Pages

Thursday, October 9, 2008

றேடியோஸ்புதிர் 24 - இந்த இசையமைப்பாளரிடம் பாடிய அந்த இசையமைப்பாளர்?

இன்று விஜயதசமி நன்னாளிலே இன்னுமொரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். எல்லோரும் அவல், சுண்டல், இனிப்பு வகையறாவெல்லாம் சாப்பிட்டு எந்தவிதமான கஷ்டமான கேள்விக்கும் முகம் கொடுக்கத் தயாராக இருப்பீர்கள். ஆனாலும் உங்களைச் சோதிக்காமல் நேரடியாக ஒரு பாடலைக் கொடுத்தே கேள்வி கேட்கின்றேன்.

தமிழ் திரையுலகில் முழு நேரப் பாடகர்கள் சிலரும் ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளர்களாக இருந்திருக்கின்றார்கள். அதே நேரம் முழு நேர இசையமைப்பாளர்களும் தம் படங்களுக்குப் பாடியும் இருக்கின்றார்கள். அதேவேளை ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரின் இசையிலும் ஒரு சில பாடல்களைப் பாடியிருக்கின்றார்கள்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலைக் கேட்கும் போது சற்று வித்தியாசமான குரலில் ஒரு பாடகரின் குரல் இருக்கும். காரணம் இவர் முழு நேரப் பாடகர் அல்ல. முழு நேர இசையமைப்பாளராக இருந்தவர். குறிப்பாக எண்பதுகளில் கடிவாளம் போட முடியாத ராஜாவின் இசைக்கு "ஓரளவு" சவாலாக இருந்தவர். ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் அரவணைப்பும் அதற்கும் காரணம். இசையமைப்பாளராக வருவதற்கு முன்னர் இன்னொரு இசையமைப்பாளருடன் (அவரும் திரையுலகுக்கு வர முன்னர்) இணைந்து கச்சேரிகளும் நடாத்தியவர். இப்போதெல்லாம் இவரை சின்னத்திரை நடிகராகத் தான் பார்க்க முடிகின்றது. சரி இந்தக் குரலுக்குச் சொந்தக்கார அந்த இசையமைப்பாளர் யார்?

<

37 comments:

  1. Singer - Music Director Chandrabose
    Movie - Aaru Pushpangal

    ReplyDelete
  2. சந்திரபோஸ் சரியா?

    ReplyDelete
  3. பாடியவர்: சந்திரபோஸ் (ஆனா அவர் டிவியில வர்றாரான்னு தெரியலை!)

    ஆனா, சந்திரபோஸ் ராஜாவுக்கு சவாலா இருந்தாரா? என்னதான் ஏவிஎம் ஆதரவா இருந்தாலும், அதுக்காக அவரை ராஜாவுக்கு சவாலாகவெல்லாம் சொல்லமுடியாது, இவர் 100 நல்ல பாட்டு போட்டா, அவர் 2 போட்டிருப்பார், அவ்ளோதான், ராஜா உச்சத்தில இருந்தபோது அவருக்குப் பக்கத்தில வந்தவங்க ஒருத்தர்கூடக் கிடையாது :)

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  4. க்ளூ ரொம்ப அதிகம் :-)

    பாட்டைக் கேக்காமலேயே சொல்ல முடியுது - இந்தியன் கமலஹாசன் பேர் கொண்டவர்தானே?

    ReplyDelete
  5. ஜிரா

    பின்னீட்டிங்

    முரளிக்கண்ணன்

    கலக்கல்

    மணி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாங்க சொக்கன்

    ராஜாவுக்கு போட்டி ராஜா தான், ஓரளவு என்பதற்கு காரணம் ராஜாவை விலக்கி விட்டுப் பார்த்தால் அந்தக் காலகட்டத்தில் நிறையப் படம் பண்ணியிருந்தார் இல்லையா?

