Pages

Thursday, October 22, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 15 🎸 ஒரே பாட்டில் நாகேஷுக்கும், நாயகனுக்கும் பாடிய எஸ்பிபி
🎸 ஒரே பாட்டில் நாகேஷுக்கும், நாயகனுக்கும் பாடிய எஸ்பிபி

🎸 பெண் குரலில் பாடிய எஸ்பிபி


எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பெண் குரலிலேயே பாடி அசத்தியிருக்கிறார் தெரியுமா?
“ஹப்பா” என்ற கன்னடப் படத்தில் “மாம மாம மஸ்தி”

ஒலியில் மட்டும் கேட்க


காட்சியோடு


என்ற அந்தப் பாட்டுத் தான் அது. அதுவும் விஷ்ணுவர்த்தன், அம்பரிஷ், தேவராஜ் என்று மூன்று பேருக்கான பின்னணியாக.

நாங்கள் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் எஸ்பிபி தமிழில் தான் ஏகப்பட்ட சாகித்தியங்களைக் காட்டியிருக்கிறார் என்று. தெலுங்குக்காரர்களைக் கேட்டால் ஏட்டிக்குப் போட்டியாக இல்லை தெலுங்கு தேசத்தில் தான் எஸ்பிபி கொடி உயர்ந்திருக்கிறது என்று.

ஆனால் கன்னடர்களோ எஸ்பிபியை மாமூலாகப் பயன்படுத்தாமல் ஏகப்பட்ட வடிவங்களில் செதுக்கியிருக்கிறார்கள்.

அப்படியொன்று தான் மேற் சொன்ன பெண் குரல் எஸ்பிபி. இசை வேறு யாருமல்ல ஹம்சலேகா தான். நடிகை சுமித்திராவின் கணவர், இயக்குநர் ராஜேந்திர பாபு இயக்கிய “ஹப்பா” மகாபாரத்தின் கிளைக் கதை பாதிப்பில் உருவாக்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன், அம்பரிஷ், சசிகுமார் போன்றோர் நடித்த அந்த வெற்றிப்படம் தெலுங்கில் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா நடிக்க “சந்திர வம்சம்” ஆனது. அங்கேயும் இந்த மஸ்தி பாட்டு குஸ்தி போட்டது. தமிழுக்கும் வந்திருந்தால் எஸ்பிபியின் அந்தப் பெண் குரலைத் தமிழிலும் நாமும் ரசித்திருக்க முடியும், எங்களுக்குக் கொடுப்பினை இல்லை.

“வீரா” திரைப்படம் அன்றைய வெற்றிக் கூட்டணியான தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், இசைஞானிஇளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று மூவரும் இறுதியாக இணைந்த வெற்றிச் சித்திரம். அந்தப் படத்தில் கிட்டிய மணி மணியான பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

“அல்லாரி மொகுடு” என்ற தெலுங்குத் திரைப்படம் ரஜினிகாந்தின் நண்பர் மோகன்பாபு நடிக்க, மசாலாமன்னன் ராகவேந்திரராவ் இயக்கி வெற்றி கண்ட படம். அதையே தமிழில் தயாரிக்க ரஜினிகாந்த்பரிந்துரைக்க, பஞ்சு அருணாசலம் நகாசு வேலைகள் செய்து தமிழுக்கேற்ற வகையில் தயார்பண்ணினார்.

இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ரஜினிக்குப் பிடிக்காமல் போனதாகவும், அவற்றை மாற்றும் படிரஜினிகாந்த் பஞ்சு அருணாசலத்திடம் கேட்டார். அவற்றில் ஒன்று “கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட” ஆனால் அந்தப் பாட்டை மாற்ற பஞ்சு அருணாசலத்துக்கு ஒப்பவில்லை, இளையராஜாவும் “இந்தப்பாட்டில் என்ன குறை” என்று கேட்டு அப்படியே இருக்கச் சொன்ன கதையை பஞ்சு அருணாசலம் மகன்சுப்பு பஞ்சுவின் பேட்டி வழியாகப் பலர் அறிந்திருக்கக் கூடும்.

ரஜினிகாந்துக்கு “கொஞ்சிக் கொஞ்சி அலைகள்” ஓட பாடலைப் பிடிக்காது போனதுக்குக் காரணம், அந்தக் காட்சிச் சூழல் தெலுங்கில் ஒரு போட்டிப் பாடலாக ஏகப்பட்ட ஜதிகளோடு கதாநாயகன்மோகன்பாபுவுக்கும், எதிராளியாக இருக்கும் சங்கீத மேதை நாகேஷுக்கும் இடையில் போட்டி போடும் இந்தப் பாட்டு


இதே மாதிரித் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி ஆசைப்பாட்டதிலும் தப்பில்லை. ஆனால்“கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட” பாடல் ரஜினியை மட்டுமே முழுக்க முழுக்க முன்னுறுத்திப் பாடும்பாட்டு. ஒரே குரல். அந்தப் பாட்டு ஏகத்துக்கும் ஹிட்டடித்தது ஊரறிந்த உண்மை.

