Pages

Sunday, June 24, 2007

பத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி



இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது மற்றும், தமிழிசைச் சங்கத்தின் "இசைப் பேரறிஞர்" பட்டத்தைப் பெற்றவருமாகிய இசை மேதை T.N சேஷகோபாலன் அவர்கள் இரு வாரங்களுக்கு முன் சிட்னி, அவுஸ்திரேலியா வந்த போது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் நானும், என்னோடு இணைந்து சங்கீத ரசிகர் திரு உமாசங்கர் இருவருமாகக் கண்ட ஒலிப்பேட்டியின் இரு பாகங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன.

இதில் சேஷகோபாலனின் கர்நாடக சங்கீதப் பயணத்தின் ஆரம்பம் முதல் முக்கிய சில நிகழ்வுகள், தோடி ராகம் திரைப்படத்தில் நடித்த அனுபவம், கூடவே "எந்தரோ மகானு" பாடலோடு நிறைவு பெறுகின்றது இப்பேட்டி.



பாகம் 1



பாகம் 2



சேஷகோபாலன் அவர்கள், ஆத்மா திரைப்படத்திற்காக , இசைஞானி இளையராஜா இசையில் பாடிய "இன்னருள்" என்ற இனிய பாடல்.

2 comments:

  1. பிரபா!
    இன்றுள்ள மூத்த வித்துவான் சேஷகோபானன் அவர்கள் பேட்டி!
    மிகத் தெளிவாகவும், சிறப்பாகவும் இருந்தது.
    பேட்டிகள் படிப்பவன் கேட்பவன் எனும் வகையில், வழமையாக
    நம் கலைஞர்களிடம் இதை விட எதுவும் கேட்டுவிட முடியாது.
    ஆனாலும் ஈழத்து ரசிகர்களின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு
    சபாஷ்!!!! பதில் வழமையானதும் ,மழுப்பலானதும் என்பதே !
    மிக வருத்தம்.
    நான் தியாகராஜ சுவாமிகளின் ரசிகன், பக்தன்...ஆனாலும் ஊத்துக்காட்டார், கோபாலகிருஸ்ண பாரதி, பாரதி, பாபநாசம் சிவன் போன்றோரின் பாடல்கள், என்னை எங்கோ இட்டுச் செல்லுதென்பதை சொல்லக் கடைமைப்பாடுடையவன்...
    காரணம் அந்தச் சொற்களின் பொருள் புரிகிறது.
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வதுடன், கேட்கும் பாட்டின் பொருளும் உணர்வோம்.
    கேரளாவில், கன்னட நாட்டில், ஆந்திராவில் ,அவர்கள் கேட்டு, இவர்கள் பாடுகிறார்கள்.
    சரி ....நாங்கள் தானே ...தமிழ்பாட்டும் கேட்கிறோம் ...பாடித்தான் தொலையுங்களேன். இசைக்கு மொழியில்லையெனக் கீறல் விழுந்த ரெக்கோட்டை எத்தனை நாளைக்குப் போடப் போகிறீங்க.
    இதன் காரணத்தைப் பச்சையாகச் சொன்னால்.... இவர்கள் தென்னகப்பிராமணர்கள்...இவர்களுக்கு தமிழ் நீச பாசை என்பது இரத்தத்தில் ஊறியது. இதைச் சங்கராச்சாரிகளும் நன்கு ஊட்டி
    விட்டார்கள். (இறைவன் கருணையால் இப்போ அமத்தி வாசிக்கிறார்கள்).
    அத்துடன் ஆங்கிலத்தில் கற்றவர்கள்.....
    இங்கு கிருஸ்ணா கச்சேரிக்கு பிரான்சியருடன் போனேன்.
    அவர் பாடிய தியாகராஜ கீர்த்தனைக்கு விளக்கம் கேட்டார்.
    நான் அது எனக்குத் தெரியாதெனும் விபரம் கூறியபோது!
    அவர் என்னை ஓரு பார்வை பார்த்தார். மறக்கமுடியாது.

    இத்துறையில் முன்பு பலதரப்பட்டவர்களும் இருந்து, இப்போ
    முழுதும் பிராமணர்கள் என்ற நிலையில் இருப்பதும் ( இவர்கள் அர்பணிப்புடன் கற்கிறார்கள்) இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம்.
    ஆனானும் சஞ்சய் சுப்பிரமணியம், நித்தியஸ்ரீ போன்றோர்.
    இதை பொருட்படுத்தாமல் கச்சேரியை தமிழ்ப்படுத்த, தேவாரம்,பாசுரம், திருப்புகழ் என நிரப்புவது ஆறுதல் தருகிறது.

    சீர்காழியார், மதுரை சோமு போன்றோரின் கச்சேரிகள், சேஷகோபாலன் கேட்காமலா இருந்திருப்பார். எப்படி? தமிழும் கலந்து கச்சேரி செய்வதேன அறியலாம். ஏன் ? பிராமணரான
    மகாராஜபுரம் சந்தானம் கச்சேரி கேட்டால் படிக்கலாம்.
    எனவே!!! காலம் பூராகவும் விதண்டாவாதம் புரியாமல் இவர்கள்
    சற்று மாறுவது நன்று.
    இவர்கள் மனவன்மத்தை முதல் இறக்கி வைக்கவேண்டும்.
    இவர் என்ன? தெலுங்கிலா???பேட்டி தந்தார். தெலுங்கிலா ?
    நடிக்கிறார்.

    இங்கு ஒரு பம்பாய் ஜெயஸ்ரீ கச்சேரி பல வருடங்களுக்கு முதல்
    ஒழுங்கு செய்த ஈழத்தவர், அவரைக் கேட்டது...நீங்கள் தமிழ்ப்பாடல்கள் மாத்திரமே பாடவேண்டும். பாடினார் 2 ½ மணி
    பாடினார். தமிழ் மாத்திரமே பாடினார்.
    ஆகவே காசு கொடுக்கும் நாம் , கேட்கவேண்டியது நம் கடன்,
    தரவேண்டியது,,,அவர்கள் கடமை.

    சபாபதிக்கு வேறு தெய்வம்., அலைபாயுதே, தாயே யசோதா, கனகசபாபதிக்கு.....இதெல்லாம் பாடமாட்டார்களா??
    முன்பு திருப்புகழ் இறுதியில் இருந்தது. அதையும் தில்லானா போட்டு நிரப்பி....துக்கடா நிலைக்கும் தமிழ் இல்லையே!!
    எனவே இவர்களில் மனமாற்றம், வரவேண்டும்.

    தியாகராஜ உற்சவத்தில் தண்டபாணி தேசிகர் தமிழிலும் பாடிவிட்டார் என அவர் இருந்த இடத்தைக் காவேரி நீரால்
    கழுவிச் சுத்தம் செய்த நீசத்தனம் , இனியும் தொடர்வது அழகல்ல என்பதை இவர்கள் புரிய வேண்டும்.
    அடுத்து இசைக்கு தாவரங்கள் இசையும், அன்றைய நாட்களில்
    என் பேத்தியார், இடிச்சுக் குத்தினால்,பிள்ளை குட்டிவிளையாடினால் தென்னை நன்கு காய்க்கு மென்பார்.
    அதுபோல் வீட்டருகு மரம் நன்கு காய்தது, வேலியோர மரத்தைவிட.
    பாடல்கள் இனிமை....
    நான் சேஷ கோபாலன் ரசிகனும் கூட.....
    என்னிடம் போதிய பணம் இருந்தால், இவர்களை 100 வீதம் தமிழ் பாடவைப்பேன்.
    பணத்தால் சாதிக்கமுடியாததும், பணத்துக்கு விட்டுக் கொடுக்காத கொள்கைகளுமா?? இந்தப் பிரபலங்களிடம்....
    ம்.......

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete