Pages

Friday, December 5, 2008

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலம்

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக அமைந்த "மனசுக்குள் மத்தாப்பு" திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்களைக் கொண்ட தொகுப்பாக இப்பதிவு அமைகின்றது.

ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தானே எழுதி இசையமைத்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்கின்றது. தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கின்றார்.

"ஒரு வழிப்பாதை" போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்ததோடு "முதல் பாடல்" என்ற படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து அதுவரை தன் பாடல்கள் மூலம் சேர்த்து வைத்த பணத்தையும் கரைய வைத்தார்.

இன்றைய தொகுப்பிலே எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலப்படங்களை மட்டும் வைத்துக் கொண்டு இவரின் முதல் படமான "சின்னப்பூவே மெல்லப் பேசு" திரைப்படத்தில் ஆரம்பித்து சினிமா ரவுண்டில் முதல் ஆட்டத்தை நிறுத்திய படங்களில் ஒன்றான "பெரும் புள்ளி படத்தோடு நிறைவாக்குகிறேன்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட "சின்னப்பூவே மெல்ல பேசு" திரையில் இருந்து இரண்டு பாடல்கள் வருகின்றன.
முதலில் "சங்கீத வானில்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பாடுகின்றார்கள்.அடுத்து இதே படத்தில் வந்த "ஏ புள்ள கருப்பாயி" என்ற பாடலை எழுதி, இசையமைத்து முதன் முதலில் பாடுயிருக்கின்றார் எஸ்.ஏ.ராஜ்குமார். அந்தப் படம் வந்த வேளை ஏகத்துக்கும் பிரபலமாகி இருந்தது இப்பாடல்.
அடுத்து வருவது இந்த வாரம் றேடியோஸ்புதிரில் கேள்வியாக அமைந்த படமான "மனசுக்குள் மத்தாப்பு" . மலையாளத்தில் தாள வட்டம் என்ற பெயரில் மோகன்லால் நடிக்க பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். இந்தப் படமே ராபர்ட் ராஜசேகரன் இயக்கத்த்தில் "மனசுக்குள் மத்தாப்பு" என்ற பெயரில் பிரபு, சரண்யா, லிஸி நடிப்பில் வந்தது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்தில் நடித்த லிஸி தன் வாழ்க்கைத் துணையாக பிரியதர்ஷனை பின்னாளில் தேடிக் கொண்டார். சரண்யா இந்தப் படத்தின் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகரனை மணமுடித்து கொஞ்ச காலம் ஒன்றாக வாழ்ந்தவர். "மனசுக்குள் மத்தாப்பு" படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்தபோது தான் அவதானித்தேன் அப்படத்தின் பின்னணி இசை கொடுத்திருந்தவர் வித்யா சாகர். ஏனோ எஸ்.ஏ.ராஜ்குமார் அப்போது பின்னணி இசைக்காகப் பயன்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்பே வித்யாசாகர் முழு இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

மனசுக்குள் மத்தாப்பு படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்களைத் தருகின்றேன்.
முதலில் வருவது றேடியோஸ்புதிரில் இடையிசையாக வந்த பாடலான "ஓ பொன்மாங்குயில்" என்ற இனிய பாடலைப் பாடுகின்றார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.அடுத்து வருவது "பூந்தென்றலே ஓடோடி வா" என்னும் பாடல், இதனை ஜெயச்சந்திரன், சுனந்தா ஆகியோர் பாடுகின்றார்கள்.தொடர்ந்து வரும் படம் "பறவைகள் பலவிதம்" . கல்லூரி வாழ்வில் எதிர்காலக்கனவோடு இணைந்த நண்பர்கள் பின்னர் திசைமாறிய பறவைகளாய் மாறும் சோகமே படத்தின் கரு. இப்படத்தினையும் ராபர்ட் ராஜசேகரன் இரட்டையர்கள் இயக்கியிருந்தார்கள். இப்படத்தின் தோல்வி இரட்டை இயக்குனர்களையும் நிரந்தரமாகப் பிரித்தது. பின்னர் "பூமணம்" என்ற பெயரில் ராஜசேகரன் நாயகனாக ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்து இப்போது தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் அப்பா வேஷம் கட்டுகிறார். நிழல்கள் படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடலைப் பாடி நடித்த இந்த ராஜசேகரனை மறக்க முடியுமா?

