Pages

Wednesday, April 27, 2011

சிந்துபைரவி இசைத்தொகுப்பு


"சிந்து பைரவி" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா என்ற அலை வந்தபோதும் பல்லாண்டுகாலமாக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை அல்லது கிட்டவில்லை. ஆனால் இந்த இரு இமயங்களும் இணைந்த படங்களிலேயே "சிந்து பைரவி" உச்சமாக அமைந்து விட்டது. சங்கராபரணம் அளவுக்கு எங்களாலும் கொடுக்க முடியும் என்று தமிழ்த்திரையுலகம் சிந்து பாடிய படம் இது.







1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் ஜே.கே.பி என்ற சங்கீதவித்துவான், சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பைரவி என்னும் மனைவி, சங்கீதத்தை தெய்வமாகப் பூஜிக்கும் சிந்து என்ற நண்பி இந்த மூன்று புள்ளிகளை இணைத்துப் பின்னப்பட்ட கதைக்களம் சிந்துபைரவி.
ஜே.கே.பி என்ற சங்கீத வித்துவானாகவும் பின்னர் அவர் தரம் தாழ்ந்து போகும் போதும் சிறப்பானதொரு குணச்சித்திர நடிப்பை வழங்கிய சிவகுமார், பைரவி என்னும் சுலக்க்ஷணாவுக்கு இது போல் ஒரு பாத்திரம் இதற்கு முன்னும் பின்னும் கிட்டாத ஒரு வாய்ப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுஹாசினி என்ற நடிகையின் முழுமையான நடிப்பின் பரிமாணத்தைக் காட்டித் தேசிய விருதைக் கொடுத்துக் கெளரவித்தும் ஆயிற்று. கூடவே வந்து சென்ற குணச்சித்திரங்கள் மிருதங்க வித்துவான் குருமூர்த்தி - டெல்லி கணேஷ், தம்புரா - ஜனகராஜ், ஜட்ஜ் ஐயா - ராகவேந்திரர் என்று ஒவ்வொரு பாத்திரமும் பட்டை தீட்டி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படத்தில்.


கவிஞர் வைரமுத்துவின் பாடல்களோடு, மகாகவி சுப்ரமணியபாரதியார் பாடல்களும் தெலுங்குக் கீர்த்தனைகளுமாக ராஜபாட்டையோடு இருக்கும் இந்தப் படம் இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டாவது தேசிய விருதைக் கொடுத்து விருதுக்குப் பெருமை தேடிக் கொண்டது. பட்டமா, பாட்டா என்று மனதில் பட்டிமன்றம் போட்ட அந்தச் சின்னக்குயில் சித்ராவுக்கு சிறந்த பாட்டுக்குயில் என்று தேசிய விருதுப்பட்டம் கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

படத்தின் பின்னணி இசைப் பிரிப்புக்கு வழக்கம் போல எனக்கு இரண்டு நாட்கள் மொத்தமாக ஆறரை மணி நேரம் தேவைப்பட்டதென்றால் இதுபோன்ற நூறாயிரம் இசையைத் தன்னுள்ளே தேக்கிவைத்த இசைஞானியின் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்பதால் அவர் மீட்டிய வாத்தியத்தால் சொல்ல விழைகிறேன். சிந்து பைரவி படம் வந்து 26 ஆண்டுகள் மிதக்கும் இவ்வேளை இப்படத்தில் இருந்து மொத்தம் 25 இசைக்குளிகைகளைத் தருகின்றேன். அனுபவியுங்கள்.



படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும்"ஆதித்ய ஹிருதயம் புண்யம் சர்வசத்து விநாசனம்" பாடலை நாயகன் ஜே.கே.பிக்கு குரல் வடிவம் கொடுக்கிறார் கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் முடிவில் இனியதொரு வீணையிசை மீட்போடு நிறைவுறுகிறது



மிருதங்கவித்துவான் குருமூர்த்தி (டெல்லி கணேஷ்) மது அருந்திவிட்டு வந்திருக்கிறார் என்றுணர்ந்து அவரை கச்சேரியில் வாசிக்கவிடாமல் தடுத்து மிருதங்க இசை இல்லாமலேயே "மகா கணபதிம்" பாடும் பாடும் ஜே.கே.பி



