet முதல் முறையா முழங்க...
சண்டைக் காட்சியிலும் டிஷ்யூம் டிஷ்யூம் சத்தம் மெல்லிதாகவே கேட்க...
கார்த்திக்கின் துள்ளல் இசையே, முழுசும் ஆக்ரமிப்பு!
எம்.பி மகனைத் தாக்கிய குற்றவாளி ஆள் அடையாள அணிவகுப்பில் கார்த்திக்கைக் காட்ட ரேவதி முன் வருகையில்
போலீஸ் அடி வாங்கி தள்ளாடி வரும் கார்த்திக், மூல இசை சோகராகமாகி பின்னர் குதூகலித்துப் பயணிக்கிறது
பெயிலில் எடுக்கும் போது....
நொண்டும் கார்த்திக்கின் சோக டைட்டில் இசையே,
கண்ணடிக்கும் கார்த்திக்கின் துள்ளல் டைட்டில் இசையாக மாறி...
ரேவதியை கல்லூரியில் சந்திக்கும் கார்த்திக் தன் காதலைப் பகிரும் காட்சி
பஸ்டாண்டில் மீண்டும் சந்திக்கும் ரேவதி கார்த்திக்
coffee shop இல் காதலால் சீண்டிப்பார்க்கும் கார்த்திக்
தன் தந்தையைக் குறும்பு செய்த கார்த்திக் இன் சேஷ்டையைப் பார்த்து மனம் விட்டுச் சிரிக்கும் ரேவதி, கூடவே கார்த்திக் உம் இணைந்து கொள்ள சந்தோஷ மழையில் இசையும் கூட
கல்லூரி லைப்ரரியில் கார்த்திக் ரேவதி சந்திக்கும் காட்சி, கூடவே ஒலிபெருக்கி மூலம் ஊரைக்கூட்டிச் சொல்லும் காதலோடு இணைகிறார்கள் மனதால் ஒருமித்து. இசைத்துண்டத்தின் இறுதித் துளிகளில் படத்தின் மூல இசை இன்னொரு பரிமாணத்தில்
தன் போராளிக்குணத்தைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொட்டும் மழையில் ரேவதியைச் சந்திக்கும் காட்சியில் கல்யாணத்துக்கு நேரம் குறிக்கையில்
கல்யாண நாளன்று போலீஸ் துரத்தலில் கார்த்திக், கார்த்திக் இன் இறுதி நிமிடங்கள்
கார்த்திக் ஜீப்பில் இருந்து குதிக்கும் போது, வயலினும் குதிக்கிறது! வயலினும் ரோட்டில் ஓடுகிறது!
அதுவே டைட்டில் BGM-ஆக மாறி...திவ்யா...ஆவி அடங்குகிறது! காதல் அடங்குகிறதா?
மோகன் ரேவதிக்கு ஆசையாகக் கொடுக்கும் பரிசு
விவாக ரத்துப் பத்திரமும், கொலுசும் = ஷெனாயில் துவங்கி, மாங்கல்யம் தந்துனானே!
பூஜா கா குங்கும் ஹை! சிந்தூர் லகாதோ - என்று அலுவலகப் பெண் வாழ்த்த, எல்லாரும் வாழ்த்த.....
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல! நாடகம் ஆனதும் விலகிச் செல்ல...
ரேவதி மோகனுக்காக ஆசையாகச் சமைத்துவிட்டுக் காத்திருக்க, வேலையில் இருந்து தாமதமாக வரும் மோகன் அதற்காக வருந்தும் காட்சியின் பின்னணி இசை
டெல்லி சுற்றிப்பார்க்க ரெடி
விவாகரத்து தம்பதிகள் தாஜ் மகாலைக் காணும் திடீர்க் காட்சி.....பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
ஒரு பெண்ணின் அலை பாயும் குரல்.....ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(
முதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்......அது இசையில் வரவில்லையோ???
