Pages

Monday, July 29, 2013

"ஒரு கைதியின் டைரி" பின்னணி இசைத்தொகுப்பு

 இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணியின் நகர்ப்புறம் சார்ந்த கதைக்களனில் வந்து, அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்று ஒரு கைதியின் டைரி. 1985 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை உண்டு பண்ண இன்னொரு காரணம், இயக்குனர் கே.பாக்யராஜ், தன் குருநாதர் பாரதிராஜாவுக்காக "சிகப்பு ரோஜாக்கள்" படத்தின் கதை, வசனம் பொறுப்பை ஏற்று கமல்ஹாசனுக்கான இன்னொரு பெரு வெற்றிப் படம் ஆக்கிய பின்னர் இணைந்த படமாக இந்த நால்வர் கூட்டணியில் "ஒரு கைதியின் டைரி" அமைந்தது.  பின்னர் இதே படத்தை கே.பாக்யராஜ் ஹிந்தியில் "ஆக்ரி ராஸ்தா" என்ற பெயரில் மீளவும் அமிதாப் பச்சானை நாயகனாக்கி இயக்கி, அமிதாப்பின் திரையுலக வாழ்வில் இன்னொரு பெரும் வெற்றிப்படத்தைக் கொடுக்கக் காரணமாகியது இந்த டைரி. ஒரு கைதியின் டைரி படத்தில் கமல்ஹாசனுடன், ராதா, ரேவதி, ஜனகராஜும் முக்கிய வில்லன் பாத்திரத்தில் பாடகர் மலேசியா வாசுதேவனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்று சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் அளவுக்கு இந்தப் படம் என் கவன எல்லைக்கு அப்பால் இருந்திருந்தது. ஆனால் ட்விட்டர் வழியாக நண்பர் சரவணன் தான் இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கொடுக்குமாறு ஒரு நேயர் விருப்பத்தை அளித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு நாள் பணியாக, படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓடவிட்டு பின்னணி இசையின் வாத்திய ஜாலங்கள் எனும் உறுமீன் வருமளவுக்குக் காத்திருக்கும் கொக்காகக் கவனித்து எடுத்த இசைக்குளிகைகளை மிகவும் திருப்தியோடு இங்கே பகிர்கின்றேன். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசையை வெட்டி ஒட்டிக் கல்லா கட்டும் இன்றைய யுகத்தில, இங்கே நான் கொடுத்திருக்கும் இசைக்குளிகைகளின் வாயிலாக இசைஞானி இளையராஜா அவர்கள்,  படத்தின் மூல ஓட்டத்தை உணர்ந்து பின்னணி இசை என்ற ரத்தம் பாய்ச்சியிருப்பதை உணர்வீர்கள். இந்த இசைத்துளிகள் அவர் ஒரு படத்தின் பாடல்கள் மட்டுமன்றி மைய இசையாக அமையும் பின்னணி இசையில் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு பயணித்திருக்கிறார் என்பது புரியும். இப்படி எண்ணற்ற படங்கள் மலையாகக் குவிந்திருக்கின்றன,  நம் வாழும் காலத்தில் இயன்றவரை கைப்பிடி நெல்மணிகள் ஆதல் சேர்த்து உங்களிடம் அதைச் சிந்தாமல் சிதறாமல் கொடுத்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற ஒரு கடைக்கோடி ரசிகன் என் ஆதங்கத்தின் இன்னொரு வெளிப்பாடே இந்த "ஒரு கைதியின் டைரி" பின்னணி இசைத்தொகுப்பு $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தயாரிப்பு நிறுவனத்தின் பூஜைப்பாடலைப் பாடும் இளையராஜா $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ எழுத்தோட்ட இசை $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ சிறையில் இருந்து வெளிவரும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தேவாலயம் தேடிப்போய் தன் பழைய நினைவுகளில் மூழ்கும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ பழைய நண்பர் ஜனகராஜை சந்திக்கும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமலை அடையாளம் காணும் ஜனகராஜ் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடையும் ஜனகராஜ் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல் மனைவி ராதா மலேசியா வாசுதேவனால் பலாத்காரம் செய்யப்படும்போது $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ ஜனகராஜிடமிருந்து துப்பாக்கியைக் கைப்பற்றும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ போலீஸ் கமல் அறிமுகக் காட்சி $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ ஜனகராஜிடம் ஆத்திரம் கொள்ளும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ மகன் கமலை முதன்முதலில் காணும் தந்தை கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல்,ரேவதி சந்திப்பு $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தேவாலயத்தில் நினைவுகளின் இளைப்பாறலில் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கொலை செய்யப்போகும் மர்ம நபர் (தந்தை கமல்)ஐத் தேட வலைவிரிக்கும் போலீஸ் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ போலீஸ் அதிகாரி வினுச்சக்கரவத்தியைப் பழிவாங்கும் காட்சி $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ வினுச்சக்கரவர்த்தியைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடும் நேரம் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ போலீஸ் கமல், கொலையாளி கமலைத் துரத்தும் வேளை $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தன் தந்தை குறித்த உண்மையை அறிந்துகொள்ளும் போலீஸ் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ படத்தின் இறுதிக்காட்சி,முக்கிய வில்லனை வீரசிவாஜி சிலையாக வேஷம் தரித்த கமல் வேட்டையாடுதல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