"மரிமரி நின்னே" பாடலைப் பாடும் ஜே.கே.பி, சிந்து அறிமுகமாகிறாள்



சிந்து, ஜே.கே.பியிடம் மக்களைச் சென்றைடையும் பாடல் வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்று வாதாடி கூடவே "பாடறியேன் படிப்பறியேன்" பாடலைப் பாடி நிறைவில் "மரிமரி நின்னே" ஆக நிறைவாக்கிக் கைதட்டல் பெறும் காட்சி. பாடலின் ஆரம்பத்தில் சிந்துவுக்கு ஒத்துழைக்காத பக்கவாத்தியம் மெல்ல மெல்ல இணைகின்றது



ஜட்ஜ் ஐயா (ராகவேந்திரர்) ஆரபி ராகம் என்று தேவகாந்தாரி ராகத்தை ஆலாபனை செய்து தனது கார்ச்சாரதியிடம் (கவிதாலயா கிருஷ்ணன்) வாதிட்டு, விளக்கம் கேட்டு ஜே.கே.பியிடம் செல்லும் சுவாரஸ்யமான காட்சி. கூடவே இந்த நீதிபதி பாத்திரம் எவ்வளவு தூரம் சங்கீதம் மீது நாட்டம் கொண்டவர் என்பதைக் காட்டப் பயன்படுகிறது



சிந்து கொடுத்த பாரதியார் கவிதைகளை கடற்கரைப் பாறையில் அமர்ந்து "மனதில் உறுதி வேண்டும்" பாடலைப் பாடி ரசிக்கும் ஜே.கே.பிக்கு பாமர மீனவன் சங்கு மாலை கொடுக்கும் நெகிழ்ச்சியான காட்சி. அந்தக் காட்சியில் இழையோடும் வயலின் இசை ஜே.கே.பி என்ற கலைஞனை எப்படி நெகிழவைத்திருக்கின்றது என்பதை மனக்கண்ணில் கொண்டு வரும்.



மீனவன் கொடுத்த சங்குமாலையைப் பற்றி ஜே.கே.பி தன் மனைவி பைரவியிடமும், நண்பி சிந்துவிடமும் சொல்லும் போது அவர்கள் இருவருக்கும் உள்ள முரண்பட்ட பார்வையைக் காட்டுதல். காட்சி ஆரம்பத்தில் ஒலிக்கும் இசை தான் சிந்து பைரவியின் அடி நாதமாகப் படம் முழுதும் விரவியிருக்கும் இசையின் ஒரு பகுதி



பைரவிடம் சிந்து "உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு உங்க புருஷனை அபேஸ் பண்ணிக்கொண்டு போகலாமான்னு பார்க்கிறேன்" என்னும் போது பைரவிக்கு எழும் கோப அலைகள் வயலினின் இழை வழியே



ஜே.கே.பி முன் சிந்து ஆலாபனை இசைக்க கூடவே இணையும் ஜே.கே.பியும் சேர்ந்து நிறைவாக்கும் ராகமஞ்சரி ராகம்



ஜட்ஜின் மனைவி தான் தன் தாய் என்று கண்டுணரும் சிந்து, பின்னே ஒலிக்கும் இசையில் அவள் உணர்வைப் பகிர



ஜட்ஜ் வீட்டில் சிந்து பாடும் "நானொரு சிந்து காவடிச்சிந்து" பாடல் , பின்னணிக்குரல் கே.எஸ்.சித்ரா



வேற்றுமொழிக்கீர்த்தனைகளை தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்று சொல்லி ஜே.கே.பி "நீ தயராதா" என்று பாட சிந்து இந்தப் பாடலை ஏற்கனவே தமிழில் மொழிபெயர்த்ததாகச் சொல்லி "உன் தயவில்லையா" என்று அந்தப் பாடலை முழுமையாகத் தமிழில் பாடுகிறாள்



பாடலைக் கேட்டு ஜே.கே.பி "உன்னுடைய இசைக்கு அடிமையாகிவிட்டேன்" என்று சொல்லி சிந்துவின் கையில் தன் கல்யாண மோதிரத்தை அணிவிக்கப் படத்தின் மூல இசை புல்லாங்குழலில் துள்ளுகிறது



ஜே.கே.பி மெல்ல மெல்லத் தன் வயத்தை சிந்து மீது கொடுக்கும் தர்ம அவஸ்தையில் பெண்குரல்களின் ஆர்ப்பரிப்போடு ஒலிக்கும் பின்னணி இசையோடு "மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்" பாடல் இணைகிறது



ஜட்ஜ் "நானொரு சிந்து காவடிச்சிந்து" பாடலைத் தாளம் தட்டிப் பாடிவிட்டு "கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் என்னிடம்" பாடலை கமல், ரஜினி, சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்றோருக்குப் பாடுவதாகக் கற்பனை செய்து பாடும் சுவாரஸ்யக் காட்சி



