Pages

Wednesday, August 5, 2009

சிறப்பு நேயர் "G3 புகழ் காயத்ரி"

மற்றவர்களை மனம் விட்டுப் பாராட்டுங்கள் அவர்களுக்கு உங்கள் மேல் மரியாதை இன்னும் அதிகமாகும் என்பதோடு கூடவே உங்களிலும் நல்ல பண்பை விதைப்பீர்கள் என்பார்கள். இந்த வாரம் முத்தான ஐந்து பாட்டுக்களோடு வந்திருக்கும் பயமறியாப் பாவை G3 இதற்கு நல்ல எடுத்துகாட்டு போல மற்றவர்களை மனம் விட்டு பதிவுகள் மூலம் பாராட்டுவதில் நல்லதொரு முன்னுதாரணமாக இருக்கின்றார். தமிழ்மணத்தின் உறுப்பினர் பட்டியலில் அனேகமாக எல்லோரின் பிறந்ததினங்களையும் மனதில் வைத்து அவரவர் குணாதிசியங்களைப் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதைச் சலிக்காமல் அலுக்காமல் செய்வதில் G3 ஓர் எடுத்துக்காட்டு. சன் டிவியில் சனி காலை 6.40 க்கு ஒளிபரப்பாகும் "பிறந்த நாள் வாழ்த்து" நிகழ்ச்சியின் இன்னொரு வடிவம் இவர்.
இவரின் எழுத்துப் பாணி, இன்னொரு பதிவுலக சிங்கி, சமீபத்தில் காணாமல் போன "மைபிரண்டை" ஏனோ எனக்கு நினைவு படுத்தும். செப்டெம்பர் 2006 இல் இருந்து பதிவுலகை அமைதியாக இருந்து கலக்கி வரும் G3 அவ்வப்போது கவிதைகளை எழுதி விட்டு "கவிதை முயற்சி" என்று லேபல் வைப்பது இவரின் தன்னடக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. பதிவுலகுக்கு வந்து எழுத ஆரம்பித்த போது தமிழ் தட்டச்சு வராமலோ என்னவோ தமிங்கிலிஷில் தன் முயற்சியை ஆரம்பித்து பின்னர் நாளாக தமிழ் தட்டச்சிலே தேர்ச்சி பெற்று தன் "பிரவாகம்" வலைபதிவோடு, கூட்டு வலைபதிவுகளான தேன் கிண்ணம், பயமறியா பாவையர் சங்கம், கானக்கந்தர்வன், சுவரொட்டி போன்றவற்றிலும் இணைந்து செயற்படுபவர். அவ்வப்போது ஆங்கிலத்தில் அரிய தன்னம்பிக்கை தரும் விஷயங்களைப் பகிர்ந்து வாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தாலும் G3 இடம் பன்முகப்பட்ட ரசனை இருக்கிறது என்பதற்கு அவர் தெரிவு செய்த முத்தான ஐந்து கலவையான பழைய, புதிய பாடல்களே சான்று, சரி இனி G3 பேசட்டும்.

1. தெய்வம் படத்திலிருந்து - திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.

முதல்ல பக்திப்பாடல்ல இருந்து ஆரம்பிப்போம். உனக்கு பிடித்த கடவுள் யாருனு கேட்டா கொஞ்சம் கூட யோசிக்காம சொல்ற பதில் பிள்ளையார் / சிவன் னு தான். ஆனா திரைப்படங்கள்ல வந்த பக்திப்பாடல்கள்லனு பாத்தீங்கனா மனசுல பளிச்சுனு நிக்கறது முருகர் / அம்மன் பாடல்கள் தான். அதுலயும் தெய்வம் படத்துல முருகரோட அறுபடை வீட்டுக்கும் ஒவ்வொரு பாட்டு இருக்கும். அதுல 2-3 பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும்னாலும் எங்கப்பாவுக்கும் பிடிச்ச திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டு தான் இப்ப கேட்கபோறது.

"கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

"நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்...
கந்தா.... முருகா.... "

டி.எம்.எஸ் & சீர்காழி குரல்ல இந்த வரிகளை கேட்கும்போது ஏற்படும் பரவசம் இருக்கே.. சான்ஸே இல்லங்க :-))))))2. பசங்க படத்திலிருந்து ஒரு வெட்கம் வருதே வருதே

சமீபத்தில் வந்த பாடல்கள்ல பாடல் வரிகள் + காட்சியமைப்பு ரெண்டுமே அற்புதமா இருந்த பாடல்கள்ல இதுவும் ஒன்று. ஆரம்பத்துல டீ.வி.ல பாக்கறப்போ எல்லாம் பாடல் வரிகள் என்னனு கவனிக்கனும்னு நினைச்சாலும் காட்சிகள்ல கவனம் சிதறிடும். காதலி கேட்டதும் அவளுக்காக போய் அல்லி பூவ பறிச்சிட்டு வந்து குடுக்க நம்ம ஹீரோயின் அதை முகர்ந்து பாத்துட்டு கேவலமா இருக்குனு திரும்ப தூக்கி போட ஹீரோ முகம் தொங்க போட்டுக்குவாரு. அதே மாதிரி கோவில்ல சாமி கும்பிட மறந்து வெறும் கைல போட்டோ பிடிக்கற மாதிரி முயற்சி செஞ்சிட்டு நெத்தியில அடிச்சிக்கறதும், புளியம்பழம் சாப்டுட்டு சூப்பரா ஒரு ரியாக்ஷன் குடுக்கறதும்னு காட்சிகள் எல்லாமே சிறுகவிதை மாதிரி இருக்கும் :-)))))

"மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே தோற்கிறேன்"

"கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே"

"வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே"3. சுமைதாங்கி படத்திலிருந்து மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

பழைய பாடல்கள்ல நிறைய விரும்பி கேட்கறதுனு சொன்னா அது நிறைய கண்ணதாசன் பாடல்களா தான் இருக்கும். பெரிய பெரிய விஷயங்கள ரொம்ப அசால்ட்டா சொல்லியிருப்பாரு. அப்படிப்பட்ட ஒரு பாட்டு தான் இது.

”மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்”

”துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...”4. வெள்ளித்திரை படத்திலிருந்து விழியிலே எனது விழியிலே

இந்த பாடல் படத்துல வரலைனு நினைக்கறேன். இதோட இன்னொரு வெர்ஷனான உயிரிலே பாட்டு தான் படத்துல இருக்கு. சித்ராவோட குரல்ல அப்படியே கேக்கறவங்களுக்கு சோகத்தை அள்ளித்தரும் பாடல் இது.

"இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கைசேரத்தான்
உன் உருவம் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்"

"ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா"5. பாண்டவர் பூமி படத்திலிருந்து விரும்புதே மனசு விரும்புதே

இந்த காலத்துல தனியா ஒரு வீடு வாங்கனும்ங்கறது பலரோட கனவு. அதுல அவங்க விரும்பற மாதிரி பல விஷயங்கள் பண்ணனும்னு ஆசைப்படுவாங்க. அந்த மாதிரி பாண்டவர் பூமி படத்துல அவங்க கட்டப்போற வீடு எப்படியெல்லாம் இருக்கனும்னு கற்பனை செஞ்சு பாடற மாதிரி ஒரு பாடல். ஏனோ இந்த பாடல் படத்துல வரலை. ஆனா பாடல் வரிகள் நமக்கும் இப்படி ஒரு வீடு இருந்தா சூப்பரா இருக்குமேனு ஏங்க வைக்கும் பாடல் :)

”இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி
பேசும் வார்த்தை கவிதையாகும்படி
விரும்புதே...”

”நல்லோர் கண்கள் கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி
எல்லா உறவும் வந்து வாழும்படி
விரும்புதே..”*******************

இத்துடன் எனக்கு குடுத்த ஐந்து பாடல்களுக்கான இட ஒதுக்கீடு முடிவடைவதால் நான் அனைவருக்கும் (முக்கியமாக கானா பிரபாவிற்கு) நன்றி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன் :-))))))

35 comments:

 1. \\Photo]மற்றவர்களை மனம் விட்டுப் பாராட்டுங்கள் அவர்களுக்கு உங்கள் மேல் மரியாதை இன்னும் அதிகமாகும் என்பது போல உங்களிலும் நல்ல பண்பை விதைப்பீர்கள் என்பார்கள். இந்த வாரம் முத்தான ஐந்து பாட்டுக்களோடு வந்திருக்கும் பயமறியாப் பாவை G3 இதற்கு நல்ல எடுத்துகாட்டு போல மற்றவர்களை மனம் விட்டு பதிவுகள் மூலம் பாராட்டுவதில் நல்லதொரு முன்னுதாரணமாக இருக்கின்றார்\\

