Pages

Sunday, August 31, 2008

றேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்?

இப்பவெல்லாம் மலையாளத்தில் வந்த நல்ல படங்களை மீண்டும் தமிழில் எடுத்துப் பழிக்குப் பழிவாங்கும் சீசன். எனவே இந்தப் போட்டி ஒரு மலையாளப்படத்திலிருந்து வருகின்றது.

ஹலோ ஹலோ, மலையாளம் என்றதும் ஓடிடாதீங்கப்பா.

இந்தப் மலையாளப்படத்தின் கதை ஒரு வரலாற்றுப் பின்னணியோடு அமைக்கப்பட்டது. ஒரு பிரபல நடிகரின் தயாரிப்பில் வந்தது. மீண்டும் தமிழில் எடுத்துக் காயப்படுத்தாமல் அப்படியே மொழிமாற்றிவிட்டார்கள். இந்தப் படத்தின் இயக்குனரை இப்போது ஹிந்தி பீல்டில் தான் தேடவேண்டியிருக்கு.தமிழில் ஒரு பாடலாசிரியரை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்திய திரைப்படமும் கூட. இங்கே கங்கை அமரன் பாடும் ஒரு பாட்டுத் துண்டத்தைக் கொடுத்திருக்கின்றேன். நல்ல பிள்ளையாட்டம் தமிழில் மொழிமாற்றப்பட்ட இந்தப் படம் என்னவென்று சொல்லுங்க பார்ப்போமே.

தமிழில் கங்கை அமரன் பாடும் பாட்டுத் துண்டம்



மலையாளத்தில் இளையராஜா பாடும் பாட்டுத் துண்டம்

28 comments:

  1. சிறைச்சாலை ;-)

    ReplyDelete
  2. சிறைச்சாலை....
    easy :)

    ReplyDelete
  3. என்ன தல இது?

    இவ்ளோ லேசாக் கேள்வி கேட்டா அது புதிரா?

    கொஞ்சம் கஷ்டமாக் கேளுங்க.

    இயக்குனர் ப்ரியதர்ஷன்.

    படம் - சிறைச்சாலை

    வழமை போல பரிசு பார்சல் பண்ணிடுங்க. :)

    ReplyDelete
  4. காலா பாணி தமிழில் சிறைச்சாலை

    வசனம் அறிவுமதி

    ReplyDelete
  5. மோகன்லால் படம். காலாபாணி.. :)தபு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவங்க பாடற பாட்டு அப்படியே மலையாள சாயலில் இருக்குமே...

    ReplyDelete
  6. சிவிஆர்

    பின்னீட்டிங்

    ரிஷான்

    சொல்லுவீங்கப்பு

    ReplyDelete
  7. படம்: காலாபாணி / சிறைச்சாலை
    இயக்குனர்: பிரியதர்ஷன்
    இதில் அறிமுகமான பாடல் ஆசிரியர் / வசனகர்த்தா: அறிவுமதி
    தயாரித்த நடிகர்: மோகன்லால்?

    - என். சொக்கன்,
    பெஙகளூர்

    ReplyDelete
  8. சிறைச்சாலை...

    சட்டுன்னு பிடிபடலை.. ஹிந்தியில தேடிப்பார்க்குற மாதிரி இருக்கற ஒரே டைர டக்கர் நம்மாளு பிரியதர்சன் மட்டும்தான் :)

    ReplyDelete
  9. கயல்விழி மற்றும் முரளிக்கண்ணன், வினையூக்கி

    சரியான கணிப்பு

    ReplyDelete
  10. என்ன தலை இந்தத் தடவை ரொம்ப எளிதா கொடுத்திட்டீங்க..?!
    படம்: காலாபாணி
    தமிழில் 'சிறைச்சாலை'
    ஆமாங்க... பிரியதர்ஷன் இங்க இன்னொரு பி.வாசு...
    மலையாளத்துல ஹிட்டான (அவருடைய மற்றும் ஃபாசில்) படங்களுக்கு (அவற்றோட பிளஸ் பாயிண்டே எளிமைதான்) ,ஹிந்தியில கலர்,கலரா பெயிண்ட் அடிச்சு (பொழப்ப)ஓட்டிக்கிட்டிருக்கிறாரு.
    அவரோட படங்களே (மலையாளம்) எளிமையோடு, நகைச்சுவை இழையோட இருக்கும். இப்போ அவர்கிட்ட சரக்கு தீர்ந்துடுச்சோ என்னவோ...?

