Pages

Wednesday, September 30, 2009

சிறப்பு நேயர் "நாடோடி இலக்கியன்"


ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடர்கிறது, றேடியோஸ்பதி சிறப்பு நேயர்.
இந்த வாரம் சிறப்பு நேயராக வந்து கலக்குபவர் நண்பர் நாடோடி இலக்கியன்.

வலையுலகிற்கு வந்த பின்னர் , ஒத்த சிந்தனையுள்ள பதிவர்களின் பதிவுகளைத் தேடிப் படிக்கும் வழக்கம் கொண்ட எனக்கு நாடோடி இலக்கியனின் பதிவுகளைப் படிக்கக் கிடைத்தது உண்மையில் ஒரு வரப்பிரசாதம் என்பேன். ஒரு குறிக்கப்பட்ட எல்லைக்குள் நின்று தன் எழுத்தை வைக்காமல் பரந்து விரிந்த அவரின் எழுத்தாற்றலுக்கு நானும் ஒரு விசிறி என்பேன். நாடோடி இலக்கியன் தந்த மலையாள சினிமாக்கள் தொடரை வைத்துக் கொண்டு தான் விடுபட்டுப் போன படங்களைத் தேடிப் பார்க்கின்றேன். நனைவிடை தோய்தலாகட்டும், சினிமா பார்வையாகட்டும் இவரின் பாணி தனித்துவமானது. பெரும் பிரபலமான பாடல்கள் மட்டுமன்றி, மலர்ந்தும் மலராத பாடல்களாக ஆனால் சிறப்பான இசையமைப்பில் வந்த அதிகம் ரசிகர் கவனத்தை ஈர்க்காத பாடல்களையும் தேடி எடுத்துச் சிலாகிப்பது இவரின் தனித்துவம். அதற்கு உதாரணமாக நாடோடி இலக்கியன் இந்த சிறப்பு நேயர் பகுதியில் தொகுத்துத் தந்திருக்கும் எல்லாப் பாடல்களுமே நல்லுதாரணங்கள். ஒரு காலத்தில் நான் விரும்பி ரசித்துக் கேட்ட அந்தப் பாடல்களை இவர் மூலம் பகிரும் போது மீண்டும் கேட்கும் போது புத்துயிர் பெறுகின்றேன்.

இதோ நாடோடி இலக்கியன் பேசுகின்றார் இனி.



1.எஸ்.பி.பியும் கே.ஜே.யேசுதாஸ் அவர்களும் இணைந்து பாடிய பாடல்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும். இசைப் பிரியர்கள் பெரும்பாலானோருக்கு இவ்விரண்டு ஜாம்பவான்களும் இணைந்து பாடிய பாடல்கள் என்றால் சட்டென்று நினைவுக்கு வரக்கூடியது தளபதி படப்பாடலான “காட்டுக் குயிலு மனசுக்குள்ளே” பாடலாகத்தான் இருக்கும்.’ நட்பைக் கூட கற்பை போல எண்ணுவேன்’ என்ற வரிகளுக்காகவே நான் ரொம்பவும் சிலாகித்து ரசித்தப் பாடல் இது.

எனது விருப்பமாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பாடலும் கூட இவர்கள் இருவரும் இணைந்து பாடிய இன்னொரு பாடலே.இந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் இலங்கை வானொலியில் நாள் தவறாது தேனருவி என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்புவார்கள்.அதன் பிறகு எங்குமே கேட்டு ரசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.அப்பாடலை சமீபத்தில் பெரு முயற்சி எடுத்து ஒரு இணைய தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொண்டேன்.

இனியவன் இசையில் வைரமுத்துவின் வைர வரிகளில் கௌரி மனோகரி படப் பாடலான“அருவிகூட ஜதி இல்லாமல்” என்று தொடங்கும் பாடலைத்தான் முதல் தேர்வாக உங்களோடு கேட்டு ரசிக்க ஆவல்.



