Pages

Friday, July 31, 2009

றேடியோஸ்புதிர் 43 - பாதி நாவல் படமான கதை?


".... ...." நாவலை நான் படித்த போது கதாபுருஷன் "காளி" வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை"

இப்படிச் சொன்ன அந்த இயக்குனர் குறித்த நாவலின் பாத்திரங்களை வைத்துக் கொண்டு மேலதிக திரைக்கதை அமைத்து வெளிவந்த அந்தப் படம் இன்றளவும் இந்தப் படத்தில் "காளி" என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகரின் பேர் சொல்லும் படமாக அமைந்து விட்டது. கூட நடித்த அந்தப் படத்தின் நாயகியும் இப்போது உயிருடன் இல்லை, இணை நாயகியும் கூட உயிருடன் இல்லை. இருவருமே தற்கொலை செய்து கொண்டவர்கள்.

இந்தப் படத்தின் முக்கியமான பின்னணி இசையை தருகின்றேன். அந்தப் படம் எது என்று கண்டுபிடியுங்களேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


ஒகே மக்கள்ஸ் இத்துடன் போட்டி முடிவடைகின்றது. இந்தப் படத்தின் பெயர் முள்ளும் மலரும்.

இறந்த அந்த நாயகிகள்: படாபட் ஜெயலஷ்மி, ஷோபா

இயக்கம்: மகேந்திரன்

நாயகன்: ரஜினி காந்த்

மூலக்கதை: உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும்

42 comments:

  1. என்ன முக்கினாலும் நடக்காது..

    ஷோபா தெரியுது..மீதி?

    ReplyDelete
  2. உதிரிப்பூக்கள்?

    ReplyDelete
  3. அந்த படம் முள்ளும் மலரும். அந்த நடிகர் ரஜினிகாந்த்.

    தங்கை நடிகை - ஷோபா
    இணை நடிகை - ஃபடாஃபட் ஜெயலட்சுமி

    சரியாங்க?

    ReplyDelete
  4. முள்ளும் மலரும்

    ReplyDelete
  5. வாங்க இளா

    முதலில் சொன்னது தப்பு, இரண்டாவதில் கரெக்ட் பண்ணீட்டிங்க ;)

    கைப்ஸ்

    அதே தான் ;)

    ReplyDelete
  6. முள்ளும் மலரும்
    ஷோபா.

    ReplyDelete
  7. முள்ளும் மலரும்!! ‍‍ சரியா,..

    ReplyDelete
  8. உங்கள் புதிரும்
    எங்கள் விடையும்
    முள்ளும் மலரும்
    இணைந்த ரோஜா ...,

    ReplyDelete
  9. படம்: முள்ளும் மலரும்
    இயக்குனர்: மகேந்திரன்
    நடிகர்: ரஜினிகாந்த்
    நடிகை: ஷோபா

    ReplyDelete
  10. முள்ளும் மலரும்??

    ReplyDelete
  11. என்ன தலைவா மறக்க கூடிய படமா இது...

    முள்ளும் மலரும்

    காளி - ரஜினிகாந்த்
    வள்ளி - ஷோபா

    இயக்குனர் - மகேந்திரன்

    ReplyDelete
  12. வினையூக்கி

    கலக்கல்

    ராமன்

    அதே தான்

    கலைக்கோவன்

    பின்னீட்டீங்

    ReplyDelete
  13. நிலாக்காலம்

    கலக்கல்

    கலை

    சந்தேகமே வேண்டாம்

    சென்ஷி

    உண்மை தான் தல

    ReplyDelete
  14. முள்ளும் மலரும்

    ஐயோ, கொஞ்சம் கஷ்டமான கேள்வியே கேட்க மாட்டீங்களா?

    ReplyDelete
  15. முள்ளும் மலரும்
    படாபட் ஜெயலட்சுமி
    ஷோபா

    ReplyDelete
  16. முள்ளும் மலரும்

    ReplyDelete
  17. ரிஷான்

    சொல்லுவீங்கப்பு ;)

    நிஜம்ஸ்

    பின்னீட்டிங்

    ReplyDelete
  18. தமிழ் பிரியரே

    பின்னீட்டிங்க

    ReplyDelete
  19. ///கானா பிரபா said...
    தமிழ் பிரியரே
    பின்னீட்டிங்க////
    தல... எங்களுக்கு கூடை எல்லாம் பின்னத் தெரியாது.

