Thursday, April 21, 2011
றேடியோஸ்புதிர் 61: ஒரே படம் மூன்று தேசிய விருதுகள்
என்னதான் சிறப்பானதொரு படைப்பாக இருந்தாலும்,இந்தப் படம் இவ்வளவு தேசிய விருதுகளைக் கொடுக்கும் என்று இயக்குனரே எதிர்பார்த்திருக்கமாட்டார். படிப்பைத் தொடர வேண்டிய பாடகியை நிறுத்தி இந்தப் படம் உன்னை உயர்த்தும் என்ற இசைஞானியின் சொல்லை மெய்ப்பிக்க சிறந்த பாடகி என்ற தேசிய விருது அவருக்குக் கிட்டியது. பாடல்கள் ஒவ்வொன்றுமே முத்துக்கள் ஆனால் இந்தப் படத்துக்கு முன்னமே கவிஞர் இன்னொரு படத்துக்குத் தேசிய விருதை வாங்கி விருதுக்கு கெளரவம் தேடிக்கொடுத்து விட்டார். ஆனால் இத்தனை ஆண்டுகள் உழைப்பில் ஒவ்வொரு படத்துக்குமே விருதுகள் வாங்கக்கூடிய தரத்தில் இருந்தாலும் இந்தத் தேசிய விருது இசையமைப்பாளருக்கு இரண்டாவது தடவையாகக் கிடைக்கின்றது. ஒளிப்பதிவாளராகவேண்டும் என்று ஆசைப்பட்டுத் திரையுலகம் வந்த அம்மணிக்கு அரிதாரம் போட்டு, கூடவே இந்தப் படத்தின் மூலம் தேசிய விருதையும் கொடுத்துக் கெளரவித்துக் கொண்டது.
என்ன இருந்தாலும் வாழ்க்கையில் இப்படி ஒரு இயல்பானதொரு கலைஞன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்தும் நாயகனுக்குத் தேசிய விருது கிட்டவும் வரவில்லை இனியும் கிட்டாது ஏனென்றால் அவர் இனி நடிக்க மாட்டாராமே.
ஒகே மக்கள் புதிருக்கு ஏகப்பட்ட க்ளூ விரவியிருக்கு, பதிலோடு வருக
என்ன படம் கூடவே ஒரே படத்தில் தேசிய விருது கிடைத்த அந்த மூன்று பிரபலங்கள் யார்?
சரியான பதில்
சிறந்த நடிகை: சுஹாசினி
சிறந்த பாடகி: சித்ரா
சிறந்த இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சிந்து பைரவி
போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
சிந்து பைரவி
பாடறியே படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியே #எனக்குபுடிச்சது :)))
அந்த ஒரு போட்டோ போதுமே..
சுகாசினி, இளைய்ராஜா, சித்ரா..
Sindhu Bairavi... Raja, Suhashini and Chithra
ஆயில்யன்
அதே தான் பதில்
கயில்விழி முத்துலெட்சுமி
சரிதான்
Peppin
சரியான பதில்
சிந்து பைரவி....
இவ்ளோ புதிர் வரிசை! போதாக்குறைக்கு ஜே.கே.பி-ன்னு படமும் போட்டா எப்படி? றேடியோஸ்பதி வாசிக்கற ஒன்னாங் கிளாஸ் பையன் கூடச் சொல்லிருவானே! :) என்ன கா.பி இது? ஒழுங்கா எல்லாருக்கும் இப்பவே பரிசைக் குடுங்க! - IPad 2
* படம்: சிந்து பைரவி
* சிறந்த நடிகை விருது: சுகாசினி
* சிறந்த இசையமைப்பாளர்: இளையராஜா (இதெல்லாம் விருது கொடுத்தா நிரூபிக்க முடியும்?)
* சிறந்த பின்னணிப் பாடகி: சித்ரா
வணக்கம்,
இது சிந்து பைரவி தானே, இவ்வளவு சுளுவாவா கேட்பது....
அன்புடன்
பனிமலர்.
//ஆனால் இத்தனை ஆண்டுகள் உழைப்பில் ஒவ்வொரு படத்துக்குமே விருதுகள் வாங்கக்கூடிய தரத்தில் இருந்தாலும் இந்தத் தேசிய விருது இசையமைப்பாளருக்கு இரண்டாவது தடவையாகக் கிடைக்கின்றது//
தமிழில் முதன் முறையாக அல்லவா? அதுக்கும் முன்னாடி கெடைச்சது தெலுங்கு - சாகர சங்கமம் - படத்துக்குத் தானே?
வைரமுத்துவுக்கு முதல் மரியாதையே முதல் மரியாதையில் தான்! :)
சும்மா சொல்லப்படாது! அப்பறமா இன்னும் அஞ்சு விருது வாங்கிக் கலக்கிப்புட்டாரு நம்ம கள்ளிக்காட்டாரு! நீங்க எப்போ வாசகர்களுக்கு விருது குடுக்கப் போறீங்க கா.பி? :)
இத்தனை க்ளூ எதுக்கு? - அந்த ஃபோட்டோவே போதுமய்யா - சிந்துபைரவி - விருது வாங்கியவர்கள்: கே. எஸ். சித்ரா, இளையராஜா, சுஹாசினி :>
சிவக்குமார் ‘மறுபக்கம்’க்காக தேசிய விருது வாங்கினதா நினைவு. இல்லையோ?
- என். சொக்கன்,
பெங்களூரு.
டொன்லீ
முதல் தடவை வந்திருக்கிறியள் சரியான பதிலோடு ;)
கே.ஆர்.எஸ்
ஐ பாட் 3 வரட்டும் வாங்கிக் கொடுக்கிறேன் அவ்வ்வ் ;)
சரியான பதில்னு சொல்லணுமாக்கும்
பனிமலர்
இந்த முறை நோ எலிமினேஷன், சரியான பதில்
சொக்கரே
அந்தப் படத்துக்கும் அவருக்குக் கிடைக்கல, உம்ம பதில் சரி
Sindhu Bhairavi
Sindhu Bhairavi
ரொம்ப கடினமான கேள்வி, கானா. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
1. நடிகை சுகாசினி
2. பாடகி சித்ரா
3. இசைஞானி இளையராஜா
சிறந்த இசைக்கு இளையராஜாவுக்கும், சிறந்த பாடகர் யேசுதாசுக்கும், சிறந்த பாடகி சித்ராவுக்கும் கிடைத்தது
தல சிந்து பைரவி ;)
படம் : சிந்து பைரவி
இளைய ராஜா- இசையமைப்பாளர்
சித்ரா - பின்னணி பாடகி
சுகாசினி - நடிப்பு.
உண்மையில் சிவகுமாருக்கே நடிப்புக்காக இந்த தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். விருது கிடைக்கும் முன்னரே இயக்குனரே இவாறு ஒரு பேட்டியில் சொன்னவர்தான், ஆனால் சுகாசினிக்கு போய்விட்டது.
தெய்வா
சரியான பதில்
KK
அதே தான்
சுப்பராமன்
;) கடினமான கேள்வி சுலபமான பதில்
நவீன்
பாடகர் மட்டும் தப்பு, பாடகி சரி
தல கோபி
சரியான பதில்
கக்கு- மாணிக்கம்
உண்மைதான் ஆனா இனிமே கிடைக்காதே, சரியான பதில்
sindu bairavi,
chithra, yesudas appuram theriyala :)
இசைஞானி
இசைக்குயில்
சுகாசினி
Singer - Chitra
Cinematographer turned Actress - Suhasini
Lyricist - Vairamuthu
Musician - Our great Ilayaraja..
"மீண்டும் ஜே.கே.பி" - இந்த போஸ்டர் ஒண்ணு போதுமே என்ன படம்னு சொல்ல.. எதுக்கு இவ்வளோ க்ளு.. :-)
புதுகைத் தென்றல்,
பாடகியும் இசையமைப்பாளரும் சரி.
அரவிந்த்
அது சின்னக்குயில் ஆச்சே, இரண்டு சரி
பிரசன்னா கண்ணன்
;) சரியான பதில்கள்
சரியான பதில்
சிறந்த நடிகை: சுஹாசினி
சிறந்த பாடகி: சித்ரா
சிறந்த இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சிந்து பைரவி
போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
@சொக்கன்
//இத்தனை க்ளூ எதுக்கு? - அந்த ஃபோட்டோவே போதுமய்யா//
JKB - Expansion என்னா-ன்னும் சொல்லுங்க பார்ப்போம்! அப்போ தான் படம் போட்ட கா.பி நெஞ்சு சாந்தி அடையும்! :)
Post a Comment