Pages

Monday, July 12, 2010

ஷிவா (தெலுங்கு) - உதயம் (தமிழ்) : இசைத்தொகுப்பு





ஒரே ஆண்டில், ஐந்து மாத இடைவெளியில் ஒரு முழுமையான ஆர்ப்பாட்டமில்லாத காதல் படத்தைக் கொடுத்து விட்டு இன்னொரு பரிமாணத்தில் ஒரு முழு நீள அதிரடித்திரைப்படத்தைக் கொடுத்துத் தன் சினிமா பயணத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய பெருமை நாகார்ஜீனாவுக்கு வாய்த்தது. முன் சொன்ன காதல் படம் நாம் சிலவாரங்களுக்கு முன் றேடியோஸ்பதியில் பார்த்த கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே) , பின்னது முழு நீள அதிரடித் திரைப்படமாக வந்த ஷிவா என்ற தெலுங்குப்படம் தமிழில் "உதயம்" என்ற பெயரில் வெளியானது. 1989 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தப் புதுமைக்குப் பின் இளையராஜா, நாகார்ஜீனா ஆகிய அதே கூட்டணியோடு ஷிவா (உதயம்) படத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா, நாயகி அமலா, ஒளிப்பதிவாளர் கோபால் ரெட்டி இவர்களோடு பலரும் அறிந்திராத செய்தி இப்படத்தின் கதை உருவாக்கத்தில் ராம்கோபால்வர்மாவோடு இணைந்து பணியாற்றியவர் தெலுங்குப்படவுலகின் குணச்சித்ர நடிகர் தனிகலபரணி.

ராம்கோபால்வர்மா என்ற இயக்குனருக்குக் கிடைத்த அமர்க்களமான வெற்றியாக ஷிவா படத்தின் வெற்றி கணிக்கப்பட்டது, இந்த முதல்ப்பட வெற்றியே இவரைப் பின்னாளில், சில வருஷங்களுக்குப் பின் தெலுங்குத் திரையுலகில் இருந்து பெயர்த்து பாலிவூட் என்ற ஹிந்தித் திரையுலகில் வெற்றியோ தோல்வியோ ஆட்டம் காணாமல் இன்றுவரை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக் கூடிய தெம்பைக் கொடுத்திருக்கும். கல்லூரியில் நிலவும் தாதாயிசம், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட வன்முறை நோக்கிய பயணமாக "ஷிவா" படத்தின் கதையை ஒற்றை வரியில் எழுதி முடித்து விடலாம். ஆனால் 21 வருஷங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தை இன்றும் பார்க்கும் போதும் துரத்திக் கொண்டு பறக்கும் ஒளிப்பதிவு, ஆரம்பத்தில் இருந்து தேர்ந்தெடுத்த கறுப்பினத் தடகள வீரனைப் போல விர்ரென்று பயணிக்கும் அதிரடி இசை, அலட்டல் இல்லாத காட்சியமைப்புக்கள் என்று விறுவிறுப்பு ரகம் தான்.
ஷிவா வை மீண்டும் 2006 ஆம் ஆண்டில் ஷிவா என மீண்டும் ஹிந்தியில் புத்தம்புதுக் கலைஞர்களைப் போட்டு எடுத்திருந்தாலும் அசலுக்குப் பக்கம் நெருங்கவே முடியவில்லை என்னதான் புதிய தொழில்நுட்பம் கலந்திருந்தாலும்.

ஒரு வன்முறைப்பின்னணி சார்ந்த இந்தப் படத்தின் காட்சியமைப்புக்களில் கொலை, மற்றும் சித்திரவதைக்காட்சிகளைப் பார்த்தால் ஒரு துளிகூட மிகைப்படுத்தல் இல்லாத தணிக்கைக்கு வேலை வைக்காத உறுத்தாத காட்சிகள். ஒரு சில கொலை நடக்கும் காட்சிகள் அப்படியே பார்வையாளன் முடிவுக்கே விட்டுவைக்கும் அளவுக்கு மெளனமாய் முற்றுப்புள்ளி வைத்து அடுத்த காட்சிக்குப் பயணித்து விடும்.


நாகார்ஜீனா, அமலா நிஜ வாழ்விலும் கைப்பிடிக்கும் வகையில் கட்டியம் கூறும் குறும்பான காட்சிகள், தவிர ஒரு சில கிளுகிளுப்பாடல்கள் தான் வேகத்தடை. தவிர, சுபலேகா சுதாகர் வகையறா நண்பர் கூட்டத்தோடு யதார்த்தமாய்ப் பயணிக்கும் கல்லூரிக் காட்சியமைப்புக்கள், கல்லூரி தாதாவாக வந்து நடித்துச் செல்லும் சக்ரவர்த்தி, பவானி என்ற பெரும் வில்லனாக அதே சமயம் வெற்றுச் சவாடல் வசனங்கள் இல்லாத அடக்கமாய் இருந்து தன் "காரியத்தை" முடிக்கும் ரகுவரன் ஆகிய கலைஞர்கள் தேர்விலும் இந்தப் படத்தின் வெற்றி தங்கியிருக்கின்றன.


ஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் "உதயம்" என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது. (மேலதிக தகவல் உதவி: நாகார்ஜீனா ரசிகர்கள் தளம், விக்கிபீடியா, போஸ்டர் நன்றி: நாகார்ஜீனா ரசிகர்கள் தளம்)

ஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான் என்பதை இங்கே நான் தரும் பின்னணி இசைக் கோர்வை மூலம் உணரலாம்.
ஷிவா என்ற தெலுங்குப் பையனின் அட்டகாசமான உதயம் அடுத்து உங்கள் செவிகளில் இசையாக




படத்தின் மூல இசை



படத்தின் நிறைவு இசை



இன்னொரு மிரட்டும் இசை



படத்தின் முகப்பு இசையோடு நாகார்ஜீனா அறிமுகம்



கல்லூரி தாதா சக்ரவர்த்தி பின்புலம்



நாகார்ஜீனா நண்பன் தாக்கப்பட்டு உயிரிழந்த பின்



பாவானி என்ற ரகுவரன் அறிமுகம் மிரட்டல் இசையோடு



தாதாக்களுடன் மோதும் ஒரு காட்சி



இன்னொரு ஓட்டம் தாதாக்களிடம் இருந்து தப்பி



ஒரு சண்டைக்காட்சிக்குப் பின்னான இசை



மழையில் வில்லன்களுடன் ஒரு சந்திப்பு



இன்னொரு கொலை



குழந்தை இறப்பும், அதைத் தொடர்ந்து பவானி வேட்டையில் ஷிவாவும்



வில்லன் பவானி (ரகுவரன்) ஐ ஷிவா (நாகார்ஜீனா) வேட்டையாடும் இறுதிக் காட்சி






சரி இனி தமிழில் இப்படம் "உதயம்" ஆக மொழிமாற்றப்பட்டு வந்த போது இடம்பெற்ற பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்

"பாட்டனி பாடம்" எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா குழுவினர்



"ஆடல்களோ பாடல்களோ" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா



"இது நீயும் நானும் கதைபேசும் வேளை தானோ" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா



"கிஸ் மீ" எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.எஸ்.சித்ரா




"அச்சச்சோ பெண்மை" எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.எஸ்.சித்ரா

12 comments:

ஆர்வா said...

வாவ்.. வாவ்.. ஒரு முழுமையான தொகுப்பு.. அதனுடன் பாடல் தொடுப்புகளும் அருமை. பரவசமாய் இருக்கிறது

Pragash said...

எஸ்பிபி, சித்ரா, சைலஜா குரல்களை கேட்கும் போது கிடைக்கும் போதை, இப்போதுள்ள பாடகர்களின் குரல்களில் கிடைப்பதில்லை. அருமையான தொகுப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தவிர ஒரு சில கிளுகிளுப்பாடல்கள் தான் வேகத்தடை//

pathivil intha vaasagathukku vanmaiyaana kaNdanangaL :)
Amala, Amala, Amala
Amala, Amala, Amala

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரு சண்டைக்காட்சிக்குப் பின்னான இசை//

ithula oru dishoom-dishoom satham kooda irukaathu! such a natural fight bgm from iLaiyaraaja!
intha padam one of the master pieces for raja's bgm!

and...
antha udhayam padam b&w poster enga chuteenga kaa.pi.aNNachi? athula vara sakthi abiraami theater enga veettu pakkam...
paathavudanEyE felt like flying to sakthi abiraami, weekly weekly :) thOzhan varum pOthum, anga azhaichi kittu pOyirunthEn :)

கோபிநாத் said...

தல கலக்கல் தொகுப்பு...இப்போதைக்கு பாதி தான் கேட்டேன் ;)

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி கவிதை காதலன்

கானா பிரபா said...

வணக்கம் பிரகாஷ்

இப்போது பாடகர்களையே தேடிப்பிடிக்க வேணுமே ;)

வடுவூர் குமார் said...

தெலுங்கு ப‌ட‌த்தை விஜ‌ய‌வாடாவில் பார்த்தேன்,ஹாக்கி ஸ்டிக்கை ஒரு ஆயுத‌மாக‌ உப‌யோகித்த‌ முத‌ல் ப‌ட‌மாக‌ இருக்க‌க்கூடும்.ஒவ்வொரு அடி விழும் போதும் நம்மீது விழுவ‌து போல் ஒரு உண‌ர்வு வ‌ந்த‌து.
விளையாட்டு சாத‌ன‌த்தை வ‌ன்முறைக்கு உப‌யோக‌ப்ப‌டுத்திய‌து அவ்வ‌ள‌வாக‌ ர‌சிக்க‌முடிய‌வில்லை.

கானா பிரபா said...

கண்ணபிரான் அடிகளாரே,அமலா மீது ஜொள்சா ;) அந்தப் பத்திரிகை விளம்பரத்தை நாகார்ஜீனா ரசிகர்கள் தளத்தில் எடுத்தேன் . நீங்க சொன்னது போல ராஜா இசை அவ்வளவு இயற்கையா இருக்கும். 

கானா பிரபா said...

கோபிநாத் said...

தல கலக்கல் தொகுப்பு...இப்போதைக்கு பாதி தான் கேட்டேன் ;)/

நன்றி தல, மிச்சத்தையும் கேட்டுட்டு வாங்க

கானா பிரபா said...

வடுவூர் குமார் said...

தெலுங்கு ப‌ட‌த்தை விஜ‌ய‌வாடாவில் பார்த்தேன்,ஹாக்கி ஸ்டிக்கை ஒரு ஆயுத‌மாக‌ உப‌யோகித்த‌ முத‌ல் ப‌ட‌மாக‌ இருக்க‌க்கூடும்.ஒவ்வொரு அடி விழும் போதும் நம்மீது விழுவ‌து போல் ஒரு உண‌ர்வு வ‌ந்த‌து.//

வாங்க வடுவூர்குமார்

இந்தப் படம், சத்யா (தமிழ்) இவற்றில் வன்முறைக்காட்சிகள் இயல்பாக இருக்கும் அதே வேளை நீங்கள் சொன்ன கருத்தையும் ஏற்கிறேன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.