தெலுங்கில் எஸ்பிபி ஒரே குரலையே நாயகன் மோகன்பாபுவுக்கும், போட்டியாளர் நாகேஷுக்கும்கொடுத்திருப்பார். குரலில் பெரிய மாறுபாடுகளை இந்த இருவருக்கும் காட்டியிருக்க மாட்டார். தெலுங்கில் இசை மரகதமணி.

இதோ தெலுங்கில் இருந்து சுடச் சுட இந்தப் பாடல் கன்னடத்துக்குத் தாவுகிறது. அதாவது வீராவுக்குமுன்பே கன்னடத்தில் ரவிச்சந்திரன் நாயகனாக Gadibidi Ganda என்ற படமாகத் தயாரித்த போது கன்னடத்தில் இசை ஹம்சலேகா. இதோ அந்தப் போட்டிப் பாடல் சூழலும் வருகிறது.

“நீனு நீனே”


என்ற அந்தப் பாடலைக் காட்சியோடு பாருங்கள். இதில் இரண்டு ஆகச் சிறந்த விஷயங்கள்இருக்கின்றன.

ஒன்று,

எஸ்பிபி எவ்வளவு அழகாக நாகேஷுக்குத் தனிக்குரல், நாயகன் ரவிச்சந்திரனுக்குத் தனிக்குரல் என்றுபின்னியிருக்கிறார் பாருங்கள். இந்தப் பாட்டைக் கன்னட தேசத்தவர் இன்னும் உச்சி குளிரக்கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பாட்டில் ஒரு தேர்ந்தெடுத்த சாஸ்திரிய சங்கீதக்காரனாகவும், ஒரு முதிர்ச்சி கண்ட இசைமேதையாகவும் எவ்வளவு தனித்துவம் காட்டியிருக்கிறார் என்பதே மாநிலம் கடந்து நாமெல்லாரும்கொண்டாட வேண்டிய பாட்டு இது என்று சொல்லாமல் சொல்லும்.

இரண்டு,

நாகேஷ் என்ற அற்புதக் கலைஞனை தொண்ணூறுகளில் ஒரு சில கமல்ஹாசன் படங்கள் தவிர்த்துஅவரின் உச்சபட்சத் திறமையைப் பயன்படுத்தத் தவறி விட்டோமே என்ற ஏக்கம் வருகிறது. நாங்கள் தமிழ் நடிகர்களையும் சரியாகப் பயன்படுத்தவில்லை கன்னடத்தின் மிகச்சிறந்த நடிகர் கிரிஷ் கர்னாட் போன்றவர்களையும் வில்லன்களாக்கி அழகு பார்த்து விட்டோம்.

தயாரிப்பாளர்பஞ்சு அருணாசலத்துக்கு நாகேஷ் ஆரம்ப காலத்தில் கொடுத்த புறக்கணிப்பால் பின்னர் தன் தயாரிப்பில் நாகேஷை வைப்பதில்லை என்றும், பின்னர் மைக்கேல் மதன காமராஜனில் நாகேஷே வேண்டிக் கொண்டதன் பேரில் அவரை ஒப்பந்தம் செய்தேன் என்று “திரைத்தொண்டர்” என்ற தனது திரைச்சுயசரிதையில் பஞ்சு அருணாசலம் சொல்லியிருக்கிறார். வீரா படத்திலும் நாகேஷ் இல்லாததன் பின்னணி அதுவாக இருக்கக் கூடும். இல்லாவிட்டால் மூன்று மொழிகளிலும், அதுவும் ரஜினியோடு நீண்டஇடைவெளிக்குப் பின் நடித்த சிறப்பும் நாகேஷுக்குக் கிட்டியிருக்கும்.

ரஜினிகாந்த் பின்னாளில் தன்னுடைய போட்டிப் பாடல் ஆசையை அதாவது வீராவில் விட்டதைப் படையப்பாவில் “மின்சாரப் பூவே” பாடலில் பிடித்துக் கொண்டார் போலும்.

“ஆஹா வந்துருச்சு
காதலில் ஓடி வந்தேன்”

கல்யாண ராமன் படப் பாட்டை மறக்க முடியுமா? மலேசியா வாசுதேவனுக்கும் கூடப் புகழ் சேர்த்த அந்தப் பாட்டு கன்னடத்தில் எஸ்பிபி பாடியிருந்தால் எப்படியிருக்கும்?