    ReplyDelete
  20. இப்படி கூடவா ஈஸியா கேப்பாங்க??

    ReplyDelete
  21. படம்: முள்ளும் மலரும்..

    நடிகர் : சூப்பர் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டார்ர்ர்ர்ர்ர்

    நடிகைகள் : ஷோபா, படாபட்

    ReplyDelete
  22. சரியா? சொல்லுங்களேன்??

    ReplyDelete
  23. Padam Mullum Malarum dhaanae :))))

    Vazhakkam pola Google aandavarukku nanni :D

    ReplyDelete
  24. Mullum malarum.

    Too many clues :)

    ReplyDelete
  25. நாவல் / படத் தலைப்பு: முள்ளும் மலரும்
    ஆசிரியர்: உமா சந்திரன்
    பட இயக்குனர்: மகேந்திரன்
    “காளி” நடிகர்: ரஜினிகாந்த்
    தற்கொலை செய்துகொண்ட நாயகி, இணை நாயகிகள்: ஷோபா, ஃபடாஃபட் ஜெயலஷ்மி
    இசை: இளையராஜா

    ;)

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  26. முள்ளும் மலரும் கல்கியில் உமாசந்திரன் (அவர்கள்தானே ?) எழுதி தொடர்கதையாக வந்தபோதே படித்திருக்கிறோம்.
    :-)

    முள்ளும் (ஒரு காலத்தில் மலராக ) மலரும் என்று கதையை ஒரே வாக்கியத்தில் விளக்கும் தலைப்பு.

    ReplyDelete
  27. காளி - ரெண்டு கையும், காலும் இல்லன்னா கூட இந்த காளி பொழச்சிபான் சார்...கெட்டபையன் சார் ;))))

    காளி - ஏய்...வள்ளிடா...என் தங்கச்சிடா ;))

    படம் - முள்ளூம் மலரும்

    இயக்கம் - மகேந்திரன்

    இசை - இசை தெய்வம் இளையராஜா ;)

    ஒளிப்பதிவு - பாலுமகேந்திரா

    இந்த படத்தில் கடையில் அந்த தங்கச்சி ரஜினியை விட்டு போகும் போது ஒரு இசை மெல்ல ஆரம்பித்து திரும்பி ரஜினியிடம் வரும் வரை ஒரு இசை வருமே...ஆகா...ஆகா மறக்கவே முடியாத இசை அது ;)

    அந்த தங்கையின் பாச உணர்த்தியை தன்னோட இசையின் மூலம் வெளிப்படுத்தியிருப்பாரு இசை இசைஞானி ;)

    ReplyDelete
  28. தமிழ் பிரியன் said...

    ///கானா பிரபா said...
    தமிழ் பிரியரே
    பின்னீட்டிங்க////
    தல... எங்களுக்கு கூடை எல்லாம் பின்னத் தெரியாது.//

    வேணாம் அழுதுடுவேன்.


    மிஸ்டர் அணிமா

    ஈசியா வச்சா மட்டும் வந்துடுவீங்க ;-))) சரியாதான் சொல்லியிருக்கீங்க

    G3

    கலக்கீட்டிங்க

    சரவணன்

    சரியான பதில், ஆமா நிறைய க்ளூ கொடுத்திட்டேன் போல

    ReplyDelete
  29. முள்ளும் மலரும். :-)

    நாவலையும் நான் படிச்சிருக்கேன். நாவலின் முடிவு இயக்குனருக்குப் பிடிக்கவில்லையென்றாலும் கூட...நாவலும் மிக நன்றாக இருக்கும்.

    முள்ளும் மலரும்... தமிழில் வந்த சிறந்த திரைக்காவியங்களில் ஒன்று.