"பறவைகள் பலவிதம்" திரையில் வந்த "மனம் பாடிட நினைக்கிறதே" என்ற இனிய பாடலை மனோ, சுனந்தா, எஸ்.சந்திரன், எஸ்.பி.சைலஜா ஆகியோர் பாடுகின்றார்கள்.தொடர்ந்து எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு பெயர் சொல்லும் விதமாக எந்தப் படமோ இயக்குனரோ அமையவில்லை. அவரின் சரிவுக்காலத்தில் வந்த படங்களில் வந்த " ஒரு பொண்ணு நெனச்சா" படத்தில் வரும் "உதயமே உயிரே" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் பாடும் பாடலை கேட்க கேட்க இனிமை. கேட்டுப் பாருங்களேன்எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஆரம்பத்தில் நல்லதொரு அறிமுகத்தை ராபர்ட் ராஜசேகரன் கொடுத்தது போல இவருக்கு "புதுவசந்தம்" மூலம் வாழ்க்கையே கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். "இது முதல் முதலா வரும் பாட்டு" என்று பாடியே புதுவசந்தத்தை வெற்றி வசந்தமாக்கினார். புது வசந்தம் படத்தின் பாடல்கள் எல்லாமே தேன் தேன் தேனே தான். இப்படம் வந்த காலம் குறித்து இன்னொரு விரிவான பதிவு தேவை. எனவே "புதுவசந்தம்" படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்களைக் கேளுங்கள்.

ஆர்மோனியத்தினை முக்கிய பலமாக வைத்துக் கொண்டு "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா" என்று கே.ஜே.ஜேசுதாஸ் பாடுவது ஒரு வகை இனிமை.அதே "அதே பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா" (மற்றைய வரிகளில் மாறுதலோடு) வேக இசை கலந்து பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் தான் அன்று சூப்பர் ஹிட்.ராஜாவின் புண்ணியத்தில் பொழைப்பை நடத்திய ராமராஜன் சொந்தக் காலிலும் நின்று பார்ப்போமே என்று தன் குருவானவர் எம்.ஜி.ஆரின் படங்களின் தலைப்புக்களை உல்டா செய்து அன்புக்கட்டளை (அரசகட்டளை) இதுக்கு ராஜா தான் இசை, மற்றும் மில் தொழிலாளி (விவசாயி), வகையறாக்களில் நடித்த படம் "தங்கத்தின் தங்கம்" (எங்கள் தங்கம்). தங்கத்தின் தங்கம் படத்தின் இசை எஸ்.ஏ.ராஜ்குமார். ஆஷா போன்ஸ்லேயை வைத்தும் பாடல் கொடுத்திருப்பார், அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் தருகின்றேன். இப்போது அந்தப் படத்தில் இருந்து " செவ்வந்திப்பூ மாலை கட்டு" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடக் கேளுங்கள்.பல வருஷமாக எடுபிடியாகவும், உதவி இயக்குனராகவும் அலைந்து திரிந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இயக்குனர் பட்டம் கொடுத்தது "புரியாத புதிர்" முந்திய தனது தயாரிப்பான புது வசந்தம் பெரு வெற்றி கண்டதால் சூப்பர் குட் பிலிம்ஸ் எஸ்.ஏ.ராஜ்குமாரையே ஆஸ்தான இசையமைப்பாளராக பல காலம் வைத்திருந்தது. அந்த வகையில் புரியாத புதிர் படத்திலும் "கண்ணோரம் கங்கை தான்" பாடலோடு இங்கே நான் தரும் "ஓர் இரவில் பாட்டு வந்தது" பாடலும் இனிமை. பாடலைப் பாடுகின்றார்கள் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பி.சுசீலா.எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும், இயக்குனர் விக்ரமனுக்கும் சரிவைக் கொடுத்த காலம் "பெரும்புள்ளி" படத்தோடு. இப்படத்தில் தற்போது செயல் இழந்து பரிதாப நிலையில் இருக்கும் பாபு மற்றும் சுமா ரங்கனாத் நடித்திருப்பார்கள். இப்போது ரீமிக்ஸ் பாட்டில் பேயாய் அலையும் இசையமைப்பாளர்களுக்கும் முன்னோடியாக சொர்க்கம் படத்தில் வரும் "பொன்மகள் வந்தாள்" என்ற ரி.எம்.செளந்தரராஜன் பாடலை புது இசை கலந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கொடுத்திருந்தார். அதை விட்டு விட்டு இன்னொரு இனிய பாடலான "மனசும் மனசும் சேர்ந்தாச்சு" பாடலை சுனந்தா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேளுங்கள். இன்னொரு தொகுப்பில் சந்திப்போம்.