    ReplyDelete
  11. தல

    இசையை கேட்ட வேண்டிய அவசியமே இல்ல

    படம் - சிறைச்சாலை

    இசை - இசைஞானி

    நடிகர் - மோகன்லால்

    இயக்குனர் - பிரியதர்சன்

    பாடலாசிரியர் - அறிவுமதி

    ;))

    பீட்டை போடுங்க கலக்கிடுவோம் ;)

    ReplyDelete
  12. காலாபானியானு....இதைத் தயாரித்தது மோகன்லால். இயக்கம் ப்ரியதர்ஷன். இப்ப இந்தில மலையாளப்படம் எடுத்துக்கிட்டிருக்காரு.

    ReplyDelete
  13. என்.சொக்கன்

    கலக்கல்

    சென்ஷி

    நான் கொடுத்த உபகுறிப்பே எனக்கு ஆப்பா ;) சரியான கணிப்பு

    ReplyDelete
  14. தமிழ்பறவை

    ஈசியா இருப்பதையை பலர் திணறித்தான் சொன்னாங்க;)

    தல கோபி

    உங்களுக்கு தானே மலையாளம் அத்துப்படி

    வாங்க ராகவன்

    சரியான கணிப்பு ;)

    ReplyDelete
  15. வணக்கம் பிரபா
    நான் அருண்மொழி,,, நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் வலைப்பதிவுகளில்.....

    அந்த படம் சிறைச்சாலை
    இயக்குனர் - பிரியதர்ஷன்
    பாடலாசிரியர் - அறிவுமதி

    எனக்கு தெரிந்த அளவில் அறிவுமதி முழுப்பாடல்களையும் எழுதிய படம் இது...

    இளையராஜா இசையமைத்த 600 வது படமும் கூட

    ReplyDelete
  16. "சிறைச்சாலை"
    சரியா???
    இந்த இசையை மட்டும் கொடுத்திருந்தால் போதுமே??
    கண்டுபிடிச்சிருப்போமே......

    ReplyDelete
  17. பிரபா

    ஒரு உதவி...

    96ல் வெளியான "வாய்ப்பேச்சு போதுமென்று..." பாடலை கேட்டிருப்பீர்கள். அதன் எம். பி. 3 கிடைக்குமா....... அதன் படம், இசையமைப்பு விஉஅரமும் கிடைக்குமா....

    ReplyDelete
  18. மீ த

    வவ்வவ்வவ்வவ!


    :))))))))))))))

    ReplyDelete
  19. சுரேஷ் மற்றும் அருண்மொழி சரியான கணிப்பு


    //அருண்மொழிவர்மன் said...
    பிரபா

    ஒரு உதவி...

    96ல் வெளியான "வாய்ப்பேச்சு போதுமென்று..." பாடலை கேட்டிருப்பீர்கள். அதன் எம். பி. 3 கிடைக்குமா....... அதன் படம், இசையமைப்பு விஉஅரமும் கிடைக்குமா....//

    வணக்கம் அருண்மொழி

    எனக்கு இந்தப் பாடலை நினைவு படுத்த முடியவில்லை, நடித்தவர்கள் விபரம் தெரிந்தால் சொல்லவும்.

    ReplyDelete
  20. //ஹலோ ஹலோ, மலையாளம் என்றதும் ஓடிடாதீங்கப்பா.
    ///

    அந்த நல்ல உள்ளங்களை எனக்கும் கொஞ்சம் அறிமுகம் செய்து வையுங்களேன் அண்ணா!!!

    ReplyDelete
  21. செம்பூவே பூவே அப்படின்னு வரும் அந்த படத்தில் தபு எம்மாம் பெரிய டிரெஸ் போட்டுக்கினு ஆடுவாங்க அந்த படம் தானே

    அது சிறைச்சாலை :))

    ReplyDelete
  22. மலையாளத்தில் காலாபாணி, தமிழில் சிறைச்சாலை, சரியான பதில்களை அளித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;)

    ReplyDelete
  23. \\அருண்மொழிவர்மன் said...
    இளையராஜா இசையமைத்த 600 வது படமும் கூட\\

    தகவலுக்கு நன்றி அருண் ;))

    ReplyDelete
  24. அருண்மொழியின் தகவலுக்கு நன்றியோடு, தல கோபி என் சார்பின் நன்றி கொடுத்த கடமையுணர்ச்சியை மெச்சுகின்றேன், நன்றி தல

    ReplyDelete
  25. //கானா பிரபா said...

    அருண்மொழியின் தகவலுக்கு நன்றியோடு, தல கோபி என் சார்பின் நன்றி கொடுத்த கடமையுணர்ச்சியை மெச்சுகின்றேன், நன்றி தல//

    ரிப்பீட்டேய்.. ;-)

    ReplyDelete