Pages

Tuesday, December 9, 2008

றேடியோஸ்புதிர் 30 - மரத்தின் கீழே இருந்து யோசிச்சு பாருங்க

மீண்டும் "ராஜ"பாட்டையோடு வந்திருக்கின்றேன் ;)
இங்கே கொடுத்திருக்கும் பின்னணி இசை வந்த படம் 28 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. ஒரு முன்னணி இயக்குனர் இயக்கத்தில் வந்த இப்படம் ஒரு சமுதாயப் பிரச்சனையைப் பேசுகின்றது. இதே ஆண்டு இதே காலப்பகுதியில் இன்னொரு முன்னணி இயக்குனரும் கூட இதே சமுதாயப் பிரச்சனையை வைத்தே ஒரு படம் பண்ணி இரண்டும் ஒரே ஆண்டில் வெளியாயின.

இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை வந்த படத்தின் கதையை எழுதியவர் பின்னாளில் ஒரு முக்கியமான இயக்குனரானார். ஆனால் இந்தப் படம் அவருக்கு பேர் வாங்கிக் கொடுக்கவில்லை. இந்தப் படத்தில் இதே படத்தில் ஒரு நாயகனாக நடித்தவர் கூட பின்னாளில் இயக்குனர் தான். இந்தப் படத்தின் இன்னொரு நாயகி மேலே நான் சொன்ன படம் வந்தபோது இதே சமுதாயப் பிரச்சனையை வைத்து படம் பண்ணிய இயக்குனரின் இன்னொரு படைப்பில் நாயகியாக நடித்தார். இந்தப் படம் தமிழ் திரையுலகின் முக்கியமான படைப்பாளியை கூட அறிமுகப்படுத்திய பெருமை கொடுத்தது.

அட இளையராஜாவை கெளரவ நடிகர் பட்டியலில் கூட போட்டிருக்கிறார்களே ;) சரி இம்புட்டும் போதும் ஏதாவது மரத்தின் கீழே இருந்து யோசிச்சு கண்டுபிடிங்கப்பா

p30.mp3 -

32 comments:

  1. மீ த் பர்ஸ்ட்டூ ! :))

    ReplyDelete
  2. இப்போ மரத்தைத் தேட கஷ்டமா இருக்கு.ஆகவே இந்த போட்டியோட பதிலை இ மெயில் பண்ணிடுங்க.நன்றி அண்ணா

    ReplyDelete
  3. முடியல... எஸ்கேப்

    ReplyDelete
  4. //ஆயில்யன் said...
    மீ த் பர்ஸ்ட்டூ ! :))
    //

    அப்படியே விடையும் சொல்லியிருக்கலாம்லே



    //(unknown blogger) said...

    இப்போ மரத்தைத் தேட கஷ்டமா இருக்கு.ஆகவே இந்த போட்டியோட பதிலை இ மெயில் பண்ணிடுங்க.நன்றி அண்ணா//

    தங்கச்சி

    ஏன் இந்த கொல வெறி?

    //அத்திரி said...
    முடியல... எஸ்கேப்//

    வாங்க அத்திரி, மிகவும் சுலபமானதாச்சே

    ReplyDelete
  5. ஹய்ய்யா நான் கண்டுபுடிச்சிட்டேனே

    நிழல்கள்

    பாரதி ராஜா

    வைரமுத்து

    ரோகிணி

    ReplyDelete
  6. ஆயில்யன்

    வாழ்த்துக்கள், சரியான கணிப்பு நீங்க தான் உண்மையிலேயே முதல் ஆள் ;)

    ReplyDelete
  7. கானா பிரபாஆஆஆஆஆ,

    எல்லாம் சரி, கடைசி க்ளூ ரொம்ப சுலபமா அமைஞ்சுடுச்சே, ப்ளஸ் உங்க இசைத் துணுக்கில இருக்கிற முதல் ‘பெஸ்ட் ஆஃப் லக்’ :)

    பதில்: நிழல்கள் - இயக்கம்: பாரதிராஜா - கதை: மணிவண்ணன் - நாயகனாக நடித்த பின்னாள் இயக்குனர்: ராஜசேகர் - படத்தில் அறிமுகமான படைப்பாளி: வைரமுத்து

    ஆக அடுத்து நிழல்கள் பின்னணி இசைத் தொகுப்பா, ஹையா, ஜாலி ஜாலி! (அட்வான்ஸ் நன்றிகள் :)

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  8. சொக்கன்

    பின்னீட்டீங்க ;-) ஆகா இந்த முறையும் சொந்த செலவில் சூன்யம் பண்ணீட்டேனா :(

    ReplyDelete
  9. வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் நிழல்கள்..