கல்யாண ராமன் படம் 14 வருடங்களின் பின் கன்னடத்துக்குத் தாவுகின்றது.
ரவிச்சந்திரன் நடிப்பில் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹம்சலேகா இசையமைக்க “ஶ்ரீராமச்சந்திரா” படம் வெளியாகிறது. அந்தப் படத்தின் பாடல் கேசட் விற்பனை சாதனை படைக்கிறது.
இப்பேர்ப்பட்ட படத்தில் அந்த ஆஹா வந்திருச்சு பாடலுக்கு நிகராக வந்தது தான்
எஸ்பிபி பாடிய “சுந்தரி சுந்தரி”

இந்தப் பாட்டில் எஸ்பிபி தன் குரலை மாற்றிப் பாடும் ஜாலம் ஆகா நினைத்துப் பார்க்க முடியுமா இன்னொருவரை?

எஸ்பிபி இந்த இருண்ட காலத்தில் பேஸ்புக் வழியே ரசிகர் விருப்பப் பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் பாடிப் பகிர்ந்த சூழலில் இந்தப் பாடலையும் பாடியிருந்தார்.

எஸ்பிபி கன்னடத்தில் முதன் முதலில் பாடிய படம்
"Nakkare Ade Swarga"
இதில் பி.சுசீலா அவர்களுடன் பாடிய பாட்டு “கனசிதோ”

எஸ்பிபியின் உறவினரான எம்.ரங்காராவ் இசையமைத்த இந்தப் பாடல் தான் எஸ்பிபி பாடகராக வந்து இரண்டாவதாகப் பாடிய பாடல் என்று கன்னடர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்பிபி தன் படங்களுக்குக் கண்டிப்பாக வேண்டும் என்று நடிகர் விஷ்ணுவர்த்தன் ஒப்பந்தமாகும் போதே கணக்கு வைப்பதாகவும் சொல்வார்கள்.

“எஸ்பிபி ஒரு மிகச் சிறந்த நடிகர்,
அதைத் தன் பாடல்களிலும் காட்டி விடுவதால் நான் அந்தப் பாடல் காட்சியில் நடித்து முடித்துப் பார்த்தால் 50 வீதம் கூட நியாயம் பண்ணியதாகத் தெரியாது என்பார்”
கன்னடத்தின் பிரபல நடிகர் சிவராஜ்குமார்

கன்னட சினிமாவில் வேற்று மொழிப் பாடகர்கள் வந்தாலும் எஸ்பிபி அளவுக்கு ஆட்சி செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் அவரது மொழிச் சுத்தம். ஒவ்வொரு வார்த்தைகளைக் கூட பிறப்பால் ஒரு கன்னடன் எப்படி உச்சரிப்பானோ அப்படி என்கிறார்கள் கன்னட தேசத்தவர்.

“இதே நாடு இதே பாஷே
எந்தெந்து நன்னகிறதே”


என்று கன்னடமே நம் உசிரு என்று எஸ்பியைப் பாடிப் படத்திலும் தோன்ற வைத்துச் சிறப்பித்திருக்கிறார்கள். “திருக பானா” என்ற அம்பரிஷ் நடித்த அந்தக் கன்னடப் படத்தில் எப்படித் தன் மகன் எஸ்பிபி என்று தன் வாழும் காலத்தில் தத்தெடுத்துக் கொண்டாரோ அந்த இசையமைப்பாளர் சத்யம் கூட இந்தப் பாட்டில் தோன்றி இசைக்கிறார்.

“இந்தக் கன்னட தேசம் என் மீது ஏன் இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”
என்று நெகிழ்கிறார். மேற் சொன்ன மொழிச் சுத்தம், எஸ்பிபி மீதான அளவு கடந்த நேசம் இவற்றில் தமிழர்கள் நாம் மட்டும் குறைந்தவர்களா என்ன?

Google Translate போல் அச்சடித்தால் போல எஸ்பிபி மீது நம் எல்லோரது நேசமும், பாசமும் மொழி பெயர்க்கப்படும் போது ஒரே அர்த்தத்தையே அது கொடுக்கிறது.

கானா பிரபா

#பாடும்_நிலா #எஸ்பிபி

Wednesday, October 21, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 14 தமிழுக்கு வந்த அம்சலேகாவுக்கு அணி செய்த எஸ்பிபி

 

"எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று 

எதோ.... 

அது ஏதோ...

அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது.....” 

https://youtu.be/cjTVTS2T3t0

அனிருத் யுகத்திலும் இன்னமும் வானொலிகளின் காற்றலைகள் இந்தப் பாட்டைச் சுவாசிக்க மறந்ததில்லை. 