7 comments:

 1. Thanks for sharing..nice BGM by our Ilayaraja.........

  ReplyDelete
 2. very good task - keep it up for going on and on and on - nellai baba

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி நண்பர்களே

  ReplyDelete
 4. //இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்று சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் அளவுக்கு இந்தப் படம் என் கவன எல்லைக்கு அப்பால் இருந்திருந்தது//

  Yes:)
  படத்தின் வித்தியாசமான கதையமைப்பு அப்படி! அதுவும் பாரதிராஜாவிடம் இருந்து; அதனால் மறந்து விடுகிறோமோ என்னவோ?:)

  எழிலான இசைக் குளிகைகள் கா.பி! செவிக்கு இன்பம்!

  குறிப்பா, //மகன் கமலை முதன்முதலில் காணும் தந்தை கமல்// - இது அற்புதச் சித்து வேலை!

  Mute இல் போட்டுப் பாத்துட்டு, அப்பறம் ஒலியோடு கேட்டுப் பாருங்க; வித்தியாசம் சூப்பராத் தெரியும்!

  அதே போல் கமல்-ரேவதி காட்சிகள்!

  ராஜாவின் பின்னணி இசையில், "நுணுக்கங்கள்" நிறைந்து இருப்பது, கிராமத்துப் படங்களிலா? த்ரில்லர் படங்களிலா? -ன்னு பட்டி மண்டபமே வைக்கலாம்:)
  மக்கள், கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டுவாங்க:)

  ReplyDelete
 5. ஒம்ம மேல கோச்சிக்கட்டுமா?:)

  எங்கே என் உதிரிப் பூக்கள் BGM?
  அடுத்த ஆண்டுக் கொண்டாட்டங்கள் கூட வந்துரும் போல ஒரு வாரத்தில்!
  ஆனால், உதிரிப் பூக்கள், இன்னும் மாலை ஆகாமலே இருக்கு!:(

  என்ன சொல்லி நான் எழுத?
  கா.பி.யின் மனம் குளிர?:)

  ReplyDelete
 6. ஆந்த ஆரம்ப இறை வணக்க சுலோகம் - என்னவொரு தீர்க்கமான உச்சரிப்பு, இளையராஜாவிடமிருந்து;

  சம்ஸ்கிருத புரோகிதர்கள் கூட, அத்தனை தீர்க்கமா மொழி உச்சரிப்பு செய்வதில்லை, இந்தக் காலங்களில்!

  மாதாச பார்வதி தேவி
  பிதா தேவோ மகேஸ்வரஹ
  பாந்தவா: "சிவபக்தாஸ்ச" - இந்த இடத்தில் மிக்க கவனம்!

  வெறுமனே சிவ பக்தாச -ன்னு சொன்னா, எல்லாச் சிவ பக்தர்களும் என் உறவினர்கள் -ன்னு மட்டுமே பொருள் வரும்!
  ஆனா "சிவபக்தாஸ்ச" -ன்னு அழுத்தும் போது, அந்த முகமறியாச் சிவ பக்தர்கள் மட்டுமல்ல, அவர்களின் சொந்தங்கள் கூட என் சொந்தங்கள் தான் -ன்னு பொருள் மாறாம சுலோகம் சொல்வதில், Raja is great! Such a careful delivery!

  பதிவில் ஒரே குறை: பாடல்களின் Interlude களில் வரும் பின்னணி பத்தி ஒன்னுமே சொல்லலையே?

  esp... "பொன்ன்ன்ன்ன் மானே கோவம் ஏனோ?":)

  அதே போல் "நான் தான் சூரன்" பாட்டுப் பின்னணியும்!
  இது போன்ற பாடல்களில் இளையராஜாவுக்குப் போட்டியே SPB தான்:)

  ReplyDelete