
பாடல் ஒன்று
"தாய்மூகாம்பிகை திரையில் இருந்து இளையராஜா பாடும் "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ"
பாடல் இரண்டு
"தாய்மூகாம்பிகை" திரையில் இருந்து பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.வி, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், ஜானகி பாடும் " தாயே மூகாம்பிகையே" (பாடல் உதவி; கோ.ராகவன்)
பாடல் மூன்று
"வியட்னாம் காலனி" திரையில் இருந்து பாம்பே ஜெயசிறீ பாடும் "கை வீணையை ஏந்தும் கலைவாணியே"
பாடல் நான்கு
"சரஸ்வதி சபதம்" திரைப்படத்தில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன் பாடும் "அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி"
பாடல் ஐந்து
மஹாகவி காளிதாஸ் திரையில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன், பி சுசீலா பாடும் "கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்"
பாடல் ஆறு
தண்டபாணி தேசிகர் பாடும் "ஜகஜனனி"
பாடல் ஏழு
"மேல்நாட்டு மருமகள்" திரையில் இருந்து வாணி ஜெயராம் பாடும் "கலைமகள் கையில்"
பாடல் எட்டு
ஆத்மா திரையில் இருந்து ரி.என்.சேஷகோபாலன் பாடும் "இன்னருள் தரும் அன்னபூரணி"
பாடல் ஒன்பது
நிறைவாக ஜெயச்சந்திரன், பி.சுசீலா பாடும் வெள்ளிரதம் திரைப்படத்தில்
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடும் "அலைமகள் கலைமகள்"
11 comments:
அவல், சுண்டல், வடை, முறுக்கு
இவற்றை எனக்கு அனுப்புங்க :)
பாடல்கள் தொகுப்பு அருமை :)
நவராத்திரி நன்னாள் வாழ்த்துக்களுடன்...!
//Thillakan said...
அவல், சுண்டல், வடை, முறுக்கு
இவற்றை எனக்கு அனுப்புங்க :)
///
எனக்கும்......!!!!
(பட் முறுக்கு வேணாம் எனக்கு நொம்ப பிடிக்காது :)
அருமையான தொகுப்பு கானா பிரபா
எங்க அம்மா வீட்டுல சரஸ்வதி பூஜை அன்னைக்குத்தான் எல்லாரையும் கூப்பிடுவோம்.. 6 மணிக்கு வர சொல்லி இருப்போம்.. 5.45 க்கெல்லாம் சுசீலாவின் கானங்கள்ன்னு ஒரு கேஸட் போட்டிருவோம்.. கொலுன்னாலே எனக்கும் அந்த இசை தான் எனக்கு நினைவு வரும்.. ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதன்னு ஆரம்பிச்சு.. ஜெய ஜெய தேவி பாடி, மாணிக்க வீணையேந்தி பாடுவாங்க.. இந்த முறை நான் ஹம்மால இந்த தேவி கானங்களை போட்டு ஊரு ஞாபகத்தை கொண்டுவந்துக்கிட்டேன்...:) இருங்க உங்க பதிவு பாட்டெல்லாம் கேட்டுட்டு வரேன்..
நல்லதொரு பாடல்தொகுப்பு பிரபா. ஜனனி ஜனனி ஜகம் நீ... என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாரதியாரின்
யாதுமாகி நின்றாய்... பாடலையும் இணைத்திருக்கலாமே?
பிரபா,
Please check this,..
http://www.sanakannan.com/radio.html
Krithika,
Houston - TX
நன்றி பிரபா,
ஜனனி ஜனனி பாடலை 1995ற்கு முன்பு எஸ்.ஜி.சாந்தன் இசைக்குழுவில் சேவியர் நவநீதன் எல்லா மேடைகளிலும் பாடுவார். ஆனால் அப்ப ரசித்திருந்த்தேன். இளையராஜா பாடல் என தெரியாது. தெரிந்த நாள் முதல் இந்தப்பாடலை எங்கும் கேட்க தவறுவதில்லை. தக்க சமயத்தில் தக்க பாடல்கள் தக்கார் ஒருவர் மூலம். நன்றிகள் ஐயா!
// Thillakan said...
அவல், சுண்டல், வடை, முறுக்கு
இவற்றை எனக்கு அனுப்புங்க :)//
அனுப்பேலாது, வந்து பெற்றுக் கொள்ளுங்கள் ;)
ஆயில்ஸ் வருகைக்கு நன்றி, முறுக்கு பிடிக்காதா உமக்கு, ஆஹா
வருகைக்கு மிக்க நன்றி முரளிக்கண்ணன்
முத்துலெட்சுமி
நீங்க சொன்ன பக்திப்பாடல் வகையறாக்களை நேற்று வானொலியில் ஒலிபரப்பினேன். ஆயில்யன் நேரடி ஒலிபரப்பை இணையம் வழி கேட்டுக் கொண்டிருந்தார்.
நிர்ஷான்
வருகைக்கு நன்றி, எடுத்த எடுப்பில் கைவசம் கிடைத்த பாடல்களைத் தான் போட முடிந்தது, அடுத்த தடவை இப்பாடலைச் சேர்க்கின்றேன்.
இணைப்புக்கு நன்றி க்ருத்திகா, கண்ணன் அவர்களுக்கும் என் நன்றியறிதலைப் பகிர்ந்து கொண்டேன்.
விசாகன்
சாந்தன், சேவியர் நவநீதன் குரல்களில் நானும் இப்பாடலை ரசித்த காலம் உண்டு மறக்க முடியுமா? வருகைக்கு நன்றி நண்பா
நல்ல தொகுப்பு. நவராத்திரி வாழ்த்துக்கள் கானாஸ்!!
அப்புறம், நிறைய பாட்டுகள் முதல்தடவையா கேட்கிறேன்!!
Post a Comment