விபத்தில் சிக்கிய மோகனை, மருத்துவமனையில்..."என் புருசன்" என்று தாலி தூக்கிக் காட்டும் காட்சி...ஷெனாய் ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள்!
ஷெனாய் ஒலிக்க, தம்பூராவைச் சுண்டும் ஒரே ஒலி ஊடாடும் அழகு!
முப்பது நாள் கடந்து முதன்முதலில் காதலோடு தன் கணவனைப் பார்க்கையில் "சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா"
மோகன் வீட்டில் மேற்கத்திய இசை கேக்கறாரோ? = Violin Ensemble Orchestra!
Wow! ரேவதி கொலுசு சத்தம் போடாமல் குதிகாலில் காதல் சொல்லி வர...
ஆனால்.....மோகனோ எரிஞ்சு விழ...ரேவதியின் காதல் கண்ணீரில் துளிர்க்கிறது!
மோகன் பொட்டு வைத்து விட, காலிங் பெல் அடிக்க, சென்னைக்கு டிக்கெட் வர...அதே டைட்டில் இசை...ஆனால் வேறு சாயலில்!
தில்லியை விட்டுப் போகும் போது, தில்லிக்கு வந்த அதே இசை!
ரேவதியின் பேச்சே ஒரு இசை தானோ? = "உங்களுக்கு பிடிச்சிருக்கு! ஒத்துக்கத் தான் மனசில்ல! ஆனா நான் ஒத்துக்கறேன்! வெட்கத்தை விட்டு ஒத்துக்கறேன்!"
வயலின்கள் அரசாங்கம் - புகைவண்டியின் கூக்குரல் - தபேலாவின் தவிப்பு - மோகன் ஓட்டம் - ரேவதி ஓட்டம் - அதே டைட்டில் BGM!
= அது தான் மெளனத்தின் ராகம் = ராஜாவின் ராகம் = மெளன ராகம்!
BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!
தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்...
அதே சமயம், தம்பதிகள் பேச வேண்டிய இடத்தில் எல்லாம், இசை மட்டுமே பேச, இந்தத் தம்பதிகள் பேசிக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்க வைக்கும் இசை!
Mute-ல்ல போட்டு, BGM இல்லாம, மெளன ராகம் கடைசிச் சீனை, சும்மா ஒருக்கா பாருங்க...
இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!
மனித உணர்வுகளை இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!
அதுவும் ஒரே டைட்டில் இசையை, பல அவதாரங்களில் ஓட விடும் மாயம்!
ஏ, மாயக் காரனே, வித்தைக் காரனே,
ஒலிக்கு அடிமையாக்கும் மகா பாவியே....
இசை லோகத்தில் இருக்கும் இளைய-ராஜாவே......உனக்கு ஸ்தோத்திரம்! மெளன ராக ஸ்தோத்திரம்!!
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
மச்சி, உன்னோட உழைப்புக்கு வந்தனங்கள். பதிவை படிச்சுட்டு வந்துறேன்.
அற்புதமான உழைப்புடன் கூடிய பதிவு. கானா பிரபாவிற்கு பாராட்டும் வாழ்த்தும்.
இடுகைக்குக் கடசீல இதுகளை மொத்தமா ஒரு zip ஃபைலா போட்டீங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்.
தல & தலயுடன் இணைந்து கூமுட்டை அட்டகாசம் பண்ணியிருக்கும் படைப்பு ;-) மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-) நன்றியும் ;)
\\அந்த நாளில் சுஹாசினியைக் கைப்பிடிக்காதது வேளை என்பதும் எமக்கு ஒரு பாக்கியம்.\\
தல உண்மையோ உண்மை....அப்படியே வழிமொழிகிறேன் ;))
\\ஒரு பெண்ணின் அலை பாயும் குரல்.....ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(
முதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்......அது இசையில் வரவில்லையோ??? \\
தாஸ் மகாலின் கம்பீரம் இசையில் வரவில்லை என்பதை விட முதல் முதலில் தாஸ் மகாலை பார்க்கும் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பாருங்கள். காட்சிக்கு மிக நெருக்கமான இசையாக இருக்கும்.
