Wednesday, April 6, 2011
றேடியோஸ்புதிர் 60 - "பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு"
வணக்கம் வணக்கம் வணக்கம், ஒரு சின்ன இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிரோடு வந்திருக்கிறேன். இந்தப் புதிரில் நான் கேட்கப்போவது ஒரு பாடல் குறித்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்களும் இசைஞானி இளையராஜாவும் இணைந்து ஏராளமான முத்துக்களைக் கொடுத்திருக்கின்றார்கள். அதில் ஒன்றுதான் இந்த முத்து.
பாரதிராஜாவின் ஒரு படம், இந்தப் படத்தின் அறிமுக நாயகிக்கான பாடலை எழுதவேண்டும் என்று ஒரு நாள் இரவு பாரதிராஜாவின் மேலாளர் வடுகநாதன் கவிஞர் முத்துலிங்கத்தைச் சந்தித்து கூடவே அந்தப் பாடலுக்கான மெட்டமைக்கப்பட்ட இசை தாங்கிய ஒலி நாடாவையும் கொடுத்து விட்டுக் கிளம்பினார். துரதிஷ்டவசமான வீட்டில் மின்சாரம் இல்லை அன்று. அடுத்த நாள் பாடல் ஒலிப்பதிவு. இந்த நிலையில் மறுநாள் ராஜாவைச் சந்திக்கிறார் முத்துலிங்கம். பாடல் ரெடியா என்று கேட்டபோது நிலமையைச் சொல்லி விளக்கிவிட்டுடு இப்பொழுதே எழுதிவிடுகிறெஎன் என்று சொல்லியவாறே அவர் முன்னால் எழுத ஆரம்பிக்கிறார். முதல் அடியை எழுதி விட்டு பொருத்தமான அடுத்த அடியை எழுதும் போது கவனித்த ராஜா இரண்டாவது அடியை மாற்றிவிட்டு "பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்" என்று எழுதுமாறு சொன்னாராம். அதையே இணைத்துவிட்டு முழுப்பாடலையும் எழுதிமுடித்தார் முத்துலிங்கம். அந்தப் படத்திலேயே வெற்றிபெற்ற பாடலாக இந்தப் பாடலும் அமைந்து விட்டது. அது எந்தப் பாடல் என்பது தான் கேள்வி. பதிலோடு ஓடி வாருங்கள் ;-)
இதோ போட்டி முடிவடைந்து விட்டது, சரியான பதில் இதுதான்
பாடல் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
படம்: புது நெல்லு புது நாத்து
அறிமுக நாயகி: சுகன்யா
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பாஆஆ
பிப்பீ டும் டும் டு
Karutha machan kanja thanam in Puthu nellu pthu nathu for Suganya. Sarithaanugale?
Anna,
Puthu Nellu Puthu Naathu - karutha machan, paruthikulle panja vechi vedikka vechan song.
Urumi ( or is it something else ) which comes in the complete song is something which Maestro can do.
Post more such puzzles :-)
Sudharsan
புது நெல்லு புது நாத்து படத்துல வர்ற கருத்த மச்சான் பாட்டு தானே
கருத்த மச்சான்
சேலம் ஆனந்த்
சரியான பதில் ;)
இரமேஷ் இராமலிங்கம்
அதே தான்
சுதர்சன்
ஆஹா பின்னீட்டிங் ;)
கருத்த மச்சான் நெஞ்சுக்குள்ள பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
படம் பேரு ஞாபகம் இல்லை பாஸ்
நவீன்
அதே தான் ;0
தயாளன்
சரியான பதில்
’கருத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்’ from ’புது நெல்லு, புதுநாத்து’ :>
- என். சொக்கன்,
பெங்களூரு.
ஹைய்ய்ய்ய்ய்யா புது நெல்லு புது நாத்து பாஸ் நான் ரொம்ப நாளா எக்சுபெக்குட்டு பண்ணின படமாக்கும்! :)
யேஏஏஏஏஏ மரிக்கொழுந்து என்னம்மா :)
அட என்னப்பா இது ஒருக்கா ஜெயிச்சிட்டு போங்கன்னு இவ்ளோ ஈஸியா ஒரு கேள்வியா..:)
என்னா ஒரு ஹிட் சாங் ..கறுத்த மச்சான்..
மண்வாசனை படப்பாடல் பொத்திவைச்ச மல்லிகை பாடல் என நினைக்கிறேன் சகோதரத்தை காணவில்லை என்று நேற்று நாஞ்சில் மனோவிடம் கேட்டது எட்டிவிட்டதோ!
karutha machchan
புதுகைத் தென்றல்
சரியான பதில் தான் ;)
சொக்கரே
அதே
ஆயில்ஸ்
சரியான பதில்
முத்துலெட்சுமி
இது போனஸ் புதிர் ;)
நேசன்
நீங்கள் சொன்ன விடை தவறு :(
பாடல் ; கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் ;)
படம்: புது நெல்லு புது நாத்து
பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் வரும் ”கருத்த மச்சான் ” என்ற பாடல் தான் என்று நினைக்கிறேன்.
கார்த்திக், தல கோபி, வெங்கட்
அதே தான் பதில்
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்.
படம் புது நெல்லு புது நாத்து..............ஜானகியின் குரலுடன் இணைந்து ஒலிக்கும் உருமி மேளம்.........சான்ஸே இல்லை...............ராஜா ராஜாதான்........
இந்த பாடல் காட்சியில் வரும் ஆறு எங்க ஊர் ஆறு கடனா நதி
"கறுத்த மச்சான்...." -- புது நெல்லு புது நாத்து படத்தில் இருந்து :)
Karuththa machchaan kanjaththanam edhukku vechchaan :))))
Boss.. Ungalukku kashtamaavae kelvi kekka theriyamaatengudhu boss :)))))
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்.
படம் - புது நெல்லு புது நாத்து.
படம் புது நெல்லு புது நாத்து - பாடல் : "கருத்த மச்சான்" - நடிகை சுகன்யாவின் முதல் படம்
படம் =புது நெல்லு புது நாத்து
பாடல் = கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் இளையராஜாவும்,பாரதிராஜாவும் இணைந்த கடைசி படம் என்று நினைக்கிறன்
karutha machan...kanjathanam ethukku vehcan..
from PNPN
படம் : புது நெல்லு புது நாத்து
பாடல் : கருத்த மச்சான்....
படம் : புது நெல்லு புது நாத்து
பாடல் : கருத்த மச்சான்....
அத்திரி, லோகேஷ், ஜீ3, சுந்தரி, குப்பத்து ராசா மகராசன், தங்க்ஸ், முத்துக்குமார்
அதே தான் ;-)
ஜீ3 அவ்வ்
இதோ போட்டி முடிவடைந்து விட்டது, சரியான பதில் இதுதான்
பாடல் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
படம்: புது நெல்லு புது நாத்து
அறிமுக நாயகி: சுகன்யா
Post a Comment