    வறுமையின் நிறம் சிவப்பில் நடித்த பிரதாப் போத்தன் பின்னாளில் புகழ்ப்பெற்ற இயக்குனரானார். :-)

    ReplyDelete
  10. மைபிரண்ட்

    வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  11. படத்தின் பேர் மனதுக்குள் நிழலாக தான் நினைவுக்கு வருகின்றது !
    டவுட் தான் அண்ணே !
    ப்ரீதம்

    ReplyDelete
  12. அண்ணை! நான் பதில் போடாட்டிலும் நீங்கள் சும்மா! தமிழ்பித்தன் வெல்டன் கண்டு பிடிச்சிட்டியல் கெட்டிக்காரன்
    முதலில் பதில் கண்டு பிடிச்சது நீர்தான்!
    அப்பிடி இப்பிடி பில்டப் விடலாம்தானே! (((ஏதும் நிறைய செலவாகுமோ??))

    ReplyDelete
  13. மரத்தடி 'நிழல்கள்'ல நின்னுதான் யோசிக்கனும் போல :)

    ReplyDelete
  14. நிழல்கள்...தலைப்பிலேயெ பதில் இருக்கிறதே

    ReplyDelete
  15. மரத்துக்கு கீழ நிக்காம...
    யோசிச்சாலும் கூட
    படம் பேர் ...நிழல்கள் தான்.
    இதில் சொன்ன சமுதாய பிரச்சனை..
    வேலையில்லா திண்டாட்டம்.
    இதே பிரச்சனையை ஒட்டி வந்த
    இன்னொரு படமான
    வறுமையின் நிறம் சிவப்பின்
    இயக்குனர் பாலசந்தர்.

    மணிவண்ணன் கதையை எழுத
    இப்படத்தை இயக்கினார் பாரதி ராஜா .

    இப்படம் நடிகர் ரவிக்கு ...
    நிழல்கள் ரவி என்று பெயர் இட்டது.
    சந்திர சேகரோடு ....
    ராஜசேகரனும் இப்படத்தில் நடித்திருந்தார்.
    (பின்னாளில் இவர் தான் இயக்குனர் ஆனாரோ )

    வானம் எனக்கொரு போதிமரம் ...
    (மரத்துக்கு கீழன்னு சொன்னது
    நிழலுக்காகவா....அல்லது
    போதிமரத்துக்காகவா)
    பாடிய முக்கிய படைப்பாளி
    கவிஞர் வைரமுத்தை
    அறிமுகப்படுத்திய படம்.

    ReplyDelete
  16. படம் : நிழல்கள்..
    கதை : மணிவண்ணன்..
    நாயகன், இயக்குனர் : ராஜசேகர்..
    இன்னொரு படம் : வறுமையின் நிறம் சிவப்பு(??)
    பெருமைக்குரிய அறிமுகம் : வைரமுத்து..
    நாயகியின் மற்றொரு படம் : ????

    சரி என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  17. படம்: நிழல்கள்
    இசை: இளையராஜா
    இயக்கம்: பாரதிராஜா
    நாயகன்: ராஜசேகரன்
    கதாசிரியர்: மணிவண்ணன்

    ReplyDelete
  18. வணக்கம் பிரபா

    நீங்கள் சொன்ன படம் நிழல்கள்
    கதாசிரியர் / பின் இயக்குணார் ஆனவர் : மணிவண்ணன்
    இதில் நடித்து பின் இயக்குனர் ஆனவர் : ராஜசேகர் (ராபர்ட் ராஜசேகர் சோடியில் ஒருவர்)

    உருவான படைப்பாளி: வைரமுத்து

    இதே பிரச்சனையை மையமாக்கி வெளியான மற்றைய படம் : வறுமையின் நிறம் சிகப்பு, இயக்குனர் பாலசந்தர்

    இப்படத்தின் இயக்குனர் : பாரதிராஜா

    ReplyDelete
  19. தல,

    'நிழல்கள்' படத்தைப் பற்றித்தானே சொல்றீங்க?