\\வயலின்கள் அரசாங்கம் - புகைவண்டியின் கூக்குரல் - தபேலாவின் தவிப்பு - மோகன் ஓட்டம் - ரேவதி ஓட்டம் - அதே டைட்டில் BGM!
= அது தான் மெளனத்தின் ராகம் = ராஜாவின் ராகம் = மெளன ராகம்! \\
செம செம...இந்த இசையும் அந்த தாஸ் மகாலின் இசையும் எனக்கு ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆ படித்தமான இசைகள் ;-))
\\ஏ, மாயக் காரனே, வித்தைக் காரனே,
ஒலிக்கு அடிமையாக்கும் மகா பாவியே....
இசை லோகத்தில் இருக்கும் இளைய-ராஜாவே......உனக்கு ஸ்தோத்திரம்! மெளன ராக ஸ்தோத்திரம்!!
\\\
என்றும் எப்போதும் இசை தெய்வத்துக்கு ஸ்தோத்திரங்கள் ;-)
நன்றி...வேறு என்ன சொல்ல.. இதுகூட ஒரு வகை மௌனராகம் :)
எஸ்.பி பியின் ”மன்றம் வந்த தென்றல்” ஆலாபனையில் தொலைத்த இதயத்தை இன்றும் மீட்க முடியவில்லை..
Kudos to your awesome work, thanks a ton :-)
கே.ஆர்.எஸ் இற்கு belated birthday wishes.
Excellent blog-post Prabha. Salutes :)
தல வெகு நாட்களாகவே உங்களிடிடம் இருந்து நான் எதிர்பார்த்த படம்.
நன்றி உமக்கு.வேறு ஏன்ன
சொல்ல முடியும்?
அற்புதமான பதிவு..
இசையை கேட்டுக்கொண்டு போகும்போதே படத்தைப்பார்த்துச்செல்வது போல இருந்தது.... கதாபாத்திரங்களை இசை மூலம் கண்முன் கொண்டு வந்ததிற்கு நன்றிகள்... முயற்சிக்கு பாரட்டுக்கள்...
Dear Gaana Prabha, KRS & Koomuttai,
Thanks God - you placed me out of
country.
I had the oppurtunity, to read
every line, hear every BGM bit by
bit, do fwd, reverse, replay - I
did what I wanted. No disturbances. 100% peace.
I felt, I am in the year 1986..
May be in Prasad Studios or in AVM
Studios..
Somewhere I am located in a room.. as a spectator..
And I am silent, awstruck.. Just
mesmerized.
I see Maestro in front of me,
violins, flute, keyboard - all flowing to Maestro's notes...
Your 1 post transformed me to go
back to 25 years of my own life.
Thanks Gentlemen - you have done
a superb job.. Full kudos to your
fantastic work.
Sudharsan
அற்புதம் அண்ணே, எவ்வளவு கவனத்துடன், செதுக்கி இருக்குறீர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள், இது போன்ற பதிவுகளை பார்க்கும் போதுதான், இன்னும் வித்திசாயம் வித்தியாசமாக் ஏதாவது செய்யணும் என்ற எண்ணம் வருகிறது அண்ணே.
தம்பி பிரபா -இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்.
இந்தப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இனி பார்க்கத்துடிப்பார்கள், ஏற்கனவே பார்த்தவர்கள் இன்னும் ஒரு முறை பார்க்க நினைப்பார்கள். அந்த அளவு மென்மையான உணர்வுகளை தூண்டி விடுகிறது உங்கள் பதிவு..
