Pages

Friday, July 2, 2010

இளையராஜா இசையமைப்பதைக் கேளுங்கள்

இளையராஜாவின் பாடல்கள் நண்பர் ரவிசங்கர் ஆனந்த் போன்ற இனிய நட்புக்களைத் தந்திருக்கின்றது. அந்தவகையில் அவர் தந்த ஒரு அரிய பொக்கிஷத்தை இங்கே தருகின்றேன்.

ஒரே முத்தம் திரைப்படம் ஜெய்கணேஷ், சுமித்திரா நடிக்க இசைஞானி இளையராஜா இசையில் 1980 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "பாவையர்கள் மான் போலே" என்ற பாடலை இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்கும் போது ஒலிப்பதிவுக்கூடத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவையே பகிர்கின்றேன். இன்றைக்கு எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்து வெட்டி ஒட்டி நகாசு வேலை எல்லாம் பண்ணிப் பார்த்து உருவாக்கும் நிலமை இருக்கின்றது. ஆனால் 30 வருஷங்களுக்கு முன் பாடகர்கள், இசை ஆவர்த்தனம் எல்லாம் ஒருசேரக் குழுமினால் தான் ஒரு பாடல் பிரசவிக்கும் என்ற நிலை. அந்தப் பழைய நினைவுகளை இந்த ஒலிப்பதிவு சாட்சியம் பகிர்கின்றது.


இந்த ஒலிப்பதிவை ரவிசங்கர் ஆனந்த் இன் நண்பர் சிங்கப்பூர் அலெக்ஸ் அவர்கள் வைத்திருந்த ஒலிக்களஞ்சியத்தில் இருந்து பெற்றராம். இருவருக்கும் நன்றிகளை இதேவேளை தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து அந்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ அழைக்கின்றேன்.





















"பாவையர்கள் மான் போலே" என்ற அந்தப் பாடல் உருவான போது செய்த இசை ஒத்திகை



"பாவையர்கள் மான் போலே" பாடல் முழுமையாகப் பிரசவித்த போது


முன் சொன்ன பாடலைப் பலருக்குத் தெரியவிட்டாலும் இதே படத்தில் வந்த, ஜெயச்சந்திரன் பாடும் "ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா" நிறையப்பேருக்குப் பரிச்சயம். அந்தப் பாடலைக் கேட்க

25 comments:

ILA (a) இளா said...

பிரேசில் தோற்ற நேரத்திலா பதிவை வெளியிடுவீங்க ? :(

கானா பிரபா said...

தல

பிரேசிலுக்கும் மொட்ட பாஸுக்கும் முடிச்சுப் போடாதீங்க ;)

ராம்ஜி_யாஹூ said...

nice thanks for sharing

see this video in Youtube= Vaali, Raja compositong of song KAATRIL VARUM GEETHAME EN KANNANAI...

http://www.youtube.com/watch?v=QKu1SbSxrZU

தமிழ் உதயம் said...

மறந்தே போயிருந்த பாடல். நெடு நாள் கழித்து உங்கள் புண்ணியத்தில் கேட்டு மகிழ்ந்தேன்.

Unknown said...

நம்ம தலைவரின் அந்த கால “மேஸ்திரி” குரல் சூப்பர்.பாலு வரலேன்னா அவரே பாடி ரிகார்ட் ஆகி இருக்கும்.லொள்ளு ஜாஸ்தி.

“காற்றில் எந்தன் கீதம்” பாட்டு ரிக்கார்ட் செய்யும் போது “ஒலிப்பதிவுகள்” காற்றில் எங்கவாது இருக்கும். ஸ்கேன்
பண்ணிப் புடிங்க தலைவா!
கேட்டா மெய் சிலிர்க்கும்.

ILA (a) இளா said...

TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: com.google.layouts.framework.widgetview.GoogleMarkupException: No dictionary named: 'post' in: ['blog'] //
இதை கொஞ்சம் பார்க்கிறது...

Anonymous said...

தல என்கிட்டயும் அலெக்ஸ் கிட்டயும் இருக்கும் வரை தான் அது பொக்கிஷம். றேடியோஸ்பதில போட்டாச்சுன்னா அது உலக பொதுமறை

Unknown said...

என்ன அற்புதம்! உங்களுக்கும், நண்பர் ரவிக்கும் என் நன்றிகள். கேட்கும் போது சர்வ சாதாரனமாய் தெரியும் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் இந்த மகா கலைஞனின் கடின உழைப்பும் அவருக்கு தோள் கொடுத்த இசை கலைஞர்களும் பாடு படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒலிப்பதிவு சாட்சி. எப்படி முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரே வேலையை (இசை அமைப்பது) வேறெந்த கவனச் சிதறலும் இல்லாமல் கட்சிதமாக இவரால் செய்ய முடிகிறது? இதனால் தான் இவரை இசை மேதை என்று கூருகிறமோ?