36 comments:

 1. மீ த பர்ஸ்ட்ட்ட்!

  ReplyDelete
 2. எனக்கு தெரியும் ராஜ்குமாருன்னு! பட் கானாவுக்கு, எல்லார்க்கிட்டயும் கேட்டு, தெரிஞ்சுக்கிட்டும் நாமளா சொல்லகூடாது அப்படின்னுத்தான் வைராக்கியமா சொல்லவே இல்லை !

  ReplyDelete
 3. கிகிகி அடுத்த வாரம் பதிவு எப்ப? நொம்ப ஆர்வமா மீ த வெயிட்டிங்க! கொஞ்சம் கஷ்டமாவே கொடுக்க டிரைப்பண்ணுங்க! (பாவம் நீங்களும் கஷ்டமா கொடுக்க டிரைப்பண்ணி டிரைப்பண்ணி அலுத்துப்போயிருப்பீங்க இருந்தாலும் டிரைப்பண்ணுங்க! தல!)

  ReplyDelete
 4. ரொம்ப நாளா கேக்காத பாட்டெல்லாம், உங்க புண்ணியத்திலே கேட்டேன் :-)

  நன்றி

  ReplyDelete
 5. தல கலக்கிட்டிங்க....

  இப்போதைக்கு ஒரு பெரிய நன்றி ;))

  ReplyDelete
 6. :-) எபப்டிதான் வாராவாராம் அசத்தறீங்களோ போங்க!!

  //யில்யன் said...

  எனக்கு தெரியும் ராஜ்குமாருன்னு! பட் கானாவுக்கு, எல்லார்க்கிட்டயும் கேட்டு, தெரிஞ்சுக்கிட்டும் நாமளா சொல்லகூடாது அப்படின்னுத்தான் வைராக்கியமா சொல்லவே இல்லை !
  //

  அதே தான்..இந்த் ஐடியாவை அண்னனுக்கு சொன்னதே நாந்தானே!

  ReplyDelete
 7. மிக மிக அசத்தலான தொகுப்பு

  ReplyDelete
 8. hmmm..nice pathivu... perumazhaiyil idaiyil thaniyaai thooriya thorral pola s.a rajkumar-in prevesam..gud

  ReplyDelete
 9. ஆயில்யா

  இதுவும் சொல்லுவீரு ;)

  //சிவமணியன் said...
  ரொம்ப நாளா கேக்காத பாட்டெல்லாம், உங்க புண்ணியத்திலே கேட்டேன் :-)//

  மிக்க நன்றி சிவமணியன்

  என்னால் முடிந்தவகையில் இப்படியான அரிய பாடல்களைத் தருகின்றேன்.

  ReplyDelete
 10. தல கோபி

  வருகைக்கு நன்றி

  சந்தனமுல்லை

  நீங்களுமா? அவ்வ்வ்

  ReplyDelete
 11. அதே "அதே பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா" (மற்றைய வரிகளில் மாறுதலோடு) வேக இசை கலந்து பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் தான் அன்று சூப்பர் ஹிட்.

  ////////////////////////////////////


  இதையும்கூட ரீமிக்ஸ் என்று சொல்லலாமா.....

  ReplyDelete
 12. எம்.ஜி.ஆரின் படங்களின் தலைப்புக்களை உல்டா செய்து அன்புக்கட்டளை (அரசகட்டளை) இதுக்கு ராஜா தான் இசை, மற்றும் மில் தொழிலாளி (விவசாயி), வகையறாக்களில் நடித்த படம் "தங்கத்தின் தங்கம்" (எங்கள் தங்கம்). தங்கத்தின் தங்கம் படத்தின் இசை எஸ்.ஏ.ராஜ்குமார்.


  ////////////////////////////////////
  ஆமால்ல.........

  ReplyDelete
 13. கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள்...
  ராஜ்குமாரைப் பற்றி அரிய தகவல்கள் தந்ததற்கு....
  'புது வசந்தம்' படத்தின் முதல் பாடலில்( எஸ்.ஏ.ராஜ்குமாரே எழுதிய) பாடலில் வரும்'" ஏக போக அரசர் எல்லாம் ஜெயிக்கும் உலகிலே, இந்த ஏகலைவன் பாட்டும் கூட ஜெயிக்கும் நடுவிலே"... அருமையான வரிகள்...
  'செவ்வந்திப்பூ மாலைகட்டு' பாட்லும், 'மனசும், மனசும் சேந்தாச்சு' பாடலும் இளையராஜா பாடல்கள் என்று நினைத்திருந்தேன். தெரி(ளி)ய வைத்ததற்கு நன்றி...
  தங்கள் சேவை தொடரட்டும் என வாழ்த்துகிறேன்...

