Pages

Thursday, February 23, 2012

றேடியோஸ்புதிர் 63 "கிட்டார் இசைப்பதைப் பாராய்" பதிலோடு வாராய்


வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் மக்கள்ஸ்,
ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டுமொரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த றேடியோஸ்புதிர் சற்று வித்தியாசமாக ஐந்து பாடல்களின் இடையிசை தரப்பட்டு அந்தப் பாடல்கள் எதுவென்று கண்டுபிடிக்கும் போட்டியாக அமையவிருக்கின்றது. இந்தப் போட்டியில் இடம்பெறும் ஐந்து பாடல்களிலும் பொதுவாக அமையும் அம்சங்கள், இவை அனைத்தும் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த பாடல்கள் என்பதோடு இந்த இடையிசையில் கிட்டார் வாத்தியத்தின் பயன்பாட்டைக் காணலாம்.

புதிரில் இடம்பெறும் பாடல்கள் எவை என்பதே போட்டி, எங்கே ஆரம்பிக்கட்டும் உங்கள் பொது அறிவு :)
ஒகே மக்கள்ஸ், கடந்த இரண்டு நாள் அவகாசத்தில் வந்த பதில்களில் ஒரேயொருவர் மட்டுமே அனைத்துப் புதிர்களுக்குமான பதிலை அளித்திருக்கின்றார். அவர் பெயர் மணி, காண்க பின்னூட்டத்தில்.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி :)

இதோ விடைகள்.

பாட்டுப்புதிர் 1அந்தப் பாட்டு கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் வந்த, இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும்
"கானம் தென்காற்றோடு போய்ச் சொல்லும் தூது"
பாட்டுப்புதிர் 2இந்தப் பாட்டு காக்கிச் சட்டை படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,பி.சுசீலா பாடும் "பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்"
பாட்டுப்புதிர் 3அந்தப் பாடல் ஜெயச்சந்திரன், முடிவல்ல ஆரம்பம் படத்துக்காகப் பாடும் "பாடி வா தென்றலே"
பாட்டுப்புதிர் 4இந்தப் புதிருக்கான பதில், இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும் "நிலவே நீ வரவேண்டும்" பாடல் என்னருகே நீ இருந்தால்" படத்தில் இருந்து
பாட்டுப்புதிர் 5இறுதிப் புதிருக்கான பதில் "பூந்தளிர் ஆட பொன் மலர் சூட" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் பாடல் பன்னீர்ப்புஷ்பங்கள் திரைப்படத்திற்காக.

39 comments:

 1. சூப்பர் 1 தவிர மத்த எல்லாம் ஒகேய்ய்ய் கண்டுபுடிச்சாச்சு பட் ரேடியோஸ்புதிர் ரொமப் நாள் கேப் விட்டு வந்ததுக்கு கண்டனம் தெரிவிச்சு பதில்களை சொல்லாமல் கம்முன்னு குந்திக்கிடறேன்!

  இனி வரும் ரசிக பெருமக்களும் அஹிம்சா முறையினில் தங்கள் எதிர்ப்பினை இபபடியாக கம்முன்னு பதிவு செய்யவேண்டும் !

  ReplyDelete
 2. இன்னிக்கு நான் மெளனவிரதம் ;-)

  ReplyDelete
 3. ஆயில்

  சும்மாதானே இருக்கிறீர், ட்ரை பண்ணும்

  தல கோபி

  அப்படி எல்லாம் அப்பீட்டு ஆக முடியாது :)

  ReplyDelete
 4. நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகின்ற படியால் என் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகின்றேன் #விடை தெரியவில்லை என்பதை எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டி இருக்கு அவ்வ்வ்வ்

  ReplyDelete
 5. 2. கன்னத்தில் முத்தத்தின் ஈரம் இன்னும் காயவில்லையே :) என்ன பாட்டு சார் இது! ஆகா!

  ReplyDelete
 6. Song 1 தெரியலை
  இரண்டாவது காக்கி சட்டை- பட்டு கன்னம்
  மூன்றாவது - சட்டென்று நினைவுக்கு வரவில்லை
  நான்காவது பன்னீர் புஷ்பங்கள் பூந்தளிர் ஆட

  ReplyDelete
 7. நாகராஜ்

   நீங்கள் சொன்ன பதில்கள் சரி, மற்றதையும் கண்டுபிடியுங்க

  ReplyDelete
 8. ராகவன்

  அது நல்ல பாட்டு ஆனா பதில் இல்லையே :)

  ReplyDelete
 9. திருமாறன்.திFebruary 24, 2012 at 7:54 AM

  ரெண்டாவது பாட்டு பட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்...

  அவ்ளோ தான் நம்மாள முடிஞ்சது

  ReplyDelete
 10. துள்ளி எழுந்தது பாட்டு -1
  என்னுள்ளே என்னூள்ளே பாட்டு-2
  உயிரே என்னை இதயம் மறந்து விடுமோ-3
  வானமழைப்போல இனிதான- 4
  கல்யான மாலை -5

  ReplyDelete
 11. தனிமரம்

  விடைகள் தவறானவை

  ReplyDelete
 12. 1 - கானம் தன் காற்றோடு - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
  2 - பட்டு கன்னம் - காக்கி சட்டை
  3 - பாடிவா தென்றலே - முடிவல்ல ஆரம்பம்
  4 - நிலவே நீ வரவேண்டும் - என் அருகில் நீ இருந்தால்
  5 - பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்
  என்ன இது சரியா......
  :-) மணி ...

  ReplyDelete
 13. கிட்டார் இசை இப்பிடியா இருக்கும்?