 தொண்ணூறுகளில் பாரதிராஜா மற்றும் அம்சலேகா கூட்டணி மீண்டும் எழுந்த போது, அப்போது அடித்த குஷ்பு அலையால் “கேப்டன் மகள்” படத்தின் இந்தப் பாடல் பட்டி, தொட்டியெங்கும் பிரபலம். அந்த நாள் தொட்டு இன்று வரை பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜா இல்லாத பாடல்களில் “மலரே மெளனமா” வரிசையில் இதையும் அடுக்கி வைக்கலாம். அதுவும் அந்த எஸ்பிபியின் முறுவலும், வைரமுத்துவின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் காதலித்துக் காதலித்து அந்தச் சுவையை எங்களுக்கும் கடத்தும் பாங்கு இருக்கிறதே அடடா. 

“எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று”

பாடலுக்குச் செல்லம் கொடுத்ததால் அதிகம் கவனிக்கப்படாத் குழந்தை என்றொரு குறை இருந்தாலும் இன்று வரை அந்தக் குறையைப் போக்க அவ்வப்போது கேப்டன் மகள் படத்தில் இடம்பிடித்த இந்த "நந்தவனப் பூக்கள் பூத்ததே" https://youtu.be/TTWwrT8LM60

பாடலை வானொலிகள் ஒலிபரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன.

வில்லனின் கோட்டைக்குள் நாயகி பாட்டு என்றால் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்து "பட்டத்துராணி பார்க்கும் பார்வை" ( சிவந்த மண்) இலிருந்து இளையராஜாவின் "இக்கு சாத்து நடை சாத்து" (சேதுபதி ஐ.பி.எஸ்) வரை உதாரணம் காட்டலாம்.

ஆதித்யன் இசையில் "அசுரன்" படத்தில் வரும் "சக்கு சக்கு வத்திக்குச்சி சட்டுன்னுதான் பத்திக்கிச்சு" https://www.youtube.com/shared?ci=21j5iCYE3Ig எனக்குப் பிடித்தமான துள்ளிசை, அதுவும் வில்லனின் கோட்டைக்குள் நிகழும் பாட்டு என நினைக்கிறேன். சரி "ஆட்டமா தேரோட்டமா" பாடலோடு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அடுத்த பந்திக்குப் போவோம் 😀

கொடி பறக்குது படத்தில் இணைந்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் ஹம்சலேகா கூட்டணி இன்னொரு இளையராஜா ஊடலோடு மீண்டும் "கேப்டன் மகள்" படத்துக்காகச் சேர்ந்தது.

"நந்தவனப் பூக்கள் பூத்ததே" பாடல் பிடித்துப் போனதுக்குக் காரணமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொடுக்கும் அந்த கெத்தான குரல் தான்.  

“எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று” பாடலில் மெது மெதுப்பாகப் பாடும் எஸ்பிபியா இப்படி ஒரு மிரட்டல் குரலில் பாடுவது என்ற பிரமிப்பும் கூடவே.

மென்மையாக ஒடுங்கும் சித்ரா குரலுக்கு மாறுபட்ட வில்லத்தனம் மிளிரும் குரல் நெப்போலியனுக்கான முதல் பாடல் என நினைக்கிறேன். இதே மாதிரித் தானே "மண வினைகள் யாருடனோ" என்று எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முதலாக ரஜினிக்கு குரல் கொடுத்திருப்பார்.

கேப்டன் மகள் பாடல்களைக் கேட்க

https://youtu.be/OVs7frBEikU

அந்தக் காலத்தில் “கொடி பறக்குது” பாடல்கள் ஒரு புறம் பட்டையைக் கிளப்ப, இன்னொரு புறம் “கொடி பறக்குது” சேலைக்கும் ஏக மவுசு. ஒரு படத்தில் நாயகி அணியும் வித்தியாசமான நிற வடிவமைப்புக் கொண்ட சேலைக்கு அந்தப் படத்தின் பெயரையே வைத்து விடும் பாரம்பரியம் அது. சேலைக் கடைகளில் தீபாவளிக்கு “கொடி பறக்குது” சேலை என்ற விளம்பரம் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதி விளம்பர ஒலிபரப்பு லவுட்ஸ்பீக்கட் வழியே பரவியது இன்னும் பசுமையாக நினைவில்.

தமிழில் இளையராஜா & பாரதிராஜா கூட்டணியில் விரிசல் வந்த போது இசையமைப்பாளர் தேவேந்திரனோடு “வேதம் புதிது” வழியாக ஒரு மெல்லிசைக் கூட்டணி எழுந்தது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, அமலாவோடு பாரதிராஜா சேர்ந்து எதிர்பார்ப்பைக் கிளப்பிய படமாக “கொடி பறக்குது” வந்தது. அம்சலேகாவோடு முதன்முறை இணைந்தார் பாரதிராஜா.

