Pages

Saturday, August 30, 2008

நிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008

கடந்த இருபத்து நான்கு நாட்கள் நிகழ்ந்த ஈழத்திரு நாட்டின் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மகோற்சவ நிகழ்வுகளில் இன்று தீர்த்தத் திருவிழா. கடந்த ஆண்டு மடத்து வாசல் பிள்ளையாரடியில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, அடியார்களின் மகிமைகளைக் கொடுத்திருந்தேன். அந்த முழுத்தொகுப்பினையும் பார்க்க "நிறைவான நல்லூர்ப்பயணம்".

இந்த ஆண்டு நண்பர் ஆயில்யனின் ஆலோசனைப்படி இருபத்தைந்து நாட்கள் ஒலியிலும், இசையிலும் இவ்வாலயத்தின் மகோற்சவ காலத்தை நினைவில் நிறுத்த வாய்ப்பாக அமைந்தது.

இந்தவேளை நண்பர் விசாகனின் "நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா" என்னும் பதிவு நேற்று வெளியாகி எம் பழைய அந்த நினைவுகளை மீட்கவும் அமைந்த நற்பதிவாக இருக்கின்றது. அப்பதிவிற்குச் சென்று பார்த்து உங்கள் அபிப்பிராயத்தையும் அவருக்குச் சொல்லுங்கள்.

நம் தாயகத்தில் இருந்து வரும் "நல்லூர் கந்தசுவாமி கோயில்" என்னும் புகைப்படப் பதிவும் தொடர்ச்சியாக இந்த மகோற்சவத்தின் ஒவ்வொரு நாட் புகைப்படப் பதிவுப் பெட்டகமாக இருக்கின்றது.


நேற்று எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் திரு டோனி.செபரட்ணம் அவர்கள் ஒருங்கிணைப்பில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளில்

"சிவனருட் செல்வர்" திரு ஆறு. திருமுருகன் அவர்கள் ஆலயத்தில் இருந்து அதிகாலை வழங்கிய சிறப்புரை



தேர்த்திருவிழாவின் நேரடி வர்ணனையை வானொலி மாமா மகேசன் அவர்களோடு திரு.ஆறு திருமுருகன் அவர்கள் பகிரும் ஒலிப்பகுதி

9 comments:

  1. "தெய்வமே யான் எனது எனும் செருக்கால் மனது
    தீய வழி செல்லுதையோ
    செய்வதொன்று அறிகிலேன் தேவாதி தேவனே உன்
    திருவருட்பார்வை சாத்தி
    உய்ய வழி காட்டுவாய் உனதல்லாது துணை
    உலகத்தில் எவருமுண்டோ
    வையகம் புகழ் வாழும் நல்லை வடிவேலனே
    மயிலேறு தம்பிரானே!"
    - சிவயோக சுவாமிகள்

    சிவயோக சுவாமிகள்
    வணக்கம்,
    இந்த பணி மகத்தானது. தொடரவேண்டும். நமது கலாசாரம். நமது விழுமியம். நமது கலை. இவற்றை நாம் காப்பாற்றவில்லை என்றால் யார் காப்பாற்றுவார்கள். சென்ற முறை இலங்கை தனியார் வானொலி ஒன்றில் அன்புக்கட்டளை விடுத்தேன். இன்று நல்லைக்கந்தன் தேர் என்று வழமையான இன்றைய நிகழ்வுகள் பகுதியில் சொல்லி முடித்துவிட்டார்கள். ஒரு பாட்டை போட்டிருக்கலாம், அல்லது ஒருவருடைய செவ்வியை ஒலிபரப்பியிருக்கலாம். ஏனோ தவறிவிட்டார்கள். எங்களை நாமே காப்பாற்றும் காலம் இது. தொடருங்கள் முடிந்தவரை.