2.அடுத்து ஒரு Female டூயட். இதோ இதோ என் நெஞ்சிலே, ஒரு கிளி உருகுது,ஏ மரிக்கொழுந்து, மணிக்குயில் இசைக்குதடி போன்ற பாடல்களிலிருந்து எந்த பாடலை கொடுப்பது என்ற குழப்பதின் நடுவே இங்கே நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் புதுப்பட்டி பொன்னுத்தாயி படப் பாடலான 'ஊரடங்கும் சாமத்தில'. சுவர்ணலதாவின் காந்தக் குரலையும்,உமா ரமணனின் கணீர் குரலையும் வைத்து அற்புதமான மெட்டில் விளையாடியிருப்பார் இளையராஜா.



3.அடுத்து ஒரு Male solo, வானமழை போலே(இது நம்ம பூமி),சோலை மலரே(பாட்டு வாத்தியார்) போன்ற சில பாடல்களில் எதை தேர்வு செய்வதென்ற குழப்பத்தினூடே நான் பகிர விரும்பும் பாடல் கே.ஜே.ஏசுதாஸின் குரலில் தேனாக செவியை நனைக்கும் ”சோலைப் பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்ல பைங்கிளி” . படத்தின் பெயர் பூவே பொன் பூவே. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பாடல் இது.இதன் Female version ஜானகி பாடியிருப்பார். அற்புதமான இசையமைப்பு. இப்பாடல் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்தது,வேறெங்கும் இப்பாடலை கேட்க முடிவதில்லை.



4.அடுத்து ஒரு Female solo, இதிலும் அடி ஆடிவரும் பல்லாக்கு,விளக்கு வைப்போம் போன்ற சில பாடல்கள் என மனதில் வரிசைக் கட்டி நின்று குழப்பியது மிகவும் மனதை சமாதானப் படுத்தி உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் படத்திலிருந்து ராஜாவின் இசையில் ஜானகியின் கொஞ்சும் குரலில் துள்ளலாய் இருக்கும், உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் திரைப்படப்பாடலான ’ஓஹோஹோ காலைக் குயில்களே’ பாடலை முடிவு செய்திருக்கிறேன். இந்த பாடலை ஊட்டியில் படமாக்கியிருப்பார்கள் எப்போது ஊட்டிக்கு போகும் போதும் அங்கு காணும் காட்சிகளை பார்க்கையில் இப்பாடலும் , “தூரி கிழக்குதிக்கின்” என்ற மலையாளப் பாடலும் தான் நினைவுக்கு வரும்.



5.அடுத்து male,female இணைந்து பாடிய பாடலாக ஒரு பாடலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இங்கேயும் ’என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட’ (உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்), ’தென்றலிலே மிதந்து வந்த’(புதிய தென்றல்), ’காத்திருந்தேன் தனியே’(ராசா மகன்) என ஒரு பெரிய லிஸ்ட் மனத் திரையில்.
இறுதித் தேர்வாக வனஜா கிரிஜா படத்தில் இருந்து எஸ்.பி.பி யும் சுவர்ணலாதாவும் இணைந்து பாடிய ’உன்னை எதிர் பார்த்தேன்’ பாடல். எத்தனை முறைக் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான மெட்டு.

20 comments:

நிஜமா நல்லவன் said...

அருமையான பாடல்கள். புதுப்பட்டி பொன்னுத்தாயி பாடல் நிறைய முறை கேட்டு இருக்கிறேன். மிக பிடித்த பாடல்.

தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க பாடலும் மிக பிடிக்கும்.

நன்றி பாஸ்!

நிஜமா நல்லவன் said...

இசை ஆர்வலர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கலக்கிட்டீங்க!

வாசுகி said...

எல்லாமே இனிய பால்கள்.
"அருவிகூட ஜதி இல்லாமல்" இப்போது தான் முதலில் கேட்கிறேன்.:(
superb

பிரபா அண்ணா,
உங்களிடம் எல்லா பாட்டும் இருக்கா?
கலக்கிறீங்கள்.

*இயற்கை ராஜி* said...

அருமையான பாடல்களாகத் தான் இருக்க வேண்டும் என இலக்கியனின் விளக்கமே பறைசாற்றுகிறது... பாட்டை கேட்டுட்டு அப்புறம் பின்னூட்டறேன்

சென்ஷி said...

நல்ல அருமையான இசைத்தொகுப்பு..

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் பாரி

சுரேகா.. said...

நல்ல அருமையான தொகுப்பு!

வாழ்த்துக்கள் நாடோடி இலக்கியன்
கானா அண்ணா!