சொல்லி வைத்தது போலக் கில்லி அடித்தது கொடி பறக்குது படப் பாடல்கள். தன் பாணியில் ஒவ்வொரு பாடல்களுக்கும் அறிமுகம் வேறு கொடுத்துச் சிறப்பித்திருந்தார் “கொடி பறக்குது” இசைப் பேழையில் பாரதிராஜா.

“ஓஓஓ காதல் என்னைக் காதலிக்கவில்லை” இரண்டு வடிவங்களில் ஒலிப்பதிவானது.

ஒன்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு வாணி ஜெயராம், இன்னொன்று சித்ரா சேர்ந்தது. படத்தில் வந்தது எஸ்பிபி & சித்ரா சேர்ந்தது தான். 

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” எண்பதுகளின் பாடல் தொகுப்புகளில் தவிர்க்க முடியாத பாட்டு. கூடவே சேலைக் கடைகளுக்கான வானொலி விளம்பரங்களுக்கும் கை கொடுத்தது.

எஸ்பிபியின் “அன்னை மடியில்” உருக வைத்தது, மொத்தத்தில் கொடி பறக்குது படம் வணிக ரீதியாகப் போகா விட்டாலும், பாடல்கள் இளையராஜாத்தரமாக இருந்தன.

“கொடி பறக்குது” பாடல்களைக் கேட்க

https://youtu.be/-WwRP6fMmsU

ரஜினிக்கும் ஹம்சலேகாவுக்கும் அப்படி என்ன ராசியோ, கொடி பறக்குது பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியும் படம் எதிர்பார்த்த அளவில் போகாத சூழலில், இன்னொரு படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது அதுதான் “நாட்டுக்கு ஒரு நல்லவன்”. ரஜினி ரசிகர்களே இந்தப் படத்தைக் கெட்ட கனவாக மறக்க நினைக்கும் வேளை இங்கேயும் அம்சலேகா தான் கை கொடுக்கிறார்.

எஸ்பிபி & எஸ்.ஜானகி பாடிய “சின்னக் கண்ணம்மா” https://youtu.be/F6D0Bs7v4Bg

“தென்றலே தென்றலே” https://youtu.be/Slbdeu-Ekb0 ஆகியவை ரசிக்கும் ரகம்.

“நாட்டுக்கு ஒரு நல்லவன்” பாடல்களைக் கேட்க

https://youtu.be/zibkty7i5RI

நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தைத் தயாரித்தவர் கன்னட நடிகர் ரவிச்சந்திரன், தான் கன்னடத்தில் அறிமுகமாக்கிய குஷ்புவோடு இங்கே ரஜினியோடு இணை நாயகனாகவும் நடித்தார். அதாவது கன்னடத்தில் ரவிச்சந்திரன், தெலுங்கில் நாகார்ஜூனா, தமிழில் ரஜினி என்று மூன்று நாயகர்கள் மூன்று மொழிகள் என்று சம காலத்தில் இந்தப் படங்களை இயக்கி வெளியிட்டார் ரவிச்சந்திரன். தமிழ், தெலுங்கில் இணை நாயகனாக ரவிச்சந்திரன், கன்னடத்தில் தானே முக்கிய நாயகனாகவும், ரமேஷ் அரவிந்த் இணை நாயகனாகவும் என்று இயக்கிய அந்தப் படங்கள் மூன்று மொழிகளிலுமே பப்படம் ஆயின.

பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி (நடிகர் விஷாலின் அப்பா) 1989 இல் இரண்டு படங்களில் இசையமைப்பாளர் அம்சலேகாவை ஒப்பந்தம் செய்தார். அதில் ஒன்று “இது உங்க குடும்பம்”,

ரகுவரன் ராதிகா போன்றோர் நடித்தது. பாடல்கள் பெரிதாகப் போய்ச் சேரவில்லை எனினும் அந்தக் காலகட்டத்தில் பழைய பாடல்களைக் கலந்து புது வரிகளை இட்டுக் கட்டிப் பாடல்கள் புனையும் மரபிருந்தது. உதாரணத்துக்குத் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் வரும் “அலையில பிறந்தவள்”

https://youtu.be/DDV7jgL1UJc

பாட்டு இளையராஜாவின் பங்குக்கும், சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இராம நாராயணன் படங்களிலும் இந்தக் கலவைப் பாடல்களைக் கொடுத்து வந்தனர். அதே பாங்கில் இது உங்க குடும்பம் படத்தில் “நாணமோ இன்னும் நாணமோ” என்ற கலவைப் பாடலை மலேசியா வாசுதேவன், சித்ரா ஆகியோர் பாடினர்.