    மகேந்திரனின் இயக்கும், இளையராஜாவின் இசையும், கவியரசரின் பாடல்களும், ரஜினி, ஷோபா, படாபட் ஆகீயோரின் நடிப்பும்... அடடா....

    பிறகு இந்தப் படம் மலையாளத்தில் வேணலில் ஒரு மழா என்று எடுக்கப்பட்டது. இதற்கு இசை மெல்லிசை மன்னர். தமிழில் வாணி ஜெயராம் பாடிய நித்தம் நித்தம் நெல்லிச்சோறு பாடல் மலையாளத்தில் அயிலா பொறிச்சதுண்டு...என்று எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரலில் மிகப் பிரபலமானது.

    ReplyDelete
  30. சொக்கரே

    அதே தான், வழக்கம் போல பட்டியலிட்டிட்டீங்க

    சுப்பராமன்

    சரியான பதில் தான்

    பாலராஜன்கீதா

    மேல் விபரங்கள் எல்லாமே சரி, அருமையான நாவலாகவும் இருந்திருக்கும், நான் இன்னும் படிக்கவில்லை.


    தல கோபி

    ஆகா அருமையான வசனக் காட்சியையும் ஞாபகப்பட்டுத்தி சரியா சொல்லீட்டிங்களே

    ReplyDelete
  31. I couldn't listen in my Mac Safari .. But it must be mullum malarum !

    ReplyDelete
  32. முள்ளும் மலரும் படம், மகேந்திரனது படம் அது. செந்தாழம் பூவில் பாடல் மிகவும் அருமை அந்த படத்தில்.

    பனிமலர்.

    ReplyDelete
  33. ராகவன்

    உண்மைதான் மறக்க முடியாத படமாகிவிட்டது இது. அந்த மலையாளப்பாடல் கூட அருமை.

    ஜேகே

    சரியான பதில் தான், ஏன் அந்த ப்ளேயர் வேலை செய்யவில்லை :(

    பனிமலர்

    சரியான பதில் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. வணக்கம் பிரபா...
    படம் - முள்ளும் மலரும்
    நடிகர் - ரஜினி
    இயக்குனர் - மகேந்திரன்
    நாவலாசிரியர் - உமா சந்திரன்
    நாயகி - படாபட் ஜெயலக்‌ஷ்மி
    துணை நாயகி (நாயகின் தங்கை ) - ஷோபா
    இசை - இளையராஜா

    ........
    படத்தின் இறுதிக் கட்டத்தில் ஷோபா ரஜினியிடம் திரும்பிவிட, முகத்தில் பெருமை பொங, இப்ப என் தங்கச்சியை நீ கொண்டு போப்பா என்ற் சொல்வாரே.... என்னா நடிப்பு....

    ReplyDelete
  35. முள்ளும் மலரும் தானே

    ReplyDelete
  36. பாலு மகேந்திரா தானே ஒளிப்பதிவு இந்தப்படத்துக்கு

    ReplyDelete
  37. Movie name - Mullum malarum

    Director - Mahendran

    Music - Isaignani Ilayaraja

    Cast - Rajinikanth, Sarathbabu, Shoba, Fatafat Jayalakshmi.

    ReplyDelete
  38. அருண்மொழிவர்மன்

    சரியான கணிப்பு

    சின்ன அம்மணி

    பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவும் கூட, பதிலும் சரி

    பெயர் குறிப்பிட விரும்பாத நண்பரே

    பதில் சரி

    ReplyDelete
  39. ஒகே மக்கள்ஸ் இத்துடன் போட்டி முடிவடைகின்றது. இந்தப் படத்தின் பெயர் முள்ளும் மலரும்.

    இறந்த அந்த நாயகிகள்: படாபட் ஜெயலஷ்மி, ஷோபா

    இயக்கம்: மகேந்திரன்

    நாயகன்: ரஜினி காந்த்

    மூலக்கதை: உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும்

    ReplyDelete
  40. 'முள்ளும் மலரும்' ரஜனி இல்லாம போய் ரொம்ப நாளாயிடுச்சு...

    ReplyDelete
  41. நான் ரொம்ப லேட்டு!!

    ReplyDelete