    ம்ம்..எப்பதான் கஷ்டமான புதிர் கொடுக்கப் போறீங்களோ ?

    ReplyDelete
  20. ப்ரீதம்

    சிலேடையிலேயே விடையா கலக்கல்ஸ் ;)

    கொங்குராஜா

    பின்னீட்டிங்க‌

    ஆளவந்தான்

    கலக்கீட்டிங்க ;)

    கலைக்கோவன்

    வாழ்த்துக்கள்;)இரண்டுக்கும் பொதுவா தான் தலைப்பு வைத்தேன்

    ReplyDelete
  21. அரவிந்த்

    அதே தான் ;) கலக்கல்

    நிலாக்காலம்

    பின்னீட்டிங்க ;)

    ReplyDelete
  22. ஆயில்ஸ் கிட்டே விடையை அப்போவே சொல்ல சொல்லி இருந்தேனே! சொல்லிட்டாரா!! ;-)

    ReplyDelete
  23. ஆயில்ஸ் கிட்டே விடையை அப்போவே சொல்ல சொல்லி இருந்தேனே! சொல்லிட்டாரா!! ;-)//

    :))))))))))))))))))))

    ReplyDelete
  24. அருண்மொழிவர்மன்

    வாழ்த்துக்கள்

    ரிஷான்

    இருங்க வச்சுக்கிறேன் ;)

    ReplyDelete
  25. படம் - நிழல்கள் ;)!!!!????

    ReplyDelete
  26. இவ்ளோ லேசாவா குயிஜு வைக்கிறது? இதெல்லாம் நல்லால்ல சொல்லீட்டேன்.

    ReplyDelete
  27. பாட்டு கேக்காம சொல்றேன்..தப்பா இருந்தா மறுபடி சொல்லுவேன் ஆமா...

    நிழல்கள் , வறுமையின் நிறம் சிகப்பு
    மணிவண்ணன் - கதை

    ReplyDelete
  28. நிழல்கள்

    ReplyDelete
  29. தல கோபி

    அதிலென்ன சந்தேகம் ;)

    தங்கக்கம்பி

    சரியான கணிப்பு, உண்மையின் இந்தப் படம் வெற்றி பெறவேண்டிய தரம் கொண்டது இல்லையா


    தங்ஸ்

    திரும்ப வரவேண்டிய அவசியமே இல்லை ;)

    சின்ன அம்மணி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. சரியான பதில்: நிழல்கள்
    இயக்கம்: பாரதிராஜா - கதை: மணிவண்ணன்
    நாயகனாக நடித்த பின்னாள் இயக்குனர்: ராஜசேகர்
    படத்தில் அறிமுகமான படைப்பாளி: வைரமுத்து
    இதே காலத்தில் வெளிவந்த ஒரே பிரச்சனையை வைத்து எடுத்த படம்: வறுமையின் நிறம் சிகப்பு
    நிழல்கள் பட இன்னொரு நாயகி பின்னர் அமுதா என்ற பெயரில் பாலசந்தரின் ரயில் சினேகம் தொடரில் நடித்திருந்தார்.

    போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;)

    நிழல்கள் பின்னணி இசை வெகுவிரைவில்.

    ReplyDelete
  31. இந்தப் படத்து வசனகர்த்தா மணிவண்ணன்தான், ‘மடைதிறந்து’ பாடலின் முதல் 4 வரிகளை எழுதினாராம், சும்மா ஜாலிக்கு!

    பின்னாடி வாலி வந்து அந்த வரிகளைக் கேட்டுட்டு, ‘நல்லாயிருக்கு, இதையே வெச்சுப்போம்’ன்னு சொல்லிட்டாராம்!

    என்னைமாதிரி சோம்பேறி வேலைக்காரங்களுக்கெல்லாம் இவர்தான் முன்னோடி போலிருக்கு ;)

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  32. தமிழ்பித்தன்

    அதுக்கெல்லாம் பணம் செலவழிக்க தேவை இல்லை, முயற்சி தான் செலவழிக்க வேணும்.

    ராகவன்

    அடுத்த முறை கவனிக்கிறேன் ;)


    சொக்கரே

    இப்படியான துணுக்குகளை அள்ளி விடுங்க அருமை ;)

    ReplyDelete