Pages

Wednesday, August 12, 2009

சிறப்பு நேயர் "ரவிசங்கர் ஆனந்த்"

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக சக வலைப்பதிவர்கள் மட்டுமன்றி ஒரு சில வாசகர்களும் இடம் பிடித்திருக்கின்றார்கள். அந்த வகையில் இந்த வாரம் வரும் ரவிசங்கர் ஆனந்தும் இடம்பிடிக்கின்றார். இவர் தனக்கென ஒரு வலைப்பதிவை வைத்திருக்காவிடினும் இளையராஜாவின் பாடல்களில் தீவிர ரசிகனாக பல சந்தர்ப்பங்களில் றேடியோஸ்புதிர், பதிவுகளில் தன் கருத்தை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்.

தன் ரசனையில் முத்தான ஐந்து பாடல்களைத் தெரிவு செய்திருக்கும் இவரின் இந்தத் தெரிவுகளை வைத்தே எப்படியெல்லாம் இளையராஜாவின் பாடல்களில் மொழி கடந்தும் ஈர்க்கப்பட்டிருக்கின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டு. இளையராஜாவின் குடும்பத்தோடு ஒரு வகையில் சொந்தமாகிவிட்ட இவரை சிறப்பு நேயராக இணைத்திருப்பது எமக்கும் பெருமை. சரி, இனி ரவிசங்கர் பேசட்டும்.


நான் பயங்கர இளையராஜா ரசிகன் என்பது , கானா உங்களுக்கே தெரியும் ஆகவே அவர் போட்ட 5500+ பாடல்களும் எனக்கு பிடிச்ச ஒன்று தான். இருந்தாலும் அதுக்குள்ள ஒன்ன நண்பர் கலைகோவன் சொல்லிட்டார் ( செவ்வரளி தோட்டத்திலே )


1. வாட வாட்டுதே ஒரு போர்வ கேக்குதே – சக்களத்தி

ராஜாவின் குரலில் ஒரு கிராமத்து இளைஞனுக்குரிய “innocence” இருக்கும். இரண்டாவது “interlude” அம்சமா இருக்கும்.2. ஒரு சிரி கண்டால் – பொன்முடிப்புழையோரத்து (மலையாளம்)

மாயாமாளவ கௌளை ராகத்தில் அமைந்த ஒரு தேன் கிண்ணம் இந்த பாடல்.
ஹி ஹி ஹி இந்த பாட்ட நான் சொதப்பலா பாடி ஒரு கேரள பெண்ண மிஸ் பண்ணிட்டேன் :(3. சிஹி காலி சிஹி காலி – ஆ தினகலு – கன்னடம்

கடந்த ஓராண்டாக நான் அடிக்கடி முனுமுனுக்கும் கன்னட பாடல் இது. இசைஞானியின் குரலில் ஒரு சிறிய duet பாடல். ( கொஞ்சம் தமிழ் “ accent” கலந்திருக்கும்).
ரொம்ப நாள் கழிச்சு ராஜா கன்னடத்துல வேல செய்த படம். ரொம்ப நாள் கழிச்சு ராஜா இசைல ராஜா வாய்ஸ்ல வந்த டூயட் பாடல் ( பட்டியல்- நம்ம காட்டுல பாடல் exception, அது யுவன் இசை )
4. தலையை குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது

ரீதிகௌள ராகத்தில் அமைய பெற்ற பாடல். பாலு “just like that” பாடி இருப்பாரு. என் அத்தையின் திருமண நலுங்கில் அவர் இந்த பாடலை தான் பாடினார்... சட்டென்று மாமாவும் சேர்ந்து பாடி அந்த இடமே கலகலப்பாக இருந்தது, ஆக அவர்களுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் its a sweet memory5. பூமேல வீசும் பூங்காற்றே – எச்சில் இரவுகள்

பொதுவா எல்லா A.S பிரகாசம் படங்கள் எல்லாமே கொஞ்சம் அறுவையாதான் இருக்கும் (உம் – ஆள பிறந்தவன், பகவதிபுரம் ரயில்வே கேட் ) ஆனாலும் அவர் படத்துக்கு பாடல்களா இருக்கட்டும் இல்லே re-recording ஆ இருக்கட்டும் ஒரு மகேந்த்ரனுக்கு போடறா மாதிரியோ இல்ல பாலு மகேந்திராவுக்கு போட்றமாதிரியோ தான் வஞ்சனையில்லாமல் வழங்குவார் ராஜா. பிச்சைகார கதாநாயகனுக்கு கம்பீரமான யேசுதாஸ் குரல் :-)


சிறப்பு நேயர் தொடருக்கு இதுவரை தங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்காதோர் முத்தான ஐந்து பாடல்களைத் தெரிவு செய்து அதற்கான விளக்கங்கள், ஏன் பிடிக்கும் போன்ற விபரங்களோடு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kanapraba@gmail.com

7 comments:

Anonymous said...

