Pages

Saturday, September 5, 2009

சிறப்பு நேயர் " சித்தை-பாசித்"

றேடியோஸ்பதி சம்பாதித்த நண்பர்களில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான நண்பர் சித்தை பாசித் ஐ குறிப்பிடலாம். றேடியோஸ்பதியில் வரும் ஓவ்வொரு பதிவுகளையும் சிலாகித்து தன் தனிமடலில் தவறாமல் எழுதிவருபவர் இவர். இசை மீது இவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டையும், இவரின் ரசிப்புத் தன்மையையும் அந்த மடல்களில் இருந்து நான் கண்டு கொண்டேன். சிறப்பு நேயராக இவரை அழைத்த போது எழுதி அனுப்பிய கன்னி முயற்சி இது. ஆனால் பாடல்களைப் பாருங்கள். ஒவ்வொரு பாடல்களுமே தனித்துவமான ரசனை கொண்டவை. இனிய ரமலான் வாழ்த்துக்களை பாசித் மூலம் முன் கூட்டிய வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு அவரின் பாடல் தெரிவுகளைக் கேட்டு அனுபவியுங்கள்.


இளையராஜா இசை ஒரு மருந்து மாதிரி அதிலும் 80களில் அவர்தான் ராஜா.
1.படம் நண்டு
அள்ளி தந்த பூமி
இந்த பாடல் மலேசியா வாசுதேவன் பாடியது
இலங்கை வானொலி தமிழ்சேவை இருந்தபோது எங்கள் வீட்டு வால்வு ரேடியோவில் கேட்ட பாடல். இந்த ஹம்மிங் கூட வரும் இசை இரண்டுமே மனதை மயக்கும்



2. படம் ராஜாத்தி ரோஜா கிளி
பாடல்: ஒடையின்னா நல்லோட
சமீபத்தில்தான் இப்படி ஒரு பாடல் இருப்பது தெரியும்.
கிராமத்துபாடல். இசை தாபேலா அப்படியே பாட்டோடு நடக்கும் புல்லாங்குழல் அழகு.
குருந்தகட்டில் பாடல் கிடைக்கவில்லை.
கோடை வானொலியில் அடிக்கடி நான் விரும்பி கேட்கும் பாடல்



3. படம்:அம்மா
பாடல்: மழையே மழையே

பிரதாப் போத்தன் சரிதா நடித்த படம் இதுவும் ஒரு மென்மையான பாடல்தான்.
இந்த பாடலை என்னால் மறக்கமுடியாது.
ஒரு மழைநாளின் மாலையில் பேருந்து பயணத்தில் கேட்டது.
நானும் எனது நண்பர்களும் பாடலை கேட்டு ரசித்து படம் என்ன என்பதை கண்டுபிடிக்க படாதபாடு பட்டோம்! (இப்பதான் தல இருக்குல)



4. படம்: மெல்.திற.கதவு
பாடல்: வா வெண்ணிலா (ஜானகி)
இது அதிகம் கேளாதா பொக்கிஷபாடல்.
இசைகூட மாறும்.
பள்ளி ஆண்டு விழா பாடல் இது. இப்படி ஒரு பாடலை தெரிவு செய்ததற்கே நிறைய பாராட்டு கிடைத்தது எனக்கு. கைதட்ட வைத்த பாடல்.



5. படம்: தெற்கு தெரு மச்சான்
பாடல்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே
தேவா இசைத்த பாடல் இது.குரல் ஜானகி.
பாடல்கள் பதிய ஊர் ஊராக அழைந்து ஏதோ ஒரு ஊரில் ரிக்கார்டில் எடுத்து பதிந்த பாடல் இன்னும் எப்போது கேட்டாலும் அந்த ஞாபகம் வந்து போகும்.
ஜானகியின் குழைந்த குரல் உங்களையும் ரசிக்க வைக்கும்

9 comments:

ஆயில்யன் said...

சித்தை பாசித் தேர்ந்தெடுத்த பாடல்களில் இரண்டு மட்டுமே நான் கேட்டிருக்கிறேன் மற்றவை எல்லாம் புதிது :)

*இயற்கை ராஜி* said...

எல்லா பாட‌ல்க‌ளும் நான் அறியாத‌வை.. ந‌ன்றி

வாசுகி said...