  ReplyDelete
 14. பிரபா,

  You tube il ஒரு கோடி ஹிட்ஸ் ஐ நெருங்கி கொண்டிருக்கும் எஸ்.ஏ.ராஜ்குமாரின்'பெண்ணின் மனதை தொட்டு' படத்தில் வரும் பாடலை மிக நகைச்சுவையாக ண்க.

  URL: http://in.youtube.com/watch?v=ZA1NoOOoaNw

  Krithika.

  ReplyDelete
 15. ராஜ்குமாரின் பாடல்கள்ல கொஞ்சம் இந்திப்பட சாயல் இருக்கும். பெரும்பாலும் எல்லா பாடல்களும் ஹிட்.

  ReplyDelete
 16. you could have added one line praise for his recycling abilities. Many of his songs sound alike and there are examples where he used the same tune for two songs of the same movie!

  ReplyDelete
 17. எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல்களில் ஒன்று 'ஓ பொன்மாங்குயில்' பாடல். இப்போக்கூட, சின்ன குழந்தையா இருந்தப்போ, விவிதபாரதியில் இந்தப் பாட்டெல்லாம் கேட்டுக்கிட்டே, வேலைக்கு செல்லவேண்டிய அம்மா, அவ்ளோ அவசரத்திலும் இதமாக தலைவாரிவிடுவதை இன்பமாக அனுபவித்த காலை நேரங்கள் நினைவுக்கு வந்து நெஞ்சடைக்கும்:):):)

  ReplyDelete
 18. உங்களுடைய இந்தப் பதிவின் மூலமாக சில தெரியாத விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது... இந்த நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி.
  "றோசாப்பூ சின்ன றோசாப்பூ" அந்தப் பாடலை மறக்க முடியுமா? :P அந்தப் பாடலும் எஸ் ஏ ராஜ்குமார் தானே இசையமைத்தார்? (உங்கள் இதயம் படபடப்பதை என்னால் இங்கு கேட்க முடிகிறது :P

  ReplyDelete
 19. //முரளிகண்ணன் said...
  மிக மிக அசத்தலான தொகுப்பு//

  மிக்க நன்றி முரளிகண்ணன்

  //Anonymous said...
  hmmm..nice pathivu... perumazhaiyil idaiyil thaniyaai thooriya thorral pola s.a rajkumar-in prevesam..gud
  //

  வருகைக்கு நன்றி நண்பரே

  இந்த இசைத்தூறல் இனிமையாக இருந்த காலம் அது இல்லையா.

  ReplyDelete
 20. ஏக போக அரசர்கள் (ilayaraja?) எல்லாம் இருக்கும் நிலையிலே
  இந்த ஏகலைவன் பாட்டும் கூட ஜெயிக்கும் நடுவிலே

  - புது வசந்தம் பாடல் வரிகள் இவை.

  அது போலவே நடந்தது.

  //" ஒரு பொண்ணு நெனச்சா" படத்தில் வரும் "உதயமே உயிரே" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் பாடும் பாடலை கேட்க கேட்க இனிமை. கேட்டுப் பாருங்களேன்//

  என் all time favourite

  ReplyDelete
 21. வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்

  //SUREஷ் said...
  அதே "அதே பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா//

  சுரேஷ்

  அந்தப் பாட்டையும் ரீமிக்ஸ் ஆக்கிட்டீங்களா ;) அப்படியும் வச்சுக்கலாம் தான். ஆனா அவர் கொடுத்த பொன்மகள் வந்தாள் கலக்கல் ரீமிக்ஸ்

  // தமிழ்ப்பறவை said...
  கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள்...
  ராஜ்குமாரைப் பற்றி அரிய தகவல்கள் தந்ததற்கு....//

  வருகைக்கு நன்றி தல

  செவ்வந்தி பூமாலை கட்டு பாட்டை ஆஷா போன்ஸ்லே சோகத்தில் பாடியிருப்பார். நீங்க சொன்னது போல சில பாடல்கள் ராஜா பாணியில் இருக்கும். இன்னொரு உதாரணம் உதயமே உயிரே

  ReplyDelete
 22. க்ருத்திகா

  இந்தப் பாட்டை வைத்து இப்படி ஒரு விஷமம் பண்ணீட்டாங்களா ;-))