  வழிமொழிக்கிறேன் தல ;))

  வலையுலகத்தில் ஜி3யை பத்தி ஒரு தனிபதிவு போட தொடர் ஆரம்பிச்சாலும் அது முடிய பல மாசம் ஆகும்...அந்த அளவுக்கு நட்பு வட்டரத்தை வைத்திருப்பவர் நம்ம ஜி3 ;))

  மதிப்புக்கும் பாசத்திற்க்கும் உரிய தோழி ஜி3 ;)))

  ReplyDelete
 2. ஆகா..தொகுப்பு எல்லாம் சூப்பரு..பழைய பாடலும் புதுசும் கலந்துகட்டி கலக்கியிருக்கிங்க..ஆனா என்ன இதுல புது பாட்டு எல்லாம் இனிமேல் தான் கேட்க வேண்டும்.

  ஜி3க்கிட்ட குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் அவரு இசையை விட வரிகளை ரசிப்பவர்..;)

  பாருங்கள் பாடலை மட்டும் சொல்லமால் அதில் எந்த வரி கலக்கல் வரின்னு கூட சொல்லியிருக்காங்க. இது இருந்தே தெரியல அவுங்க எம்புட்டு பெரிய கவிஞர்ன்னு ;))))

  ReplyDelete
 3. //பாருங்கள் பாடலை மட்டும் சொல்லமால் அதில் எந்த வரி கலக்கல் வரின்னு கூட சொல்லியிருக்காங்க. இது இருந்தே தெரியல அவுங்க எம்புட்டு பெரிய கவிஞர்ன்னு ;))))//

  ரிப்பீட்டேய்...

  கவிஞர் + ரசிகர்.

  நல்ல பாடல்கள். நல்ல தேர்வு. ஒரு வெட்கம் வருதே உங்க புண்ணியத்துல மூனாவது தடவையா கேட்டுட்டு இருக்கேன் இன்னிக்கு. அருமையான பாட்டு.

  ReplyDelete
 4. கவிஞர் G3 வாழ்க வாழ்க!

  ReplyDelete
 5. கொலையுலக ச்சி ச்சீ வலையுலக தங்க தாரகை g3 கொடுத்து இருக்கும் பாட்டு அனைத்தும் அருமை என்று சொல்லவில்லை என்றால் வீட்டுக்கு ஆள் அனுப்பி அடிப்பேன் என்றார்கள் அதனால் சொல்கிறேன் அருமை தேர்வு!

  ReplyDelete
 6. அருமையான பாடல்கள் தேர்வு.

  வாழ்த்துக்கள் G3.

  ReplyDelete
 7. கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
  குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

  "நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்...
  கந்தா.... முருகா.... "

  டி.எம்.எஸ் & சீர்காழி குரல்ல இந்த வரிகளை கேட்கும்போது ஏற்படும் பரவசம் இருக்கே.. சான்ஸே இல்லங்க :-))))))

  அஃதே அஃதே அஃதே
  எனக்கும் அஃதே பீலிங்க்ஸுன்னுதான் சொல்லவந்தேன்.

  G3 ரசனைகள் எல்லாமே சூப்பர்.

  ReplyDelete
 8. பாடலின் இசையுடன்
  வரிகளின் அர்த்தங்களும்
  சேரும் போது பாடல்
  சிறக்கின்றன. ஆனால்
  இப்போதய படப்
  பாடல்களை ரசிக்க
  முடியவில்லையே

  ReplyDelete
 9. //திரைப்படங்கள்ல வந்த பக்திப்பாடல்கள்லனு
  பாத்தீங்கனா மனசுல பளிச்சுனு நிக்கறது
  முருகர் / அம்மன் பாடல்கள் தான்.//
  நான் எப்போதும் வியக்கும் விஷயம்,
  அதிலும் முருகர் பாடல்கள் அலாதி.
  //இந்த காலத்துல தனியா ஒரு வீடு
  வாங்கனும்ங்கறது பலரோட கனவு.
  அதுல அவங்க விரும்பற மாதிரி பல
  விஷயங்கள் பண்ணனும்னு ஆசைப்படுவாங்க.//
  உண்மையான உண்மை?!
  G3 நீங்க G8 தான்

  ReplyDelete
 10. சூப்பர் சாய்ஸ் g3!!
  ரசித்தேன்!! :-)

  ReplyDelete
 11. //தமிழ்மணத்தின் உறுப்பினர் பட்டியலில் அனேகமாக எல்லோரின் பிறந்ததினங்களையும் மனதில் வைத்து அவரவர் குணாதிசியங்களைப் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.//

  g3 ஒரு நடமாடும் டேட்டாபேஸ் !! :-)

  ReplyDelete
 12. அருமையான பாடல் தெரிவுகள்.