இது உங்க குடும்பம் பாடல்களைக் கேட்க

https://youtu.be/b1uKdVEHsfo

இது உங்க குடும்பம் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைப் பயன்படுத்தாத குறையை, ஜி.கே.ரெட்டி அதே ஆண்டு தயாரித்த “ஜாடிக்கேத்த மூடி” படத்தில் கானக்கு வைத்துக் கொண்டார் அம்சலேகா.

“ஜாடிக்கேத்த மூடி” படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நான்கு பாடல்கள் எஸ்.ஜானகியோடு என்று அள்ளிக் கொண்டார்.

“தாலி கட்டிய கட்டிய தங்கக்கிளியே

 தள்ளிப்படுத்துக்கடி”

“விட்டு விட்டுத் துடிக்குது மனசு”

என்று எஸ்பிபி & எஸ்.ஜானகி கொடுத்த ஹிட் பாடல்கள் பாண்டியராஜனுக்கு இந்தப் படம் வழியாகப் போய்ச் சேர்ந்தது.

“ஜாடிக்கேத்த மூடி” பாடல்களைக் கேட்க

https://youtu.be/zc2S1tjW06s

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் & இசைஞானி இளையராஜா கூட்டணி தொண்னூறுகளில் எப்படிக் கலக்கியது என்பதை இந்த உலகமே அறியும். ஆனால் ஆர்.வி.உதயகுமாரின் முதல் இரண்டு படங்களில் “உரிமை கீதம்” மனோஜ் - கியான் இரட்டையர்கள் இசையிலும், தொடர்ந்து வந்த “புதிய வானம்” படம் அம்சலேகாவின் இசையிலும் வந்தது. அந்த நேரம் சத்யா மூவீஸ் தயாரிப்பில் சங்கர் - கணேஷ், கங்கை அமரன் உள்ளிட்டோர் இசையமைப்பாளர்களாக இருக்க, இந்தப் படம் நடிகர் சிவாஜி கணேசன் & சத்யராஜ் இணைந்து நடித்த பிரமாண்டப் படமாக அமைந்தது.  தனது முதல் படமான

“உரிமை கீதம்” படத்தில் அனைத்துப் பாடல்களையும் தானே எழுதிய இயக்கு நர் ஆர்.வி.உதயகுமார் “புதிய வானம்” படத்தில் மற்றைய பாடலாசிரியர்களுக்கும் வழி விட்டார்.

அப்படியாக கங்கை அமரன் கூட ஒரு பாட்டை எழுதினார். இந்தப் படத்தில் எழுந்த நட்பால் கங்கை அமரன் இளையராஜாவிடம் ஆர்.வி.உதயகுமாரிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர் தொடந்தது அந்த இசைக் கூட்டணி. அதன் பிறகு தொடர்ந்து 9 படங்களில் இளையராஜா & ஆர்.வி.உதயகுமார் இணைந்த போது பெரும்பாலும் ஆ.வி.உதயகுமாரும், ஒன்றிரண்ட்ஜ் வாலியுமாக இருக்க, சிங்காரவேலன் படத்தில் மட்டும் பாடலாசியர் கலவையில் கங்கை அமரனுக்கு ஒரேயொரு பாட்டு கிடைத்தது, அது “ஓ ரங்கா ஶ்ரீலங்கா கொப்பரத் தேங்கா”.

இந்தப் படத்திலும் ஐந்து பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமே சுளையாக அனைத்தையும் எடுத்துக் கொண்டார். சிவாஜிக்கும் & சத்யராஜுக்குமான கூட்டுப் பாடலை மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.பாலசுப்ரமணியம் (பெண் குரல் பேபி சங்கீதா) சேர்ந்து “ஒரு பாடல் சொல்கிறேன்” என்றும்,

“ராக்கிளியே” என்ற சூப்பர் ஹிட் பாடலையும் ஆர்.வி.உதயகுமாரே எழுதினார்.

https://youtu.be/CffiYNaROtM

புதிய வானம் பாடல்களைக் கேட்க

https://youtu.be/m7z5mzxUrQM

இயக்குநர் P.வாசு நட்சத்திர இயக்குநராக மிளிர்ந்து கொண்டிருந்த காலத்தில் “வேலை கிடைச்சிடுச்சு” படம் அமைகிறது அவருக்கு. ஶ்ரீ ராஜகாளியம்மான் நிறுவனத்தின் தயாரிப்பு.