ஜே.கே.பி தமிழிசைப்பாடல்களை வெளிக்கொணரும் காட்சியியில் பின்னணி ஆண்குரல்களோடு ராஜாவின் குரலிசையும்



சிந்துவின் மனதில் ஜே.கே.பி இப்போது காதலனாக மாறும் தருணம் புல்லாங்குழல் அவள் மனதின் தூதுவனாக



சிந்து தன் உள்ளக்கிடக்கையை ஜே.கே.பியிடம் சொல்லி இணையும் வேளை தத்தளிக்கும் மனவுணர்வை மிருதங்க இசையில் ஆரம்பித்து மெல்ல மெல்ல இரு மனமும் சேரும் போது ஒத்துழைக்கும் இசை ஆர்ப்பரிப்பு. படத்தின் உச்சபட்ச பின்னணி இசை இதுதான்



ஜே.கே.பி பாடும் "ஆனந்த நடனமாடினார்" பாட்டில் கடத்துக்கும் மிருதங்கத்துக்கு ஒரு ஆரோக்கியமான போட்டி



சிந்து தன் தாயிடம் அவமானப்பட்டு நிற்கும் காட்சியைத் தொடர்ந்து "பாடறியேன் படிப்பறியேன்" பாடல் குழந்தைகளின் கோரஸ் குரலாக



"பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே" ஜே.கே.பி என்ற பூக்கடை சாக்கடை நிலையில் போகும் நிலையில் "நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது"



தர்பார் ராகத்தில் பாடுவதாகச் சொல்லிப் பாடிக்கெடுக்கும் வித்துவானைக் கண்டித்து ஜே.கே.பி பாடும் "லோசனா"



"தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" குவாட்டர் யாசகத்துக்காக டப்பாங்குத்துக்கு இறங்கும் ஜே.கே.பி



"தென்றலெது கண்டதில்லை மனம் தான் பார்வை" என்ற பாடலைப் பாடி சிந்து தன் பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பாடமெடுக்கும் காட்சி




மீண்டும் ஜே.கே.பி மிடுக்கோடு சபையேறும் அந்த நாள், ஜட்ஜ் ஐயா ஆரோகணம் அவரோகணம் குறித்து விளக்கமும் கொடுத்த சிறப்புரையைத் தொடர்ந்து ஆரோகணப் பிரயோகத்தை மட்டும் பாவித்துப் பாடும் "கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்"



30 comments:

ஆயில்யன் said...

வார இறுதி விடுமுறையில் மாலைப்பொழுதினை சுவாரஸ்யமாக்கியமைக்கு நன்றிகள் பாஸேய்ய்ய் :)

பொக்கிஷம் !

Aishwarya Govindarajan said...

பெட்டகத்தில் எங்கோ அடியில் இருக்கும் ஒரு அறிய பொக்கிஷத்தை என்றோ ஒரு நாள் மீண்டும் எடுத்துப் பார்த்தால் எவ்வாறு ஒரு ஆனந்தம் தோன்றும்,அது போன்ற உணர்வு.பாடல்களைக் பலமுறைக் கேட்பது உண்டெனினும் படத்தில் வரும் பின்னணி இசைகளை சட்டெனத் இவ்வாறு தனியாகக் கேட்டதும் ஏனோ ஒரு இனம் புரியாத ஆனந்தம் பகிந்தமைக்கு மிக்க நன்றி. :-) :-)

கானா பிரபா said...

ஆயில்யன் said...

வார இறுதி விடுமுறையில் மாலைப்பொழுதினை சுவாரஸ்யமாக்கியமைக்கு நன்றிகள் பாஸேய்ய்ய் :)//

அட ;) அனுபவி ராஜா அனுபவி

ILA (a) இளா said...

நல்ல நேரத்தில் மீட்டெடுக்கப்படும் இசைக் கோர்வைகள்.

Kaarthik said...