  ReplyDelete
 14. கண்டுபிடிக்கமுடிந்தது நான்காவது மட்டும்தான். மற்றும் ஒன்று இரண்டு பரிச்சயமான இசையாக இருக்கிறது.ஆனால் பாடல் ஞாபகம் வருகுதில்லை..:(

  நான்காவது "நிலவே நீ வரவேண்டும்" சரி என்று ஓரளவுக்கு உறுதியாக நம்புகிறேன்.

  என்றாலும் போட்டியை இவ்வளவு இலகுவாக நீங்கள் வைத்திருக்கக்கூடாது :P :))

  ReplyDelete
 15. 2) பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள - காக்கிச் சட்டை
  5) பூந்தளிராட.. பொன் மலர் சூட - பன்னீர் புஷ்பங்கள்

  மத்ததெல்லாம் தெரியலையே.. :(

  ReplyDelete
 16. 1) gaanam kaatrodu poi serum pothu

  others can easily identify by Raja's fan.

  ReplyDelete
 17. திருமாறன்

  நீங்க சொன்ன ஒரே விடை சரியானது

  ReplyDelete
 18. வந்தி

  மழுப்பாமல் பதில் கண்டுபிடிக்கவும் :)

  கண்ணன்

  தெரிஞ்ச நாலையும் சொல்லலாமே?

  ReplyDelete
 19. தாருகாசினி

  மிகவும் கஷ்டமான பாட்டையே கண்டுபிடிச்சிட்டீங்கள் :) மிச்சத்தையும் தேடுங்கோ. என்னது இலகுவான புதிரா ஆகா

  முதல் புதிருக்குப் பதில் சொன்ன அன்பரே
  அடுத்த புதிர்களுக்கும் சொல்லவும் :)ம்

  ReplyDelete
 20. நிலா

  இரண்டும் சரி, மூன்றையும் தேடவும் ;)

  ReplyDelete
 21. மணி

  நீங்கள் ஒருவர் தான் அனைத்துக்கும் சரியான பதில் இதுவரை, வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 22. இரண்டாவது பாட்டு பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள..,ஐந்தாவது பூந்தளிர் ஆட. மீதி மீ ட்ரையிங் :)

  ReplyDelete
 23. உமா கிருஷ்

  சொன்ன இரண்டும் சரி மூன்றோடு வருக :)

  ReplyDelete
 24. ஒண்ணே ஒண்ணு தான் பிரபா இப்போதைக்கு சொல்ல முடியுது..
  நாலாவது பாட்டு 'நிலவே நீ வரவேண்டும்' ..
  மத்த நாலும் கஷ்டம் கிடையாது.. கேட்ட பாட்டுக்கள் தான்.. ஆனா, சொல்லத்தான் முடியமாட்டேங்குது.. :-)

  ReplyDelete
 25. iraNdaavathu paadal: பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள

  நான்காவது பாடல்: நிலவே நீ வரவேண்டும் ஓஹ்...

  விரைவில் மீதிப்பாடல்களுடன் வருகிறேன்

  ReplyDelete
 26. 2. pattu kannam - kAkki sattai
  5. poondhaLir aada - panneer pushpangaL

  ReplyDelete
 27. 2. புன்னகை மன்னன், கன்னத்து முத்தத்து ஈரம்...

  மத்ததெல்லாம் தெரியல...

  மக்கள்ஸ் அதிரும் மாதிரி ரகுமான் இசையில் இருந்து அடுத்த புதிர் போடுங்க. ரகுமானே ஆச்சரியப்படுவார். :-)

  ReplyDelete
 28. நாகு

  அந்தப் பாட்டு இல்லை :), ரஹ்மான் புதிர் போட்டாப்போச்சு

  சுந்தர்ஜி

  சொன்ன பதில் சரியே

  பிரசன்னா கண்ணன்

  சொன்ன பதில் சரி, மற்றதையும் தேடுக

  தமிழ்ப்பறவை

  சீக்கிரம் சீக்கிரம் :)


  கார்த்திக்

  சொன்ன இரண்டும் சரி

  ReplyDelete
 29. 1)....

  2)பட்டுக்கண்ணம் கட்டிக்கொள்ள - காக்கிச் சட்டை

  3) பாடிவாத் தென்றலே - முடிவில்லா ஆரம்பம்

  4)....

  5)....

  ReplyDelete
 30. ஆதவன்

  சொன்ன விடைகள் சரியானவை

  ReplyDelete
 31. ஒகே மக்கள்ஸ், கடந்த இரண்டு நாள் அவகாசத்தில் வந்த பதில்களில் ஒரேயொருவர் மட்டுமே அனைத்துப் புதிர்களுக்குமான பதிலை அளித்திருக்கின்றார். அவர் பெயர் மணி, காண்க பின்னூட்டத்தில்.
  போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி :)

  ReplyDelete
 32. நல்ல தேர்வு. என்னால் இரண்டு மற்றும் ஐந்து தான் உறுதியாக கண்டுபிடிக்க முடிந்தது. இது மாதிரி பிற வாத்தியங்களுக்கும் புதிர் போடலாம்.

  ReplyDelete
 33. "கானம் தென்காற்றோடு போய்ச் சொல்லும் தூது" - இந்த பாட்ட நான் சத்தியமா இதுவரைக்கும் கேட்டதே இல்ல பிரபா :-)

  ReplyDelete
 34. தல சூப்பரு ;-)

  ஆனாலும் நீங்க ரொம்ப ஓவரு ;-))

  ReplyDelete
 35. பிரசன்னா கண்ணன் said...

  "கானம் தென்காற்றோடு போய்ச் சொல்லும் தூது" - இந்த பாட்ட நான் சத்தியமா இதுவரைக்கும் கேட்டதே இல்ல பிரபா :-)//

  ஆகா :0


  தல கோபி

  இதை மாதிரி இன்னும் சுலபமாக் கேட்போம் :)

  ReplyDelete