வாசுவுக்கு மிகவும் பிடித்த சத்யராஜ் தான் நாயகன், இதைத் தொடர்ந்து “நடிகன்” படத்திலும் இந்தக் கூட்டணி பட்டையைக் கிளப்பியது. அதற்குப் பின்னர் கூட சின்னத்தம்பி படத்தில் சத்யராஜே நடிக்க வேண்டியிருந்தது. தயாரிப்பாளர் பாலு வேறு சத்யராஜின் தீவிர ரசிகர். ஆனால் சத்யராஜ் பிரபு தான் பொருத்தமானவர் என்று மறுத்துத் திருப்பி விட்டார்.

இப்பேர்ப்பட்ட சத்யராஜ், கவுண்டமணி, P.வாசு கூட்டணி இருந்தால் வேலை கிடைச்சிடுச்சு சொல்லவா வேண்டும். 

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலியே கவனித்துக் கொண்டார்.

“நெனச்சதும் நடந்தாச்சு உனக்கொரு வேல கிடைச்சிடுச்சு” பாட்டு அந்தக் காலத்தில் வானொலிகளின் பிரியப் பாட்டு.

வேலை கிடைச்சிடுச்சு பாடல்களைக் கேட்க

https://youtu.be/M9vy2zIQpOA

“எலேலேலோ ஆஆஆஆஆ”

எஸ்.பி.பியின் அற்புதமான ஆலாபனை அந்த வயல் தோப்பு எங்கும் வியாபிப்பது போன்ற பிரமை எழ, பாட்டு வருகிறது இப்படி

“சேத்துக்குள்ள நாத்து நட்டு 

நாத்துக்கொரு பாத்தி கட்டுறோம்

காட்டுக்குயில் போட்டுத் தந்த 

மெட்டுக்குள்ள பாட்டுக் கட்டுறோம்”

என்று “கூட்டுக் குரல்கள் குலவ”

“களினியிலே நெல் மணிகள் கண் மலர” என்று தொடரும் அற்புதமான பாட்டுத் தலைவன் எஸ்பிபி & கூடவே சின்னக்குயில் சித் ரா இணையும் அற்புதமான பாட்டு, வேலை கிடைச்சிடுச்சு படத்தில் உண்டு.

https://youtu.be/ucDbj2iyFQo

என்னைப் பொறுத்தவரை அம்சலேகா தமிழுக்கு வந்து கொடுத்த கொடி பறக்குது பாடல்க்ளையோ அன்றி கேப்டன் மகள் பாடல்களையும் கடந்து நான் வெகுவாக ரசிக்கும் பாட்டு இது. உண்மையில் அம்சலேகா அந்தக் கர்னாடகா மண்ணின் இசைச் சாயத்தைத் தமிழில் கலக்க விட்டிருப்பது போன்ற அற்புதமான கலாசாரப் பரிமாற்றமாக இந்தப் பாட்டை எப்போதும் ரசிப்பேன்.

இதே படம் கன்னடத்தில் மீள் தயாரித்த போதும் அம்சலேகா தான் இசை. அங்கே இதே சூழலுக்கு எஸ்பிபி & சித்ரா பாடும் இன்னொடு வடிவத்தில் மிளிரும் இந்தப் பாடலை https://youtu.be/oXA1Ti8EseA கொடுத்திருக்கிறார் பாருங்கள் அங்கே தான் அவரின் இசை வற்றாத நதி என்று நிரூபிக்கிறது.

கானா பிரபா

#பாடும்_நிலா #SPB


Tuesday, October 20, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 13 பிறந்த நாள் வாழ்த்துப் பாடி நடித்த எஸ்பிபிபிறந்த நாள் வாழ்த்துப் பாடி நடித்த எஸ்பிபி

சரணுக்கு அப்பாவாக நடித்த எஸ்பிபி

நடிகர் எஸ்பிபிக்கு குரல் கொடுத்த கே.ஜே.ஜேசுதாஸ்


1982 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டுக்கும் எஸ்பிபியின் சகலகலாவல்லன் 

பாட்டோடு இளமை இதோ இதோ என்று கடந்த 38 வருடங்கள் கடப்பது வாடிக்கைஆனால் 48 

வருடங்களுக்கு முன்பே அவர் பிறந்த நாள் வாழ்த்துப் பாடிஆடி நடித்தும் இருக்கிறார்இம்மட்டுக்கும் 

அவர் பாடகராக வந்து ஆறே ஆண்டுகளில் அதைச் செய்திருக்கிறார்


முகமது பின் துக்ளக்”  சோவினால் எழுதி இயக்கிய அரசியல் நையாண்டிப் படம்இதன் தமிழ் 

வடிவத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸவநாதன்இந்தப் படம் கொடுத்த வெற்றியால் 

தெலுங்குக்கும் போனதுபின்னாளில் தெலுங்குத் திரையுலகின் முக்கிய நட்சத்திர 

இயக்குநராக மிளிர்ந்த தாசரி நாராயணராவ் வசனகர்த்தாவாக இயங்கிய அவரது ஆரம்ப காலப் 

படமாக இப்படம் அமைந்ததுஇயக்கியவர் அந்த நாளின் பிரபல இயக்குநர் பி.வி.பிரசாத்சோ நடித்த 

பாத்திரத்தில்நாயகனாக தெலுங்கின் அன்றைய நகைச்சுவை நாயகன் நாகபூஷணம் நடித்தார்.