பதிவு கலக்கல்.நமது ஜனனங்களுக்கு முன்னால் உள்ள பின்னணி இசையை தொகுத்து வளங்கியமைக்கு நன்றிகள். பாடல்களை விட பின்னணி இசையையே அதிகம் ரசிக்கிறேன்
மௌன ராகத்தில் கண்கள் மூடி பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.என் மனதிற்கினிய எண்பதுகளின் நாயகி இருவர் ஒன்று ரேவதி மற்றொருவர் நதியா .குறும்புகள் கொப்பொளிக்கும் பெண்கள்.இதில் ரேவதி இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.ஏதோ வீட்டிற்குள் ஒரு பெண் துறு துறு வென நடமாடுவதுபோன்ற வெகு இயல்பான தோற்றம்.இந்த படம் மணிரத்னத்தின் படைப்புகளில் ஆகச் சிறந்தது என்பேன்.ரேவதியை பார்க்கும் பொழுது கூட எவரோ ஒருவரைபார்க்கிறோம் என்ற எண்ணம் வராமல் நம்மில் ஒருவராக ஏன் அந்த பெண்ணின் ஒரு சில இயல்புகளும் நம்முள்ளே இருப்பதை உணர வைத்த அதி அற்புதமான படம்.தேர்ந்தெடுத்து போட்டிருக்கிறீர்கள் ஒவ்வொரு படங்களும்.ஒருவரியில் சொல்லிடலாம் படத்தோட கதையை.ஆனா அதை சொல்லி இருக்கும் விதமும் அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்களும் அதற்கான இசையும் ஒரு அற்புதமான படைப்பாக காலத்தால் அழியாத காதலாக மனதில் நீங்கா இடம் பெற்ற திரைப்படமாகிவிட்டது.நல்ல கதையம்சமுள்ள படங்களும் இளையராஜா இசையும் இரட்டைக் கிளவி போல இணைந்திருந்தால் மட்டுமே அழகு.உள்ளே நுழைந்த தருணத்திலேயே மௌன ராகத்தில் பயணிக்கத் தொடங்கி விட்டேன்.மனதிற்கு பிடித்த விசயங்களை அப்படியே உள்வாங்கிவிட்டு செல்வது ஒரு சுகம் என்றால் அதை இப்படி நம்மைப்போல் உணர்பவர்களிடம் பகிர்வது பல மடங்கு சுகம்.பிடித்து விட்டால் பக்கம் பக்கமாக கண்களில் உற்சாகம் தெறிக்க பேசியே ஆக வேண்டும் எனக்கு.எனக்கு அந்த இடம் பிடிச்சிருந்தது உனக்கு அதே போல எனக்கும் அதை ஒருவருக்கொருவர் பகிரும் பொழுது அதன் அழகை பரிபூரணமாக உணர முடிகின்றது.அப்படி ஒரு உணர்தலில் ஆத்ம திருப்தியை அளித்து விட்டீர்கள் இன்று.உங்கள் மூவருக்கும் மனமா ஆஆ ஆ ஆ ஆ ஆ...ர்ந்த பாராட்டுக்கள்.