  //சின்ன அம்மிணி said...
  ராஜ்குமாரின் பாடல்கள்ல கொஞ்சம் இந்திப்பட சாயல் இருக்கும். பெரும்பாலும் எல்லா பாடல்களும் ஹிட்.//

  அதென்னமோ உண்மை தான் சின்ன அம்மணி

  //Anonymous said...
  you could have added one line praise for his recycling abilities. //

  வணக்கம் நண்பரே

  எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலப்பாடல்களில் அந்தப் பண்பு இருக்கவில்லை. அவரின் அடுத்த சுற்றுப் பாடல்களில் அப்படியான கைவரிசையைக் காட்டியிருப்பார். அதைப் பற்றி ஞாபகப்படுத்தியதற்கும் நன்றி.

  ReplyDelete
 23. எல்லாப் பாட்டுகளுமே அருமையான பாட்டுகள்.

  எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்கள் மிக இனிமையானவை. பலப்பல பாடகர்களை வைத்து சிறப்பான பாடல்களைத் தந்தார்.

  பின்னாளில் ஒரே மெட்டு பல பாடல் என்று மாறிப் போனாலும்... அவருடைய ஆரம்பகாலப் பாடல்களில் இருக்கும் இனிமையும் எளிமையும் மறுக்கமுடியாதவை.

  குறிப்பாக நீங்கள் கொடுத்திருக்கும் "ஓர் இரவில் காற்று வந்தது" பாடலும் "மனசும் மனசும் சேந்தாச்சு பூமாலைதான்" பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். "சங்கீத வானில் சந்தோஷம் பாடும்" பாடலும் அப்படியே.

  ReplyDelete
 24. மிகவும் அருமையான தொகுப்பு. கால வெளித் தடத்தில் புதைந்துள்ள நினைவுகளை மீட்டியிருக்கிறீர்கள். அவர் இறுதியாக இசை அமைத்த பாடல்கள் பற்றிய தகவல்களை வழங்காது ஏமாற்றி விட்டீர்கள்! உங்கள் அடுத்த பதிவில் அவை இடம் பெறுமா??

  ReplyDelete
 25. //தற்போது செயல் இழந்து பரிதாப நிலையில் இருக்கும் ரமேஷ் மற்றும் சுமா ரங்கனாத் நடித்திருப்பார்கள

  ஒரு சிறு தகவல் பிழை பிரபா.... இப்படத்தில் நடித்தவர் என்னுயிர் தோழன் பாபு. என்னுயிர் தோழன் ரமேஷ் இப்போது தென்னவன் என்ற பெயரில் அப்பப்போ நடிக்கிறார். மனசார வாழ்த்துங்களேன் திரைப்படத்தில் நடித்தபோதுதான் பாபுவுக்கு விபத்து நடந்தது.


  மேலும், பறவைகள் பலவிதம் திரைப்படத்திற்கும் எஸ். ஏ . ராஜ்குமார் பாடல்களாஇ எழுதி இசையமைக்க வித்யாசாகர் பிண்ணனி இசையமைத்தார். நீங்கள் தந்த மனம் பாடிட ... என் பெரு விருப்ப பாடல்களில் ஒன்று
  தொடருட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 26. அருண்மொழி

  ஆமாம், நான் எழுதும் போது ரமேஷை போட்டு விட்டேன், பாபு தான் அந்த நடிகர், தவறைக் காட்டியமைக்கு மிக்க நன்றி. பூமனம் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்தபோது பாடல்களை எழுதியோரில் எஸ்.ஏ.ராஜ்குமாரும் இருக்கிறார்.

  //rapp said...
  எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல்களில் ஒன்று 'ஓ பொன்மாங்குயில்' பாடல். //

  ;-) ராப் உங்கள் பால்ய நினைவுகளை கேட்க ரசிப்பாக இருந்தது.

  // Haran said...
  உங்களுடைய இந்தப் பதிவின் மூலமாக சில தெரியாத விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது... இந்த நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி.
  "றோசாப்பூ சின்ன றோசாப்பூ" அந்தப் பாடலை மறக்க முடியுமா? //

  ஆஹா கிளம்பீட்டாங்கய்யா, மறக்க முடியாத பாட்டு இல்லையா அப்பு ;-)

  ReplyDelete
 27. // G.Ragavan said...
  எல்லாப் பாட்டுகளுமே அருமையான பாட்டுகள்.//

  வாங்க ராகவன், வருகைக்கு நன்றி


  // மெல்போர்ன் கமல் said...
  அவர் இறுதியாக இசை அமைத்த பாடல்கள் பற்றிய தகவல்களை வழங்காது ஏமாற்றி விட்டீர்கள்! உங்கள் அடுத்த பதிவில் அவை இடம் பெறுமா??//

  வணக்கம் கமல்

  இது அவரின் ஆரம்ப காலப் பாடல்கள். இன்னொரு தொகுப்பில் அவரின் அடுத்த சுற்று வரும்.