கோபிநாத் said...

@ இளா அண்ணே இதொல்லாம் ஓவரு ஆமா ;)))))

கோபிநாத் said...

சூப்பரு ;))

தல & தல ரொம்ப நன்றி ;))

Anonymous said...

Thanks :-)

G.Ragavan said...

நல்ல ஒலிப்பதிவு. மிக அருமை. ஒரு பாடல் உருவாகும் ஒத்திகை கேட்பதற்கு மிகப் புதுமையான பழமையாக இருந்தது.

நீங்கள் சொன்ன ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா நல்ல பரிச்சயம்.

இந்தப் பாடலைக் கேட்கையில் இளையராஜா இசையில் டி.எம்.எஸ் பாடி வந்த "சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி" பாடல் நினைவிற்கு வருகிறது.

கவியரசரின் இறுதிக்காலத்தில் அமெரிக்காவிற்கு வைத்தியம் பார்க்கச் சென்றிருந்தார். அப்பொழுது இதே போல இசை ஒத்திகையைப் பதிவு செய்து எம்.எஸ்.வி அமெரிக்காவிற்கு அனுப்பினாராம். ஆனால் அது சென்று சேர்வதற்குள் கவியரசர் இறைவனடி சென்று சேர்ந்து விட்டாராம். அந்த ஒலிக்கோப்பு கிடைத்தாலும் பதிவிடுங்கள்.

Anonymous said...

//பாலு வரலேன்னா அவரே பாடி ரிகார்ட் ஆகி இருக்கும்.லொள்ளு ஜாஸ்தி.// - ஒரு வேளை ஜானகி அம்மா வரலேன்னா? :)))

//"சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி"// - தேடிபாப்போம்...

அனைவருக்கும் நன்றிகள்

~ரவிசங்கரனாந்து

Anonymous said...

ஒரு விஷியம் கவனிச்சீங்களா ? ராஜா சார் சொல்லிகுடுத்த மாதிரி துளி கூட மாறாம பாலு சார் பாடியருக்கார்..

கானா பிரபா said...

ராம்ஜீ

இந்த வீடியோவைத் தேடிக்கொண்டிருந்தேன் மிக்க நன்றி நண்பா

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்

வாங்க ரவிஷங்கர்

ஜானி ஒலிப்பதிவு அனுபவம் நிச்சயம் வெகு சிறப்பானதாக இருக்கும் ஆனால் அது கிட்டுமோ தெரியவில்லை

இளா

பார்க்கிறேன் ;)

கானா பிரபா said...

மீனாட்சி சுந்தரம்

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் தான் எனக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள்.

தல கோபி

நன்றி

வருகைக்கு நன்றி புனிதா

வாங்க ராகவன்

கவியரசரின் அந்தப் பாடல் தேடுவந்து பெரும் சிரமமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அறிந்திராத தகவல்களுக்கு நன்றி

geethappriyan said...

தல,செம சூபர் பகிர்வு,ராஜாசார் ஆரம்ப கால குரல் கணீர்,என்னிடம் காற்றில் வரும் கீதமே-கண்ணனே அறிவாயோ? ,வித் வாலி டிவெலெபிங் சாங் இருக்கு,வேணும்னா சொல்லுங்க!!!

கானா பிரபா said...

கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

தல,செம சூபர் பகிர்வு,ராஜாசார் ஆரம்ப கால குரல் கணீர்,என்னிடம் காற்றில் வரும் கீதமே-கண்ணனே அறிவாயோ? ,வித் வாலி டிவெலெபிங் சாங் இருக்கு,வேணும்னா சொல்லுங்க!!!//

வாங்க தல, வச்சுக்கிட்டு வஞ்சனை பண்ணலாமா, உடனே அனுப்புங்க ;)

தருமி said...

//காற்றில் எந்தன் கீதம்” பாட்டு ரிக்கார்ட் செய்யும் போது “ஒலிப்பதிவுகள்” //

கிடைத்தால் இங்கே போடுங்கள், pl.

Vignesh Subramanian said...

அன்புள்ள கான பிரபா:
உண்மையிலேயே இந்த பதிவு ஒரு அறிய பொக்கிஷம்தான். ராஜா எந்த அளவுக்கு நுணுக்கமாக யோசித்து இசை அமைக்கிறார் என்பதை இது போன்ற நேரடி உதாரணங்களால் நன்கு உணர முடிகிறது.
1:53-ல் ராஜா "கப்பாஸ மட்டும் கொஞ்சம் bright-ஆ போட சொல்லுங்க" என்கிறார். அதன் படியே 1:57 லிருந்து 2:00 வரை அந்த கப்பாஸ் கலைஞர் கொஞ்சம் வலுவாக கப்பாஸை போட்டு காண்பிக்கிறார். பின்னர் ராஜா "ஆன்.. ஓ கே ..ஓ கே" என டேக்கிற்கு போகிறார்..