    ReplyDelete
  2. நன்றி பிரபா.நித்தமும் 25 நாட்களும் நல்லைக் கந்தனை நினைக்க வைத்தீர்கள்.ஊர் திருவிழாக் கால ஞாபகங்களை அப்படியே கண் முண் நிறுத்தி சந்தோஷப்படவும் கலங்கவும் செய்தீர்கள்.நன்றி பிரபா.உடல் நலம் உள நலத்தோடு இன்னும் பல திறமைகளையும் தரட்டும் முருகன் உங்களுக்கு.

    ReplyDelete
  3. நன்றி கானா அண்ணா!


    கடந்த வருடம் தொடர்ந்த 25 நாட்கள் பதிவில் நான் படித்து பக்தி மகிழ்ந்த பதிவுகள் அதை என் ஈழ நண்பர்களோடு பகிர்ந்துக்கொண்டதே என்னை மீண்டும் பதிவில் வையுங்கள் என்ற கோரிக்கை விடுக்க காரணமாக அமைந்தது!

    மிக அரிய எளிதில் இணையத்தில் கிடைக்காத சைவ சொற்பொழிவுகள் நான் கேட்டேன்-ஆவணப்படுத்தியும் இருப்பது மிக்க மகிழ்ச்சிக்குரிய விசயம்!

    நல்லூர் கந்தன் அருளால் நலமாக வாழ வேண்டிக்கொண்டு, வணங்குகிறேன்!
    நன்றி!

    ReplyDelete
  4. //எங்களை நாமே காப்பாற்றும் காலம் இது. தொடருங்கள் முடிந்தவரை.//

    வருகைக்கு நன்றி விசாகன் முடிந்தவரை செய்வோம்.

    // ஹேமா said...
    நன்றி பிரபா.நித்தமும் 25 நாட்களும் நல்லைக் கந்தனை நினைக்க வைத்தீர்கள்.//

    மிக்க நன்றிகள் ஹேமா, ஆண்டவன் நம் இனத்துக்கும் ஒரு நிரந்தர விடிவைத் தரவேண்டும்.

    மிக்க நன்றி ஆயில்யன், இளவயதில் இவ்வளவு ஆன்மீகப் பற்றோடு இருக்கும் உங்களைக் காண்பதிலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. 90களின் மத்ஹ்டியில் யாழ்ப்பாணத்தில் ஆன்மீக சொற்பொழிவுகளின் பொற்காலம்.. அக்காலத்தில் வந்த சொற்பொழிவுகளின் தொகுப்புகள் எங்காவது கிடைக்குமா

    ReplyDelete
  6. வணக்கம் அருண்மொழி

    அந்தக் காலவேளையில் முறையான ஒலிஆவணப்படுத்தல் செய்யாத காரணத்தால் அவற்றை எடுப்பது சிக்கல். ஆனாலும் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சொற்பொழிவை எடுத்து நல்லூர் விழாக்காலப் பதிவுகளில் இணைத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  7. கானா பிரபா,

    மிகவும் சிறப்பான பணி. நன்றி.

    கோயில் ஓதுவார் யாருடைய குரலிலாவது தேவாரம் எம்.பி3 கோப்புகள் இணையத்தில் கிடைக்குமா (அந்த கோயில் மணி சத்தத்துடன்) ? மற்றவர்கள் குரலில் அவ்வளவு சிறப்பாக இல்லை.

    சுரேஷ்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி சுரேஷ், ஓதுவார்களின் ஒலி இம்முறை கிடைக்கவில்லை, அடுத்த முறை முயற்சிக்கின்றேன்.

    ReplyDelete
  9. பிரபா,
    தொடர்ச்சியாக நீங்கள் தந்த பதிவுகளை வாசித்ததில் நிறையவே முருகனை நினைந்தேன்.
    உண்மையில் மகோற்சவத்தில் கலந்துகொண்டது போன்ற உணர்வு. ஆக்கங்கள் அனைத்தையும் பிரின்ட் எடுத்திருக்கிறேன்.

    நன்றிகள்.
    திருமுருகன் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete