Pages

Monday, September 1, 2008

"காலாபாணி (சிறைச்சாலை)" - பின்னணி இசைத்தொகுப்பு

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட புதிரின் விடையாக வந்தது "காலாபாணி" என்று மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி பின்னர் தாணுவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தியாகிகளை அந்தமானின் காலாபாணசிறைச்சாலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய வரலாற்றைப் படம் பிடித்தது இப்படம்.


மோகன்லால், தபு, பிரபு ஆகியோர் முக்கிய வேடமிட்டு நடித்தனர். பாடலாசிரியர் அறிவுமதி அவர்களே அனைத்துப் பாடல்களையும் எழுதி, உரையாடலையும் எழுதியிருந்தார். இப்படத்தை இயக்கியிருந்தவர் மோகன்லாலின் ஆத்ம நண்பர், இயக்குனர் பிரியதர்ஷன். 1995 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்காகவும், சிறந்த இரண்டாவது படத்துக்காக தயாரிப்பாளராகவும் இப்படத்திற்காக கேரள அரசின் விருதாகப் பெற்றார் மோகன்லால்.

இப்படத்தின் இசையைப் பொறுத்தவரை இளையராஜாவின் ராஜாங்கத்துக்கு மாற்றீடாக எவரையும் எண்ணிப் பார்க்கவே முடியாது. கிராமியப்படங்களுக்கும், பீரியட் படங்களுக்கும் சிலிர்த்துக் கொண்டு இசையில் சாதனை படைக்கும் இளையராஜா காலாபாணிக்கும் அந்தக் குறையை விடவில்லை. அறிவுமதி அவர்களின் தெள்ளு தமிழ் வரிகளை எப்படி செம்பூவே பூவே, ஆலோலங்கிளி தோப்பிலே, மன்னன் கூறைச் சேலை, நம் பாரத நாடு, சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே என்று இனிய பாடல்களாக நெய்தாரோ அதே இன்னிசை முழக்கத்தை இப்படத்தின் பின்னணி இசையிலும் கொடுத்திருந்தார். சந்தோஷ்சிவனின் அழகிய வரலாற்றுக் காட்சிப்படுத்தலோடு இழைந்தோடுகின்றது ராஜாவின் இசை. திரையில் சிம்பொனியைக் கேட்ட பரவசத்தை இது ஏற்படுத்துகின்றது.

பல இடங்களில் வசனங்களோடு இணைந்து இந்தப் பின்னணி இசை பயணிப்பதால் அவற்றை விலக்கித் தனி இசையை மட்டும் பிரித்துக் கொடுப்பது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இசையைத் தனியே முன்னுறுத்திய முக்கியமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இங்கே தருகின்றேன். அனுபவியுங்கள்.



தியாகிகள் கைதிகளாக கப்பல் மூலம் காலாபாணி என்னும் கொடுஞ்சிறை நோக்கிப் பயணித்தல்




காலாபாணி சிறைச்சாலையின் மர்மங்களைத் தேடி வரும் வினீத் தியாகிகளின் சமாதியைக் காணல்




தியாகிகளின் கப்பல் அந்தமான் தீவின் கரையைத் தொடல்



காலாபாணி சிறையில தியாகிகள் நடமாடல்



மோகன்லாலின் மீது தபுவுக்கு வரும் காதல்



சிறையில் இருந்து தப்பித்த பிரபுவின் பழியைத் தானே ஏற்றுத் தண்டனை வாங்கி வரும் மோகன்லால்



மோகன்லால் பிரபு இருவரும் நட்பு பாராட்டுதல்



மோகன்லால் விடுதலையாகின்றார் என்ற செய்தியை தபுவிடம் சொல்லும் வெள்ளைக்கார வைத்தியர்



மோகன்லால் காலாபாணி சிறைச்சாலையில் இருந்த கொடுங்கோலனை அழிக்கத் தருணம் பார்த்தலும், அது நிறைவேறலும்

17 comments:

  1. மீ த பர்ஸ்ட்டூ! :)))

    ReplyDelete
  2. ஏன் நீங்க தபூ பெரிய டிரெஸ் போட்டுக்கினு ஆடறத சொல்லல
    ????

    ReplyDelete
  3. ஏன் நீங்க தபூ பெரிய டிரெஸ் போட்டுக்கினு ஆடறத சொல்லல
    ????

    en, en en en en en en en en en en en en ????????????????????????????????


    :))))))))))))))))))))))))

    ReplyDelete
  4. // ஆயில்யன் said...
    ஏன் நீங்க தபூ பெரிய டிரெஸ் போட்டுக்கினு ஆடறத சொல்லல//

    யாருப்பா இது சின்னப்பசங்களை எல்லாம் உள்ளே விட்டது?