    புது மெகா சீரியல் பலவற்றில் இவர் இப்போது நடிக்கிறார். படமொன்றிலும் வில்லனாக நடிக்கிறார்

    மது

    சரியான கணிப்பு

    சுரேஷ்

    இந்த ரவுண்டில் எல்லாரும் பாஸாகணும் என்ற பாசம் தான் ;-) நீங்களும் க்ளூவாகவே பதில் கொடுத்திட்டீங்க

    நிஜம்ஸ்

    பின்னீட்டிங்

    ReplyDelete
  7. இசையமைப்பாளர் சந்திரபோஸ். இவரின் மகன் கூட இசையமைப்பாளர் தானே அண்ணாச்சி ?

    ReplyDelete
  8. சந்திர போஸ்

    அருமையான இசையமைப்பாளர்!

    அதுவும் பூ சிட்டு குருவிகளா நொம்ப பிரபலம் :))

    ReplyDelete
  9. இந்த வார புதிர் போட்டு 1ம் அம்புட்டு கஷ்டம் இல்லைங்கறதால நல்லா இருந்துச்சுன்னு சொல்றேன்!

    //நிஜம்ஸ்

    பின்னீட்டிங்//


    பெரிசுக்கு வேற வேலை கிடையாதுங்க அண்ணாச்சி! அந்த காலத்துலேர்ந்து ரேடியோ பொட்டியும் கையுமா ஊரை சுத்திக்கிட்டு திரிஞ்சுச்சாம்! எங்க தாத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்!

    அவுரு இந்த ஜுஜுபிக்கேள்விக்கெல்லாம் பதில் சொன்னதுல எனக்கு 1ம் அம்புட்டு ஆச்சர்யம் இல்லை!

    ReplyDelete
  10. Chandra Bose

    Krithika.

    ReplyDelete
  11. Chandrabose? AVM banner-la avar music thaan mostly.

    ReplyDelete
  12. வணக்கம் பிரபா...

    விடை: சந்திரபோஸ்
    ஆத்ராவு தந்த தயாரிப்பு நிறுவனம்: ஏ வி எம்
    அவருடன் சேர்ந்து பணிசெய்த மற்ற இசையமைப்பாளார்: தேவா (போஸ்-தேவா குழு)
    http://www.solvathellamunmai.blogspot.com/

    ReplyDelete
  13. ரிஷான்

    அவரின் மகன் ஒரு படத்துடன் வாய்ப்பில்லாமல் இருக்கிறால் இல்லையா. வாழ்த்துக்கள்.

    ஆயில்ஸ்

    இதுமாதிரி போட்டி வச்சா தான் உங்களுக்கு காய்ச்சல், ஜீரம், ஜன்னி எல்லாம் வராது இல்லையா ;‍) நீங்க சொன்ன பாட்டும் கலக்கல்

    ReplyDelete
  14. தங்கக் கம்பி

    சரியான கணிப்பு வாழ்த்துக்கள், அருமையான பாட்டு இல்லையா.

    தமிழ்பறவை

    ‍‍சரியான பதிலை நீங்க ரண்டு தடவை சொன்னாலும்சரியாத் தான் இருக்கும் ;)

    ReplyDelete
  15. i did not hear the song.i guess the answer is
    chandrabose
    and the sony may be
    eandi mutthamma
    from
    aaru pushpangal

    ReplyDelete
  16. க்ருத்திகா

    ச‌ரியான‌ க‌ணிப்பு, வாழ்த்துக்க‌ள்

    த‌ங்ஸ்

    ச‌ரியான‌ க‌ணிப்பு, வாழ்த்துக்க‌ள்

    ReplyDelete
  17. க்ருத்திகா

    ச‌ரியான‌ க‌ணிப்பு, வாழ்த்துக்க‌ள்

    த‌ங்ஸ்

    ச‌ரியான‌ க‌ணிப்பு, வாழ்த்துக்க‌ள்

    ReplyDelete
  18. அருண்மொழிவர்மன்

    சரியான கணிப்பு, வாழ்த்துக்கள்

    பெயர் குறிப்பிடவிரும்பாத அன்பரே

    பாடலைக் கேட்காமலே சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  19. சந்திர போஸ் - 'The Boss'

    ReplyDelete
  20. chandrabose - maamboove chirumainaave paattu ivarodathu thaanE ?