தெலுங்கிலும் கூட இது “முகமது பின் துக்ளக்” என்ற பெயரிலேயே வெளிவந்தது.


தமிழில் “முகமது பின் துக்ளக்” படத்தில் இறுதிக் காட்சியை நோக்கி ஒரு பிறந்த நாள் கொண்டாடப்பாட்டு வரும். T.M.செளந்தரராஜன் பாடிய “பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டதுஇன்று” 

https://youtu.be/hgY2JSCU72w என்ற அற்புதமான பாடல் வாலியின் வரிகளில் மெல்லிசை மன்னர் 

இசையில் வந்ததுஅந்தப் பாடலைப் படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி பாடுவதாக இருக்கும்.


இதே பாடல் காட்சி தெலுங்குக்குப் போன போது தெலுங்கில் இசையமைத்தவர் சல்லூரி ஹனுமந்தராவ்இங்கே தான் ஒரு புதுமை கிடைக்கிறதுதமிழில் செளந்தரராஜன் பாடிய பாடல் தெலுங்குக்குப் போன போது “Happy Birthday to you” https://youtu.be/VqTZ9j8hct8


என்று எஸ்பிபியே பாடுகிறார்அது மட்டுமா படத்தில் தோன்றி நடிப்பதும் கூட அவரேஅந்தக்காட்சியையே இங்கே பகிர்கிறேன்எவ்வளவு அழகான இளமையான 26 வயது எஸ்பிபி பாருங்கள்.


கன்னடத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தந்தையாகவும்மகன் சரண் மகனாகவும்குஷ்பு ஜோடியாகவும்

நடித்த படம் Maha Edabidangi. 

இந்தப் படத்தில் ஒரு எதற்கும் லாயக்கற்ற சோம்பேறிக் குடும்பத்தலைவனாக எஸ்பிபி நடித்திருப்பார்.

இதில் எஸ்பிபியும்சரணும் கூட சேர்ந்து ஒரு பாடலில் பாடி ஆடியிருக்கிறார்கள்

அந்தப் பாட்டு “உஷயஉனயதா” 


https://youtu.be/OESsKUiGfKA


இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் இசையில் அந்தப் படத்தின் பாடல்கள் அமைந்தனவிஜயபாஸ்கர் 

எஸ்பியின் ஆரம்ப காலத்தில் எவ்வளவு அழகான பாடல்களைத் தமிழ் ஈறாகத் தந்ததைப் பின்னர் 

விரிவாகப் பார்ப்போம்


இதே படத்தில் இன்னொரு புதுமைநாயகன் எஸ்பிபிக்கு ஒரு சாஸ்திரிய இசைப் பாடல்

ஶ்ரீ சாமூண்டீஸ்வரி தேவி https://youtu.be/rovbv21IIcA

என்ற அந்தப் பாடலைப் பாடுபவர் கே.ஜே.ஜேசுதாஸ்.


இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் இறுதியாக இசையமைத்த படம் Saavira Mettilu என்ற கன்னடப்படம்அதில் எஸ்பிபி Cinema Banthu Nodi என்ற பாடலில்


https://youtu.be/CUK9Q7rCy_U


தோன்றி நடித்திருக்கிறார்.


இந்தப் பதிவுக்கு முந்திய பதிவில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் எஸ்பிக்குக் குரல் கொடுத்தார்

அப்போது இன்னொரு பாடலையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்

சிவனே” 

https://www.youtube.com/watch?v=BsQkQz43cfQ


என்ற அந்தப் பாடலையும் ராஜ்குமாரே எஸ்பிபிக்காகப் பாடினார்ஆக மொத்தம் 2 பாடல்கள் அவருக்கு ஆகா 😃


இந்தப் பதிவில் தனக்குத் தானே குரல் கொடுத்ததும்கே.ஜே.ஜேசுதாஸ் இடம் கேட்டு வாங்கியதுமாக

இந்த எஸ்பிபி என்ற மகா கலைஞனின் சாதனைப் பக்கத்தில் இன்னும் எத்தனை புதுமைகளைக் 

காணப்போகிறோமோ?


கானா பிரபா


#பாடும் நிலா #SPB