    ReplyDelete
  5. //கானா பிரபா said...
    // ஆயில்யன் said...
    ஏன் நீங்க தபூ பெரிய டிரெஸ் போட்டுக்கினு ஆடறத சொல்லல//

    யாருப்பா இது சின்னப்பசங்களை எல்லாம் உள்ளே விட்டது?
    /

    ஓ இதுல எண்ட்ரீ பெரியவங்களுக்கு மட்டுமா?

    அச்ச்சச்சோ எனக்கு தெரியாதே!

    சாரி!

    சாரி!

    (ஹல்லோ பதிவு டைட்டில்ல அடலட்ஸ் ஒன்லி போர்டு போடுங்க! விபரமறியா பசங்க நாங்க பயந்துடப்போறோம்!)

    ReplyDelete
  6. தல

    முதலில் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி ;) எம்புட்டு உழைச்சியிருக்கிங்க...ஒவ்வொரு இசையும் தனித்தனியாக எடுத்து...அட்டகாசம் தல ;))

    இசையை பற்றி சொல்ல என்ன இருக்கு...இதெல்லாம் அனுபவிக்கானும்.

    இந்த படத்தில் வசனமே இல்லமால் தொடுதலே இல்லமால் ஒரு குழந்தை தானமான காதல் வரும் பிரவுக்கும் அங்கு கைதியாக இருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் அந்த பெண் வெட்கத்துடன் தவிப்புடன் ஒரு பூ எடுத்து பிரவுக்கு கொடுப்பால் அட அட ராஜா புகுந்து விளையாடி இருப்பாரு அந்த காட்சிகளில்.


    \\சிறையில் இருந்து தப்பித்த பிரபுவின் பழியைத் தானே ஏற்றுத் தண்டனை வாங்கி வரும் மோகன்லால் \\

    ராசாவோட இந்த இசை கேட்கும் போது..யாரோட துணையும் இல்லமால் லால் தனியாக எழுந்து பிரபு கிட்ட வருவார். "எனக்காக நீ இவ்வளவு கஷ்ட பட வேண்டுமான்னு" பிரபு கேட்டும் போது "இங்க எனக்கு சொல்லிக்க நீ மட்டும் தானே இருக்கன்னு லால் சொல்லுவாரு". தனிமையில் இருக்கும் போது கூட ஒரு மனிதன் துணை கிடைக்கும் போது. மனிதனின் மனது எதை பற்றியும் கவலைப்படுவது இல்லை.அவன் மொழி, மதம், கொள்கைன்னு எல்லாவற்றிலும் வேறுப்பட்டு கிடந்தாலும் சொல்லி அழ ஒரு துணை வேண்டும் என்று இந்த சின்ன வசனத்தில் அறிவுமதி உணர்த்தியிருப்பாரு.

    ReplyDelete
  7. \\மோகன்லால் விடுதலையாகின்றார் என்ற செய்தியை தபுவிடம் சொல்லும் வெள்ளைக்கார வைத்தியர் \\

    அட்டகாசமான இசை..ஒரு மங்களகரான வத்தியங்கள் முழங்க வரும் இசை. ;)

    படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் மிக அற்புதமாக தன் இசையை வழங்கியிருப்பாரு ராசா ;)

    அந்த சுட்டு சுடர்விழி பாடலை மட்டும் கேட்டு பாருங்க...அட அட பின்னியிருப்பாங்க எல்லோரும். அந்த பிரம்மாண்ட இசைக்கு மிக அழகாக காட்சிகள், உடை அலங்காரங்கள் ன்னு கலக்கியிருப்பாங்க ;)

    மீண்டும் தல கானாவுக்கு மிக்க நன்றிகள் ;)

    ReplyDelete
  8. anpin praba pls visit www.vimbam.blogspot.com

    and add your comments in interview of tna mp mr selavam adikalanathan.

    thanks for your time

    ReplyDelete
  9. அருமையான பாடல்கள்.நெற்றியோடு நெற்றி ஒற்றி பொட்டு வைப்பது அழகான குழந்தைத்தனம்.
    மறக்காத படம்.

    ReplyDelete
  10. புதுகைத் தென்றல்

    ஆயில்ஸ் சொல்றதை நம்பாதீங்க

    //கோபிநாத் said...
    இசையை பற்றி சொல்ல என்ன இருக்கு...இதெல்லாம் அனுபவிக்கானும்.//

    தல

    உங்கள் விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். சிறைச்சாலை பாடல்களும் பின்னணி இசையும் உண்மையில் ஆயுளுக்கும் இசைச் சிறை தான் இல்லையா?