அழகான புகைப்படத் தொகுப்புகள்.மூன்றே மூன்று பேரை வைத்துப் படம் ஓட்டிவிட முடியுமா? ஓட்டியிருக்கிறார்கள்.அருமையான இசைக் கோர்வைகள்.காட்சிகளையே வைத்திருந்தால் என்ன உணர்வு ஏற்பட்டிருக்குமோ அதை அப்படியே தந்து சிலிர்ப்பூட்டி இருக்கின்றீர்கள்.டைட்டில் இசையில் வருமே ஒரு மாதிரியாக குறும்புத் தனத்தோடு வரும் துள்ளல் இசை மறக்கவே முடியாத ஒன்று(கார்த்திக்கிடம் ஐயம் சாரி என்று ரேவதி சொன்னதும் வருமே ..).கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் கூட இது இந்தக் காட்சி என்று சொல்லி விடலாம்.அவ்வளவு உயிரோட்டம்.கார்த்திக் ஹா......அந்த கார்த்திக் இன்று வரை மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றார்.அதிகம் ரசித்த குறும்புத்தனம்.இன்றளவும் சரி இவரை விட காதல்காட்சிகள் சிறப்பாக நடித்த நாயகன் இருக்கவே முடியாது (என்னைப் பொறுத்தவரை)பக்கா ரொமான்ஸ்.அந்த சந்திர மௌலி குறும்பிற்கு ஈடு இணையே கிடையாது.சட்டென்று தண்ணீரை ரேவதி முகத்தில் ஊற்றிவிட்டாலும் பின்னர் ரசித்து சிரிப்பார்.அந்த காட்சியை இங்கே போட்டோவா போட்டு புண்ணியம் தேடிக்கிட்டீங்க :)) மெலிதாக உள்ளே நுழைந்த காதல் அதை முழுமையாக அனுபவிக்கும் முன்பே இழந்துவிட்ட அதிர்ச்சி வேறு ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை பின்னாளில் ஆர்ப்பாட்டமின்றி அழுத்தமாக மனதில் பதியும் கணவன் அத்தனை உணர்வுகளை வெகு இயல்பாக யதார்த்தமாக உணர வைத்த ரேவதி..பொக்கிஷம்.திரும்ப படம் பார்த்த அனுபவம் கிட்டியது இன்று.எப்படியும் முழு படத்தையும் மறுபடி ஆயிரத்து எட்டாவது முறையும் புதிதாக பார்ப்பது போல பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறியைத் தூண்டி விட்டது இந்த பதிவு.நிலாவே வா பாடலில் கண்ணாடியில் நிலவும் கருப்பு சேலையில் ரேவதியும் தெரிய கைகட்டி மோகன் பாடும் காட்சியையும் இங்கே படமாக வைத்திருந்தால் வெகு சிறப்பு.எக்கச்சக்கமா மேக் அப் போட்டு பொருந்தாத குட்டைப் பாவாடையில் கல்லூரி வரும் இன்றைய கதாநாயகியைக் காட்டிலும் எக்காலத்திலும் பொருந்தும் வண்ணம் மிக இயல்பாக நலுங்கிய தலைமுடி மெலிதான கண்மை ரசயனையான புன்னகை இயல்பான உடை என்று அசத்தலான புகைப்படம் போட்டதற்கு ஒரு சபாஷ்.மௌன ராகம் இதயத் தாமரை கார்த்திக் பாதிப்பில்லாமல் இன்று வேறு எவரும் குறும்புத்தனம் கொண்ட காதலனாக வரவே இயலாது.கார்த்திக் திவ்யா என்று அழைக்கும் பி ஜி எம் இப்பொழுது கேட்டாலும் உடனே மனம் பதறியே போனது.மனதிற்கு மிக நெருக்கமானவரை இழந்தது போல (திவ்யாவுக்கு எப்படி இருந்திருக்கும் இதை நேர்ல பார்த்தப்போ)..எந்த எந்த காட்சிகள் அதிகமாக மனதில் அழுத்தமா பதிஞ்சதோ அந்த இடத்தில் எல்லாம் ராஜாவின் ராஜாங்கத்தை தனித் தனியே பிரித்து எடுத்து அருளியதற்கு நன்றியோ நன்றி.பெண் அவ்வளவு சீக்கிரம் தான் காதலிப்பதை ஒத்துக் கொள்ள மாட்டாள்.அவளே ஒத்துக் கொண்ட பொழுது வந்த இசையும் அந்த இறுதிக் காட்சி இசையும் அட்டகாசம்.இசைக் கடவுள் என்பதில் ஒரு சிறு மாற்றுக் கருத்து கூட இல்லை எனக்கு.