  ReplyDelete
 28. அருமையான தகவல்கள்..கலக்கிட்டிங்க.. :)

  இவரைப் பற்றி முன்பு ஒரு சிறப்பு நிகழ்ச்சி வானொலியில் செய்தபோது (ஷக்தி fm) பல தகவல்கள் சொன்னேன்.. ஆனால் சின்னப்பூவே மெல்லப் பேசு பாடல்கள் எல்லாமே இவர் தான் எழுதியது என்று இன்று தான் உங்கள் புண்ணியத்தில் தெரிந்துகொண்டேன்..(எ புள்ள கருப்பாயீ மட்டும் தான் இவர் எழுதியது என்று நினைத்திருந்தேன்)

  ராஜாவுக்கே சவால் விடுத்த இவர் தனது ஒரே வகைப் பாடல்களால் தான் காணாமல் போனாரோ? (லா லா லா )

  என் தொடர்ந்தும் பாடல்கள் எழுதாமல் போனாரோ?

  எஸ்.ஏ.ஆர் பற்றிய அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
 29. hi gana prabakar,

  manasum manasum sernthachu padalai
  pottu ellor mananasum poothachu.

  unga speciale idhu pondra yaarum
  athikam ketiratha padalgal than.

  ithu pondra athikam kidaipatharkku
  ariya padalgalaiye podavum

  nandri

  srikanth

  ReplyDelete
 30. வாங்கோ லோஷன்

  நான் இங்கே கொடுத்த அவரின் ஆரம்ப காலப் பட்டியலில் புதுவசந்தத்துக்கு முன் எல்லாமே வித்தியாசமாகத் தான் இருந்தது. இந்தப் படம் கொடுத்த வெற்றியும் தொடர்ந்து இதே லாலாலா போட்டு வந்த சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், வானத்தப் போல என்று அடுக்கிக் கொண்டே போகும் படங்களின் வெற்றியும் தான் இவரை மீள் பதிப்புக்களைப் போட வைத்திருக்கலாம். சினிமாவில் இதெல்லாம் கண்மூடித்தனமான ஒரு விஷயமும் இல்லையா?

  சினிமாவுக்கே உரிய கவித்துவம் கொண்ட வரிகளை இவர் ஆரம்பத்தில் கொடுத்திருந்தாலும் முழுமையாகவே இப்போது கவிஞர் பதவியை உதறிவிட்டார்.

  இவர் குறித்த அடுத்த தொகுப்பில் அவை பற்றிப் பார்க்கின்றேன்.

  ReplyDelete
 31. வாங்க சிறீகாந்த்

  நிச்சயமா உங்களைப் போன்றவர்களுக்கு பிடித்த இது போன்ற அரிய பாடல்கள் நிறைய கைவசம் இருக்கு, அவ்வப்போது இது போன்ற தொகுப்பாக கொடுக்கின்றேன். மிக்க நன்றி

  ReplyDelete
 32. கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. மிக்க நன்றி ராகினி

  ReplyDelete
 34. தகவல்கள் பல தந்தமைக்கு நன்றிகள் அண்ணா..

  ஒரு பொண்ணு நினைச்சா திரைக்கு சங்கர் கணேஸ் இருவரும் இசையமைத்திருந்தனர் என்று இது வரை நினைத்திருந்தேன்.. தங்கள் பதிவினால் தெளிவடைந்தேன்.. நன்றி

  ReplyDelete
 35. பூந்தென்றலே நீ பாடிவா,மனசும் மனசும் சேர்ந்தாச்சு,மனம் பாடிட நினைக்கிறதே நினைவுகளை கிளரிவிட்டுட்டீங்க. அந்த காலகட்டத்தில் மிகவும் விரும்பிக் கேட்ட பாடல்கள்.

  செவ்வந்திப்பூ மாலைகட்டு ஆஷா பாடிய வெர்ஷன் இருந்தா அப்லோட் பண்ணுங்க கானா.

  ReplyDelete