Pages

Thursday, September 10, 2009

கலையுலகில் கமல் 50 - "குணா" இசைத்தொகுப்பு

இந்த ஆண்டு கலைஞானி கமல்ஹாசன் திரையுலகில் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகள் நிறைவையொட்டி சில சிறப்பு இடுகைகளைத் தரவிருக்கின்றேன். அந்த வகையில் ஓராண்டுக்கு முன் பதிவாக வந்து பலரின் அபிமானத்தைப் பெற்ற "குணா" திரைப்படத்தின் இசைத்தொகுபை வழங்கிச் சிறப்பிக்கின்றேன்.

கமல்ஹாசன், புதுமுகம் ரோஷிணி, ரேகா, வரலஷ்மி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம் சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் சந்தான பாரதி இயக்கத்திலும் வெளிவந்திருந்தது.

குணா படத்துக்கான லொகேஷன் தேடியபோது கமலின் கண்ணிற்பட்டது கொடைக்கானலில் இருந்த குகையடிவாரம், அது குணா படத்தின் முக்கியமான காட்சிகளுக்குப் பயன்பட்டுப் பின்னாளில் குணா கேவ்ஸ் என்ற புகழோடு இப்போது சுற்றுலாப்பயணிகளின் கண் கவரும் இடமாக இருக்கின்றது.

இந்தப் படத்தைப் பற்றி அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை. அதற்கு முன் இந்தப் படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் கொடுத்து விடுகின்றேன். அபிராமியின் மேல் தீராத பக்தி கொண்டவர் அபிராமிப் பட்டர். இந்த அபிராமி மீது தீராக் காதல் கொள்கின்றான் குணசேகரன் என்னும் குணா. இப்படத்தின் பின்னணி இசையில் தெய்வீகம் கலந்ததொரு இசையைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.



படத்தின் முகப்பு எழுத்தோட்ட இசை



முதன் முதலில் ஆலயத்தில் அபிராமியைக் காணல்




அபிராமியை கவர வரும் வில்லனிடம் இருந்து தப்பித்தல்




மலையுச்சி சமாதிப் புகலிடத்தைத் தேடிப் போதல்



அபிராமி, குணாவை காரால் இடிக்கும் காட்சி




அவளை அபிராமியாக நினைத்து குணா உருகும் காட்சி




ஏகாந்த இரவில்




குணாவிடம் இருந்து மீண்டும் அபிராமி தப்பிக்கும் காட்சி




அபிராமியின் மனதில், தான் இருக்கிறேன் என்ற காதலோடு மெய்யுருகும் குணா. கலக்கல் இசை பரவ




காட்டுக்குள் காணும் நீரோடை, இசையால் குளிர்விக்க



எழுதி வைக்கப்பட்ட விதி "எனக்கு நீ உனக்கு நான்"




அபிராமி குணா மேல் கொள்ளும் காதல்






அபிராமியை குகைக்குள் வைத்து மணம் முடித்தல்




வைத்தியரைத் தேடிப் போகும் குணா




வில்லனால் தாக்கப்பட்ட குணா, அபிராமியிடம் ஆறுதல் தேடுதல்




அபிராமியும், குணாவும் இந்த உலகத்தை விட்டு நீங்கல். பிறவிப்பிணி என்னும் தளையால் கட்டுண்ட ஆன்மா இறைபதம் நாடி இறைமேல் பற்று வைத்து முத்தி நிலையை அடைதல் என்னும் உட்பொருளோடு அமைகின்றது இப்படத்தின் உட்பொருள்




போனசாக குணா குணா பாடல் ஒலிப்பதிவு வேளையில் நடந்த உரையாடல்
பகிர்வை இளையராஜா ஆர்குட் குழுமம் வழி பெற்றேன்.



8 comments:

  1. //குணா படத்துக்கான லொகேஷன் தேடியபோது கமலின் கண்ணிற்பட்டது கொடைக்கானலில் இருந்த குகையடிவாரம், அது குணா படத்தின் முக்கியமான காட்சிகளுக்குப் பயன்பட்டுப் பின்னாளில் குணா கேவ்ஸ் என்ற புகழோடு இப்போது சுற்றுலாப்பயணிகளின் கண் கவரும் இடமாக இருக்கின்றது.///

    ஆமாம் பாஸ் அந்த குகைக்கு கஷ்டப்பட்டு இறங்கி போயி பார்த்துட்டு சவுண்ட்டு எல்லாம் வுட்டுக்கிட்டு வந்தோம்ல :)))

    எனக்கு புடிச்ச பாட்டு ஜேசுதாஸ் பாடினது :)

    ReplyDelete
  2. நல்ல கலக்கல் தொகுப்பு, குணாவில் பார்த்தவிழி பார்த்திருக்க பாடலுக்கு முன்னர் ராஜாவின் இசையும் உலகநாயகனின் நடிப்பும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  3. கேடிவியில் குணா படம் ஒளிபரப்பாகின்றது. பிரபாவிற்க்கும் கேடிவிக்கும் ஒரே அலைவரிசையா? இல்லை அபிராமியின் அற்புத செயலா?

    ReplyDelete
  4. தல

    எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் கொஞ்சம் கூட சலிப்பு ஏற்படுத்தாத படம் குணா ;))))

    அதிகம் சொல்ல நேரம் இல்ல ;(

    கலையுலகில் 50வயது ஆகும் கலைஞானிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    பகிர்வுக்கு நன்றியோ நன்றி ;)

    ReplyDelete
  5. பார்த்த விழி பார்த்த படி பாட்டு எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காத பாட்டு.

    ReplyDelete
  6. வணக்கம்...குணா படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே அருமை..எனக்கு பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க.. என்ற அந்த கேஜே ஜேசுதாஸ் பாடிய பாடல் மிகவும் விரும்பி ரசிப்பேன். ஒரு நிகழ்விலே கமல் அவர்கள் தனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலே இந்தப் பாடலும் ஒன்று என்று கூறியதைப் பார்த்து இருக்கிறேன்.

    அதேபோல்...உன்னை நானறிவேன் என்னையன்றி யார் அறிவார்...என்ற பாடல் மிகவும் மனதைப் பிழியும் ஒரு பாடல்...அது காட்சியாக்கப்பட்ட விதம் சூப்பர். அதில் ஒரு வரி வரும்...”நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை..நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை” என்ற வரிகள் பிரமாதம்....எதுவாயினும் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமையே....இப்படி சொல்லிக்கொண்டு போனால் பின்னூட்டமே பதிவாகி விடும். அதனால் என்ன பின்னூட்டமும் கருத்துத்தான்..பதிவும் கருத்துத்தான்...இளையராஜா இசை = கடவுள் = காதல் எல்லாமே ஒன்றுதான்..உணரத்தான் முடியும்..உணர்த்த முடியாது. நல்ல முயற்சி பிரபா தொடருங்கள்....!!

    ReplyDelete
  7. பிண்ணனி இசையை மட்டும் பிரித்தெடுத்தலின் பிண்ணனியிலிருக்கும் பிரபுவின் மெனக்கெடல் கண்டு பிரமிப்பாயிருக்கிறது.

    உங்கள் பதிவு பார்த்த பின் திரும்பவும் குணா படம் பார்க்கத் தோன்றுகிறது.

    ReplyDelete