ஆக்கத்திற்கும் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி. சிந்து பைரவி ஒலிச்சித்திரம் கேட்டது போல் இருந்தது. இறுதிக் காட்சியில் சிந்து பைரவிக்குக் குழந்தையைக் கொடுக்கையில் வரும் பின்னணி இசையைச் சேர்த்திருந்தால் முத்தாய்ப்பாக இருந்திருக்கும் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி கா.பி. நன்றி!
படத்தைப் பார்க்க 2.5 மணி நேரம் தான் ஆகும்!
ஆனா, இந்த இசைத் தொகுப்பு அனுபவிச்சி கேட்க 24 hrs ஆகும்! :)

ஆயில்ஸ் அண்ணாச்சி சொல்வது போல், வார இறுதியைக் கொடுத்த/கெடுத்த புண்ணியம் உங்களையே சேரட்டும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மீனவன் கொடுத்த சங்குமாலையைப் பற்றி ஜே.கே.பி தன் மனைவி பைரவியிடமும், நண்பி சிந்துவிடமும் சொல்லும் போது அவர்கள் இருவருக்கும் உள்ள முரண்பட்ட பார்வையைக் காட்டுதல். காட்சி ஆரம்பத்தில் ஒலிக்கும் இசை தான் சிந்து பைரவியின் அடி நாதமாகப் படம் முழுதும் விரவியிருக்கும் இசையின் ஒரு பகுதி//

படம் முழுக்க விரவி இருக்கும் இந்த மகத்தான இசைக்குளிகை நிறைய இடங்களில்/தளங்களில் கிடைப்பதில்லை! அதைக் கொடுத்த றேடியோஸ்பதிக்கு நானும் ஒரு சங்குமாலை கொடுக்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//"நீ தயராதா" என்று பாட சிந்து இந்தப் பாடலை ஏற்கனவே தமிழில் மொழிபெயர்த்ததாகச் சொல்லி "உன் தயவில்லையா"//

இந்தப் பாட்டும் சரி, படக் காட்சியும் சரி, என் வாழ்வில், என்னையே தொட்ட தென்றல்-ன்னு சொல்லலாம்!

இந்தப் பாட்டுக்கு அப்புறம் தான் சிவகுமார்-சுகாசினி நெருக்கம் ஆவாங்க!
கருத்து நிலைப்பாடுகளில் எப்பமே எதிரும் புதிருமான...வலையுலகில் கருத்துச் சண்டை போட்டுக் கொள்ளும் இருவரும்... ஆத்மார்த்தமாக ஒன்றாவது போல் ஒரு பாவனையான காட்சி! என்னை மிகவும் தொட்ட காட்சியும் கூட!

பாட்டாலே சேர்த்து வச்சான்,
பாட்டாலே சேர்த்து வச்சான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

* தியாகராஜர் எழுதிய தெலுங்கும் நல்லாத் தான் இருக்கும் - நீ தய ராதா...காதென வாரெவரு...கல்யாணராமா?
* தமிழிலே இனிமை கொஞ்சும் - உன் தயவில்லையா, காப்பது வேறெவரோ கல்யாணராமா?

இந்தப் படக் காட்சி/இசை மிகவும் பிடிச்சிப் போனதால் தான்...
கண்ணன் பாட்டு, இசை இன்பம், மாதவிப்பந்தல் வலைப்பூக்களில் பல முறை முயன்றுள்ளேன், பாட்டின் மெட்டு மாறாமல் அப்படியே மொழியாக்கம்! = languages2tamil

http://kannansongs.blogspot.com/search/label/languages2tamil
http://madhavipanthal.blogspot.com/search/label/languages2tamil

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மோகம் என்னும் தீயில் என் மனம் வந்து வந்து உருகும்//

வெந்து வெந்து உருகும்!
கடைசியில் அந்தத் தம்பூராத் தந்தி அறுந்து விழுவதையே, ஒரு ஸ்வரமாக மாற்றிக் காட்ட வல்ல திறமை - ராஜா, ராஜா தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீ தயா ராதா
உன் தயவில்லையா//

சாரி, நான் இந்தப் பாட்டையே சுத்திச் சுத்தி வாரேன் :)

யேசுதாஸ் கொஞ்சம் தெலுங்கில் பாட, மீதியைத் தமிழில் சித்ரா பாடி முடித்து இருப்பார்!
யேசுதாஸ் கொஞ்சம் சிரமப்பட்டு பாடி இருப்பார்! ஆனால் சித்ரா பின்னி இருப்பாங்க!
அதே பாட்டைச் சுசீலாம்மா சிரமமே தொனிக்காமல் பாடுவது இங்கே! - http://www.youtube.com/watch?v=HR2ll4pJtsQ

மஞ்சள்-முல்லை நிறக் காட்டன் புடைவையில், பின்னலை முன்னால் போட்டுக்கிட்டு, சுகாசினி, கண்ணை மூடிக்கிட்டு இழுக்க....
சிவகுமார் தன்னோட வேட்டி நுனியைப் பிடிச்சபடியே ரசிச்சி வருவாரு!
இருவரும் பூக்களிடையே நடந்து நடந்து....ஆகா!
உன் தயவில்லையா?
உன்ன்ன்ன் தயவில்லையா?
தடுப்பது வேறவரோ ஓஓ?...

