Pages

Tuesday, November 27, 2007

றேடியோஸ்புதிர் 4 - சொக்கனுக்கு வாய்ச்ச சுந்தரியோ...?


இங்கே வழக்கம் போல் பாட்டுப் புதிர்ப் போட்டிபோடு வந்திருக்கின்றேன். இந்தப் புதிரில் எஸ்.ஜானகி ஸ்வரம் பாடி, ஆரம்ப இசை மட்டும் ஒலிக்கின்றது. பாட்டு என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.
பாடலைக் கண்டு பிடிக்க சில உப குறிப்புக்கள். எஸ்.ஜானகியோடு இன்னொரு பாடகரும் பாடியிருக்கின்றார். இசைய வைத்தவர் இளையராஜா. இந்தப் படத்தின் நாயகன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடிக்க வந்த காலத்துப் படங்களில் ஒன்று. நல்ல மசாலா இயக்குனரின் திரைப்படமாக இது இருந்தாலும் இந்த நாயகனுக்கு இந்தப்படமோ அல்லது அந்தக் காலகட்டத்தில் வந்த வேறு படங்களோ எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால் பல வருஷங்கள் கழித்து ஒரு அறிமுக இயக்குனரின் முதல் படமே இந்த நாயகனுக்கு ஒரு திருப்புமுனையாக வந்து, இன்று முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர்.

தொண்ணூறுகளில் சென்னை வானொலியின் ஞாயிறு தோறும் வரும் நீங்கள் கேட்டவையின் ரசிகராக இருந்தால் இந்தப் பாட்டை இன்னும் சுலபமாகக் கண்டுபிடிக்கலாம். சரி இனிப்பாட்டைக் கண்டு பிடியுங்களேன்.



மேற்கண்ட பாடல் புதிருக்கான சரியான விடை:
படம்: காவல் கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இயக்கம்: எஸ்.பி.முத்துராமன்
அந்த நாயகன்: விக்ரம், ஆனால் பாடலில் வேறு இருவர் தோன்றி நடித்திருக்கின்றார்கள்
போட்டியில் சரியான விடையளித்த மணி, வவ்வால், சொக்கன் உங்களுக்கு பாராட்டுக்கள்.
இதோ முழுமையான பாடல்

10 comments:

  1. பாடல் : சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
    திரை : காவல் கீதம்

    ReplyDelete
  2. தந்துவிட்டேன் என்னை? ஆனா மசாலா இயக்குனர்னு சொல்லீருக்கீங்க. ஸ்ரீதர் கண்டிப்பா மசாலா இயக்குனர் கிடையாது. சூர்யா, விஜய், சிம்பு, தும்புன்னு எல்லாரையும் கலந்தாலும்...விக்ரம்தான் நினைவுக்கு வர்ராரு. ம்ம்ம் பாட்டு தெரியலை. இந்தப் படத்துல முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மான்னு ஒரு பாட்டு. அது ரொம்ப நல்லாருக்கும்.

    ReplyDelete
  3. மணி

    சரியா கண்டுபிடிச்சிருக்கீங்க, பாராட்டுக்கள், முடிவு இன்று மாலை வெளியிடப்படும்.


    ராகவன்

    தந்துவிட்டேன் என்னை படம் கிடையாது. ஆனால் விக்ரம் நடிச்ச படம்.

    ReplyDelete
  4. இன்னும் இரு மேலதிக க்ளூ கொடுக்கிறேன், கண்டுபிடியுங்க பார்க்கலாம்
    - நடிகர் பெயர் - விக்ரம்
    இயக்குனர் - ரஜினியை வைத்து அதிக படம் இயக்கியவர்

    ReplyDelete
  5. தலைவா,

    படம் காவல் கீதம் தானே, சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே பாடல் , ஆனா அந்த படத்தில் விக்ரம் ஹீரோவா? டைரக்ஷன் எஸ்.பி.முத்துராமனா?

    ReplyDelete
  6. வவ்வால்

    பின்னீட்டீங்க, அந்தப்படத்தில் விக்ரம் தான் ஹீரோ, உங்க பின்னூட்டம் மாலை வெளியிடப்படும் ;-)

    ReplyDelete
  7. படம்: தந்துவிட்டேன் என்னை, பாடியது எஸ்பிபியும் ஜானகியும், பாடல்: சொக்கனுக்கு வாய்ச்ச சுந்தரியோ :)

    Video for this song is here -

    http://www.youtube.com/watch?v=R83NyOBExo4

    என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  8. சொக்கன், சரியான விடை, பாராட்டுக்கள்.
    வீடியோ இணைப்புக்கு நன்றி

    ReplyDelete
  9. தல ,
    //மேற்கண்ட பாடல் புதிருக்கான சரியான விடை:
    படம்: தந்துவிட்டேன் என்னை//

    என்ன இது , தந்துவிட்டேன் என்னை மேல இத்தனை மோகம் :-))

    காவல் கீதம் தான் சரியான விடைனு சொல்லிட்டு ,இப்படி மாத்திப்புடிங்களே !

    ReplyDelete
  10. ஆகா, நானும் குழம்பிவிட்டேன், இப்போது திருத்தம் செய்தாயிற்று

    ReplyDelete