Pages

Thursday, March 19, 2009

ஒலியோடு கலக்கும் திரையிசைப் பாடல்கள்

கடந்த றேடியோஸ்புதிரில் கடிகாரம் திருகும் ஓசையோடு ஆரம்பிக்கும் பாடலைப் புதிராகத் தந்திருந்தேன். இன்றைய இசைப் படையலில் புற ஒலிகளை வைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் நான்கைத் தருகின்றேன். இவற்றை விட ஏராளம் பாடல்கள் தமிழ் சினிமாவில் கொட்டிக்கிடந்தாலும் இன்றைய பதிவில் நான்கு வித்தியாசமான களங்களில் இருந்து இந்தப் பாடல்கள் வருகின்றன.

முதலில் வரும் பாடல் பணக்காரன் திரையில் இருந்து "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது" என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் காதற் பாடலாக அமைகின்றது. கடிகாரத் திருகல் சத்தத்தோடு ஆரம்பிக்கும் இப்பாடற் காட்சியும் மணிக்கூடு ஒன்றிலே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் சாகித்யங்களில் இதுவும் ஒன்று என்பதை பாடலை உன்னிப்பாகக் கவனிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம். கடிகாரத்தின் நுணுக்கமான ஒலியில் ஆரம்பிப்பதாகட்டும், பின்னர் சாக்ஸபோனின் ஆரம்பத்தோடு கிட்டார்களின் ஆவர்த்தனம் ஒலிக்கும் போது இணையும் வயலின்களின் ஆலிங்கனம் இடையில் வந்து கலக்கும். கேட்டுப்பாருங்களேன் மீண்டும் அதை உணர்ந்து கொள்வீர்கள்.



ஊர்ப்பெரிய மனுஷர் தம்பியின் தலையில் எண்ணை வைத்து நன்றாகப் பிசைந்து தலையை கொஞ்சம் அதிகமாகவே அடித்து மசாஜ் செய்தவாறே சின்னத்தம்பி பாடும் "அட உச்சாந்தலை உச்சியிலே உள்ளிருக்கும் புத்தியிலே பாட்டு". அப்பாவி சின்னத்தம்பி் மனம் போன போக்கில் பாடும் எசப்பாட்டுக்கு புல்லாங்குழல் ஆமோதிப்போடு, ஜன்னலோரத்தில் ஒளித்திருந்து வளைய வரும் காதலியின் ஏக்கமும் சேர்ந்து கொள்ள அமர்க்களமான மனோ பாடும் இசைஞானியின் மெட்டு இது.



மகேஷ் என்ற அற்புதமான இசைக்கலைஞனை பொறாமை கொண்டு காலன் கான்சரை ஏவி விட்டு நம்மிடம் இருந்து பிரித்துக் கொண்டான். ஒரு சில படங்கள் என்றாலும் மகேஷின் நினைவை மட்டும் காலனால் இசை ரசிகர்களிடம் இருந்து பிரித்து விட முடியாது என்பதற்கு நல்லுதாரணம் "நம்மவர்" திரைப்படம். இப்படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி விழாவில் இசைக்கருவிகள் திருட்டுப் போகவே, பேராசிரியர் கமலும் , மாணவர்களும் வாய் வழி இசை மழை பொழிந்து வழங்கும் புதுமையான பாடல் இது. பின்னணிக் குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



தட் தட் தட் என்று மெதுவாக காலடி ஓசைச் சத்தங்கள் இரண்டு ஜோடி, விடிந்தும் விடியாத பனிக்காலையில் கேட்கிறதா? அது வேறொன்றுமில்லை பருவம் எழுதும் புதிய பாடல் அது. கிட்டாரும், வயலினும் அடக்கி வாசிக்க காதலன் குரலாக எஸ்.பி.பாலசுப்ரமணியமும், காதலி மனசாக எஸ்,ஜானகி ஓசையும் இணைந்து சங்கமிக்கும் "பருவமே புதிய பாடல் பாடு" நெஞ்சத்தைக் கிள்ளாதே திரையில் இருந்து இசைஞானி இளையராஜா இசையில் மலர்கின்றது.


15 comments:

ஆயில்யன் said...

தல

மெஜாரிட்டி காதல் பாட்டு

பருவமேஏஏஏஏஏஏஏஏஎ

பட் செம கலக்கல் சாங்க் எனக்கு நொம்ப்ப புச்சது :)))

MyFriend said...

super. ;)

மாயா said...

சில பாட்டு வரவில்லை போலிருக்கு !

மாயா said...

இப்ப சரியா இருக்கு!!!!! (நாம தான் அவசரப்பட்டுவிட்டோமோ ???)

கானா பிரபா said...

ஆயில்யன் said...

தல

மெஜாரிட்டி காதல் பாட்டு

பருவமேஏஏஏஏஏஏஏஏஎ//

பாஸ், என்ன மலரும் நினைவுகளா :)

கானா பிரபா said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

super. ;)//

நன்றீங்கோ :)

கானா பிரபா said...

மாயா said...

சில பாட்டு வரவில்லை போலிருக்கு !//

வாங்கோ மாயா, பிளேயரிலும் கோளாறு இருந்தது இப்ப திருத்தி விட்டேன்.

ஆயில்யன் said...

//மாயா said...
இப்ப சரியா இருக்கு!!!!! (நாம தான் அவசரப்பட்டுவிட்டோமோ ???)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய் :)))

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
மாயா said...

சில பாட்டு வரவில்லை போலிருக்கு !//

வாங்கோ மாயா, பிளேயரிஆன்லும் கோளாறு இருந்தது இப்ப திருத்தி விட்டேன்.
//

மனசிலும் இருந்துருக்கு போல அதான் ஒரே பாட்டு திரும்ப திரும்ப ரிப்பிட்டகியிருந்துருக்கு

விடுங்க தல நீங்க நொம்ப நல்லவரு :))

butterfly Surya said...

கலக்கல் பதிவு.

வாழ்த்துகள்.

கானா பிரபா said...

மிக்க நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

G.Ragavan said...

ஒவ்வொரு பாட்டும் முத்துகள்.

எல்லாப் பாட்டுகள்ளயும் எனக்குப் பிடிச்சது பருவமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.. என்ன பாட்டு அது.

இளையராஜா இளையராஜா... எங்கய்யா போனீங்க?

அப்படியே மெத்துமெத்துன்னு ஷூ போட்டுக்கிட்டு ஓடிக்கிட்டே பாடுனா.. இப்பிடித்தான் இருக்கும். எவ்ளோ கேட்டாலும் அலுக்காத பாட்டு.

கானா பிரபா said...

வாங்க ராகவன்

அந்த ராஜாவைத் தான் தேடிக்கிட்டே இருக்கோம் ;)

தமிழன்-கறுப்பி... said...

பருவமே புதிய பாடல் பாடு
அது நல்லாருக்கும்...

படத்தோட இயக்குனர் மகேந்திரனா..?

கானா பிரபா said...

வாங்கோ தமிழன்

ஓம் அந்த இயக்குனர் மகேந்திரன்.