எனக்கு,முருகா....உன்ன்ன்ன்ன் தயவில்லையா ஆஆஆ?
அந்த "ஓம்" போட்ட மோதிரம் கையைப் பிடிக்கும்!

Sundari said...

Superb collection thanks for sharing

RVS said...

ஆனந்த பைரவியில் சிந்து பாடுகிறது இந்தப் பதிவு. நன்றி. ;-))

Kaarthik said...

@kannabiran, உன் தயவில்லையா பாடலைப் பாடியவர் சித்ரா இல்லை. பாடியவர் யார் என்று தெரியவில்லை.

சாணக்கியன் said...

அருமையான பணி!... மிக்க நன்றி..

கானா பிரபா said...

Aishwarya Govindarajan said...

பெட்டகத்தில் எங்கோ அடியில் இருக்கும் ஒரு அறிய பொக்கிஷத்தை என்றோ ஒரு நாள் மீண்டும் எடுத்துப் பார்த்தால் எவ்வாறு ஒரு ஆனந்தம் தோன்றும்.//

மிக்க நன்றி, பகிர்ந்த பின்பு தான் மீளப் பார்க்கும் போது இசைஞானியின் உச்சம் இன்னும் ஒருபடி மேலே தெரிகிறது.

கானா பிரபா said...

ILA(@)இளா said...

நல்ல நேரத்தில் மீட்டெடுக்கப்படும் இசைக் கோர்வைகள்.//

நன்றி நண்பா

கானா பிரபா said...

கே.ஆர்.எஸ்

வாங்க ;) வழக்கம்போல பின்னூட்டத்தில் மழையாகப் பொழிந்து விட்டீர்கள், ரசித்தேன் தொடுப்புகளுக்கும் நன்றி

கோபிநாத் said...

எனக்கு என்ன சொல்லவேண்டும் என்று இருந்துச்சோ அதை எல்லாம் மற்ற பின்னூட்டங்களில் சொல்லிட்டாங்க.

எனக்கிட்ட ஒரே வார்த்தை அதுவும் பலபேர் சொன்ன வார்த்தை தான்..பொக்கிஷம் தல ;)

மத்தபடி வழக்கம் போல என்றும் பக்தன் ;)

கோபிநாத் said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//மோகம் என்னும் தீயில் என் மனம் வந்து வந்து உருகும்//

வெந்து வெந்து உருகும்!
கடைசியில் அந்தத் தம்பூராத் தந்தி அறுந்து விழுவதையே, ஒரு ஸ்வரமாக மாற்றிக் காட்ட வல்ல திறமை - ராஜா, ராஜா தான்!\\

தூள் கிளம்பும் பின்னூட்டங்கள் போடுவதில் தல எப்போதும் தனிதான் ;))

கானா பிரபா said...

Kaarthik said...

ஆக்கத்திற்கும் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி. சிந்து பைரவி ஒலிச்சித்திரம் கேட்டது போல் இருந்தது. இறுதிக் காட்சியில் சிந்து பைரவிக்குக் குழந்தையைக் கொடுக்கையில் வரும் பின்னணி இசையைச் சேர்த்திருந்தால் முத்தாய்ப்பாக இருந்திருக்கும் :-)//

வாங்க கார்த்திக்

அந்த இறுதிக்காட்சியை காட்சியமைப்போடு வரும் இசையைக் கேட்கும் போதுதான் அழுத்தமாகப் பதியும், தனியே சின்னஞ்சிறு துண்டங்களாக்கத் தான் முடியும் என்பதால் கைவிட்டு விட்டேன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்களின் ரசனையும் சிந்துபைரவியும் க்ளாஸிக் ப்ரபா.நினைவை உலுக்கும் பதிவு.

கானா பிரபா said...

சுந்தரி, RVS, சாணக்கியன்

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

கானா பிரபா said...

தல கோபி, சுந்தர்ஜி

மிக்க நன்றி

IKrishs said...

படம் நெடுக 'ராஜா'பவனி தான் .அவரில்லாத சிந்து பைரவி நினைத்துகூட பார்க்க இயலாது .
சிந்து-JKB காதல் தீம் மனதில் பதிந்து விட்ட ஒன்று .[குறிப்பாக சிந்து -jkb ஒருவார பிரிவை ஒட்டிய பின்னணி]
JKB தமிழிசை ஒட்டிய பின்னணி உங்களது பதிவில்தான் முழுமையாக கவனித்து ரசித்தேன் ,[போலவே சிந்து வின் இசை பள்ளி பாடலும் ]..நன்றிகள் மீண்டும் !
நடிப்பை பொறுத்த வரை , சிந்து வைவிட ,பைரவியாக
நடிப்பதே கஷ்டம் ,அந்த வகையில் சுலக்சனா வும் தேசிய விருதுக்கு உகந்தவரே !.
இதன் part 2 சகானா தொடரில் சுலக்சனா மட்டுமே தொடர்ந்தார் .
Part 2 சகானா தொடர் ஏன்தான் எடுத்தாரோ என்றும் , தோன்றும் ![அதுவும் வேறு நடிகர்களை வைத்து ] .

marimuthu said...

அருமையான தொகுப்பு!நன்றி தல!

காத்தவராயன் said...

சாமியாருக்கும் வைர‌முத்திற்கும் வெட்டுக்குத்து உச்ச‌த்தில் இருந்த‌போது வ‌ந்த‌ ப‌ட‌ம். :)

""
பாட‌றியேன்
ப‌டிப்ப‌றியேன்
ப‌ள்ளிக்கூட‌ம் தான‌றியேன்

ஏட‌றியேன்
எழுத்த‌றியேன்
எழுத்துவ‌கை தான‌றியேன் ""

இந்த‌ வ‌ரிக‌ள், வைர‌முத்துவின் கூற்றுப்ப‌டி, அவ‌ர‌து ப‌ல்ல‌வியை சிர‌ச்சேத‌ம் செய்துவிட்டு ராஜாவால் சேர்க்க‌ப்ப‌ட்ட‌து.

இது நாட்டுப்புற‌பாட‌ல் வ‌ரிக‌ள்.

இதே வ‌ரிக‌ளை "க‌ல்லுக்குள் ஈர‌ம்" கூத்துப்பாட‌லில் கேட்க‌லாம்.

**********
இருவ‌ரும் பேரில் போர் புரிந்துகொண்டிருந்த‌கால‌மிது ,

ராஜா ஆர்.ஆரின் போது க‌விஞ‌ர் வாலியை வ‌ர‌வ‌ழைத்து

""
தென்ற‌ல‌து க‌ண்ட‌துண்டு
திங்க‌ள‌து க‌ண்ட‌தில்லை
ம‌ன‌ம்தான் பார்வை ""

என்ற‌ சிறுபாட‌லை எழுதிவாங்கி,

வைர‌முத்து பெய‌ருக்கு முன்னால் டைட்டில் கார்டில் ச‌ம‌கால‌ க‌விஞ‌ர‌து பெய‌ரை வ‌ர‌வ‌ழைக்க‌,

வைர‌முத்து பொங்கி எழ‌,

பால‌ச்ச‌ந்த‌ர் பாட‌லாசிரிய‌ர்க‌ளுக்கு இர‌ண்டு த‌னித்த‌னி டைட்டில் கார்டு போட்டு ச‌மாளித்திருப்பார். வைர‌முத்து தெரிந்தோ தெரியாம‌லோ க‌விஞ‌ர் வாலியை வேறெரு இட‌த்தில் கொண்டுபோய் அம‌ர‌வைத்துவிட்டார்.

(தாய்கொரு தாலாட்டிலும் இதே போன்ற‌ ச‌ம்ப‌வ‌ம் இருவ‌ருக்கும் இடையே ந‌ட‌ந்த‌து)

பிரிவையொட்டி பிரிவின் கார‌ண‌ங்க‌ளில் ஒன்றாக‌ அந்த‌க்கால‌ ஜூ.வியில் க‌விஞ‌ர் வைர‌முத்து கூறிய‌து இது.

மாணவன் said...

அன்பின் நண்பருக்கு வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

அசால்ட் ஆறுமுகம் said...

வாசிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாக இருந்தது... வெளியிலே பெய்யும் மழை, காதிலே கேட்கும் இசை, அதற்கேற்ற மொழி நடை... ஆனந்தத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது போல் இருந்தது... நன்றிகள்....

Umesh Srinivasan said...

உங்கள் பதிவைப் படிக்க, சிலாகிக்க ஒரு நாள் இல்லை, பல நாள் லீவு போட வேண்டி வரும் போல..... அருமையிலும் அருமை.