இதை கேட்டவுடன் நான் அதிர்ந்து விட்டேன். காரணம், இந்த கப்பாஸ் என்பது கொட்டங்குச்சியின் மேல் பாசி ஊசிகளால் சுற்றப்பட்டு செய்யும் ஒரு தாள வாத்தியம். பாடலின் தாள வேகத்தை சுட்டி கட்ட பயன்படும் ஒரு இசைக் கருவி (Sort of a Metronome). பொதுவாக ஒரு தாளவோட்டத்தில் உள்ள ஒவ்வொரு முழு அக்ஷரத்திலும் வாசிக்கப்படும் மிக மிக முக்கியமான ஒரு வாத்தியம். ஆனாலும் கூட கடைகோடியாக உதாசீன படுத்தப்படும் ஒரு வாத்தியம் (சிங்கி -யை போல என வைத்துக் கொள்ளலாம்). அதை வாசிப்பவர் "ஒட்டு மொத்த இசைக் குழுவிலும் கடைந்தெடுத்த உதவாக்கரை" என சாதாரண ரசிகர்கள் என்னலாம். ஏனென்றால் இதை வாசிக்க என தனி இசை ஞானாமோ, அபார இசை கல்வியோ தேவை இல்லை. நம்முடன் கூடவே பிறந்திருக்கும் பொது இசையறிவை உணரக்கூடிய யாவருமே இதை எளிதாக வாசிக்கலாம். இதனாலேயே பஜனைகளிலும் பிற சிறிய இசை நிகழ்சிகளிலும் இந்த கப்பாஸை நாம் தவறாமல் பார்க்கலாம்.

ஆனால் அவ்வளவு பெரிய இசைக்குழுவில், இவ்வளவு சிறிய கருவிக்கு ஒரு முக்கியத்துவம் அளித்து ஒத்திசை மறுபடி பார்க்கபடுகிறது. தான் வாசிக்கும் அந்த கருவியின் இசையும் அனைத்து வாத்தியங்களையும் மீறி பட்டி தொட்டிகளை சென்றடையும் என அந்த கப்பைஸ் வாத்திய கலைஞர் எவ்வளவு முக்கியமாக உணர்ந்திருப்பார்... மகிழ்ந்திருப்பார்..

இவ்வளவு ஜீவனுடன் உருவாக்கப்படும் இந்த இசையை .. இந்த வழிமொழியை நாம் இழந்துவிட்டோம் என எண்ணுகையில் உண்மையிலேயே இதயம் வலிக்கிறது!!!

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..

அன்புடன்
விக்கி

கானா பிரபா said...

வணக்கம் விக்கி

உங்களின் வலைப்பதிவில் இருக்கும் ராஜா குறித்த பகிர்வுகளைப் பிரமிப்புடன் வாசித்து வருபவன். இங்கே நீங்கள் பின்னூட்டம் வாயிலாகச் சொன்னது ராஜாவின் இசைஞானமும் இந்த இசைத் தொழில் மீது கொண்ட எல்லை கடந்த நேசமும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. உங்களை முழுமையாக வழி மொழிகின்றேன். மிக்க நன்றி உங்கள் ஆழ்ந்த கருத்துக்கு.

Anonymous said...

ஒ என் உயிரின் உயிரே,என் ஆன்மாவினுள் நுழைந்த ஞான பிரவாகமே உன் தேசம் உலாவிய கால்களையும்,காற்றை இசையாக்கிய கை விரல்களையும்,ஒரு முறை தொட்டுவிட்டால் என் ஆன்மா மனிதாய் வந்த பயன் அடையும் .அ.லோகநாதன் T.N.E.B நாராயனசாமி லே அவுட்,அம்மாபாளையம் திருப்பூர்

Tamil Treasures said...

A couple of years ago someone had published in their blog an entire recording session from end to end - of the song sung by Raja himself in the 80s - 'Gnanathangame Gnanathangame En patta kelamma'. That was an outstanding capture. I did not find it in google now, but please locate and hear it, it is really outstanding. The blog author also writes about how he got the opportunity to record it.

Tamil Treasures said...

http://isai-alias-raja.blogspot.com/2006_04_01_archive.html

Look for nyanathangame recording series in this link.

Thanks
RJAY

Unknown said...

Requesting to re-upload the loop in any accepted format. We cant play as of now