Pages

Sunday, August 5, 2012

றேடியோஸ்புதிர் 66 - லால லாலா லா லா

தமிழ்த் திரையிசைப்பாடல்களில் வாத்திய இசையோடு கூட்டுக் குரல்களும் வரிகளை உச்சரிக்காது ஆலாபனை செய்யும் வண்ணம் பல பாடல்கள் தொன்று தொட்டு வந்திருக்கின்றன. இன்னும் விசேஷமாக பிரபல பாடகர்களை இந்த இடைக் குரலுக்குப் பயன்படுத்தியது எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துப் பாணி. எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரின் பாடல்கள் சில உதாரணமாக விளங்கி நிற்கின்றன.
இங்கே நான் தந்திருக்கும் றேடியோஸ்புதிர் பாடல் துளிகளும் அவ்வமயமே, எழுபதுக்குப் பின் வெளிவந்த பிரபல பாடகர்களை இடைக்குரல் ஆலாபனைக்குப் பயன்படுத்திய பாடல்கள். உங்கள் வேலை, இங்கே தரப்பட்ட பாடல்கள் என்ன என்ன, அவற்றில் வந்து கலக்கும் இடைக்குரல் பாடகர்கள் யார் என்பது. எங்கே ஆரம்பிக்கட்டும் போட்டி ;-)



பாடல் ஒன்று பாடல் இரண்டு பாடல் மூன்று பாடல் நான்கு பாடல் ஐந்து


ஓகே மக்கள்ஸ் போட்டி முடிந்தது இதோ பதில்கள்

பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே - இடைக்குரல் சித்ரா

பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன்
இடைக்குரல் சித்ரா

பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம்
இடைக்குரல் சுனந்தா

பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே
இடைக்குரல் ஜென்சி

பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம்
இடைக்குரல் சைலஜா

23 comments:

  1. ஒரு கேள்வி கேட்டாலே காலி நாங்க..இதுல 2 கேள்வியா ;))

    முதல் பாடல் - சித்ரா

    இரண்டு - இசை தெய்வம் மற்றும் சித்ரா

    மூன்று - சித்ரா

    இப்போதைக்கு இதான் தல ;))

    ReplyDelete
  2. அட்டகாசமான புதிர்

    நான்கையும் ஐந்தையும் பட்டென்று கண்டுபிடித்து விட்டேன்.

    4. ஜென்சி - தீர்த்தக்கரைதனிலே செண்பகப் புட்பங்களே
    5. எஸ்.பி.ஷைலஜா - மழை தருமோ என் மேகம்

    மத்த பாடகர்கள் தெரிஞ்சிருச்சு. பாட்டைக் கண்டுபிடிக்கிறேன். :)

    ReplyDelete
  3. தல கோபி

    பாடல்களையும் கண்டுபிடிக்கவும் ;)

    ReplyDelete
  4. ராகவன்

    சொன்னவரைக்கும் சரிதான் ;)

    ReplyDelete
  5. முதல் மூன்றும் எனக்கு மிகவும் பரிச்சயமானவை..
    1) மௌனம் ஏன்..
    2) நாரினில் பூ தொடுத்து..
    3) அதோ மேக ஊர்வலம்..
    கடைசி இரண்டு கேட்டதே இல்லை.. அவை அநேகமாக எழுபதுகளின் பாடல்களாக இருக்க வேண்டும்..

    ReplyDelete
  6. பிரசன்னா கண்ணன்

    சொன்ன மூன்றும் சரி, பாடகர்களையும் சொல்லலாமே

    ReplyDelete
  7. நான் கண்டுபுடித்த மூன்றுமே சித்ராவினுடயது.. :-)
    1) சித்ரா (மனோ)
    2) சித்ரா, இளையராஜா
    3) சித்ரா (மனோ)

    ReplyDelete
  8. பாஸ் பாட்டு கேட்க லிங்கே தெரியலை!!! :((

    ReplyDelete
  9. 1. என் ஜீவன் பாடுது - மெளனம் ஏன் - சித்ரா
    2.
    3. ஈரமான ரோஜாவே - அதோ மேக ஊர்வலம் - சுனந்தா
    4.தைப்பொங்கல் - தீர்த்தக்கரைதனிலே - சசிரேகா
    5.

    ReplyDelete
  10. பஸ்ட்டு பாட்டு ஹாஹாஹாஹ்ன்னு போவுது!

    ரெண்டாவது பாட்டு லாலால்லாலா போவுது!