  விழியிலே உன் விழியிலே..ஒரு வெட்கம் வருதே..வருதே..

  எனக்குப் பிடித்தமானவை.

  கானா அண்ணாச்சி, என்ன பாடல்களுக்கு பொருத்தமே இல்லாமல் சூர்யாவும், ஜோதிகாவும்? :)

  ReplyDelete
 13. நான் முதலில் G3 யக்காவ பத்திச் சொல்லுறதா? இல்லை முருகன் பாட்டைச் சொல்லுறதா? இப்படி ஒரு கும்மியோஸ்பதில....ச்சே ரேடியோஸ்பதில என்னைய மாட்டி வுட்டிட்டீயே முருகா! :)

  ReplyDelete
 14. //g3 ஒரு நடமாடும் டேட்டாபேஸ் !! :-)//

  யக்கா நீங்க பாட்டு பாடுவீங்க தெரியும்! நடம் கூட ஆடுவீங்களா? சொல்லவே இல்ல? :)

  ReplyDelete
 15. //சன் டிவியில் சனி காலை 6.40 க்கு ஒளிபரப்பாகும் "பிறந்த நாள் வாழ்த்து" நிகழ்ச்சியின் இன்னொரு வடிவம் இவர்//

  ரொம்ப ரசிச்சிப் படிச்சேன் காபி அண்ணாச்சி! :)

  //அமைதியாக இருந்து கலக்கி வரும் G3 அவ்வப்போது கவிதைகளை எழுதி விட்டு "கவிதை முயற்சி" என்று லேபல் வைப்பது இவரின் தன்னடக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு//

  அது "கவி தை" முயற்சி!
  ஒவ்வொரு கவியா தைச்சி தைச்சி ஒரு காவியம் உருவாக்குறாங்க எங்க G3 யக்கா! :)

  ReplyDelete
 16. இதுக்கு மேல என் முருகனைப் பேசாம என்னால இருக்க முடியாது! :)

  திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டு சினிமாப் பாட்டு என்பதை விட தமிழ் இசைப் பாட்டு, இலக்கியப் பாட்டு-ன்னே கூட சொல்லீறலாம்!
  மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
  வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று-ன்னு...
  ஆறுமுகத்துக்கும் ஒவ்வொரு வரியை அமைத்தது அனேகமா அருணகிரிநாதருக்கு அப்புறம் இந்தப் பாட்டில் தான்! (ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று திருப்புகழ்)

  பொதுவா TMS-ஐத் தான் மைக்கை வாய்க்குள்ளேயே வைத்துப் பாடுபவர்-ன்னு விளையாட்டாச் சொல்லுவாய்ங்க! ஆனா இதுல சீர்காழியின் உச்ச ஸ்தாயிக்கு அவர் ஈடு கொடுக்க, அவர் பட்ட பாட்டை அவரே சொல்லி இருக்காரு :) வீடியோவைப் பார்க்காம பாட்டை மட்டும் கேட்டா, சீர்காழி குரலில் மொத்தமும் அடங்கீரும்! :)

  இந்தப் பாட்டின் இசையமைப்பாளர் குன்னக்குடி கிட்ட சொல்லி, சேர்ந்து பாடும் பாட்டா இருந்தாலும் கூட, வரி மாற்றி வரி பாடும் டூயட் போல TMS-க்குன்னு ஒதுக்கிக் கொடுத்தாராம்!

  பொன்னழகு மின்னிவரும் வண்ண மயில் கந்தாஆஆ-ன்னு சீர்காழி பாட,

  அதுக்கு ஈடு கொடுக்க...
  கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா...ன்னு TMS பாடுறதை நோட் சேசண்டி!

  நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்-ன்னு தனியாத் தனியாப் பாடி அப்புறம் ரெண்டு பேரும் ஒன்னாப் பாடுவாங்க! அதான் பாடலின் உச்ச கட்டம்!