கானா சார்.. நன்றி ஹை!!... எனக்கு மற்ற நேயர்கள் தொகுத்து வழங்கியது போல எழுத தெரியாது.. ரத்தின சுருக்கமாக எழுதி விட்டேன்....radiospathy நேயர்கள் அனைவருக்கும், இந்த பதிவை படித்தமைக்கு நன்றிகள்.
என் வாழ்வின் பெருமைக்குரிய, மறக்கமுடியாத, ராஜா மாமாவுடனான முதல் சந்திப்பில் எடுத்த புகைப்படம், அதனை அழகாக வெளியிட்டமைக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

ராஜா சரணம்!

~ ரவிசங்கர்ஆனந்த்

ஆயில்யன் said...

அதிகம் கேட்டிராத பாடல்கள்

வாசகருக்கும் வாழ்த்துக்கள் :))

கலைக்கோவன் said...

//1. வாட வாட்டுதே ஒரு போர்வ கேக்குதே – சக்களத்தி
ராஜாவின் குரலில் ஒரு கிராமத்து இளைஞனுக்குரிய “innocence” இருக்கும். இரண்டாவது “interlude” அம்சமா இருக்கும்.//
நல்ல தெரிவு .., தேடி புடிச்சி எடுத்திருக்கிங்க போல,

//2. ஒரு சிரி கண்டால் – பொன்முடிப்புழையோரத்து (மலையாளம்)
ஹி ஹி ஹி இந்த பாட்ட நான் சொதப்பலா பாடி ஒரு கேரள பெண்ண மிஸ் பண்ணிட்டேன் //
பாட்டாலா தான் மிஸ் அச்சா?! ஐயோ பாவம் !!

//3. சிஹி காலி சிஹி காலி – ஆ தினகலு – கன்னடம்//
கொஞ்ச நாளைக்கு முன்னால U2 மியூசிக்ல பார்த்தேன் ,கேட்க வைச்சிட்டீங்க நன்றி.

//4. தலையை குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது
ரீதிகௌள ராகத்தில் அமைய பெற்ற பாடல். பாலு “just like that” பாடி இருப்பாரு.//
//5. பூமேல வீசும் பூங்காற்றே – எச்சில் இரவுகள்
பிச்சைகார கதாநாயகனுக்கு கம்பீரமான யேசுதாஸ் குரல் //
ரெண்டும் என்னோட favourite ,இதுக்கு ஒரு special thanks .

வாழ்த்துக்கள் ரவிசங்கர்

Anonymous said...

//வாசகருக்கும் வாழ்த்துக்கள் :))// - நன்றி அண்ணா

// நல்ல தெரிவு .., தேடி புடிச்சி எடுத்திருக்கிங்க போல,// - நெஜமாவே தேடி புடிக்க வேண்டிய நிலையில இருக்கு.. இந்த பாட்ட எந்த டிவிலயும் போட மாட்டேங்கறாங்களே :-( லோக்கல் கேபிள் டிவில கூட போட மாட்டேங்கறாங்களே

// பாட்டாலா தான் மிஸ் அச்சா?! ஐயோ பாவம் !! // - விடுங்கண்ணா கதம் கதம் ..

// ரெண்டும் என்னோட favourite ,இதுக்கு ஒரு special தேங்க்ஸ் //

என்னோட நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார். அவர் பெயர் அலெக்ஸ். அவர் தான் அகில உலக ராஜா ரசிகர் மன்ற தலைவர் :-) மற்றும் புகழ் பரப்பு செயலாளர் :-)
ஆர்குட் ராஜா community அவர் தான் moderator
அவர்ட்ட எல்லா இளையராஜா பாடல்களும் இருக்கு. infact ராஜா சார் கிட்ட இல்லாத அவரோட பாட்டெல்லாம் அலெக்ஸ் கிட்ட இருக்கும் :-).

~ ரவிசங்கர்ஆனந்த்

கோபிநாத் said...

முதலில் ரவிசங்கர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்...அருமையான தொகுப்பு ;)

இப்போதைக்கு இது மட்டும் தான்...!!

Krishna said...

I am Krishna Kumar.

There is a beautiful song. I don't know now the film name. The song is,

"Kuvura kuilu seavala pathu padikkuthu pattu

Nanum mayankiren kettu
mama mayankitalamma, en mamm mayankitralamma.

Nice song. I think heroin is Suganya.

ஷைலஜா said...

நல்ல தேர்வு
கன்னடகானம் இங்கு கேட்கவும் மகிழ்ச்சியாக இருக்கு(பெங்களூர் வாசி என்பதால்:))