    மூணாவது பாட்டு ஆஆஆஅன்னு ஆரம்பிச்சு போவுது

    நாலாவது பாட்டு இதுவும் ஆ’ல ஆரம்பிச்சு இல்லயில்ல ஓ’ல ஆரம்பிச்சி போவுது!

    ஐந்தாவது பாட்டு ஆ’ல ஆரம்பிச்சு ஓ’ல ரூட் எடுத்து பிறக்கு “ம்”ம்மிடுச்சு ஓய்!

    இதுல நான் எங்கே போய் லா லா லா பாடறது?

    ReplyDelete
  11. 1) என் ஜீவன் பாடுது - மௌனமே மௌனமே(சித்ரா)
    3) ஈரமானே ரோஜாவே - அதோ மேக ஊர்வலம்(சித்ரா)

    ReplyDelete
  12. புதுகை பாஸ்

    மற்ற எல்லோருக்கும் சரியா வருதே ;)

    ReplyDelete
  13. காத்தவராயன்

    சொன்ன பதில்களில் நான்காவதன் பாடகி தப்பு

    ReplyDelete
  14. முத்துக்குமார்

    சொன்ன பதில்கள் இரண்டில் இரண்டாவதன் பாடகி தப்பு

    ReplyDelete
  15. //புதுகைத் தென்றல் said...
    பாஸ் பாட்டு கேட்க லிங்கே தெரியலை!!! :((//

    மத்தவங்களுக்கு பாடுது ஆனா நம்ம பாஸுக்கு பாடல இது கானாவோட சதியாத்தான் இருக்கும் அல்லது ஒரு வேளை இண்டர்நெட் கனெக்‌ஷனை மாமா கட் பண்ணிட்டாரோ? :))))))))))

    ReplyDelete
  16. பாஸ் என்ன ஒரு மர்டர் வெறி,

    இண்டர்நெட் கட் செஞ்சிருந்தா எப்படி பாஸ் பதிவு போடுவேன். :))

    நான் புதிரை கண்டுபிடிச்சு சொல்லிடக்கூடாதுன்னு யாரோ சதி செய்ராங்க பாஸ் :((

    ReplyDelete
  17. 2வது - ‘நாரினில் பூத்தொடுத்து’ - ‘இரண்டில் ஒன்று’ - சித்ரா, மொட்டை.

    3வது - ‘அதோ மேக ஊர்வலம்’ - ‘ஈரமான ரோஜாவே’ - சுவர்ணலதா, மனோ

    5வது - பாட்டு தெரியலை :( - வாணி ஜெயராம்.

    ReplyDelete
  18. 1. மௌனம் ஏன் மௌனமே பாட்டு
    3. அதோ மேக ஊர்வலம் பாட்டு

    அவ்ளோதான் தெரியுது!

    ReplyDelete
  19. ரொம்பக் கஷ்டமா இருக்குங்க!கேட்ட மாதிரியே இருக்கு ஆனா கண்டு பிடிக்க முடியலை!சாரி!

    ReplyDelete
  20. கேட்டவுடனே கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்த பாடல்கள் இரண்டு மட்டும் தான்

    1) மௌனமேன் மௌனமேன் வசந்தகாலமா
    சித்ரா
    3)அதோ மேக ஊர்வலம்
    குரல்-சித்ரா

    2) பாடல் கண்டுபிடிக்கமுடியவில்லை..ஆனால் இங்கே பார்த்துத்தெரிந்துகொண்டேன் :P
    குரல்-சித்ரா,இளையராஜா

    4) பாடல் :(
    குரல் சசிரேகா என்று நினைக்கிறேன்.இரண்டாவது தெரிவு ஜென்சி.:P

    5) பாடல் தெரியவில்லை..
    குரல்-சித்ரா

    ReplyDelete
  21. மயில்செந்தில்

    2, 3 சரி

    சொக்கன்

    சொன்னவரை சரி

    முத்துக்குமார்

    மூன்றாவதன் பாடகி தப்பு

    ரவிக்குமார்

    பரவாயில்ல அடுத்த தடவை முயற்சிக்கவும் ;)

    ReplyDelete
  22. தாருகாசினி

    1 வது சரி

    3 வது பாடல் சரி ஆனால் பாடகி தப்பு

    4. வது இரண்டாவது தெரிவே சரி

    ReplyDelete
  23. ஓகே மக்கள்ஸ் போட்டி முடிந்தது இதோ பதில்கள்

    பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே - இடைக்குரல் சித்ரா

    பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன்
    இடைக்குரல் சித்ரா

    பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம்
    இடைக்குரல் சுனந்தா

    பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே
    இடைக்குரல் ஜென்சி

    பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம்
    இடைக்குரல் சைலஜா

    ReplyDelete