  இந்தப் பாடலுக்கு மிருதங்கமோ டிரம்ஸோ இல்லாமத் தவில் வாசிப்பாங்க கூடவே! அந்தத் தவில் சத்தமே கூட பத்திக்கு இடையிடையே தான் கேட்கும்! அப்படி அடங்கிப் போயிரும் இருவரின் உச்சமான குரலிலும்!

  ReplyDelete
 17. வெட்கம் வருதே பாட்டு காட்சியாக்கம் சூப்பரோ சூப்பர்!
  அதுவும் அந்த அல்லிப்பூவை முகர்ந்து பார்க்கும் கட்டம்! ஹிஹி!
  புளியம்பழம் காட்சியும் அழகான தினுசா இருக்கும்!

  வர வர வரக்கரைத் தாண்டிடுமே-ல்ல வரகரை மாயவரம் பக்கம் இருக்கும் ஊரு! நெசமாலுமே வர வர-ன்னு வருவது போலவே பாடி இருப்பாங்க ஸ்ரேயா கோஷல் & நரேஷ்! கவிஞர் தாமரை எழுதிய அழகான பாட்டு!

  ReplyDelete
 18. //விழியிலே எனது விழியிலே//
  //விரும்புதே மனசு விரும்புதே//

  வராத பாடல்கள் ரெண்டை வர வச்ச எங்கள் G3 யக்கா வாழ்க! வாழ்க!

  துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் என்பதற்கு நீங்க தான் நல்ல உதாரணம்! :)

  ReplyDelete
 19. இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்!
  உன் கையோடு கை சேரத் தான்
  உன் உருவம் இல்லை!
  என் நிழலும் இல்லை!
  இனி என் காதல் தொலைதூரம் தான்!

  உருவமும் இல்லை, நிழலும் இல்லை-ன்னு இந்த வரிகளை நிறுத்தி நிறுத்திப் பல முறை கேட்பேன்! மிகவும் ஆழமான வரிகள்!

  கண்ணங்களும் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே!
  முத்தமிட்ட உதடுகள் உலருதோ! -ன்னு வரும்!
  கண்ணுல தான் தண்ணி வருதே! அது ஈரம் தானே செய்யணும்? அதெப்படி உலரும்? - இப்படி முரண் தொடையில் பாட்டை எழுதி ரொம்பவே யோசிக்க வைப்பாங்க இந்தப் பாட்டில்!

  ஏன் இந்த சாபங்கள்?..நான் பாவம் இல்லையா?-ன்னு கேட்கும் போது என்னமோ தெரீல, மனசுக்குள்ளயே கை தூக்கி வாழ்த்தத் தோனும்!

  இந்தப் பாட்டை நீங்க போட்டதால, இனி பின்னூட்டம் போட முடியாது! அதான் இதைக் கடைசியா வச்சிக்கிட்டேன்! விழியிலே எனது விழியிலே....

  ReplyDelete
 20. Thaks for the nice collection of songs G3.

  திருச்செந்தூரின் கடலோரத்தில் is one of my fav too.

  ReplyDelete
 21. ஜி3 பாட்டெல்லாம் சூப்பர்..
  4 வது பாட்டு சூப்பர் இது இப்பத்தான் நான் கேக்கரேன் முதல் டைமா அதுவும் இப்படி உத்து கவனிச்சு.. ரொம்ப நல்லா இருக்கு..

  ReplyDelete
 22. எனக்கு பிடித்த ஐந்து பாடல்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு வழங்கிய கானா அண்ணாச்சிக்கு மீண்டும் ஒரு தபா நன்னி சொல்லிக்கறேன் :))))

  ReplyDelete
 23. @கோபி,

  இந்த வலைதளத்தை எனக்கு அறிமுகப்படுத்திய நீங்களே என்னோட சிறப்பு நேயர் பதிவுல முதல் பின்னூட்டம் போட்டு ஊக்குவித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு கோபி :)))

  //அந்த அளவுக்கு நட்பு வட்டரத்தை வைத்திருப்பவர் நம்ம ஜி3 ;))//

  நண்பர்கள் அமைவதெல்லாம் ப்ளாக்கர் கொடுத்த வரம் ;-)))))

  //மதிப்புக்கும் பாசத்திற்க்கும் உரிய தோழி ஜி3 ;)))//

  தன்யனானேன் :)))

  //இது இருந்தே தெரியல அவுங்க எம்புட்டு பெரிய கவிஞர்ன்னு ;))))//

  ஒரு கொலைவெறில தான் இருக்கீங்கனு தெரியுது.. ஜி3.. உஷாரு....

  ReplyDelete
 24. @கைப்புள்ள,

  //ரிப்பீட்டேய்...

  கவிஞர் + ரசிகர்.//

  நீங்களுமா??? ரசிகர் மட்டும் தான் நீங்க சொன்னதுல ரைட்டு :)))

  //நல்ல பாடல்கள். நல்ல தேர்வு. //

  மிக்க நன்றிங்க :)))

  ReplyDelete
 25. @குசும்பன்,

  //கொலையுலக ச்சி ச்சீ வலையுலக தங்க தாரகை g3 கொடுத்து இருக்கும் பாட்டு அனைத்தும் அருமை என்று சொல்லவில்லை என்றால் வீட்டுக்கு ஆள் அனுப்பி அடிப்பேன் என்றார்கள் அதனால் சொல்கிறேன் அருமை தேர்வு!//

  அய்யா... ராசா... ஏன்யா என்மேல இம்புட்டு கொலைவெறி??? !!!! என்ன பிரச்சனையா இருந்தாலும் நாம ஆப்லைன்ல பேசிப்போம் :))))) இங்குட்டு பப்ளிக்ல வேணாமே ;)))

  ReplyDelete
 26. @துபாய் ராஜா, அமித்து அம்மா, கலைக்கோவன், இரும்பு குதிரை, முத்துக்கா,

  எல்லாருக்கும் ரொம்ப நன்றி :)

  ReplyDelete
 27. @ Thevesh,

  இப்பொழுதும் சில நல்ல பாடல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன :)

  ReplyDelete
 28. @முல்லை,

  ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போல... ரைட்டு ;))))

  ReplyDelete
 29. @ரிஷான்,

  //என்ன பாடல்களுக்கு பொருத்தமே இல்லாமல் சூர்யாவும், ஜோதிகாவும்?//

  ஜோடியா ஒரு படம் போடனும்னு கேட்டாரு.. நான் தான் எனக்கு பிடிச்ச சூர்யா - ஜோ படமே போடுங்கனு சொல்லி இந்த படம் குடுத்தேன் :))))

  ReplyDelete
 30. @KRS,

  //இப்படி ஒரு கும்மியோஸ்பதில//

  ஆஹா.. ஆரம்பமேவா !!!! நடக்கட்டும் :))))

  //யக்கா நீங்க பாட்டு பாடுவீங்க தெரியும்! நடம் கூட ஆடுவீங்களா? சொல்லவே இல்ல? :)//

  யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பறீங்க பாருங்க.. ஐ லைக் இட் :)))))

  //ஒவ்வொரு கவியா தைச்சி தைச்சி ஒரு காவியம் உருவாக்குறாங்க எங்க G3 யக்கா! :)//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. யாருப்பா அங்க.. ஒரு சோடா குடுங்கப்பா.. இப்பவே எனக்கு கண்ண கட்டுது.. இன்னும் மீதி கமெண்ட்டுக்கெல்லாம் வேற பதில் போடனும் :(((

  //இதுக்கு மேல என் முருகனைப் பேசாம என்னால இருக்க முடியாது! :)//

  அப்பாடா.. ஜி3 தப்பிச்சா :)))))))

  பாடல்கள் பற்றின உங்கள் தகவல்கள் சுவாரஸ்யம்.. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அண்ணாச்சி :))))

  //துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் என்பதற்கு நீங்க தான் நல்ல உதாரணம்! :)//

  நோ கமெண்ட்ஸ் :P

  ReplyDelete
 31. Congrats G3. Ellame favourite songs thaan.

  Murugan song... Thiruchendoorin Kadalorathil is fantastic. Enakum romba pidikum. Ella paatume nalla paata kuduthirukeenga.

  Vazhthugal Gayathri. Thanks Praba :-)

  ReplyDelete
 32. ஜி3 பேரவை சார்பாக நன்றி கலந்த வணக்கங்களை கானா பிரபாவுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்!


  ஆயில்யன்
  ஜி3 பேரவை
  தோஹா - கத்தார்
  தலைமையகம்

  :))

  ReplyDelete
 33. வெள்ளித்திரை பாட்டு மிகவும் அருமை.

  நன்றி காய'3' & கானா

  ReplyDelete