    ReplyDelete
  11. //Anonymous said...
    anpin praba pls visit www.vimbam.blogspot.com//

    தங்கள் இணைப்பை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே, நண்பர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன்.

    //ஹேமா said...
    அருமையான பாடல்கள்.நெற்றியோடு நெற்றி ஒற்றி பொட்டு வைப்பது அழகான குழந்தைத்தனம்.
    மறக்காத படம்.//

    வருகைக்கு நன்றி ஹேமா, அருமையான படமும் பாடல்களும்.

    ReplyDelete
  12. படத்தை பார்த்ததில்லை! ஆனால் பாடல்களுக்கு அடிமை!! அதுவும் ...தபூ-வும்..பாட்டு+தபூவுக்காகவே பார்க்கலாம்!! அருமையான இசை மற்றும் அருமையான பதிவு!!

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்தனமுல்லை

    ReplyDelete
  14. கை கொடுங்க தலை.. பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க...
    இப்பொழுதுதான் பொறுமையாக அனுபவித்துக் கேட்டு தரவிறக்கி உள்ளேன்..
    தபூவின் காதல்,மோகன்லால் பிரபு நட்பு, தபுவிடம் வைத்தியர் செய்தி கூறும் இடம் அடடடா... பின்னி எடுத்திட்டாரு நம்ம தலை...
    இவைகள் சிம்பொனியா இல்லை சிம்பொனியி சிறு துளிகளா...?(தலையோட சிம்போனி எப்போ வரும்...?)

    படம் வெகு நாட்களுக்கு முன் பார்த்தது...ஆனால் ஒன்பது இசைக் கோர்வைகளுக்குள் படத்தைப் போர்த்தி விட்டீர்கள்...
    தபுவிடம் வைத்தியர் செய்தி கூறும் இடத்தில் வரும் ஒரு உற்சாகமான இசை(இடையில் வருவது நாயனமென நினைக்கிறேன்.இசையறிவு எனக்குக் கம்மி) ஆனந்தப் பிரவாகம்..
    அறிவுமதியின் பாடல் வரிகள் பிரமாதமாய் இருக்கும்(அயல்மொழி கலக்காத தூய தமிழ்).. இப்போ எங்க போனாரு..(எனக்குப் பிடித்த அவரின் வரிகள், ராமன் அப்துல்லா படத்தில் 'முத்தமிழே' பாடலில் வரும் "காதல் வழிச்சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை... நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை")
    http://thamizhparavai.blogspot.com/2008_08_06_archive.html இங்க நம்ம தலையோட படம் போட்டிருக்கேன் வந்து பாருங்க...

    ReplyDelete
  15. வாங்க தல

    கோபி போலவே அனுபவித்து பின்னூட்டியிருக்கீங்க. அறிவுமதி அவர்களின் அழகு தமிழில் பல நல்ல பாடல்கள் கிடைத்தன. இப்போது சினிமாவே வேண்டாம் என்று அவர் ஒதுங்கியிருக்கின்றார்.
    தலயின் சிம்பொனி வந்தால் என்ன எழுநூறு படங்களுக்கு மேல் அதைக் கொடுத்து விட்டாரே.

    ராசாவின் படத்தை வரைந்து இட்டமைக்கு விஷேஷமான நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  16. மிக அருமையான படம். தமிழின் (இதை தமிழ் படம் என்று கணக்கிட்டால்) முதல் 10 படங்கள் வரிசையில் கட்டாயம் இடம் பிடிக்கக்கூடிய படம்

    கதை, திரைக்கதை (உதாரணம் வசனமே இல்லமால் தொடுதலே இல்லமால் ஒரு குழந்தை தானமான காதல், வெள்ளைகார மருத்துவருக்கும் மோகன்லாலுக்கும் இடையில் இருக்கும் நட்பு, கதை செல்லும் பாங்கு), வசனங்கள், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம், பாடல்கள், இசை, நடிப்பு என்று எந்த துறையை எடுத்தாலும் 10/10 அல்லது 09/10 என்று தான் மதிப்பெண் அளிக்க வேண்டும்.

    ReplyDelete
  17. வாங்க புருனோ

    சிறைச்சாலை திரைப்படம் பொதுவானதொரு இந்தியத் திரைப்படம், இது மாநில எல்லைகளைக் கடந்து பேசக்கூடிய கருவை கச்சிதமாக இயக்கத்திலும், இசையிலும், மற்றைய தொழில்நுட்பத்திலும் இணைத்தது.

    உங்கள் மதிப்பெண் பொருத்தமானதே.

    ReplyDelete