
அந்த வகையில், முதலில் வரும் பாடலை இசையமைத்திருக்கின்றார் டி.ராஜேந்தர். இவர் தன்னுடைய படங்கள் அன்றி வெளியார் படங்கள் சிலவற்றிலும் சிறப்பாக இசையமைத்திருக்கின்றார் என்பதற்கு உதாரணமாக மலரும் இந்த இனிய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில், "பூக்களைப் பறிக்காதீர்கள்" திரையில் இடம்பெறும் "காதல் ஊர்வலம் இங்கே" என்ற பாடலாகும்.
தொடர்ந்து தேவேந்திரன் இசையில் "பொங்கியதே காதல் வெள்ளம்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாட மண்ணுக்குள் வைரம் திரைக்காக இடம்பெறுகின்றது.
அடுத்து, நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நாயகனாக நடித்த "பாய்மரக்கப்பல்" திரையில், கே.வி.மகாதேவன் இசையில் வரும் "ஈரத்தாமரைப் பூவே" என்ற இனிய பாடல் எஸ்.பி.சைலஜா பின்னணிக்குரலிசைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.
எண்பதுகளில் இளையராஜாவுக்கு மாற்றீடாக விளங்கிய சந்திரபோஸ் இசையமைத்த படமான "விடுதலை" திரையில் இருந்து "நீலக்குயில்கள் ரெண்டு" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.
நிறைவாக மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைப்பில் வரும் "ஒரு இனிய உதயம்" திரைப்பாடலான "ஆகாயம் ஏனடி அழுகின்றது" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகின்றார்கள்.
பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் ;-)
கேள்விப்படாத பாடல்களாக இருக்கின்றன.
ReplyDeleteபிரபா,
ReplyDeleteபூக்களைப்பறிக்காதீர்கள் படத்தில் அத்தனைப்பாடல்களும் நன்றாக இருக்கும்.
பொங்கியதே காதல் வெள்ளம் அதிகம் கேட்ட ஒரு பாடல்.
ஈரத்தாமரைப்பூவே இப்போது தான் கேட்டேன்.
அமிதாப் நடித்த ஒரு இந்திப்படத்தின்் மறுபதிப்பான விடுதலை்படத்தில் படத்தில் ரஜினி,சிவாஜி,விஷ்ணுவர்தன் நடித்தனர். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும்.
அந்த படத்தில் வரும் "நாட்டுகுள்ளே" எனத் தொடங்கும் பாடல் நல்ல குத்துப்பாட்டு. அதையும் எப்போதவது ஒலிபரப்புங்கள்.
மனோஜ்-க்யான் இரட்டையர் என்பது எனக்குப் புதிய தகவல்.
இளையராஜா 80களில் வெகு உச்சத்தில் இருந்தார். 85-86-ல் வருடத்திற்கு 30 பாடலுக்கு மேலே இசையமைத்தார். அனேகமாக அவருடைய பாடல்கள் தான் நிறைய வரும் என்று நினைத்தேன். கலவையாக ஒலிபரப்புவது வெகுசுவையாக உள்ளது.
வாழ்த்துக்கள்!! தொடரவும்!!
மற்றுமொரு இனிமையான பாடல் தொகுப்பை அளித்தமைக்கு நன்றி கானா பிரபா அவர்களே!!
ReplyDeleteரசித்து கேட்டேன்!!பதிவிட்டதற்கு நன்றி! :-)
//வடுவூர் குமார் said...
ReplyDeleteகேள்விப்படாத பாடல்களாக இருக்கின்றன.//
வாங்க வடுவூர்க்காரரே
அதிகம் கேட்காததால் அரியபாடல்கள் ;-)
வணக்கம் அருண்
ReplyDeleteஇந்தத் தொகுப்பில் ராஜா தவிர்ந்த மற்றைய இசையமைப்பாளர்களின் நல்ல பாடல்களைத் தெரிவு செய்துள்ளேன். சிம்பு டீன் ஏஜ் பையனாக வரும் வரை டி.ராஜேந்தரின் இசை சிறப்பாக இருந்தது ;-)
நல்ல முயற்சி. ராஜாவின் பாடல்கள் எல்லாபக்கமும் கொட்டி கிடக்கிறது. இந்தமாதிரி பாடல்கள் கேட்பதுதான் அரிதான விஷயம். அதை செவ்வனே செய்யும் இந்த முயற்சி உண்மையிலேயே நல்ல முயற்சி. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஇந்தமாதிரி பாடல்களை தரைவிறக்கம் செய்யும்படி வாய்ப்பு செய்து தரமுடியுமா?
Azhana Arithaana Muyachi. Vaazhthukkal Prabha sir.
ReplyDelete//CVR said...
ReplyDeleteமற்றுமொரு இனிமையான பாடல் தொகுப்பை அளித்தமைக்கு நன்றி கானா பிரபா அவர்களே!!
ரசித்து கேட்டேன்!!பதிவிட்டதற்கு நன்றி! :-)//
மிக்க நன்றி காமெரா கவிஞரே ;-)
//கண்மணி பாப்பா said...
இந்தமாதிரி பாடல்களை தரைவிறக்கம் செய்யும்படி வாய்ப்பு செய்து தரமுடியுமா?/
வாங்க கண்மணிபாப்பா
காப்புரிமைப் பிரச்சனை எழும் என்பதால் தரவிறக்கும் செய்யும் வசதியை இதில் நான் கொடுக்கவில்லை.
//Covai Ravee said...
Azhana Arithaana Muyachi. Vaazhthukkal Prabha sir.//
மிக்க நன்றி ரவி சார்
கே.வி.மகாதேவன் பாட்டு மட்டும் கேள்விப்பட்டதில்லை. மத்ததெல்லாம் கேட்டிருக்கேன். எல்லாமே நல்ல பாட்டுங்க.
ReplyDeleteசந்திரபோஸ் இசையமைச்ச பொய்யின்றி மெய்யோடு...சொன்னால் இனிக்கு போன்ற பாடல்கள் கிடைத்தாலும் போடவும். தேடிக்கொண்டிருக்கிறேன்.
கானா பிரபா, கலக்குறீங்க போங்க. அடுத்த பாகம் எப்போ வரும்னு எதிர்பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteசூப்பர்...சூப்பர்...சூப்பர்...
ReplyDeleteராகவன்
ReplyDeleteஈரத்தாமரைப் பூவே கேட்டதில்லையா? ஆச்சரியம்
சந்திரபோஸுக்காக ஒரு நிகழ்ச்சியையே கொடுக்கிறேன் ;)
இஞ்சி மொரப்பா, இசைப்பித்தன்
உங்கள் ஊட்டமான கருத்துக்கு நன்றி நன்றி நன்றி