நேற்றில் இருந்து மௌன ராகம் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்ற ட்வீட் படிச்சதில் இருந்தே எப்போ எப்போ என்று உள்ளே ஒரு கூக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.துளியும் ஏமாற்றாமல் மோசமான மனநிலையில் ஆரம்பித்த இன்றைய பொழுதை இனிமையாக்கி விட்டீர்கள். நல்ல்ல்லல்ல்ல்ல்ல்லா இருங்க சாமிங்களா ..:))
suuppperr...........
உடம்பு எல்லாம் சிலுத்துபோச்சி
1 நாள் குழந்தைக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)
மிக அருமையானதொரு பதிவு.. அபாரமான உழைப்பு.. இதை சாத்தியமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகளும்,நன்றியும். பதிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் அசத்தல்.. படம் பார்த்த போது ஏற்பட்ட திருப்தியையும்,இனிமையையும் தருகிறது.. நன்றி
வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......
NALLA ULAIPPU... PARATTUKKAL
Excellent work. I am die hard fan of ilayaraja. It is pleasure to view/here your collections about Ilayaraja.
Great work sir.. I didnt expect that a film music composition will work wonder. You proved this. Ilaiyaraaja if sees this will proud of you. Hats off to you and Kuumuttai.
@anandraaj04
ரேவதி குரலே ஒரு கீதம் தான்..கார்த்திக்" நாலு மணி 4o clock", சொல்றப்போ,ரேவதி " இல்லைன்னு " சொல்வாங்களே அது என்ன ராகம்..
இதோ 3 மணி நேரம் மௌன ராகத்துடன் இணைந்திருக்கிறேன் ..இன்னும் தொடரக்கூடும் /நானும் நன்றி சொல்லனுமா என்ன?
வெள்ளி விழா ஆண்டில் தங்கமான பதிவு!
கா.பி அண்ணாச்சிக்கு என் இதய நன்றிகள் பல!
மாதவிப் பந்தலில் பதிவு எழுதுவதை நான் நிறுத்திய தனிமையான காலக்கட்டத்திலும், வாசிப்பதை நிறுத்தாத ஒரே வலைப்பூ = றேடியோஸ்பதி! இசை என்பதினால்...
றேடியோஸ்பதியில் முன்னொரு முறை, நேயர் விருப்பப் பதிவாக, எனக்குப் பிடிச்ச அஞ்சு பாட்டைத் தொகுத்துக் குடுத்ததோடு சரி...
ஆனால்...இப்படியொரு மெளன ராகத்தை அரங்கேற்றுவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை!
எதிர்பாராமல் எதிர்கொண்ட மெளனராகம்!
உன் நினைவுகளில் எப்போதும் இந்த ராகம் ஒலிக்கும்!
- இப்படிக்கு,
றேடியோஸ்பதியின் பல நாள் வாசகன்
// கோபிநாத் said...
1 நாள் குழந்தைக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)//
ஹா ஹா ஹா
யாரு கோபி, இந்த ஒரு நாள் கொழந்தை?:)
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
கா.பி-க்கு நான் நன்றி-ன்னு வார்த்தையாச் சொல்லிப் பழக்கமில்லை!
ஆனா குடுத்த பரிசை மட்டும் பத்திரமா எனக்குள்ளாறப் பூட்டி வச்சிப்பேன்!:)
அற்புதமான பகிர்வு நன்றி.
Indha "Mouna Raagaththai" "saptham" pottu iNaiya thaLaththil pathiya vaiththamaikku mikka nandRi.
Vivek
hi!naan ungal blog-ku pudhiyavan.rajavin rasigan.'a..mayakarane..vithaikarane..oliku adimaiyakidum maga paaviye..'kanula thanni vanthudichinga.anthal maga raatchasanthan.valatum noorandu.miga kadumayana ,rasanaiyana ulaipu.valthukal.ini naan ungalukum rasikan.
I wish someone should send this link to Maniratnam.
கலக்கல் இதைத்தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை
இதை விட சிறப்பா யாராலையும் சொல்ல முடியாது. வாழ்த்துக்கள். நன்றி.
செல்வா..
மும்பை.
பாஸ் சூப்பர் தொகுப்பு,
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆச்சே. என் பிள்ளைகளுக்கும் இந்தப் படமும் பாடலும் பிடிக்கும். :))
அற்புதம் நண்பரே... மௌனராகத்தின் பெரும்பாலான பி.ஜி.எம்.. ஒரே இடத்தில் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் நாங்கள். அத்தனையும் அருமை....
இத்தனை சுவாரசியமான பகிர்வைத் தந்த தங்களுக்கு எனது நன்றி.
//இன்று திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்ற படைப்பாளிகளுக்கும் //
நல்ல வரிகள் ...
This is my first time to your blog...astounded by the amount of work you have put in...simply awesome...is it possible to download the tracks from your post???
அனைவரது அன்பிற்கும் நன்றி... முழு பாராட்டும் கானபிரபாவிற்கும் கே.ஆர்.எஸ் ற்கும் உரித்தானவை... ;-)
பதிவில் உள்ள விடியோக்களை கீழே உள்ள லின்க்களிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.mediafire.com/?xpbksv5ir470v
http://www.4shared.com/folder/TShPB_w1/Video.html
belated wishes KRS! பதிவை வாசிக்க நேரமின்றி ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறேன் விரைவில் முழுக்க படித்துப்பின்னூட்டம் இடுகிறேன்! கானாப்ரபாவின் உழைப்பில் மலர்ந்திருக்கும் பதிவை உணர்ந்து வாசிக்கவேண்டும்.
கானா,
மெளன ராகம் "அந்த 7 நாட்கள்" படத்தின் அப்பட்டமான காப்பி ஆச்சே?
ராஜா இல்லை என்றால்...............(கோடிட்ட இடங்களை நிரப்புக)
\\ஒரு பெண்ணின் அலை பாயும் குரல்.....ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(
முதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்......அது இசையில் வரவில்லையோ??? \\
நல்ல பதிவு! ஆனால் தாஜ் மஹால் மும்தாஜ் வாழ்ந்த வீடில்லை, கம்பீரம் காட்ட. அது சோகம் இழையோடும் (ஷாஜஹானின்) காதல் சமாதி. அதற்கு எவ்வாறு ஒரு துள்ளல் இசை வரும் ? கதை களத்தையும் கொஞ்சம் கவனியுங்கள்!
அருமை அருமை.. அப்படியே இதே கூட்டணியின் இதயத்தை திருடாதே யின் பின்னணியையும் பிரித்து போடுங்கள்..., அதனை அருமையாக இருக்கும். மறக்காமல் ரோஹினியின் குரலுக்கு ஒரு சொட்டு கொடுங்க.. கிரீடமே வெக்கலாம் . அப்படி ரோகினி கிரிஜா வுக்கு பின்னணி குரல் தந்து இருப்பார்.
உலக சாதனைப் பாடகன் பாடும் நிலா எஸ்.பி.பி.யின் நிலாவே வா ...... மயக்கும் குரலில் எப்போ தொலைந்தன இதயம் . மன்றம் வந்த ......பாடலில் இளையராஜா +எஸ்.பி.பி. - கூட்டணி ஒரு சாதனை மறக்க முடியாத பாடல் - காலத்தை வென்ற பாடல்கள் -என்றும் இனியவை
superb ..... amazing feed back.....i enjoyed to read abt
one of my fvt film ....
one small request to you plz add (if you like ) it in your feed back
"that clock sound (BGM....tik.... tik.... tik .....) after Ravethy flashback scene.... ... with out dialogue (1.08.15 to 1.08.35) and with dialogue 1.08.36 to 1.09.05 )
tik tik tik BGM .....really amazing .... every single "tik" sound hit heart like hammer...
only ilayaraja sir can do it like this...using simple sound touch soul...
i think this few BGM is call MOUNARAGAM....)
with your permission....shall i share in my FB
Post a Comment