இறுதி இரு பாட்டு மட்டுமே கேட்டிருக்கிறேன்.

//படம் என்ன என்பதை கண்டுபிடிக்க படாதபாடு பட்டோம்! (இப்பதான் தல இருக்குல)//
:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சித்தை பாசிக் க்கு வாழ்த்துக்கள்.. நல்ல தேர்வுகள்..

ஓடையின்னா வும்
மழையே மழையேவும் எனக்கும் மிகப்பிடித்த பாடல்கள்..

கைப்புள்ள said...

ஓடையின்னா நல்லோடை பாட்டை நான் வளரும் வயதில் கேட்ட நியாபகம். கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழிச்சு இப்போ கேக்கறேன்னு நெனைக்கிறேன்...அப்படியே சிலிர்த்துடுச்சு. சித்தை பாசித் அவர்களுக்கு நன்றி. மழையே மழையே பாடலும் அருமையான தேர்வு. நன்றி

G.Ragavan said...

நண்பர் சித்தை பாசித்திற்கு வாழ்த்துகள்.

ஒவ்வொரு பாடலும் நல்ல பாடல்.

அள்ளித்தந்த பூமி - நண்டு படத்தில் வரும் மிகச்சிறந்த பாடல். கேட்கவும் பார்க்கவும் மிக இனியது. மலேசியா வாசுதேவனைத் தவிர வேறெந்தக் குரலும் பொருந்தியிருக்கும் என்று தோன்றவில்லை.

ஓடையில நல்லோட - இந்தப் பாடலை முன்பு கேட்டிருக்கிறேன். பழக்கமான பாடல்தான். மீண்டும் கேட்கையில் பாடலின் இனிமை மயக்குகிறது. இப்படிப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தந்தமைக்கு நன்றி. இந்தப் பாடலை மின்னஞ்சல் செய்ய முடியுமா?

இதே போல வா அருகில் வா என்ற படத்தில் வரும் "மான மதுரையில் பார்த்தேன் ஒன்னக் கண்ட நாளா மதிகெட்டுப் போனேன்" என்ற பாடலும் இனிமையானது. அதுவும் ஏசுதாஸ் எஸ்.ஜானகி பாடலே.

G.Ragavan said...

மழையே மழையே - கலக்கல் பாடல். சங்கர் கணேஷ் இசை என்பதை ஏற்றுக் கொள்ள மனசு ஒப்பவில்லை என்றாலும் மிக நல்ல பாடல்.

வா வெண்ணிலா - வழக்கமாக எல்லாரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலைத்தான் கேட்டிருப்பார்கள். எஸ்.ஜானகி பாடலும் நல்ல பாடலே. படத்தில் இந்தப் பாடலைப் பார்க்கையில் ... ஆகா... அமலா தன்னோட முகத்தக் காமிச்சிருந்தா என்னன்னு தோணும்.

தென்னமரத் தோப்புக்குள்ள - இந்தப் பாடல் அப்பொழுது பிரபலமான பாடல்தான். இது முல்லைமலர் மேலே பாடலில் "தேவ" வடிவம். :-)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் சித்தை-பாசித் ;))

அருமையான தொகுப்பு கொடுத்திருக்கிங்க.

1- தல பாட்டு கேட்டகல ;(

2 - ஒடையின்னா நல்லோட பாட்டு எல்லாம் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு. அருமையான பாடல்.

3. இப்பதான் கேட்கிறேன் நல்ல மென்னையான பாடல் ;)

4. இந்த பாடல் படத்தில் கொஞ்சம் நேரம் வருமுன்னு நினைக்கிறேன். முழுசாக இப்பதான் கேட்க முடிந்தது.

5. அதிகம் கேட்ட பாடல் தான். அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று ;)

அதிகம் கேட்க மறந்த பாடல்களை மீண்டும் தேர்ந்தெடுத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சித்தை-பாசித்.

தலக்கும் வழக்கம் போல ஸ்பெசல் நன்றி ;)

கானா பிரபா said...

கோபிநாத் said...

1- தல பாட்டு கேட்டகல ;(//

தல

அந்தப் பாட்டு லோட் ஆக டைம் எடுத்திருக்கும். இப்ப செக் பண்ணுங்க, எனக்கு சரியா வருதே