தென்றல் said...

கலக்கல்! அருமையான பாடல்கள்.

நன்றி!

கோபிநாத் said...

நாடோடி இலக்கியன் கலக்கிட்டிங்க...மனதுக்கு மிக இதமான பாடல்கள் கொண்ட தொகுப்புங்க.

;)

Anonymous said...

//சுவர்ணலதாவின் காந்தக் குரலையும்,உமா ரமணனின் கணீர் குரலையும் வைத்து அற்புதமான மெட்டில் விளையாடியிருப்பார் இளையராஜா//

இவங்க குரல்ல மயங்காதவங்க இருக்கவே முடியாது. இனிய பாடல்கள். நன்றி காபிக்கும் நாடோடி இலக்கியனுக்கும்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி கானா பிரபா.நீண்ட நாட்களுக்குப் பிறகு ’சோலைப் பூந்தென்றலில்’ பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.படத்தின் பெயரையும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் கூட சில பாடல்களை கேட்டு ரசிக்க ஆவல்.

இசைத் தொகுப்பை ரசித்த அனைத்து நன்பர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றி.

Unknown said...

ALL SONGS GOOD

THANKS PRABA/ELAKIYAN


S Maharajan
DubaI

மணிஜி said...

நல்லாயிருக்கு நண்பா..வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமை அருமை அருமை

rapp said...

நான் பல நாட்களாக தேடிக் கொண்டிருந்த இரண்டு பாடல்களை கேட்க முடிந்தது. அருமையானப் பாடல்கள்.

thamizhparavai said...

நண்பர் நாடோடி இலக்கியனின் தேர்வுகள் அழகு...
‘அருவி கூட ஜதிகள்’ பாடல் இப்போதுதான் கேட்கிறேன். இனிமையாக இருக்கிறாது.
‘சோலைப் பூந்தென்றலில்’ பாடலும் அருமை.(இசை ராஜாவா..?அப்படித்தான் தெரிகிறது)
இலக்கியன் சைக்கிள் கேப்பில் லாரியே ஓட்டி விட்டார். ஐந்து பாடல்கள் தெரிவிலேயே,அவரது மற்ற விருப்பப் பாடல்களையும் குறிப்பிட்டு விட்டார்.
மொத்தத் தொகுப்பில் எனது ஃபேவரைட்ஸ், “ஊரடங்கும் சாமத்தில்”,’தென்றலிலே மிதந்து வந்த’ பாடல்கள்...
தொகுத்துத் தந்த கானாபிரபாவுக்கு மிக்க நன்றிகள்.(அடுத்த நேயர் தேர்வுக்கு நான் இப்பவே துண்டைப் போட்டுக்கிறேன்...)

கிரி said...

//ஒரு கிளி உருகுது,மணிக்குயில் இசைக்குதடி //

இந்த இரண்டு பாட்டும் டக்கர் பாட்டாச்சே!

கலைக்கோவன் said...

எப்போதும் கேட்க கிடைக்காத பாடல்கள்.
அருமையான தொகுப்பு
வாழ்த்துக்கள் இலக்கியன்.

☼ வெயிலான் said...

நாடோடி இலக்கியன் தெரிவென்றால் சும்மாவா?

அவர் நல்ல பாடகரும் கூட. அவர் குரலில் பல பாடல்களைக் கேட்டிருக்கிறேன். :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி மஹராஜன்,

நன்றி தண்டோரா,

நன்றி தூயா நன்றி ராப்,

நன்றி தமிழ்ப்பறவை,(நண்பா ரசனைக்காரராச்சே நீங்க உங்க விருப்பப் பாடலையும் கேட்டு ரசிக்க ஆவல்).

நன்றி கிரி.

நன்றி கலைக்கோவன்.

நன்றி வெயிலான்,(என்னடா காலையிலியில் இருந்தே தும்மல் வந்துட்டே இருக்கேன்னு நெனச்சேன்,ஏன் இப்படி இருங்க ஊருக்கு வந்து ஒரு 10 பாட்டு பாடிட்டு வரேன் :) )

எல்லாத்துக்கும் மேலாக ஒரு பெரிய நன்றி நண்பர் கானா பிரபாவிற்கு.