    ReplyDelete
  21. From: R.Latha on Mon Feb 18 5:31:35 2008. [Full View]
    தமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.

    ஒய்வெடுக்கிறாரோ என்ற யோசித்த நேரத்தில் இதோ வந்து விட்டேன் என்று சின்னத்திரையில் ஆஜர். இம்முறை இசையமைப்பாளராக அல்ல, நடிகராக. மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.

    இந்த லிங்கம் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இவரை தொடர்ந்து நடிப்புக்கு முகம் காட்ட வைத்தது. இந்த கேரக்டரில் இவரது நடிப்பை பார்த்த டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்.அதோடு ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடரிலும் மாமனார் கேரக்டரில் குணசித்ர நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மெகா சேனலில் இப்போது திகிலும் தெய்வீகமுமாய் யார் கண்ணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜனனம் தொடரில் வைத்தியராகவும் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

    "இனி தொடர்ந்து நடிப்பு தானா?''

    ஜனனம் தொடர் படப்பிடிப்பில் இருந்தவரிடம் கேட்டபோது...

    "நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கவந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன்.என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.''

    ReplyDelete
  22. மைபிரண்ட்

    கலகலகலக்கீட்டீங்க ;-)

    ப்ரீதம்

    சரியான கணிப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஜீவ்ஸ்

    பின்னீட்டிங்க, பதில் சொன்னவர்கள் ஒழுங்கில் பின்னூட்டுவதால் தாமதம் ;-)

    ReplyDelete
  24. வணக்கம் R.Latha

    உங்கள் பதிலோடு நிறைய விஷயங்களை அவரிடமிருந்து பெற்றுத் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள். வானொலிப் பேட்டி ஒன்றுக்காக அவரைத் தொடர்பு கொள்ள முயல்கின்றேன். முடிந்தால் என் மின்னஞ்சலுக்கு இந்த இசையமைப்பாளரின் தொலைபேசி/ செல் போன் இலக்கம் பெற்று அனுப்பிவிடுவீர்களா?

    kanapraba@gmail.com

    ReplyDelete
  25. தல கோபி

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க, வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  26. hi emjay
    its chandrabose
    right
    my favourite of him is "vaaname ellai"

    ReplyDelete
  27. //குறிப்பாக எண்பதுகளில் கடிவாளம் போட முடியாத ராஜாவின் இசைக்கு "ஓரளவு" சவாலாக இருந்தவர்//

    சவாலாக என்பதெல்லாம்..ரொம்ப பெரிய வார்த்தை..அப்புறம் ஏன் காணாமல் போனார்?..அவருடைய பாடல்கள் எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும்

    ReplyDelete
  28. உதய குமார், சுரேஷ்

    சரியான கணிப்பு

    சுரேஷ்

    வானமே எல்லை மரகதமணியின் இசை.

    //aj said...


    சவாலாக என்பதெல்லாம்..ரொம்ப பெரிய வார்த்தை..அப்புறம் ஏன் காணாமல் போனார்?..அவருடைய பாடல்கள் எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும்//

    வாங்க ராஜ்

    சவால் என்பது உண்மையிலேயே பெரிய வார்த்தை தான், ராஜாவுக்கு நிகர் ராஜாவே தான், இங்கே சவால் என்பதை விட நான் சொல்ல வந்தது அந்தக் காலகட்டத்தில் ராஜாவுக்கு அடுத்த தர வரிசையில் 80 களில் முன்னணியில் இருந்தவர் இவர் என்பது.

    ReplyDelete
  29. சரியான பதில்

    எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் திரைப்படத்திற்காக இன்னொரு இசையமைப்பாளரான சந்திரபோஸ் பாடிய "ஏன்டி முத்தமா ஏது புன்னகை" என்னும் பாடல்.

    21 பேர் சரியான பதிலை அளித்திருக்கின்றீர்கள். அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete